Wednesday, February 27, 2008

குருவிடம் சில கேள்விகள்....பகுதி-1


சமிபத்தில் நான் படித்தது இது. இந்த பதிவுக்கு ஏற்றது. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியதும் கூட. இதில் உள்ள கேள்விகள் ஸ்ரீ அபினவ வித்யா தீர்த்தரிடம் கேட்கப்பட்டது, பதில்கள் அவர் அளித்தவையே!. இரண்டு பதிவுகளாக இடுகிறேன்.


கேள்வி : குருவின் லக்ஷணம் என்ன?
பதில் : குரு என்பவர் தத்வதை அறிந்த ஞானியாகவும், சிஷ்யனின் நன்மையை விரும்புபவராகவும் இருக்க வேண்டும்.


கே: இக்காலத்தில் பலர் மஹான்களைப் போல நடிக்கிறார்கள், இப்படியான உலகில் உண்மையான குருவை எப்படி தேர்ந்தெடுப்பது?
பதில் : குருவை இப்படித்தான் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று எங்கும் குறிப்புக்கள் நேரடியாக இல்லை. அனால் ஒருவன் மிகுந்த ஸ்ரத்தையுடன் குருவுக்காக காத்திருப்பானாக இருந்தால் ஈஸ்வரன் அவனுக்கு ஒரு சத்குருவை அடையச் செய்வான். நாம் யாரைக் குருவாக கருதுகிறோமோ அவர் ஞானியாகவும், நமது நன்மை மற்றும் உலக நன்மை விரும்புபவராகவும் இருக்கிறாரா என்று பார்த்துக் கொள்ளலாம். இதில், ஞானி என்று யாரையாவது தீர்மானம் செய்வதற்கு பகவத் கீதையில் கூறப்பட்ட ஞானியின் வர்ணனைகளை உபயோகப்படுத்தலாம். ஆனால் கிருஷ்ணன் இந்த உபயோகத்திற்க்காக சொல்லவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

கேள்வி : குருவைப் பற்றி சிஷ்யனின் மனப்போக்கு எப்படி இருக்க வேண்டும்?
பதில் : குருவும், தன் ஆத்மாவும், ஈஸ்வரனும் வேறல்ல என்ற நிலையில் இருக்க வேண்டும். "ஈஸ்வரோ குருராத்மேதி'" என்பதாக குருவின் ஆக்ஞையே ப்ரதானமாக ஏற்று நடக்க வேண்டும். யார் எவ்விதம் சொன்னாலும் குருவின் உபதேசத்தையே முடிவாக கொள்ள வேண்டும்.

கேள்வி : ஞானம் அடையாத ஒருவர் மற்றொருவருக்கு ஆத்ம ஞானத்தை உபதேசம் செய்ய முடியுமா?.
பதில் : ஆத்மாவை அறியாதவன் அதைப் பற்றி உபதேசிப்பது எங்கனம்?, இதொன்றும் மனனம் செய்து ஒப்பிவிக்கும் விஷயமல்லவே?. அறியாதவன் குருவாக உபதேசித்தால், சிஷ்யன் எவ்வளவு ஆராய்ந்தாலும் ஆத்மாவை அறிய முடியாது. ஆத்மாவை அறிந்தவன் உபதேசித்தால், கேட்பவன் மோக்ஷத்தை அடைகிறான் என்று கடோபநிஷத்தில் கூறப்பட்டிருக்கிறது.

கேள்வி : ஆன்மீக ஈடுபாடுள்ளவன் தன் குருவைப் பற்றியோ, ஈஸ்வரனைப் பற்றியோ பிறர் நிந்திப்பதை காதால் கேட்பது தவறா?, அந்த சூழலில் சிஷ்யன் என்ன செய்ய வேண்டும்.
பதில் : ஆம்!, கேட்பதும் தவறே!. நிந்திப்பவனிடம் அவ்வாறு கூற வேண்டாம் என்று சொல்லலாம், கேட்காவிடில் அவ்விடத்தை விட்டு அகன்று விடலாம்.

கேள்வி : எந்த வயதில் ஆன்மிக சாதானையை தொடங்க வேண்டும்?
பதில் : எவ்வளவு சிறிய வயதில் ஆரம்பிக்கிறோமோ அவ்வளவு நல்லது. ப்ரஹலாதனும், த்ருவனும் சிறுவர்களாகவே இறைதரிசனம் பெற்றவர்கள்
தாமே?.

கேள்வி : மோக்ஷத்தை விரும்புவனுக்கு குரு தேவையா?
பதில் : மிகவும் தேவை.

11 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கேள்வி பதில் தொடர் நல்லா இருக்கு மெளலி அண்ணா! தொடர்ந்து தொடருங்கள்.

//அனால் ஒருவன் மிகுந்த ஸ்ரத்தையுடன் குருவுக்காக காத்திருப்பானாக இருந்தால் ஈஸ்வரன் அவனுக்கு ஒரு சத்குருவை அடையச் செய்வான்//

அதானே!
குருவைப் பரிசோதனை பண்ணித் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு நமக்கு நல்லறிவு இருந்தா, அப்புறம் குருவே தேவை இல்லையே! அது இல்லைன்னு தானே அவரை நாடுகிறோம்!

சுவாமி சிவானந்தர் அப்துல் கலாமுக்குச் சொன்னது தான் நினைவுக்கு வருது!
When the student is READY, the teacher ARRIVES!

Geetha Sambasivam said...

இதிலே போய் நான் எழுதறதா? அப்புறம் சரியான பானகத் துரும்பா ஆயிடும். இதுவே நல்லா இருக்கு இல்லை? :)))))

ambi said...

அருமையான கேள்வி பதில்கள், பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி :)

Geetha Sambasivam said...

//கேள்வி பதில் தொடர் நல்லா இருக்கு மெளலி அண்ணா! தொடர்ந்து தொடருங்கள்.//

யாருக்கு யார் அண்ணானு இன்னும் புரிஞ்சுக்க முடியலை, woodhead தானே அதான்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கீதா சாம்பசிவம் said...
யாருக்கு யார் அண்ணானு இன்னும் புரிஞ்சுக்க முடியலை, woodhead தானே அதான்//

தோடா...
பேர்லயே கீதையை வச்சிக்கிட்டு இருக்காங்க! தலைவிக்குத் தெரியலையாமா?
மெளலியே அண்ணன்!
அடியேன் பொடியேன்! :-))

மெளலி (மதுரையம்பதி) said...

//மெளலியே அண்ணன்!
அடியேன் பொடியேன்! :-))//

இல்லை, இல்லை, கே.ஆர்.எஸ்... நீங்க தான் அண்ணன்....நான் உங்கள் தாஸன் / தாசன் :-)

jeevagv said...

மதுரையம்பதி:
இந்தச் சுட்டிகளைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இல்லாவிட்டால், பார்க்கவும்:
http://www.youtube.com/watch?v=xaZiCdRKxjw
ஆச்சார்ய ஹ்ருதயத்தில் பயன் படுத்திக் கொள்ள உதவும்.

குமரன் (Kumaran) said...

தலைவா. கல்லூரிக்காலத்துல ஆசாரியர் கேள்வி பதில்களில் படித்ததெல்லாம் இன்னொரு தடவை படித்தேன். ரொம்ப நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன்....ஆமாம் எல்லாம் நம்ம குருவிடம் கேட்ட கேள்விகளும் அவர் கொடுத்த பதிலகளும் தான்...உங்களூக்கு முன்னமே தெரிந்திருக்க/படித்திருக்க வாய்ப்பு உண்டு. :-)

மெளலி (மதுரையம்பதி) said...

ஜீவா,

நன்றி. முன்னமே பதிலளிக்க/நன்றி சொல்ல மறந்திருக்கிறேன். மன்னிக்கவும் :-)

cheena (சீனா) said...

//When the student is READY, the teacher ARRIVES!//

சத்தியமான வார்த்தைகள். உண்மையான சொற்கள் உள்ளத்திலிருந்து வரும் சொற்கள்.

நல்லதொரு கேள்வி பதில்
நல்வாழ்த்துகள் மௌளி