Wednesday, January 30, 2008

குருவாய் வருவாய்



அன்பர் சந்திரமௌளி அவர்கள் குருவினை பற்றி ஒரு வலைப்பூ போடலாம் என்று அழைத்துள்ளார். அதுவும் இன்று குருவாரம். கரும்பு தின்னக் கூலி கேட்கவாவேண்டும்.இதோ குருவந்தனம்.
:
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேஸ்வர:


குரு: ஸாக்ஷாத் பரம் ப்ருஹ்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:


குருவே சர்வ லோகானாம் பிஷ்ஜே பவரோகினாம்


நிதயே ஸ்ர்வ வித்யானாம் தக்ஷிணாமூர்த்தயே நம

(குருதான் பிரும்மா, விஷுணு, ஈச்வரன் மற்றும் அநாதியாய், பலவாய்,ஒன்றாய் பரம்பிரும்மாவகவும் இருக்கிறார் அப்படிப்பட்ட குருவை வணங்குகிறேன்)

(குருதான் எல்லா உலகங்கிலும் வியாபித்தும்,பிறப்பை அறுக்கும் மருந்தாகவும் இருக்கிறார்)

எல்லா கலைகளுக்கும் வற்றாத செல்வமாகவும் இருக்கும் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியை வணங்குகிறேன்)
-
நடமாடும் தெய்வம் நீ அருள்வாய்)


-

15 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

நன்றி திராச சார். இன்று வியாழன், குருவுக்கு உகந்த நாளில் ஆரம்பித்திருக்கிறீர்கள். குருவருள் துணை செய்யட்டும்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

லக்ஷ்மீ நாத சமாரம்பம்
நாத யாமுன மத்யமம்
அஸ்மத் "ஆசார்ய" பர்யந்தம்
வந்தே "குரு பரம்பரா"

திருமகள், திருமால் முதற்கொண்டு
நாதமுனிகள், ஆளவந்தார் இடைக்கொண்டு
வழிவழி வந்த குருக்கள் இன்றளவும்
அத்தனை ஆசார்யர்களுக்கும் வணக்கங்கள்!

சதா சிவ சமாரம்பம்
சங்கராச்சர்ய மத்யமம்
அஸ்மத் "ஆசார்ய" பர்யந்தம்
வந்தே "குரு பரம்பரா"

சதா சிவ பெருமான் முதற்கொண்டு
ஆதி - சங்கராச்சார்யர் இடைக்கொண்டு
வழிவழி வந்த குருக்கள் இன்றளவும்
அத்தனை ஆசார்யர்களுக்கும் வணக்கங்கள்!

குருப்யோ நமஹ!
கிருஷ்ணம் வந்தே "ஜகத் குரும்"!
"குருவாய்" வருவாய் அருள்வாய் குகனே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திராச, மெளலி அண்ணா!
வாழ்த்துக்கள்!
குருவருள் தோட்டம் பூத்துக் குலுங்கட்டும்! தடையின்றி எல்லாருக்கும் மணம் பரவட்டும்!
வாழ்க! வாழ்க!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

pl remove word verification option

தி. ரா. ச.(T.R.C.) said...

@மௌலி வருகைக்கும் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

@கேஆர்ஸ் வருகைக்கும் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி

கபீரன்பன் said...

ஆஹா,இதிலே இவ்வளவு சூட்சுமம் இருக்குதா. நான் முதல் பதிவுல பின்னூட்டம் இட்ட உடனே என் வாழ்த்துகளை தெரிவிச்சாச்சுன்னு-ரெண்டு பேருக்கும் சேர்த்து தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். சரி சரி அடுத்த முறை பதிவின் ஆசிரியரையும் கவனிச்சுகிறேன்.

நம்மிடையே நடமாடிய தெய்வத்தை மீண்டும் கண் முன்னே நடமாட விட்டு குரு தரிசனம் செய்வித்ததற்கு மிக்க நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க கபீரன்பன்.தாயும் பிள்ளையானுலும் வாயும் வயிறும் வேறாடா!
என்னப்பெரும் தவம் யான்செய்தது அறியினே என்னையும் காஞ்சி முனி ஆட்க்கொண்டது என் சொல்வேன்

குமரன் (Kumaran) said...

தி.ரா.ச., & மௌலி.

நல்லதொரு தொடக்கம். மிக்க மகிழ்ச்சி.

ஆசார்யப் பெருமானின் உருவப்படத்தை மட்டுமே இதுவரை தரிசித்திருந்த அடியேனுக்கு இன்று அவர் நடக்கும் கோபுரத்தின் மேல் ஏறும் தரிசனமும் பெற வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி தி.ரா.ச.

pudugaithendral said...

அருமையானதொரு பதிவு.

நல்ல ஆரம்பம். பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல உதவியாய் இருக்கும்.
நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க புதுகைத்தென்றல்...

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன். நீங்கல்லாம் வந்து உங்கள் கருத்துக்களை பகிர்வீர்கள் என்ற எதிர்பார்ப்போடுதான் ஆரம்பித்துள்ளோம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@குமரன் நீங்களும் இந்தவலைப்பூவில் பதிவாளாரக கலந்து கொண்டால் நன்றாக இருக்கும்

குமரன் (Kumaran) said...

தி.ரா.ச.

அழைப்பிற்கு நன்றி. 1. எழுதுவதைக் குறைத்துக் கொண்டு மற்றவர்கள் வலைப்பதிவுகளைப் படிப்பதை அதிகரிக்க விரும்புகிறேன். 2. ஏற்கனவே எடுத்த முயற்சிகளில் பல தொடராமல் நின்று கொண்டிருக்கின்றன.

அதனால் கொஞ்சம் நாள் செல்லட்டும். இறைவன் திருவுள்ளம் அப்படி அமைந்தால் இந்தப் பதிவிலும் இணைகிறேன்.

Geetha Sambasivam said...

அருமையான ஆரம்பம், அதுவும் குருவும், சிஷ்யனும் சேர்ந்து ஆரம்பிச்சிருக்கீங்க, வாழ்த்துகள். குருவருள் துணை நிற்கும்! திராச, சார், சொல்லவே இல்லை, பாருங்க, இப்படி ஒரு பதிவு ஆரம்பிக்கப் போறதை! :P