Wednesday, May 7, 2008

குதிரையாய் வந்த குருவும், குதிரைக்காக வந்த குருவும்!

குதிரையாய் வந்த குரு யார்?
குதிரைக்காக வந்த குரு யார்??

யார் யார், யாருன்னு சொல்லுங்களேன்! அவர்களை வணங்கி அடியேனின் ஆசார்ய ஹ்ருதயம் பதிவுகளைத் துவங்குகிறேன்!

இங்கு ஏற்கனவே நற்பதிவுகளை அள்ளித் தரும்
திராச ஐயா, கீதாம்மா, மெளலி அண்ணா - இவர்களும் அடியேனுக்கு ஒரு வகையில் குரு ஸ்தானம் தான்!
அதனால் இவர்களையும் அடி வணங்கியே இப்பதிவுகளைத் துவக்குகிறேன்!

இன்று சித்திரைத் திருவாதிரை - ஆதி சங்கர பகவத் பாதர் மற்றும் உடையவர் இராமானுசர் - இரு பெரும் ஆசார்யர்களின் திருவவதாரத் திருநாள் (ஜெயந்தி) - (May 8th, 2008)
இன்று பார்த்து அடியேனின் ஆசார்ய ஹ்ருதயம் பதிவுகள் துவங்க வேண்டும் என்பதும் ஆசார்யர்களின் திருவுள்ளம் போலும்!தமிழ் முனிவன் திருவள்ளுவனும் ஒரு பேராசான் - பரம ஆசார்யன் தான்!
திருக்குறள் கடவுள் வாழ்த்தில், கடைசிக் குறட்பா, ஆசான்-ஆசார்யனைக் குறிக்கும் என்பது நூலோர் கருத்து!
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.மீன்களைத் தண்ணீரில் போட்டா அவை தானா நீந்தும்! ஆனால் குழந்தைகள்? மனிதர்கள்?
ஆக...பிறவிப் பெருங்கடல் நீந்தனும்-னா, முதலில் நீந்தத் தெரியனும்!
மீனுக்குத் தானா நீந்தத் தெரியும்! ஆனால் மனிதனுக்குத் தானா நீந்தத் தெரியாது! - அவனுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கணும்!

அப்படி நீந்தக் கற்றுக் கொடுப்பவனே ஆசான்-ஆசார்யன் என்பது வள்ளுவர் சொல்லாமல் சொல்லிக் காட்டும் உள்ளுறை உவமம்!
ஆசார்யன் சொல்லிக் கொடுத்து, இறைவனடி உணர்பவர்கள், பிறவிக் கடலை நீந்துவார்கள், நீந்தி இறைவன் "அடி" சேர்வார்கள் என்பதையே ஐயன் வள்ளுவன் குறிப்பால் காட்டுவதாக வியாக்யானம்!

அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் அல்லவா?இப்போ எடுத்துக் கொண்ட தலைப்புக்கு வருவோம்!

இவர் குதிரைக்காக வந்த குரு! - எப்படி என்பதைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்! :-)

கெளரிகாம்பாள் உடனுறை தட்சிணாமூர்த்தி - காணற்கு அரிய இந்த தம்பதி சமேத தட்சிணாமூர்த்தி கோலத்தைச் சென்னைக்கு அடுத்த சுருட்டப்பள்ளியில் காணலாம்! (இன்னொரு காணற்கு அரியதான சயனக்கோலச் சிவபெருமானும் இதே ஊரில் தான்!)
குரவே சர்வ லோகானாம் பீஷஜே பவ ரோகினாம்
நிதயே சர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்த்தயே நமஹ!

குரவே சர்வ லோகானாம் = அனைத்துலகங்களுக்கும் குருவே
பீஷஜே பவ ரோகினாம் = பவ ரோகங்களான அஞ்ஞான நோய்களுக்கு விஞ்ஞான-மெய்ஞான மருந்தே
நிதயே சர்வ வித்யானாம் = சகல வித்தைகளுக்கும் நிதிப் புதையலே
தக்ஷிணா மூர்த்தயே நமஹ! = தென்னமர் செல்வா! தட்சிணாமூர்த்தியே! உம்மை வணங்குகிறேன்!இவர் குதிரையாய் வந்த குரு! - இதையும் எப்படி என்பதைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்! :-)

ஹயக்ரீவர் = ஹயம்+க்ரீவம் = குதிரை+கழுத்து
எப்படிச் சிவபெருமானின் குரு வடிவம் தட்சிணாமூர்த்தியோ, அவ்வண்ணமே பெருமாளின் குரு வடிவம் ஹயக்ரீவ மூர்த்தி! அயவதனப் பெருமாள்! பரிமுகச் செல்வன்!

சரஸ்வதீ தேவியின் ஆதி குரு! அகத்தியனுக்கும் ஆசானாய் இருந்தவர்! சமண-பெளத்தங்களிலும் இவர் பேசப்படுகிறார்! பின்னொரு நாள் விரித்துச் சொல்லலாம்! இன்று வணங்கி மகிழலாம்!
ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிக ஆக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!


ஞான ஆனந்த மயம் = ஞானம், அதே சமயம் ஆனந்தம்! = ஞான காரணமாகவும் - அந்த ஞானத்தால் விளையும் ஆனந்த காரியமாகவும் இருப்பவனே!
தேவம் = இப்படிக் காரணமாகவும் காரியமாகவும் இருக்கும் இறைவா!
நிர்மலம் ஸ்படிக ஆக்ருதிம் = மாசில்லா மணியே! ஸ்படிகம் போல் நிறம்/குணம்/குறைகளை எல்லாம் கடந்தவனே!

ஆதாரம் சர்வ வித்யானாம் = சகல வித்தைகளுக்கும் ஆதாரம் நீ!
ஹயக்ரீவம் = அயமுகப் பெருமாளே! ஹயக்ரீவா!
உபாஸ்மஹே = உன்னை உபாசிக்கிறேன் (வணங்கிக் கொண்டே இருக்கிறேன்)


சிந்தனைக்கு ஒரு தீபம்: எல்லாம் சரி! ஏன் ஞான வடிவ இறைவன், சைவம்/வைணவம் இரண்டிலும் குதிரை தொடர்போடு வர வேண்டும்? குதிரைக்கு அப்படி என்ன விசேடம்? யோசித்துப் பாருங்கள்! :-)
(பதிலை மதுரையம்பதிப் பெருமானிடமோ இல்லை கூடலம்பதிப் பெருமானிடமோ பெற்றுக் கொள்ளலாம்! :-)

29 comments:

jeevagv said...

நல்ல துவக்கம், குருவருள் பெற்று, அல்லது அற, நல்லது நாட்டிட வாழ்த்துக்கள்.
குரு என்றவுடன் என் நினைவுக்கு வரும் பாடல் :
தெளிவித்த என் ஈசன்!
கேள்வியெல்லாம் கேட்டிருக்கீங்க, பெரியவங்க சொல்லிக் கேட்க காத்திருக்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

முதல்ல வருக, வருகன்னு முகமன்களுடன் (என்ன முகமன்னு உங்களுக்கு தெரியுமுன்னு நினைக்கிறேன், இல்லேன்னா சொல்லுங்க தெரிய வச்சுடலாம்) வரவேற்கிறேன்.... :-)

வாங்க கே.ஆர்.எஸ். உங்கள் எழுத்தாற்றலை இங்கும் பதிய இயந்தமைக்கு நன்றிகள் பல.

//இங்கு ஏற்கனவே நற்பதிவுகளை அள்ளித் தரும் திராச ஐயா, கீதாம்மா, மெளலி அண்ணா - இவர்களும் அடியேனுக்கு ஒரு வகையில் குரு ஸ்தானம் தான்!//

வந்த உடனே கீழே இருக்கும் வரிக்காக என்னோட கண்டனத்தையும் பதிவு செய்துக்கறேன்..திரச/கீதாம்மா வயது, அனுபவம் எல்லாவற்றிலும் பெரியவர்கள், குருவாய்/ஆச்சாரியனாய் வணங்கத்தக்கவர்கள்...அந்த பீடத்திற்கு என்னை உயர்த்துவது ஏற்கமுடியாது...

ஏதோ கேள்விகள் கேட்டிருகீங்க...ஆனா எழுத்துச் சித்தர் உங்க வாயால பதில் வந்தாத்தான் நல்லாயிருக்கும்.
சோ, மீ த வெயிட்டிங்..:)

Geetha Sambasivam said...

:))))))))))))))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ஜீவா
முதல் வாழ்த்துக்கு நன்றி ஜீவா!
ஹம்சாநந்தியில் பாடல் அருமை! முதல் பதிவுக்கு பாடலைப் பரிசாக் கொடுத்தமைக்கு நன்றி! :-)

//பெரியவங்க சொல்லிக் கேட்க காத்திருக்கிறேன்//

காத்து இருப்பது நான்! சொல்லி, இருப்பது நீர்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@மெளலி
முகமனுக்கு நன்றிங்கண்ணோவ்!

//என்ன முகமன்னு உங்களுக்கு தெரியுமுன்னு//
21NEEE-ஆஆஆ?
அச்சோ சாமீ! IATE :-)

//என்னோட கண்டனத்தையும் பதிவு செய்துக்கறேன்//

கண்டன்-அத்தைத் தானே! நல்லாப் பதிவு செஞ்சுக்கோங்க!
நீல-கண்டன்-அத்தனைப் பதிவு செய்து வணங்கத் தானே நாம இருக்கோம்! :-)

என்னைப் பொறுத்தவரை, திராச,கீதாம்மாவைப் போலவே நீங்களும் அனுபவம் பெற்றவர் தான்! அவங்க அப்பர் என்றால் நீங்க சுந்தரமூர்த்தி! அம்புட்டு தான்!

நீங்க இப்படிச் சொன்னதால் உங்களை இன்னொரு தரம் வணங்கிக்கறேன்! :-)

//உங்க வாயால பதில் வந்தாத்தான் நல்லாயிருக்கும்//

பதிலா? அப்படின்னா??
அடியேன் தருமி! - கேட்கத் தான் தெரியும்!
நீங்களே தருமியின் பதி! - சொல்வது நீங்க! கேட்டுக் கொள்வது நானு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@கீதாம்மா!

தெய்வீகச் சிரிப்பம்மா உமது சிரிப்பு!
ஆனா பு.த.செ.வி! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மெளலி அண்ணா
சுலோகங்களுக்குப் பொருள் எல்லாம் சரி தானே?
கீதாம்மா சிரிப்பதைப் பார்த்தால் பயமா இருக்கு! :-)))

மெளலி (மதுரையம்பதி) said...

//அச்சோ சாமீ! IATE :-)//

புதசெவி!!

தி. ரா. ச.(T.R.C.) said...

@கேஆர்ஸ் வருக வருகவே. வயதில் நான் பெரியவன் என்பதை பகிரங்கமா ஆமோதிக்கிறேன்.(கீதாம்மா????)வயது ஒரு குறியீடுதான் அதுவே ஞானத்தின் உறைவிடமாகது.நீங்கள் குறுபிட்டு இருக்கும் குருவிற்கெல்லாம் குருவான தக்ஷிணாமூர்த்தியின் சீடர்கள் எல்லோரும் அவரைவிட வயதில் மூத்தவர்கள்தான். ஏன் ஆதி சங்கரரின் சீடர்களும் அவரைவிட வயதில் மூத்தவர்கள்தான்.மௌளி மரியாதை கொடுத்தா வங்கிக்கனும் அதுதான் மரியாதை.

நல்லதொரு ஆரம்பம். இனி கச்சேரியும் பின்னுட்டங்களும் களை கட்டிவிடும். பதிவுக்கு அப்புறம் வருகிறேன்

ambi said...

ஆரம்பமே நல்லா இருக்கு. என்ன தொடர்பு?னு அறிய ஆவலாய் இருக்கிறேன்.

//நிதயே சர்வ வித்யானாம் பீஷஜே பவ ரோகினாம்
குரவே சர்வ லோகானாம் தக்ஷிணா மூர்த்தயே நமஹ!//


எனக்கு தெரிந்த வரை குரவே சர்வ லோகானாம் என்று தான் ஸ்லோகம் ஆரம்பிக்கும்.

ஒரு வேளை, வடமொழினு இதயும் இப்ப மாத்திட்டாங்களா? :p

எதுக்கும் எங்க வீட்டு இளையாழ்வாரை ஒரு பார்வை பாக்க சொல்றேன். அப்ப தான் கும்மறதுக்கு வசதியா இருக்கும். :))

ambi said...

//அவங்க அப்பர் என்றால் நீங்க சுந்தரமூர்த்தி! //

@KRS, அப்ப நீங்க திருஞான சம்பந்தரா? :p

ஆனா கீதா மேடம் தான் காரைகால் அம்மையார், அதுல ஒரு மாற்றமும் இல்லை, இப்பவே சொல்லிட்டேன். :))

மெளலி (மதுரையம்பதி) said...

வாய்யா அம்பி,

//ஒரு வேளை, வடமொழினு இதயும் இப்ப மாத்திட்டாங்களா? :p//

கலக்கல் :) ஆனா கே.ஆர்.எஸ் பாணில சொல்லணுமானா வடமொழியில்ல, வடைமொழி :-)

//எதுக்கும் எங்க வீட்டு இளையாழ்வாரை ஒரு பார்வை பாக்க சொல்றேன். அப்ப தான் கும்மறதுக்கு வசதியா இருக்கும்.//

பதிவுதான் தம்பி கணேசன் எழுதிண்டிருந்தார்ன்னா, இப்போ நல்ல பின்னூட்டங்களும் அவர்தானா?... :)

நல்லா கேட்டுக்கிட்டு வாங்க, அவரையே இங்க வந்து அவர் பெயரில சொல்ல சொல்லுங்க... :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
//அச்சோ சாமீ! IATE :-)//

புதசெவி!!//

I Am The Escape-uuuu
:-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தி. ரா. ச.(T.R.C.) said...
@கேஆர்ஸ் வருக வருகவே//

நன்றி திராச! ஒவ்வொரு வலைப்பூ துவக்கத்திலும் தங்கள் ஆசி எனக்கு எப்படியோ கிட்டி விடுகிறது!

//ஏன் ஆதி சங்கரரின் சீடர்களும் அவரைவிட வயதில் மூத்தவர்கள்தான்.மௌளி மரியாதை கொடுத்தா வங்கிக்கனும் அதுதான் மரியாதை//

சூப்பரோ சூப்பர்! :-))

//நல்லதொரு ஆரம்பம். இனி கச்சேரியும் பின்னுட்டங்களும் களை கட்டிவிடும். பதிவுக்கு அப்புறம் வருகிறேன்//

அவசியம் வாங்க! வந்து அடியேனிடம் வம்பிக்கும் அம்பியை என்னன்னு கேளுங்க! சுலோகம் தப்பாம்! நீங்க பாத்துச் சொல்லுங்க! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ambi said...
@KRS, அப்ப நீங்க திருஞான சம்பந்தரா? :p//

ஆமா! ஆமா! :-)

//ஆனா கீதா மேடம் தான் காரைகால் அம்மையார், அதுல ஒரு மாற்றமும் இல்லை, இப்பவே சொல்லிட்டேன். :))//

காரைக்கால் அம்மையார் நல்லாப் பாடுவாங்க! தலை கீழ நடப்பாங்க! எதுக்கும் இன்னொரு தபா ரோசிச்சிச் சொல்லுப்பா! :-)

குமரன் (Kumaran) said...

திருக்குறள் விளக்கம் நன்றாக இருக்கிறது. உட்பொருளாக மட்டுமின்றி வெளிப்படையாகவும் 'அடி' என்று ஆசானைக் குறிக்கிறாரே வள்ளுவப் பெருந்தகை. இறைவனின் திருவடியே ஆசான் என்பது தான் நம் இந்திய மெய்யியல் மரபாயிற்றே. கோவிந்த பகவத்பாதர்; அவருடைய சீடர் சங்கர பகவத்பாதர் என்று சொல்லும் போதே இறைவனின் திருவடிகள் அவர்கள் என்று சொல்கிறோமே. திருமகள் கேள்வனின் திருவடி நிலைகள் சடகோபனான நம்மாழ்வார். அவருடைய திருவடி நிலைகள் நாதமுனிகள். அவருடைய திருவடி நிலைகள் ஆளவந்தார். அவருடைய திருவடி நிலைகள் எம்பெருமானார். இப்படி வைணவ ஆசார்ய பரம்பரையிலும் திருவடித் தொடர்பு உண்டே. எங்கெல்லாம் திருவடிகளின் பெருமை பேசப்படுகிறதோ அங்கெல்லாம் ஆசாரியனின் பெருமையே பேசப்பட்டது என்பது முன்னோர்கள் முடிபல்லவா?!

குதிரையாய் வந்த குருவை இடுகையின் தலைப்பைப் படித்தவுடனேயே தெரிந்தது. தென்முகக்கடவுள் குதிரைக்காக வந்த குரு என்ப்து தெரியாதே இரவிசங்கர். உங்களை இந்தப் பதிவில் இடுகைகள் எழுதச் சொன்னால் விடுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறீர்களே. நீங்களே ஒழுங்காக நீங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் என்று உரிமையுடன் வேண்டிக் கொள்கிறென். :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

குரவே சர்வ லோகானாம் பீஷஜே பவ ரோகினாம்!
நிதயே சர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்த்தயே நமஹ!

ambikkuthan en vote. sorry krs.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@குமரன்
அடிநிலை விளக்கத்துக்கு நன்றி!
உண்மை...ஆசார்யர்கள் திருவடிக்குத் தான் பேசப்படுகிறார்கள்.
இன்றளவும் ஸ்ரீ வண் பாதுகா சேவக - என்றெல்லாம் பூர்வாசார்யர்களைப் போற்றுவதும் இந்த வழக்கம் ஒட்டித் தான்!

விடு கதையா?
கதை விடாதீர்கள்!
குதிரைக்காக வந்த குரு, கூடலம்பதிக்குத் தெரியாதா?

நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கி, எல்லாம் பரியினால் வந்த பிரச்சனைக்குப் பரிவு தானே!
பரிந்ததா? சாரி...புரிந்ததா? :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@திராச

இதுக்குத் தான் குருவருள் வேணும்ங்கிறது!
பாருங்க! பாங்கு அல்லன் ஆகிலும் பயன் அல்லன் ஆகிலும் "திருத்திப்" பணி கொள்வான் என்று மதுரகவிகள் சொல்லுறது சரியா இருக்கு! திருத்தியமைக்கு நன்றி!

*** பதிவில் திருத்தி விடுகிறேன்!

ஊர்ல சுலோகத்தை இப்படிச் சொல்லிக் கொடுத்ததால் இப்படியே அடியேனுக்கும் பழக்கம் ஆயிரிச்சி!
இணையத்திலும் மாறி மாறி இருக்கு!
http://www.astrojyoti.com/vandanatrayee.htm

ஆனா ஹயக்ரீவ சுலோகத்தை ஒப்பிட்டுப் பாக்கும் போது...
ஆதாரம் சர்வ வித்யானாம் - இரண்டாம் அடியில் தான் வருது!
அது போலவே நிதயே சர்வ வித்யானாம் என்பதும் இரண்டாம் அடியில் வருவது சாலவும் பொருந்தும்-னே நினைக்கிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அம்பி தான் மொதல்ல திருத்தினான்!
அதுனால அம்பியை இனி நான் குருவே-ன்னு கூப்பிடனுமா?
அதுனால் என்ன! கூப்பிட்டாப் போச்சு!
அம்பி குருவாவும் நான் சிஷ்யனாவும் இருந்தா களை கட்டாதா என்ன? :-))

ambi said...

KRS அண்ணே, விடுங்க அண்ணே! இதுக்கு போய் பீல் பண்ணிகிட்டு?

ஏதோ இந்த மட்டுக்கும் தரவு கேட்காம தி.ரா.ச சார் சொன்னதை ஒத்துகிட்டீங்களேனு நான் சந்தோஷமா இருக்கேன். :p

//அம்பி குருவாவும் நான் சிஷ்யனாவும் இருந்தா களை கட்டாதா என்ன?//

என்னது நான் குரு, நீங்க சிஷ்யனா? விளாங்கிடும். நானே ஒரு பரமார்த்த குரு. :p

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//என்னது நான் குரு, நீங்க சிஷ்யனா? விளாங்கிடும். நானே ஒரு பரமார்த்த குரு.//

பயப்படாத அம்பி!
நான் குரு கிட்ட மட்டும் தரவு எல்லாம் கேக்க மாட்டேன்!
நான் நல்ல சிஷ்யனா இருப்பேன் - யூதாஸ் மாதிரி! :-)
ப்ளீஸ் என்னை உன் சிஷ்யனா ஏத்துக்கோ அம்பி! மெளலிண்ணா கொஞ்சம் ரெக்கமண்ட் பண்ணுங்க! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சரி...மொக்கையே எம்புட்டு நேரம் தான் போடுறது?
அம்பி...குதிரைக்காக வந்த குரு கதையை லைட்டாச் சொல்லுங்க!

தி. ரா. ச.(T.R.C.) said...

ஊர்ல சுலோகத்தை இப்படிச் சொல்லிக் கொடுத்ததால் இப்படியே அடியேனுக்கும் பழக்கம் ஆயிரிச்சி

ஏன்டா காலில் என்ன கட்டு. வாசப்படி இடித்து விட்டது. வாசப்படி தானகவே வ்ந்து இவன் மேலே இடித்ததா? இல்லை இவன் போய் வாசப்படியில் இடித்துக்கொண்டானா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஏன்டா காலில் என்ன கட்டு. வாசப்படி இடித்து விட்டது. வாசப்படி தானகவே வ்ந்து இவன் மேலே இடித்ததா? இல்லை இவன் போய் வாசப்படியில் இடித்துக்கொண்டானா?//

வாசப்படி இடித்ததா இல்லையா என்பதை விட உங்கள் ஏதோ ஒரு
பாசப்படி இடிப்பது நல்லாவே தெரியுது திராச ஐயா!

சுலோகம் பொருள் மாறவில்லை! வரி தான் மாறி இருக்கு! இணையத்தில் வேறு பல இடங்களில் நான் சொன்ன மாதிரியும் ஒலிக்கிறார்கள் சிவாச்சாரியார்கள்! பாவம், உங்க வாக்குப்படி இவிங்க எல்லாம் கூட வாசப்படி இடித்துக் கொண்டவர்கள் போல! சரி தானே?
கேளுங்க!

நீங்கள் சொன்ன ஒரே காரணத்துக்காக பதிவில் திருத்தினேன்! நீங்களே குருவாய் வந்து திருத்தியதாகவும் சொன்னேன்.

அப்போதும் விடாமல் வாசப்படி தானகவே வந்து இவன் மேலே இடித்ததா? என்று பேசுதல் அழகா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளவும்! முருகனருள் முன்னிற்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கேள்விகளுக்குப் பதில்:

குமரன் சொன்னது போல்,
குதிரையாய் வந்த குரு = ஹயக்ரீவர்! பரிமுகச் செல்வன்!

நான்முகனிடம் இருந்து வேதங்களை மது கைடபர்கள் களவாடினர்; குதிரை உருவத்தில் வந்து, அவற்றை பிரம்மாவிடம் மீட்டுக் கொடுத்து, ஞானோபதேசம் செய்த ஆதி குரு!

குதிரைக்காக வந்த குரு = ஆலமர் செல்வன், தட்சிணாமூர்த்தி!
மணிவாசகப் பெருமான் அரசு முறைப் பயணமாகக் குதிரைகள் வாங்கச் செல்லும் போது, திருப்பெருந்துறையில் (இன்றைய ஆவுடையார் கோயில்) ஆலமர் செல்வனைக் காண்கிறார். சிவ ஞான போதம் என்னும் நூலினை உபதேசம் செய்யும் கோலத்தில் குருவைக் கண்ட அவர் மனம் சிவானந்த லஹரியில் திளைக்கிறது!

குதிரை வாங்குவதை விடுத்து, கோயில் எழுப்ப முனைகிறார். அரசன் அரியமர்த்தின பாண்டியன் சீற, இறைவன் அருளால் நரிகள் எல்லாம் பரியாகி, ஆவணி மூலம் அன்று மதுரையை அடைகின்றன!

சில நாள் கழித்து பரிகள் மீண்டும் நரியானதும், அரசன் மந்திரத்தால் தன்னை மணிவாசகர் வஞ்சித்ததாகக் கருதி விட்டான். அவரைத் துன்புறுத்தத் தலைப்பட்டான்! அதன் பின்னரே பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்களும், மன்னன் மனமாற்றமும், பெருந்துறை-தில்லைப் பயணமும், தில்லையில் திருவாசகம் பாடலும் நடந்தேறின!

இப்படி குதிரைக்காக வந்தவர் தட்சிணமூர்த்திக் கடவுள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குதிரைக்கும், இறைவன் ஞானம் சொல்ல வரும் போது மட்டும் குதிரையாய் வருவதற்கும் என்ன தொடர்பு?

லகான் தான் தொடர்பு! குதிரையின் பார்வை அப்படி! மிகவும் அகண்ட பார்வை! ஒரு கண்ணால் முன்னும் ஒரு கண்ணால் பின்னும் தனித்தனியாகப் பார்க்கும் ஆற்றல் குதிரைக்கு உண்டு!

ஆனால் பொருளின் மிகவும் அருகில் குதிரை வரும் போது மட்டும், பார்வையில் இருந்து மறைந்து விடும்! அதே போல் ஒரு சிறு துகள் கண்ணுக்கு அருகில் பறந்தாக் கூட குதிரை மிரளும்! அதுக்குத் தான் லகான் அடிப்பார்கள்!

இப்படியே ஞானம் என்பதும் விஸ்தீரணமான பார்வை!
தொலைவில் இருக்கும் போது தெரியும் ஞானம் நமக்கு என்று வரும் போது மட்டும் மிரண்டு விடுகிறது! அடுத்தவருக்கு ஆயிரம் சொல்லும் நம் ஞானம், நமக்கு சொல்லிக் கொள்வது என்ன?

இதைக் குறிப்பால் காட்டவே ஞான ரூபம் என்று வரும் போது மட்டும் இறைவன் பரி வடிவில் வந்து பரிபாலிக்கிறான் என்பது ஹயக்ரீவ உபாசகரான வேதாந்த தேசிகர் கருத்தும் கூட!

மெளலி (மதுரையம்பதி) said...

//அதே போல் ஒரு சிறு துகள் கண்ணுக்கு அருகில் பறந்தாக் கூட குதிரை மிரளும்! அதுக்குத் தான் லகான் அடிப்பார்கள்!//

கே.ஆர்.எஸ் அண்ணா, லகான்கறது கால்ல அடிப்பதில்லையோ?...லகான் என்பது வண்டி மாட்டிற்கும் கூட உண்டு. நீண்ட நேரம் பயண்ம் செய்ய அது ஏதுவாக இருக்கும், அஷ்டேன்னு நினைக்கிறேன்.

நீங்க சொல்வது கண்ணைக் கட்டி ஒரு திரைமாதிரி போடறது, அதுக்கு பெயர் வேறு ஏதோன்னு நினைக்கிறேன். சரியாத் தெரியல்ல...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கே.ஆர்.எஸ் அண்ணா//

சொல்லுங்க மெளலி அண்ணா!
தம்பி எப்போ அண்ணா ஆனேன்?

//லகான்கறது கால்ல அடிப்பதில்லையோ?...//

நீங்க சொல்லுறது லாடம் (Horse shoe)! லாடம் கட்டுறது என்பார்கள்! மாட்டுக்கும் உண்டு!

லகான் என்பது கடிவாளத்தின் இறுதியில் இருக்கும்! கண்ணில் கட்டுவார்கள்!
கடிவாளம் என்பது தமிழ்ச் சொல்! குதிரையை இழுத்துப் பிடிக்க!