Saturday, May 10, 2008
ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர!
மன்னன் முகம் கண்டு பிரமித்த சேவகர்கள் மன்னன் முகத்தின் ஒளியின் தாக்கம் தங்கள் உள்ளேயும் ஊடுருவதை உணர்ந்தனர். அதிசயித்தனர். அவர்கள் அதிசயம் மேலும் அதிகம் ஆகும் வண்ணம், மன்னன் தனக்களிக்கப் பட்ட மதுபானத்தை மறுத்தான். மங்கையரை இனிமேல் எதிரேயே வராதீர்கள், எனப் பணித்தார். பேராச்சரியத்துடன் நகருள் நுழைந்தனர் அனைவரும். மன்னன் முன்போல் இல்லை என மக்களுக்கும் தெளிவாய்த் தெரிந்தது. அந்தப் பரப்பிரும்மமே அருளாட்சி செய்ய வந்திருக்கும் பேறு பெற்றதை அவர்கள் உணரவில்லை. எனினும் மாற்றம் கண்டு மகிழ்வெய்தினர். முட்டாள் தனமாயும், சிற்றின்பத்தில் பேரின்பம் காணுபவனாயும் இருந்த மன்னனா இது என மந்திரிமார் வியந்தனர். பட்டமகிஷியின் ஆனந்தத்துக்கு ஓர் அளவில்லை! என்ன நடந்தது காட்டில்? அனைவரும் வியந்தனர். எனினும் மாற்றம் மகிழ்வூட்டக் கூடியதாயே இருந்ததால், அனைவரும் இது இவ்வாறே இருக்கவேண்டும் எனவும் எண்ணினர். தன்னுடன் தத்துவங்களைப் பற்றி மன்னன் பேசி மகிழ்வதில் மகாராணிக்கு மன மகிழ்ச்சி, மந்திரிமார்க்கோ அரசன் திடீரென இவ்வளவு புத்திசாலியாகவும், சிந்தனையாளனாயும் மாறியது எப்படி என்ற யோசனை! நாத்திகவாதம் பேசியவன், முழு ஆத்திகவாதியாக மாறியது எப்படி? மந்திரிமார்கள் யோசனையில் ஆழ்ந்தனர். இது நிலைத்தால் ராஜ்யம் நல்வழியில் திரும்பும். நாடெங்கும் ஒற்றர்கள் அனுப்பப் பட்டனர். அரசனுக்கே தெரியாமல் ஏதோ நடந்திருக்கின்றது என்ற சந்தேகம் எழ, அங்கங்கே ஒற்றர்கள் ஊடுருவி நடந்தது என்ன என அறிய முயன்றனர்.
ஒரு ஒற்றன் காட்டில் புகுந்து நடந்தான். ஓர் இடத்தில் சில துறவிகள் அமர்ந்திருப்பதைக் கண்டான். சற்றே மறைந்து இருந்து பார்த்தபோது அந்தத் துறவிகளில் தலைமையாக இருப்பவர் போல் தெரிந்த ஒருவர் அருகில் இருந்த குகைக்குள் சென்று பார்த்துவிட்டு மீண்டும் வருவதையும் கண்டான். அவர்களுக்குள் சோகம் இருந்தது எனவும் கண்டான். காத்திருக்கத் தீர்மானித்தான். மறுநாள் காலையில் தங்கள் நித்திய கர்மானுஷ்டானங்களை முடிப்பதற்காகத் துறவிகள் அனைவரும் அருகில் இருந்த ஆற்றுக்குச் சென்றனர். அவர்கள் தங்கள் ஜபம்,சந்தியாவந்தனம் ஆகியவற்றை முடித்துவிட்டு வரச் சற்று நேரம் ஆகுமென அவர்கள் பேச்சில் தெரிந்தது. அவர்கள் சென்றதும் அந்தக் குகைக்குள் நுழைந்தான் ஒற்றன். அங்கே அவன் கண்டது என்ன? ஒரு இளம் சந்நியாசி படுத்திருக்கக் கண்டான். தூங்குகின்றாரோ என நினைத்து அருகே சென்ற போது தூங்கவில்லை என்பதைக் கண்டான். ஆனால் முகம் மட்டும் வாடவில்லை, கழுத்தில் போட்டிருந்த மாலையும் வாடவில்லை. என்ன அதிசயம் மூச்சில்லை, பேச்சில்லை, இவர் யார்? என யோசித்தவனுக்கு உண்மை புரிந்தது. ஏதோ நடந்திருக்கின்றது, அதன் மூலகர்த்தா இவரே எனப் புரிந்து கொண்டான். காத்திருந்தான். சீடர்கள் திரும்பி வந்தனர். அவர்கள் பேச்சில் இருந்து உண்மையும் புலனாகியது. உடனே நகருக்குத் திரும்பினான். தனக்காய்க் காத்திருந்த மந்திரிமார்களிடம் உண்மையைச் சொன்னான். மந்திரிகள் கூட்டம் கூடியது. ஒருவருக்கொருவர் கலந்து பேசிக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தனர்.
ஆஹா, என்ன இது? மந்திரிகள் எடுத்த முடிவு இதுவா? கேட்போருக்குத் திகைப்பாய் இருந்தாலும் நாடு நலம் பெற, மக்கள் நல்லாட்சி பெற, இதுதான் சரியான முடிவு என்று தீர்மானித்தனர் மந்திரிசபையார். காட்டில் இருக்கும் சங்கரரின் உண்மையான உடலை எரித்துவிட்டால் பின்னர் அவர் திரும்பிப் போக முடியாதே? மன்னன் உடலிலேயே தங்க வேண்டும் அல்லவா? இப்போது தான் ஒரு மாசமாய் நாடு நல்லாட்சி பெற்று வருகின்றது. நாடு முக்கியமா, சங்கரர் முக்கியமா? நாடு தான் முக்கியம், மந்திரிகளின் ஏகோபித்த முடிவு அது. ஒரு சிறு படை வீரர்களின் கூட்டம் காடு நோக்கிக் கிளம்பியது. ஒற்றன் காட்டிய குகைக்கு அருகில் தக்க நேரத்துக்குக் காத்திருந்தது. மறுநாள் காலை வழக்கம்போல் நடக்கப் போவதை அறியாத சீஷ்யர்கள் தங்கள் காலைக்கடன்களை முடிக்க ஆற்றுக்குக் கிளம்ப, அவசரம் அவசரமாய் அங்கே ஒரு சிதை ஏற்படுத்தப் பட்டது. குகைக்குள் இருந்த சங்கரரின் உடல் அதில் கிடத்தப் பட்டது. அடுத்து அவர்கள் செய்த காரியம்! அம்மா! கை கூசும் வண்ணமான காரியம் அல்லவோ அது! சிதையில் கிடத்தப் பட்ட சங்கரரின் உடலுக்குத் தீ மூட்டினார்கள். என்ன இது? இப்போது பிரம்ம முஹூர்த்தம் அல்லவா? இன்னும் அருணன் தோன்றவில்லையே? அதற்குள் சூரியன் வந்துவிட்டானோ? என்ன அதிசயம் இது? ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிஷ்யர்கள் அந்தப் பேரொளியைப் பார்த்ததும் வியந்தனர். ஆனால் ஒளியில் இருந்து புகை கிளம்புகின்றதே? என்ன? என்ன? என்ன? என்ன நடக்கின்றது?
ஒரேஓட்டமாய் ஓடினார்கள் அனைவரும். அதற்குள் அவர்கள் ஓடிவரும் சப்தம் கேட்டுவிட்டுப் படைவீரர்கள் அனைவரும் மாயமாய் மறைந்துவிட்டனர். என்ன நடந்தது? அருகில் வந்து பார்க்கின்றனர். துடித்தார் பத்மபாதர். என்ன செய்வது என்று யோசிக்கும் முன்னர் அமருகன் உடலில் இருந்து விடுதலை பெற்ற சங்கரரின் உயிரானது, தன் உடலில் புகுந்தது. சிதையில் கிடத்தப் பட்டு எரிந்து கொண்டிருந்த சங்கரர் எழுந்தார். தீயில் இருந்து எழுந்து வெளியே வந்தார். அன்று அன்னை சீதை தன் கற்பை நிலைநாட்ட அக்னிப்ரவேசம் செய்தாள். இன்று சங்கரர் சிலகாலம் மன்னன் உடலில் இருந்து இல்லற வாசம் செய்ததுக்காக அக்னிப்ரவேசம் செய்தாரோ??????? ஆன்மாவை உணர்வுகள் பாதிக்காது என்றாலும், உலகத்துக்காக இப்படிச் செய்தாரோ என்னும் வண்ணம் தீக்குள் இருந்து எழுந்து வந்தார் சங்கரர். சிஷ்யர்கள் மனம் மகிழ்ந்தனர், எனினும் உலகுக்கே ஆசி வழங்க வேண்டிய வலது கை எரிந்து போயிற்றே? என்ன செய்யலாம்? பத்மபாதருக்கு ஒரு யோசனை தோன்றியது. "குரு தேவா, உங்களுக்கு உடலும், அதன் சுக, துக்கங்களும் ஒரு பொருட்டல்ல எனினும், கருகிய கையை அப்படியே விடாமல் லட்சுமி நரசிம்மரைத் துதியுங்கள். என் மனம் ஒருமிக்கவில்லை இப்போது, மனம் தடுமாறுகின்றது. எந்நிலையிலும் ஒரே மாதிரியான மனம் படைத்த நீங்களே இப்போது ஆற்றலில் வல்ல நரசிம்மனை லட்சுமியோடு கூடித் துதித்தால் அவன் அருள் புரிவான் என்று என் மனம் சொல்கின்றது." என்று வேண்டிக் கொள்ள அவ்வாறே சங்கரரும் ஸ்ரீலட்சுமிநரசிம்ம கருணாரச ஸ்தோத்திரத்தைப் பாடி மனமுருகி வேண்டக் கையும் மீண்டு வந்தது.
"லக்ஷ்மி ந்ருஸிம்ஹ சரணாப் ஜமதுவ்ரதேன
ஸ்தோத்ரம் க்ருதம் சுபசரம் புவிசங்கரேண
யே தத்படந்தி மநுஜா ஹரிபக்தியுக்தா
தே யாந்தி தத்பதஸரோஜம் கண்டரூபம்" என்று பாடி முடிக்கவும் கருகிய கை மீண்டும் முன்போல் ஆயிற்று.
மண்டனமிஸ்ரரைப் போய்ப்பார்க்க நாட்டுக்குள் போய் அவர் வீட்டில் நுழைந்தனர். சங்கரர் புத்தொளியோடு திரும்பி வருவதைப் பார்த்ததுமே சரசவாணி தன் தோல்வியை ஒப்புக் கொள்கின்றாள். மண்டனமிஸ்ரர் துறவறம் தழுவுகின்றார். கணவனைப் பிரிந்து தனித்து வாழ மனமில்லாமல் உயிர் விட நினைத்த சரசவாணியை சங்கரர் தாங்கள் திக்விஜயம் செய்யும் ஊர்களுக்கெல்லாம் பின் தொடர்ந்து வருமாறும், அப்போது அவளுக்கு எங்கே பிடிக்கின்றதோ அங்கே தங்கலாம் எனவும் அழைக்க, அவளும் ஒத்துக் கொண்டு நிபந்தனை விதிக்கின்றாள். தன் பாதசர ஒலியைக் கேட்டுக்கொண்டே தான் வருவதை சங்கரர் அறிந்து கொள்ளவேண்டுமென்றும், நடுவில் திரும்பக் கூடாது, திரும்பினால் தான் அங்கேயே நின்றுவிடுவதாயும் சொல்ல, சங்கரரும் நிபந்தனைக்கு ஒத்துக் கொள்கின்றார். சிருங்கேரிக்கு அருகே வரும்போது பாதசர ஒலி கேட்காமல் சங்கரர் அன்னையின் கருணை உள்ளம் இதுவெனத் தெளிந்து திரும்பிப் பார்க்க அங்கே அன்னை "சாரதை"யாக நிலைகொண்டு இன்றளவும் அருளாட்சி செய்துவருகின்றாள்.
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
//ஸ்ரீலட்சுமிநரசிம்ம கருணாரச ஸ்தோத்திரத்தைப் //
நரஸிம்ம காராவலம்ப ஸ்தோத்திரமுன்னு படிச்ச நினைவு....இது அதுதானா?
"மமதேஹி கராவலம்பம்" அப்படின்னே முடியும் அந்த ஸ்லோகம்...
கராவலம்பம் என்பதே சரி கீதாம்மா!
அழகான வர்ணனை!
இயல்பான கதை ஓட்டத்துடன் கொடுத்திருக்கீங்க! படத்தில் நரசிம்மர், அவர் திருவடியின் கீழ் சிறிய திருவடி - கொள்ளை அழகு!
கதிரி நரசிம்மர் தானே அது?
மன்னிக்க...
படத்தில் கீழே இருப்பது சிறிய திருவடி அன்று!
பக்த சக்ரவர்த்தி! பிரகலாதன்!
அர்த்தமுள்ள பதிவு சங்கர ஜயந்திக்கு. மமதேஹி கரவலம்பம் என்று படித்தமாதிரிதான் எனக்கும் நினைப்பு.
பின்னூட்டம் கொடுத்த மூவருக்கும் நன்றி.
//அங்கே அன்னை "சாரதை"யாக நிலைகொண்டு இன்றளவும் அருளாட்சி செய்துவருகின்றாள்.
//
எங்கே?
தவளைக்கு பிரசவ வலி எடுக்க, பாம்பு குடை பிடித்து நின்ற இடத்தில்.
ரிஷ்யசிருங்கர் வாசம் செய்த இடத்தில்.
துங்கா நதிதீரக் கரையில்.
32 வயதே இந்த புண்ணீய பூமியில் வாழ்ந்த சங்கரர் கிட்டதட்ட 14 ஆண்டுகள் தங்கி இருந்த
சிருங்கேரியில். :))
அருமையான ந்ருசிம்ஹ ஸ்தோத்ரம் குடுத்தமைக்கு மிக்க நன்னி.
மதுரையம்பதி அண்ணாவிடம் அந்த முழு ஸ்லோகத்தின் புத்தகம் கிடைக்குமா?
பதில் போடுவது அம்பி தான் :)
ஏன்னா அம்பியும் சில காலம் ந்ருசிம்ஹ உபாசனை செய்து வந்தான்.
//அவர் திருவடியின் கீழ் சிறிய திருவடி - கொள்ளை அழகு!
//
@KRS, அதானே கேட்டேன். இங்கயுமா புளியோதரை? :p
லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் இயற்றப்பட்டது இந்த நேரத்தில் தானா? வெகு நன்றாக நிகழ்ச்சிகளைத் தந்திருக்கிறீர்கள் கீதாம்மா.
ஸ்லோகம் இருந்தது அம்பி, பார்த்து எடுத்து வைக்கிறேன், சந்திக்கும் போது தருகிறேன்.
என்னது அம்பி நரசிம்ம உபாசனை பண்ணினியா?, பாவம் நரசிம்மர்... :)
அதுசரி, அதெப்படி அம்பி சிருங்கேரி பற்றி இம்புட்டு பெரிய பின்னூட்டம்? :)
அம்பிகாரு, 14 வருடம் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவரு, அது சிருங்கேரிக்காரவுக சொல்லிக்கறது. இன்னும் ஒரு 100 ஆண்டு போனா இந்த பின்னூட்டங்களை பார்த்து யாராவது உண்மைன்னு நினைச்சுடப் போறாங்க. இந்த 14 வருஷ வாசம் மாதவீய சங்கர விஜயத்தில் மட்டுமே இருக்கு. இது சிருங்கேரி மடம் சார்ந்தது. அதில் இருப்பதை மட்டுமே சரின்னு சொல்லாதீங்க. :) இதன்படி பார்த்தா ஆதிசங்கரர் காஞ்சி மடமே ஏற்படுத்தல்லை, அவர் அங்கு முக்தியடையவும் இல்லை...ஓகேயா? :)
வாங்க குமரன்காரு...
பகவத்பாதாளை அறியும் முன்பிருந்தே பத்ம பாதர் மிகப் பெரிய நாரஸிம்ம உபாசகர். என்னுடைய முந்தைய பதிவு (இதே வலைப்பூவில்) இருக்கு பாருங்க...:)
//அது சிருங்கேரிக்காரவுக சொல்லிக்கறது. இன்னும் ஒரு 100 ஆண்டு போனா இந்த பின்னூட்டங்களை பார்த்து யாராவது உண்மைன்னு நினைச்சுடப் போறாங்க.//
அடடா! நீங்களும் தரவு! தரவு! கேக்க ஆரம்பிச்சாசா? இதுக்கு தான் கேஆரெஸ் அண்ணா கூட ரொம்ப சகவாசம் வெச்சுக்க கூடாதுனு சொல்றது! :p
//அதுசரி, அதெப்படி அம்பி சிருங்கேரி பற்றி இம்புட்டு பெரிய பின்னூட்டம்? //
எல்லாம் என் தம்பிகாரு அவ்வப்போது என்கிட்ட போடற பிட்ட வெச்சு தான் சொல்றேன். :))
//இந்த 14 வருஷ வாசம் மாதவீய சங்கர விஜயத்தில் மட்டுமே இருக்கு. இது சிருங்கேரி மடம் சார்ந்தது. அதில் இருப்பதை மட்டுமே சரின்னு சொல்லாதீங்க.//
இருங்க தம்பிய கூட்டிட்டு வரேன், அவன் வந்து சாமி ஆட போறான் பாருங்க. :p
//என்னது அம்பி நரசிம்ம உபாசனை பண்ணினியா?, பாவம் நரசிம்மர்... //
வேணாம்! அழுதுடுவேன். :))
ஆமா! அவரும் என்னை விட்டுருனு சொன்னார். அதான் இப்ப இல்லை. :))
//இருங்க தம்பிய கூட்டிட்டு வரேன், அவன் வந்து சாமி ஆட போறான் பாருங்க//
தம்பிக்கு எப்படி வேப்பிலை அடிக்கணுமுன்னு எனக்கு தெரியும்....வரச்சொல்லுங்க அவரை.
//எல்லாம் என் தம்பிகாரு அவ்வப்போது என்கிட்ட போடற பிட்ட வெச்சு தான் சொல்றேன். :))//
அதானே பார்த்தேன் என்னடாப்பா அம்பி எப்போ இப்படி சிருங்கேரி மடத்துக்கு பரமசிஷ்யரானார்னு. :).
அம்பி, யதிராஜ வைபவமுன்னு ஒரு புத்தகம் இருக்கு....கிடைப்பது அரிது (என்னிடம் இல்லை),தெரியுமா?
Post a Comment