Wednesday, May 21, 2008

குருவின் வார்த்தையை மீறுவதே மாட்சி ! ராமனே சாட்சி !

.அட இதென்ன குருவருளில் இப்படி ஒரு பதிவா? இப்படியெல்லாம் தலைப்புவெச்சு பதிவு போட்டாத்தான் மக்களை எட்டும் அப்படின்னு கேஆர்ஸ்தான் வழிகாட்டினார். கேஆர்ஸின் அடுத்த பதிவு குருவினைக் கொன்ற கொலையாளி அருச்சுனன் என்று கூட இருக்கலாம்.கருத்தில் தார்மீகம் இருப்பது மட்டுமல்லாமல் தலைப்பிலும் இருக்கவேண்டும் என்பது என் கருத்து.Means should also justify the end. அதுவும் இல்லாம நான்கு சீடர்கள் இருந்தும்(கோவிந்தன் பால் ஊத்தினா மாதிரி) குருஅருளுக்கு பதிவுபோட ஆள் இல்லையான்னு அவப்பெயர்வரக்கூடாது.நாலு மாட்டுபொண்ணுகள் மாமியாருக்கு உணவு படைத்த கதை மாதிரி ஆகக்கூடாது.
கைகேயியின் வரத்தின் மூலமாக ராமன், சீதை, லக்ஷ்மணனுடனும் காட்டுக்கு செல்வது என்பது முடிவாகி அயோத்தியை விட்டு ராமன் செல்கிறான்
"குருவார்த்தைக்கு மறு வார்த்தை இல்லை" ஆனால் குரு தவறாகச் சொன்னால் மரியாதையோடு மறுக்க கூடாதா? மறுப்பது அஹங்காரமா இல்லை அது மானிடப்பரிணாமம்.ராமனுடைய குலகுரு வசிஷ்டர். தந்தை ஆணையை ஏற்றுக் காடு போகும் ராமனைத் தடுக்கிறர். "நான் உன் குல குரு மீறிப் போகவேண்டாம்"என்கிறார். அப்போது ராமன் கூறுகிறான் "குருவே ...சத்தியமெல்லா தருமங்களயும்விட பெரியதும் மேலானதும் ஆகும் என்று எனக்கு போதித்தவர் நீர்.இப்போது நீர் என் தந்தைக்குக் கொடுத்த சத்தியத்தை மீறச்சொல்லுகிறீர். நீர் மதிக்கச்சொன்ன சத்தியத்தை உம்மைவிட மேலாக மதிக்கிறேன்". என்று வசிஷ்டர் வார்த்தையை மீறுகிறன் ராமன்.ஆஹா.... ராமன் குருவை அவமதிக்கிறான்(கேஆர்ஸ் கவனிக்க) என்று குமுற முடியுமா.குருவைவிட சத்தியத்தை தருமத்தை மதிக்கிறான் என்று கொண்டாட வேண்டும்.கம்பர் எப்படி இதை அனுபவித்தார் என்றும் பார்க்கலாம்வில் தடந் தாமரைச் செங் கண் வீரனைஉற்று அடந்து ஐய நீ ஒருவி ஒங்கியகல் தடம் காணுதிஎன்னின் கண் அகல்மல் தடந் தானையான் வாழ்கிலான் என்றான்வசிஷ்ட மாமுனிவன், கையில் வில்லும் தாமரை போன்று சிவந்த பெரிய கண்களை உடைய ராமனின் அருகில் சென்று " ஐயனே நீ நாட்டைவிட்டுச் உயர்ந்த மலைகள் உள்ள காட்டை சென்று அடைந்தாய் என்றால், இடமகன்ற வலிமை பொருந்திய சேனையை உடைய தசரதன் உயிர் வாழ மாட்டான்" என்று கூறினான்ஏன்றனன் எந்தை இவ் வரங்கள் ஏவினாள்ஈன்றவள் யான் அது சென்னி ஏந்தினேன்சான்று என நின்ற நீ தடுத்தியோ என்றான்தோன்றிய நல் அறம் நிறுத்தத் தோன்றினான்நன்கு விளங்கின்ற நல்லறத்தை நிலை நிறுத்த பிறந்த ராமன் இது கேட்டு வசிஷ்டரிடம் கூறுகிறான்." என் தந்தை இவ்வரங்களைக் கொடுக்கச் சம்மதித்தான். தாயாகிய கைகேயி, வரங்களின்படி நடக்கக் கட்டளையிட்டாள். அதை நான் என் சிரமேற் கொண்டேன். இவற்றுக்கு எல்லாம் சாட்சியாக நின்றுள்ள நீங்கள் என்னை தடுத்து தந்தை சொல் மீறச்சொல்லலாமா. அதனால் குருவாகிய உங்களது வார்த்தைகளை மீறவேண்டிய கட்டாயத்துக்குள்ளானேன்." என்கிறான் ராமன்.அன்னவன் பணி தலை ஏந்தி ஆற்றுதல் என் கடன்அவன் இடரை நீக்குதல் நின்னது கடன்இது நெறியும் என்றனன்இப்பொழுது நீங்களே சொல்லுங்கள் குருவுவின் வார்த்தைகளை ரமான் மீறினானா இல்லையா?

11 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

//போட்டாத்தான் மக்களை எட்டும் அப்படின்னு கேஆர்ஸ்தான் வழிகாட்டினார்.//

உங்களுக்கும் அவர்தான் வழிகாட்டியா...சரி... :))
இருங்க மிச்சத்தை படிச்சுட்டு வரேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

// நீர் மதிக்கச்சொன்ன சத்தியத்தை உம்மைவிட மேலாக மதிக்கிறேன்". என்று வசிஷ்டர் வார்த்தையை மீறுகிறன் ராமன்//

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா!!! அப்படின்னு சொல்லாமச் சொல்லிட்டாரு...:))

ஏது நம்மாழ்வார் வந்துட்டுப் போயிருக்கார், ஆனா ஒண்ணுமே சொல்லலையே!

தி. ரா. ச.(T.R.C.) said...

மௌளி ஆழ்வார் ஸ்ரீ ரங்கத்துக்கு போயிருக்கார் உலக்கை எடுத்துண்டுவர. வந்து என்னை ஒரே போடா போடப்போகிறார். வெயிட் பிளீஸ்.

தி. ரா. ச.(T.R.C.) said...

நான் எப்போதும் கண்னன்காட்டிய வழிதான் மௌளி

மெளலி (மதுரையம்பதி) said...

//உலக்கை எடுத்துண்டுவர. வந்து என்னை ஒரே போடா போடப்போகிறார். வெயிட் பிளீஸ்.//

என்ன ஒரு சத்தமும் இல்லை?....:)

வால்மிகினியும் (வால்மிகியின் பெண்பால்) வரல்ல...ஓ பிறந்தநாள் கொண்டாட்டங்களா!!! சரி-சரி.

ambi said...

//கேஆர்ஸின் அடுத்த பதிவு குருவினைக் கொன்ற கொலையாளி அருச்சுனன் என்று கூட இருக்கலாம்.//

ஹஹா. என்ன கேஆரேஸை இவ்ளோ குறைச்சு மதிப்பீடு செஞ்சு இருக்கீங்க? :p

"தமிழ் கடவுள் மாயோனை போட்டு தள்ளிய அருச்சுனன்!"

- இப்படி வைப்பாரு எங்க அண்ணாத்தே! :)))

//என்ன ஒரு சத்தமும் இல்லை?.....//

இப்ப பாருங்க, அலறி அடிச்சுட்டு வருவார். :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வந்தேன்!

//(கேஆர்ஸ் கவனிக்க)//
அடியேன் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன்! கவனித்துக் கொண்டும் இருப்பேன்!

அடியேன் வைக்கும் தலைப்புகள் உங்களை அவ்வளவு பாதித்து இருக்கிறதா என்ன?

பித்தா என்று தலைப்பிட்டுச் சுந்தரர் பாடுகிறார்!

கோளறு திருப்பதிகம் ன்னு தலைப்பு - நவகிரகங்களை எல்லாம் அறுத்துப் போடுங்கன்னா அர்த்தம்? அப்புறம் ஏன் அப்படி ஒரு தலைப்பு வைத்தார்கள்? ஒரு வேளை சம்பந்தப் பெருமான் சின்னப் பையன்.ஆன்மீக வெவரம் போதலை போல-ன்னு சொல்ல முடியுமா?

சத தூஷணி என்று வேதாந்த தேசிகர் தலைப்பு வைத்தாரே! அவர் என்ன ends மட்டும் பார்த்து meansஐ கோட்டை விட்டவரா?

இன்னா நாற்பது என்றும் இனியவை நாற்பது என்றும் பழந்தமிழ் நூலுக்கு எதிரெதிர் தலைப்பு வைக்கிறார்களே!

இன்னும் நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஆசாரியர்கள் வைத்த "விபரீத" தலைப்புகளை எல்லாம் வரிசைப்படுத்தி தனிப்பதிவாய் சொல்லட்டுமா?

//ஆஹா.... ராமன் குருவை அவமதிக்கிறான் என்று குமுற முடியுமா//

இராமன் குருவை அவமதிக்கவில்லை! மதியோ மதி என்று மதிக்கவும் இல்லை!
விசேட தர்மத்தைக் காப்பாற்ற சில சமயம் அன்றாட தர்மங்களை விட வேண்டிய சூழல் வரும்! http://madhavipanthal.blogspot.com/2006/12/2.html

வாலியைக் கொன்றான் என்றால் கொன்றான் தான்!
குருவை மீறினான் என்றால் மீறினான் தான்!
ஏன் எதற்கு என்றெல்லாம் பின்னால் வேன்டுமானால் வரும் விளக்கம்!

பிரகலாதன் அசுரன் என்றால் அசுரன் தான்! அசுரன் நல்லவனாக இருந்தால் அவனைத் தேவன் ஆக்கத் துடிக்க வேண்டியதில்லை! அவரவர் இயல்பு நிலையில் இருப்பதே ஈசனுக்கும் உவப்பு!

தலைப்பினை நான் sensationalize செய்வதற்காக வைக்கவில்லை!
அப்படியே செய்வதாக நீங்கள் கருதினாலும், கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் தான்! என் தலைப்புகள் பல நாளாய் இப்படித் தான் உள்ளன! தலைப்பு தான் attraction. பதிவில் சாராம்சம் இல்லை என்றால் எப்போதோ கடை காலியாகி இருக்கும்!

அடியேன் தலைப்பில் தார்மீகத்தைத் தொலைக்கவில்லை!
படிப்போர் நீங்களும் தலைப்பை மட்டுமே கண்டு, பதிவில் தார்மீகத்தைத் தொலைக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நல்ல பதிவு திராச!
குருவின் ஆணையை மீறுகிறான் இராமன்!
குருவின் ஆணையை மீறுகிறான் மகாபலி!
குருவின் ஆணையை மீறுகிறார் இராமானுசர்!
குருவின் ஆணையை மீறுகிறார் குமரில பட்டர்! அதற்கான தண்டனையையும் தானே உவந்து ஏற்றுக் கொள்கிறார்!

அன்றொரு நாள் உலக நலனுக்காக குருவின் ஆணையை மீறியதால் திருநாடு என்னும் மோட்சம் சித்திக்காதோ என்று கருதிய இராமானுசர், கூரத்தாழ்வானின் சம்பந்தத்தோடு வைகுந்தம் கிடைக்க வேண்டும் என்று பிரார்திக்கிறார்!

ஊரே ராமானுஜ சம்பந்தம் இருந்தால் மோட்சம் கிடைக்கும் என்று ஓடி வர, இவர் மட்டும் குரு ஆக்ஞையை மீறியதால், தன் சிஷ்ய சம்பந்தத்தை நாடுகிறார்!

//நீங்களே சொல்லுங்கள் குருவுவின் வார்த்தைகளை ரமான் மீறினானா இல்லையா?
//

ஆமாம்! மீறினான்!
வேறு உயர்ந்த தர்மத்தைக் காப்பாற்ற சிறிய தர்மத்தை மீறினாலும்...மீறல் மீறலே!
அதற்கான பலா பலன்களை உவந்து ஏற்றுக் கொள்ளும் "மனப்பக்குவம்" இராமனிடம் உண்டு!

சாஸ்திரங்களின் சாராம்சம் வெகு ஆழமானது! நுணித்து உணர்ந்தால் பிற விசாரணை அகன்று சுய விசாரணை துவங்கும்! சிவோஹம்!

மெளலி (மதுரையம்பதி) said...

//இன்னும் நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஆசாரியர்கள் வைத்த "விபரீத" தலைப்புகளை எல்லாம் வரிசைப்படுத்தி தனிப்பதிவாய் சொல்லட்டுமா?//

அதை எதிர்பார்த்துதானே இந்த கொக்கி போடுவதெல்லாம்...எழுதுங்க. :)

குமரன் (Kumaran) said...

தி.ரா.ச.,

கோவிந்தன் பால் ஊத்துன கதையும் மருமக்கள் மாமியாருக்குச் சோறு போட்ட கதையும் எப்போது சொல்லப் போகிறீர்கள்? சுவையாக இருக்கும் போலிருக்கிறதே!

இந்த இடுகையில் கம்பன் பாடல்களைப் படித்து மகிழ்ந்தேன்.

குமரன் (Kumaran) said...

தி.ரா.ச.,

கோவிந்தன் பால் ஊத்துன கதையும் மருமக்கள் மாமியாருக்குச் சோறு போட்ட கதையும் எப்போது சொல்லப் போகிறீர்கள்? சுவையாக இருக்கும் போலிருக்கிறதே!

இந்த இடுகையில் கம்பன் பாடல்களைப் படித்து மகிழ்ந்தேன்.