Thursday, February 21, 2008

குருவருள்தான் திருவருள்


(பிள்ளையாரின் மீதி கிளிக் செய்து அபிஷேகங்களைப் பாருங்கள்)
குருவிடம் கற்றுக்கொள்ள வேண்டியதையெல்லாம் கற்று அறிந்தான் ஒரு மாணவன். அவனுக்கு கொஞ்சம் பெருமை பிடிபடவில்லை. குரு இல்லாவிட்டாலும் தான் கற்றுக்கொண்டு இருக்கலாம் என்றஆணவம் தலை தூக்கியது.




குருவிடம் ஒரு நாள் மெதுவாக கேட்டான்" குருவே ஒருவனுக்கு குருவருள் வாழ்கையில் மிகவும் அவசியமா?, அது இல்லாமல் வாழ முடியாதா?" குரு சிறிது கண்ணை மூடி தியானம் செய்து மாணாக்கனின் செருக்கு நிலையை உணர்ந்தார்.தன் கையிலிருந்த உலோகத்திலான கமண்டலத்தை எதிரே இருந்த சிறிய குளத்தில் சீடனைப் போடச்சொன்னார். சீடன் அதை தண்ணீரில் போட்டதும் முழ்கியது.சீடன் சொன்னான் குருவே நீங்கள் சொன்னபடி செய்தேன் கமண்டலம் தண்ணீரில் முழ்கிவிட்டது என்றான். குரு உடனே தான் உட்கார்ந்திருந்த மரப்பலகையை எடுத்து சீடனிடம் கொடுத்து அதையும் தண்ணீரில் போடச் சொன்னார். சீடன் மரப்பலகையைப் போட்டதும் அது மிதந்தது முழ்கவில்லை.குரு சீடனிடம் முழுகிய கமண்டலத்தை எடுத்து அந்த மரப்பலகை மீது வைக்கச்சொன்னார் சீடன் வைத்ததும் பலகை மீது இருந்த கமண்டலமும் மிதந்தது.



குரு சொன்னார் சீடனே மனிதர்கள் சம்சார சாகரம் என்னும் பெருகடலில் முழுகாமால் இருக்க வேண்டுமானால் குருவருள் என்ற மரப்பலகை இருந்தால் முழுகாமல் கரை சேரலாம் என்றார். சீடனுக்கு குருவருளின் சிறப்பு புரிந்தது.




உலக ஆசையைத் துறந்த பட்டினத்து அடிகள் இதை வலியுறுத்தி
"குரு மார்க்கம் இல்லாக் குருடருடன் கூடிக்
கருமார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே" ---என்கிறார்


"ஆண்ட குருவின் அருளைப் மிகப் போற்றி
வேண்டும் கயிலாய வீட்டுவழி பாராமல்
பூண்டகுழல் மாதுநல்லார் பொய் மாய்கைக்கு உள்ளாகித்
தூண்டில் அகப்பட்டுத் துடி கொண்டை(மீன்) ஆனேனே
ஆக இந்த ஜன்மம் கடைத்தேற வேண்டுமனால் குருவின் திருவருள்
இல்லாமல் முடியாது

10 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

//குரு மார்க்கம் இல்லாக் குருடருடன் கூடிக்
கருமார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே//

மஹா வாக்கியம். உணர்வோம், இறைஞ்சுவோம் குருவருளுக்காக!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அருமையாச் சொல்லி இருக்கீங்க திராச.
ஒரு வேண்டுகோள்: இதே போல சாரமான விளக்கங்களை, ஞானம் ஒன்றில்லா அடியேனும் புரிந்து கொள்ளூம் வண்ணம், கதை வடிவில் அடிக்கடி சொல்லவேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்!

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க ரவி.யாரு நானா ஞானமா?
பத்தி நெறி அறியாத மூடரொடு முயல்வோன்முடிந்த வரை பார்க்கலாம்

தி. ரா. ச.(T.R.C.) said...

@மௌளி குருஇல்லாமல் மனித வாழ்க்கை மேம்படமுடியாது. இதைத்தான் இந்தக் கதை உணர்த்தும்

தி. ரா. ச.(T.R.C.) said...

@ரவி இந்த உள் குத்தெல்லாம் எதுக்கு. அடுத்த தடவை வரும்போது நேரிலேயே குத்துங்க!P

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//@ரவி இந்த உள் குத்தெல்லாம் எதுக்கு//

ஆகா! இது என்ன வம்பாப் போச்சுது?

திராச,
நீங்க கதை வடிவில் சொல்லும் போது அடியேனை இன்னும் எளிதா எட்டுது! அதான் இந்தக் குரு-சீடன் கதை போலவே தரச் சொன்னேன்!

இதில் உள்குத்து? ஆமாம் இருக்கு!
உள்ளத்தில் குத்தும் உலக்கையாம் பிரணவமே உள் குத்து!
அது மற்றை நம் எண்ணங்களை எல்லாம் பொடியாக்கி,
குருவின் திருவடியில் சேர்த்து விடும் உள்+குத்து! குத்துக் குத்துக் கூர் வடி வேலால்! :-)

பொடிப்பையன் கேட்கிறேன்! இனிமே நிறையக் கதை தரணும் சொல்லிப்புட்டேன்! :-)

குமரன் (Kumaran) said...

அருமையான கதையின் மூலம் அழகான கருத்து விளக்கப்பட்டது. நன்றி தி.ரா.ச.

தி. ரா. ச.(T.R.C.) said...

குமரன். வாங்க எல்லாப் பதிவுக்கும் வந்து தங்கள் கருத்துக்களை அளியுங்கள்.ஒத்த கருத்துடைய நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்

கபீரன்பன் said...

அருமை. வெகு அருமையான பாடம் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி

cheena (சீனா) said...

நண்பர் தி.ரா.ச,

குருவருள் இல்லாத செயல் சிறக்காது. குருவருள் தான் திருவருள்.
கருவிலே கற்றுணர்ந்தாலும் குருவின் திருவருள் வேண்டும். அபிமன்யுவின் ஆற்றல் இதை உறுதிப்படுத்தும். அர்ச்சுணன் குருவருள் பெற்றவன். இல்லை இல்லை ஆச்சார்யன் அருள் பெற்றவன்.

நல்ல பதிவு படித்த திருப்தி.
வலைச்சரச் சுட்டி மூலமாக வந்தேன்