ஜனகரது கருணை நிறைந்த மனிதநேயத்தைப் பற்றி ஒரு கதை உண்டு. ஜனகர், ஒரு சமயம் தனது யோக சக்தியால் உடலை நீத்தார். உடனேயே அவரை அழைத்துச் செல்ல தேவலோகத்திலிருந்து ஒரு விமானம் வந்தது. ஜனகர் அதில் ஏறிக்கொண்டார்.தேவலோகத்திற்குப் போகும் வழியில் யமபுரியைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அங்கே பாவம் புரிந்தவர்கள் எண்ணற்றோர் பலவிதமான கொடும் தண்டனைகளை அனுபவிப்பதைக் கண்டார். புண்ணிய மூர்த்தியான ஜனகர், நரகத்துக்கருகே சென்றபோது, அவரது உடலில் பட்ட காற்று அங்கு வீசியது. உடனே நரக வெப்பம் தணிந்து தண்ணெனக் குளுமையானது. எனவே அந்த மனிதர்கள், மேலே போகாமல் அங்கேயே இருக்குமாறு ஜனகரை வேண்டினர். அக்கொடிய பாவிகளுக்குத் தன்னால் ஓரளவு துன்ப நிவர்த்தி கிடைக்குமானால், தான் அங்கேயே தங்கி விடலாமெனத் தன் பெருங்கருணையினால் ஜனகர் நினைத்தார்.
அப்போது காலன் அங்கு வந்தான். ஜனகரை அங்கே கண்டு பெரிதும் வியப்பெய்தி, ஒப்பற்ற புண்ணிய புருஷரான அவர் அங்கிருப்பதன் காரணத்தை வினவினான். ஜனகரும் நடந்ததைக் கூறினார். உடனே காலனும் அங்கு நரகவாதனையில் உழலும் மாந்தர்கள் செய்த மாபாதகங்களையெல்லாம் எடுத்துக் கூறி, அவர்கள் செய்த வினைக்கேற்ற பலனைத்தான் அனுபவிக்கிறார்கள் என்று விளக்கமளித்தான். ஆனால் ஜனகரோ அக்கொடிய நரகத்திலிருந்து அவர்கள் விடுதலை பெற ஏதாவது வழியுண்டா என்று காலனைக் கேட்டார். ஜனகரது ஒரு நற்செயலின் பயனை அப்பாவியர்க்களித்தால், அவர்கள் விடுதலை பெறுவர் என்று கூறினான், காலன்.
உடனேயே தூய உள்ளத்தோடு ஜனகர் இராம நாமத்தை ஜபிக்க, அதனால் பாவியர் நரகத்தினின்றும் விடுதலை பெற்றனர். பின்னர் ஜனகரும் தேவருலகம் சென்றார்

இப்படி பட்ட ஜனகரைத் தான் சுகபிரும்மம் தன் குருவாக தேர்ந்தெடுத்தார்.
குருவாக இருபதற்கும் தகுதி வேண்டும் அப்படி இருந்துவிட்டால் அவருடைய சிஷ்யர்கள் அதனால் பெரும் பலனடைவார்கள்.சேரிடம் அறிந்து சேர் என்ற சொல்லே இதனால்தான் ஏற்பட்டது.
குருவாக இருபதற்கும் தகுதி வேண்டும் அப்படி இருந்துவிட்டால் அவருடைய சிஷ்யர்கள் அதனால் பெரும் பலனடைவார்கள்.சேரிடம் அறிந்து சேர் என்ற சொல்லே இதனால்தான் ஏற்பட்டது.
8 comments:
ஆகா, குருவின் பெருமை அருமை.
சுகப்பிரம்மத்திற்கே குருவாக இருக்கும் தகுதி ஜனக மகாராசருக்கு இருந்தது ஏன் என்பதை நன்கு சொன்னீர்கள் தி.ரா.ச. இந்தக் கதையை முன்பே படித்திருக்கிறேன். சுகப்பிரம்மத்திற்கு குருவாக ஜனகர் இருந்ததையும் படித்திருக்கிறேன். ஆனால் அவை இரண்டையும் இணைத்துப் பார்த்ததில்லை. நன்றிகள்.
நன்றி சார் அரிய தகவலைப் பகிர்ந்து கொண்டதற்கு.
@கீதா மேடம் ஆச்சர்ய இருதயம் பகுதி உங்கள் கருத்துக்களால் பொலிவு பெருகிறது. நல்ல விஷயங்களை கூடியவரை பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம்.
@குமரன் வாங்க.சுகபிரும்மத்தைப் பற்றி எவ்வளவு வேணுமானாலும் எழுதலாம். இப்போதைக்கு இதை நிறுத்தி வேறுஆச்சார்யார்களைப் பற்றியும் எழுத வேண்டும். ஆனாலும் பரமாச்சாரியரைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாது.
ஆம் ஜீவா. குருவின் பெருமையை சொல்ல வார்த்தைகளால் முடியாது.மனிதனின் வாழ்க்கையில் மாதா பிதா குரு அப்பறம்தான் தெய்வம்.
சூப்பர் திரச....சுகரைப் பற்றி ஒரு தொடராக தொடருங்கள்...:))
21ஆம் நூற்றாண்டின் இணையற்ற இராமானுஜ(ச)ன் அவர்களுக்கும் இன்வைட் அனுப்பியுள்ளேன். அக்ஸப்ட்டும் பண்ணிட்டார். விரைவில் அவரும் எனக்கு ஆச்சார்யராக, தனது ஹ்ருதயத்திலலிருந்து அருளுவார். :))
21 ஆம் நூற்றாண்டு ராமனுஜர் வந்தால் அந்த கண்ணபிரானே வந்தா மாதிரி.இனிமேதான் கச்சேரி களைகட்டும்.
Post a Comment