Wednesday, August 13, 2008

ஸ்ரீ வாதிராஜர்


அம்பி கேட்டிருந்த ஹயக்ரீவருக்குக் கடலை நைவேத்தியம் பத்தி எழுதணும்னு ரொம்ப நாட்களாய் முயன்றும் நேரமின்மையால் எழுத முடியவில்லை. இன்னிக்கு எப்படியாவது எழுதணும்னு ஆரம்பிச்சிருக்கேன், முடிக்க அந்த ஹயக்ரீவர் அருள் புரியவேண்டும்.
*************************************************************************************

முதலில் ஹயக்ரீவர் பற்றிய ஒரு சின்ன அறிமுகம். அநேகமாய் இரு பதிவுகளாய் வெளிவரும்னு நினைக்கிறேன். ஏற்கெனவே ராமாயணத்தைத் தோற்கடிக்கிறோம்னு ஒரு புகழ்ச்சி இருக்கு நம்ம பதிவுக்கு. ஆகவே கூடியவரையில் சுருக்கமாய்!

எப்போவுமே கல்விக்குத் தனிச் சிறப்பு. அந்தக் கல்விக்கு அதிபதியாய் நாம் அனைவரும் வணங்குவது சரஸ்வதி தேவியை! ஆனால் அந்த சரஸ்வதிக்கும் ஒரு குரு உண்டு என எத்தனை பேருக்குத் தெரியும்?? அவரே ஞானகுருவான ஹயக்ரீவர். அம்பிகையின் நாமங்களை உலகுக்கு அகத்தியர் வாயிலாக லலிதா சஹஸ்ரநாமம் ஆக வெளிப்படுத்தியவர் ஹயக்ரீவரே! ஞானமும், கல்வியும் நமக்கு இரு கண்கள். ஆனால் இன்றைய கல்வி வயிற்றுப் பாட்டுக்காக இருப்பதால் அதில் சந்தோஷம் இருந்தாலும் பேரானந்தம் என்பது இருக்க முடியாது. ஆனந்தம் வேறே, சந்தோஷம் வேறே இல்லையா??? சந்தோஷம் எப்போவும் தனித்து இருக்காது, தனித்து வராது. கூடவே துக்கமும் வரும். ஆனால் ஆனந்தம் அப்படி இல்லை. சந்தோஷம் அழியக் கூடியது. இன்றிருக்கும், நாளை இருக்காது. ஆனந்தம் அழிவில்லாதது. அந்த அழிவற்ற ஆனந்தத்தைத் தரக் கூடியது, ஞானம் ஒன்று மட்டுமே. அத்தகைய ஆனந்தத்தைப் பெற ஹயக்ரீவரைத் தியானிக்க வேண்டும்.

அறியாமை என்னும் இருளில் இருந்து ஞானம் ஆகிய ஒளியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் ஞான ஆசாரியனாக ஹயக்ரீவர் அருள் புரிகின்றார். அலையாழி அறிதுயிலும் அந்த மாயவனின் ஒரு அவதாரம் ஆன ஹயக்ரீவர் தோன்றியது எப்படி? நான்கு வேதங்களின் துணை கொண்டு, அந்த வேதங்கள் பின் தொடர்ந்து வர, பிரம்மா தனது சிருஷ்டியை நடத்திக் கொண்டிருக்கும்போது, மது, கைடபர் என்னும் இரு அரக்கர்கள் தங்களைப் பிரம்மனைவிடவும் பெரியவர்களாய் நினைக்கவேண்டும் என்ற எண்ணத்தால், அந்த வேதங்களைக் குதிரை வடிவில் வந்து பிரம்மாவிடம் இருந்து பறித்துச் சென்றனர். ( தேவி மஹாத்மியத்தில் வரும் மது, கைடபர்கள் இவர்கள் இல்லை. ஆகவே அவர்கள் என நினைத்துக் கொள்ள வேண்டாம்.) வேதங்கள் இல்லாமல் சிருஷ்டியின் அர்த்தமே இல்லையே?? உலகை இருள் சூழ்ந்தது. பிரம்மா செய்வதறியாது திகைத்தார்.

மஹாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார் பிரம்மா. மஹாவிஷ்ணு இவ்வுலகைக் காக்கவும், வேதங்களை மீட்டு வரவும், அசுரர்கள் எந்தக் குதிரை வடிவில் வந்தனரோ, அந்தக் குதிரை வடிவிலேயே தாமும் செல்லத் தீர்மானித்தார். குதிரை முகம், மனித உடல், ஆயிரம் கோடி சூரியர்களையும் மிஞ்சும் ஒளி. சாட்சாத் அந்த சூரிய, சந்திரர்களே இரு கண்கள், கங்கையும், சரஸ்வதியும் அந்தக் கண்களின் இமைகள். சங்கு, சக்ரதாரியாக இந்த திவ்ய சொரூபத்துடனேயே விஷ்ணு வேதங்களை மீட்டு எடுக்கக் கிளம்பினார்.

"முன்னிவ்வுலகேழும் இருள் மண்டியுண்ண
முனிவரோடு தானவர்கள் திகைப்ப வந்து
பன்னுகலை நூல் வேதப் பொருளை யெல்லாம்
பரிமுக மாயருளிய வெம்பரமன் காண்மின்" என்றும்,

"வசையில் நான்மறை கெடுத்த
அம்மலரயற்கருளி முன் பரிமுகமாய்
இசைகொள் வேத நூலென்றிலை
பயந்தவனே! எனக்கருள் புரியே" என்றும் முறையே எட்டாம் திருமொழியிலும், மூன்றாம் திருமொழியிலும் ஆழ்வார் அருளிச் செய்திருப்பது போலக் கிளம்பினார் ஹயக்ரீவர்.

அகம்பாவத்தின் வடிவான மது, கைடபர்களிடமிருந்து வேதங்களை மீட்டு வந்து பிரம்மதேவனிடம் ஒப்படைத்தார் ஹயக்ரீவர். அந்த ஞானானந்த சொரூபம்,ஸ்படிகமணி போன்ற திவ்ய மங்கள ரூபத்தின் அருள் பெற்ற மகான்கள் பலர் உண்டு. அவர்களில் ஸ்ரீபாதராஜர், ஸ்ரீவாதிராஜர் ஆகியோர் முக்கியமானவர்கள் என்றாலும், மாத்வாச்சாரியாரால் நிர்மாணிக்கப் பட்ட அஷ்ட மடங்களில் ஒன்றான ஸோதே மடத்தின் பீடாதிபதியாகவும், பிறக்கும்போதே தங்கத் தாம்பாளத்தில் ஏந்தப் பட்டவரும், பிறந்ததிலிருந்து ஸ்ரீமடத்தின் அபிஷேகப் பாலை உண்டு வளர்ந்தவரும், ஹயவதன என்னும் முத்திரையோடு பலப் பல கீர்த்தனைகளை ஹயக்ரீவர் பால் எழுதியவரும் ஆன ஸ்ரீவாதிராஜ தீர்த்தர் பற்றியே இங்கே நாம் காணப் போகின்றோம்.

26 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குதிரை வேகத்தில் அழகான பதிவு கீதாம்மா!

ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிக ஆக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!

ஞானம் மற்றும் ஆனந்த மயமாக இருக்கும் இறைவா! ஸ்படிகம் போல் நிறம்/குணம்/குறைகளை எல்லாம் கடந்தவனே!
சகல வித்தைகளுக்கும் ஆதாரம் நீ! அயமுகப் பெருமாளே! ஹயக்ரீவா! உன்னை உபாசிக்கிறேன்!

Kavinaya said...

நல்ல பதிவு கீதாம்மா. என் அம்மா, பிள்ளைங்க படிப்பு சம்பந்தமா திருவந்திபுரம் ஹயக்ரீவர்கிட்ட நிறைய விண்ணப்பம் போடறதை பார்த்திருக்கேன். ஆஞ்சநேயர் தூக்கிக்கிட்டுப் போன சஞ்சீவி மலையில ஒரு பகுதி அந்த இடத்துல விழுந்ததாம். அந்த மலையிலதான் இப்ப ஹயக்ரீவர் இருக்கார்.

Raghav said...

வாதிராஜ தீர்த்தரை பற்றி அறிய காத்துள்ளேன் கீதாம்மா. ஹயக்ரீவர் அருள் பெற்றவர் தானே நமது தூப்புல் குலமணி வேதாந்த தேசிகர். இன்றும் வில்லிபுத்தூரில் மாணவர்களுக்காக தேர்வுகள் ஆரம்பிக்கும் முன், ஹயக்ரீவருக்கு ஹோமங்கள் செய்து அனைவருக்கும் பேனா, போன்ற பொருள்கள் பூஜையில் வைத்து வழங்குகின்றனர்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆனந்தம் வேறே, சந்தோஷம் வேறே இல்லையா??? சந்தோஷம் எப்போவும் தனித்து இருக்காது, தனித்து வராது. கூடவே துக்கமும் வரும்//

அதனால் தான் சந்-தோஷத்தில் தோஷமும் ஒட்டிக்கிட்டு இருக்கு!

//ஆனால் ஆனந்தம் அப்படி இல்லை//

அந்தம் வரை இருப்பதால் தான் ஆ"னந்தம்"!
எம்பெருமான் குடி கொண்டிருப்பதும் ஆனந்த நிலையம் தான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கீதாம்மா
நீங்கள் கொடுத்த ஹயக்ரீவ பாசுரத்தின் முழுப்பாசுரமும் இதோ!

திருமங்கை மன்னன், திருவெள்ளறை ஆலயத்தில் பாடியது!

வசையில் நான் மறை கெடுத்தவம் மலர் அயற்கு அருளி,முன் பரி முகமாய்,

இசை கொள் வேதநூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே,

உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்,

திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஸ்ரீமடத்தின் அபிஷேகப் பாலை உண்டு வளர்ந்தவரும், ஹயவதன என்னும் முத்திரையோடு பலப் பல கீர்த்தனைகளை ஹயக்ரீவர் பால் எழுதியவரும் ஆன ஸ்ரீவாதிராஜ தீர்த்தர் பற்றியே இங்கே நாம் காணப் போகின்றோம்//

ஆகா
அடுத்த வியாழன் வரை எல்லாம் காத்திருக்க முடியாது!
நாளைக்கே போடுங்க! :)

மெளலி (மதுரையம்பதி) said...

லலிதையின் பரம பக்தர்களில் ஒருவரல்லவா ஹயக்ரீவர்....

போன வருடம் ஜூன்-ல கூட போயிருந்தேனே திருவஹீந்திபுரம்....:)

மீண்டும் ஒருமுறை சொல்கிறேன், ஹயக்ரீவர் அகஸ்தியருக்குச் சொன்னது ஸ்ரீ லலிதா த்ரிசதீ... :)

முளபாகலில் கூடியிருக்கும் வாதிராஜர் சரிதம் கேட்க ஒரு வாரம் காத்திருக்கணுமா?...

சரி, சரி, குருவருள் என்ன அவ்வளவு எளிதா?...பொறுமையுடன் அவரது திருவடி நினைத்துக் கொண்டிருப்பேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

//ஹயக்ரீவர் அருள் பெற்றவர் தானே நமது தூப்புல் குலமணி வேதாந்த தேசிகர்.//

அவரே ராகவ்....திருவஹீந்திபுரத்தில், தேவநாத பெருமாள் கோவிலில் வேதாந்த தேசிகருக்கென்றே அவருக்கென தனிசன்னதி இருக்கிறது...இந்த தலத்தில் ராமானுஜரைவிட வேதாந்த தேசிகரே ப்ராதான்யம்....:)

Geetha Sambasivam said...

@கேஆரெஸ்,
நன்றி. பதிவு அடுத்த வாரமே வரும்! :)))))))

@நன்றி, கவிநயா, கடலூர் சென்றிருந்த போது நண்பர் எங்களை அழைத்துச் சென்ற முதல் இடம் திருவஹீந்திபுரம் கோயில் தான். அவர் கீழேயே தங்க, நாங்கள் இருவரும் மேலே சென்று தரிசித்துவிட்டு வந்தோம். அருமையான தரிசனம் மேலே கிடைத்தால், கீழே மலையடிவாரத்தில், தேவராஜப் பெருமாளின் அருகே நெருங்கக் கூட முடியவில்லை, கூட்டத்தின் உள்ளே என்னால் போக முடியாமல் எப்படியோ பார்த்தோம் என்று பேர் பண்ணினோம். அவ்வளவுதான். ஒரு வருஷத்துக்கு மேல் ஆச்சு, இது நடந்து, மீண்டும் சென்று பார்க்கவேண்டும், முக்கியமாய்ப் பாடலேஸ்வரரை! :)))))))) இன்னும் பார்க்கவே இல்லை!

Geetha Sambasivam said...

@ராகவ், நானும் கவனிச்சிருக்கேன், ஸ்ரீவில்லிபுத்தூரில். அடுத்த வாரமே பதிவின் இன்னொரு பாகம்! நன்றிப்பா, கருத்துக்கு!

கேஆரெஸ், பாசுரம் முழுசாவே எனக்கும் கிடைச்சது, நான் தான் தேவையானதைப் போட்டுட்டு மிச்சத்தை எடிட் செய்தேன்! :))))))))

Geetha Sambasivam said...

@மதுரை,
லலிதா சஹஸ்ரநாமத்துக்குத் தக்க ஆதாரத்தோடயே வரேன் இன்னொரு சமயம். இப்போ ஜூட்!!!! அடுத்த வாரம் தான் மிச்சம், மீதி எல்லாம்! இப்போ இல்லை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@கீதாம்மா
வேதங்களை மது கைடபர்கள் களவாடியது சம்பந்தமா ஒரு கேள்வி கேட்கலாமா? :)

//மீண்டும் ஒருமுறை சொல்கிறேன், ஹயக்ரீவர் அகஸ்தியருக்குச் சொன்னது ஸ்ரீ லலிதா த்ரிசதீ... :)//

இதை மீண்டும் பல முறை சொல்கிறேன்!
ஹயக்ரீவர் அகத்தியருக்குச் சொன்னது லலிதா த்ரிசதீ!!!

//இந்த தலத்தில் ராமானுஜரைவிட வேதாந்த தேசிகரே ப்ராதான்யம்....:)//

ஹா ஹா ஹா
ப்ராதான்யமான இடத்தில் ப்ரதான்யமாகச் சொல்லப்படுவது இது தான் மெளலி அண்ணா! :)

"ஸ்ரீ ராமானுஜ" தயா பத்ரம்
ஞான வைராக்கிய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்
வந்தே வேதாந்த தேசிகம்!

//கேஆரெஸ், பாசுரம் முழுசாவே எனக்கும் கிடைச்சது, நான் தான் தேவையானதைப் போட்டுட்டு மிச்சத்தை எடிட் செய்தேன்! :))))))))//

உயர் கொள் மாதவிப் போதொடு-ன்னு அடுத்த லைன்ல "மாதவி" வருதுல்ல! அதான் எடிட் பண்ணி இருப்பீங்க! :)))

Raghav said...

//ஹா ஹா ஹா
ப்ராதான்யமான இடத்தில் ப்ரதான்யமாகச் சொல்லப்படுவது இது தான் மெளலி அண்ணா! :)

"ஸ்ரீ ராமானுஜ" தயா பத்ரம்
ஞான வைராக்கிய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்
வந்தே வேதாந்த தேசிகம்!//

அனைத்து வடகலை சம்ப்ரதாய(?) கோவில்களிலிம் முதல் தனியன் இது தான். வேதாந்த தேசிகரின் அபிமான ஸ்தலம் திருவஹீந்திரபுரம் என்பதால் தேசிகர் உத்ஸவம் சிறப்பாக நடக்கும். மற்றபடி "உங்கள் இராமானுஜரை" "எங்கள் மெளலீ அண்ணா" குறைத்து சொல்லவில்லை. :) (வார்த்தைகளில் தவறு இருப்பின் மன்னிக்கவும்)

Raghav said...

//மதுரையம்பதி said...
லலிதையின் பரம பக்தர்களில் ஒருவரல்லவா ஹயக்ரீவர்....
//

மெளலி அண்ணா, நான் அறிந்திராத விஷயம். அவதார மூர்த்தி எப்படி பக்தரானார்? ஹயக்ரீவர் பற்றி மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

Raghav said...

//அவர் குறைத்துச் சொன்னதாக நானும் சொல்லவில்லையே!
அப்புறம் ஏன் இது போன்ற தேவையற்ற மேல் விளக்கங்கள்?//

புரிந்து கொண்டேன் மன்னிக்கவும் ரவி அண்ணா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராகவ்
//மற்றபடி "உங்கள் இராமானுஜரை" "எங்கள் மெளலீ அண்ணா" குறைத்து சொல்லவில்லை. :)//

அவர் குறைத்துச் சொன்னதாக நானும் சொல்லவில்லையே!
அப்புறம் ஏன் இது போன்ற தேவையற்ற மேல் விளக்கங்கள்?

இது ஆசார்ய ஹ்ருதயம் என்னும் வலைப்பூ.
//இந்த தலத்தில் ராமானுஜரைவிட வேதாந்த தேசிகரே ப்ராதான்யம்....:)//

அவரை விட இவர், இவரை விட அவர், என்று "ஆசார்ய பேதங்கள்",
விளையாட்டுக்குக் கூட இங்கு தேவையில்லை என்பதே அடியேன் கருத்து!
இவர் இங்கு பிராதான்யம் என்றும் சொல்லலாம் அல்லவா?

அதற்காக விளையாடவே வேண்டாம் என்றும் சொல்லவில்லை!
"உங்கள்" இராமானுஜர், "எங்கள்" சங்கரானுஜர், என்றெல்லாம் தாராளமாக விளையாடிக் கொள்ளுங்கள் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராகவ்
//புரிந்து கொண்டேன் மன்னிக்கவும் ரவி அண்ணா//

ஹா ஹா ஹா
சும்மா-ல்லாம் மன்னிக்க முடியாது! தட்சிணை எடுத்து வைங்க! அடியேன் கண்ணன் பாட்டில் கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுங்க! :)

Geetha Sambasivam said...

//உயர் கொள் மாதவிப் போதொடு-ன்னு அடுத்த லைன்ல "மாதவி" வருதுல்ல! அதான் எடிட் பண்ணி இருப்பீங்க! :)))//

ada, ஆமாம், அதே தான்!!! :P :P :P

Raghav said...

//சும்மா-ல்லாம் மன்னிக்க முடியாது! தட்சிணை எடுத்து வைங்க! அடியேன் கண்ணன் பாட்டில் கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுங்க! :)//

P.Hd பண்ணி கண்டுபிடிக்க வேண்டிய கேள்வி அது. நான் இப்போதான் L.K.G சேந்துருக்கேன். சொல்பா வெய்ட் மாடி..

மெளலி (மதுரையம்பதி) said...

//அனைத்து வடகலை சம்ப்ரதாய(?) கோவில்களிலிம் முதல் தனியன் இது தான். வேதாந்த தேசிகரின் அபிமான ஸ்தலம் திருவஹீந்திரபுரம் என்பதால் தேசிகர் உத்ஸவம் சிறப்பாக நடக்கும். //

ஓ இதுதான் காரணமா...எனக்கு இந்த வடகலை-தென்கலை வித்தியாசங்கள் தெரியாது...பெருமாள்-தாயார் மட்டுமே தெரியும் :-)

//மற்றபடி "உங்கள் இராமானுஜரை" "எங்கள் மெளலீ அண்ணா" குறைத்து சொல்லவில்லை. :) //

இதுவும் உண்மையே...
நன்றி ராகவ்...நீங்களாவது சரியாக புரிந்து கொண்டீர்களே :)

//அவரை விட இவர், இவரை விட அவர், என்று "ஆசார்ய பேதங்கள்",
விளையாட்டுக்குக் கூட இங்கு தேவையில்லை என்பதே அடியேன் கருத்து! //

உண்மைதான்..ஆனால் அந்த தலத்தில் இருக்கும்/நடக்கும் வித்தியாசம் என்ற பொருளில் சொல்லப்பட்ட கருத்து அது. ஆச்சார்ய பேதமாக தொன்றுவதற்கு நான் ஏதும் செய்ய முடியாது, ஏனெனில் நான் அந்த கருத்தை எழுதுகையில் எனக்கு அம்மாதிரியான எண்ணம் ஏதும் தோன்றவில்லை என்பதே உண்மை. :)

காமாலை வியாதி வந்தவருக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியும் என்பது உண்மைதான் போல :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//மெளலி அண்ணா, நான் அறிந்திராத விஷயம். அவதார மூர்த்தி எப்படி பக்தரானார்? ஹயக்ரீவர் பற்றி மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.//

ஆஹா...ராகவ்... கீதாம்மாவே எழுதுவாங்கன்னு நினைக்கிறேன்..

எழுதுவீங்க தானே கீதாம்மா? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆச்சார்ய பேதமாக தொன்றுவதற்கு நான் ஏதும் செய்ய முடியாது//

விளக்கத்துக்கு நன்றி மெளலி அண்ணா!

//காமாலை வியாதி வந்தவருக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியும் என்பது உண்மைதான் போல :-)//

மங்களகரமான மஞ்சளுக்கும் நன்றி மெளலி அண்ணா!

"அவர் குறைத்துச் சொன்னதாக நானும் சொல்லவில்லையே!" என்றும் அடியேனும் சொல்லி விட்டேன்! அப்படிச் சொன்ன பின்னாலும் கூட உங்களுக்கு மஞ்சளாகவே தெரிகிறது! என்ன செய்ய! :(

காமாலை வியாதியில் அடியேன் காமாட்சியைக் கண்டு கொள்கிறேன்! என் காமாலை மஞ்சள் நீங்கட்டும்!

சம்பந்தமே இல்லாமல் ஒரு சிலர் தரும் தேவையற்ற மேல் விளக்கங்கள், திரியை எப்படி வளர்த்துக் கொண்டே போகும் என்பதற்கு இது நல்ல உதாரணம்!

வாதிராஜர் பதிவில் வியாதிகள் பேச்சு வந்ததற்கு அடியேனே பொறுப்பேற்றுக் கொண்டு, மன்னிப்பும் கேட்டுக் கொண்டு அமைகிறேன்!

தக்குடு said...

Present sir........:)

BY,
Thambi

ambi said...

இன்னும் நான் கேட்ட கடலை மேட்டரே வரலையே பதிவுல? :))

இப்பல்லாம் 'அதிரடி வியாழனா' இருக்கு ஆச்சார்ய ஹ்ருதயம். :p

மெளலி (மதுரையம்பதி) said...

//இப்பல்லாம் 'அதிரடி வியாழனா' இருக்கு ஆச்சார்ய ஹ்ருதயம்.//

குசும்பே உன் மறுபெயர்தான் அம்பியா?. :-)

Geetha Sambasivam said...

//இன்னும் நான் கேட்ட கடலை மேட்டரே வரலையே பதிவுல? :))//

@ambi,எப்போப் பார்த்தாலும் கடலை நினைப்புத் தானா?? :P அதே தம்பி பாருங்க, எவ்வளவு ரீஜெண்டா(ஹிஹிஹி decent க்கு சென்னைத் தமிழ்) பதில் கொடுக்கிறாரு! என்ன செய்யறது? அவராலே பதிவுக்குத் தான் ghost writer ஆக இருக்க முடியும்! பின்னூட்டத்துக்குமா???? :P :P :P