Thursday, March 27, 2008

குருவருள் சுகபிரும்மம் ( 2)

ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றிய வியாசர், பின்னர், அதை தனது மகனாகிய சுகருக்கு உபதேசித்தார். சுகர், மிகச்சிறிய வயதிலேயே பெரும் ஞானத்தைப் பெற்றவர். அவர் எல்லாவற்றையும் துறந்து செல்கிறபோது,மகன் மீதான பாசத்தினால் வியாசர் உரக்கக் கூவி அவரை அழைத்தார். வனத்தில் இருந்த மரம், செடி, கொடிகள்எல்லாம் "ஏன்? ஏன்?' என்று கேட்டன. அப்படி, தான், மற்றது என்ற பேதங்களை எல்லாம்கடந்தவராக சுகர் விளங்கினார்



அவருக்கு பிரும்மம் என்ற பட்டம் எப்படி வந்தது? சுகரை ஜனக மஹாரிஷியிடம் பாடம் படிக்க(சீதையின் தந்தை) அவரின் தந்தை அனுப்புகிறார். பாடம் படிக்க வரும் சுகர் அரன்மனைக்கு வெளியில் இருக்கும் மல்ர்தோட்டத்தை பார்க்கிறார், பின்பு அங்கு வாயிலில் இருக்கும் யானையைப் பார்க்கிறார்,வாயில் காப்போனிடம் வழிகேட்கிறார், வழியில் செல்லும் பெண்களைப் பார்க்கிறார், பின்பு படியின் மீது ஏறிச் சென்று ஜனக மஹா ராஜனைப் பார்க்கிறார். சுகரை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று அவரை சோதிக்கும் வண்ணம் ஜனகர் கேட்கிறார். இங்கு வந்தது முதல் நீ என்ன என்ன பார்த்தீர்கள் என்று கேட்டார்.

சுகர் சொன்னார், வரும்போது மலர்கள்பிரும்மத்தைப் பார்த்தேன்,காவலன்பிரும்மத்திடம் வழி கேட்டு யானை பிரும்மத்தின் அழகை ரசித்து, பெண்கள் பிரும்மத்தை பார்த்துகொண்டே, படிகள்பிரும்மத்தின்மீது ஏறி, ஜனக பிரும்மத்தை பார்த்தேன் என்றார்.உடனே ஜனகமஹா ரிஷி சொன்னார் உனக்கு பாடம் சொல்ல எனக்குத் தகுதியில்லை அசையும் பொருள் அசையாப் பொருள் ஆண், பெண், மிருகம்,செடி, மலர், எல்லாவற்றையும் அந்த பிரும்மாகவே( கடவுளாகவே) பார்க்கும் எண்ணம் உள்ள நீங்கள் சுகப்பிரும்மம் என்று அழைக்கப்படிவீர்கள் என்றார்.இப்படி ஆச்சார்ய ஹிருதயத்தில் இடம் பிடித்தவர் சுகபிரும்மம்.

அது சரி ஜனகரை ஏன் சுகருக்கு குருவாக தேர்ந்தெடுத்தார் வியாசர் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்

3 comments:

Geetha Sambasivam said...

//வனத்தில் இருந்த மரம், செடி, கொடிகள்எல்லாம் "ஏன்? ஏன்?' என்று கேட்டன. அப்படி, தான், மற்றது என்ற பேதங்களை எல்லாம்கடந்தவராக சுகர் விளங்கினார்//

உண்மை, ஆனால் நாம் இதை எல்லாம் படிக்கிறோம், அவ்வளவு தான்! :((((((

வல்லிசிம்ஹன் said...

பரமாச்சாரியர் படம் பார்த்ததுமே மனதுக்குப் புது தெம்பு வருகிறது.
சுகப் பிரம்மத்தைப் பற்றியும் ஆரம்பித்துள்ளீர்கள்.
துளியாவது ஞானம் எட்டிப் பார்க்கிறதா என்று பார்க்கிறேன்:)

கபீரன்பன் said...

இப்போது தான் விட்டுப்போன பதிவெல்லாம் தேடிபிடிச்சு படிச்சுட்டு வர்றேன்.
ஜனகர் சுகப் பிரம்மத்திற்கு இன்னொரு பரீட்சை வைத்ததாகவும் கேள்வி பட்டிருக்கிறேன். சுகருடைய நாக்கை நீட்டச் சொல்லி அதன் மேலே சில சர்க்கரைத் துகள்களை வைத்தாராம். சிறிது நேரம் கழித்த பின்னும் அவை சிறிதும் கரையாமல் அப்படியே இருந்ததைக் கண்டு சுகருக்கு புலன்கள் மீதும் முழு கட்டுபாடு உள்ளதை புரிந்து கொண்ட பின்னர் அவருக்கு ஆசி அளித்து அனுப்புகிறார் என்பதாக.