Wednesday, June 4, 2008

போலி குருக்களை அடையாளம் காண முடியுமா?

இராமகிருஷ்ண பரமஹம்சர் பெயரில் உள்ளது போலவே பரமகுரு! அவர் சீடர் விவேகானந்தர் பரமசிஷ்யன்!
அந்தப் பரமகுரு-பரமசிஷ்யன் இருவருக்குமிடையே ஆன உறவும் உரையாடலும் மிகவும் புகழ் வாய்ந்தது!
என்றோ இராமானுசருக்கும் அனந்தாழ்வானுக்கும் இடையே நடந்த அதே உரையாடல், அன்று கங்கைக் கரையில் இராமகிருஷ்ணருக்கும் விவேகானந்தருக்கும் இடையேயும் நடக்கிறது! அந்த உரையாடல், இன்றும் நமக்கு வழிகாட்டுகிறது!

குரு என்றால் என்ன?
கு சப்தஸ் அந்தகாரஸ்ய! ரு சப்தஸ் தன்னிரோதஹ!
அந்தகாரம் என்னும் இருளை நீக்குபவரே குரு!
குருவின் ஒரு மெல்லிய பார்வை பட்டாலே போதும்! சின்ன ஒளிக் கீற்று, அறை முழுதும் இருட்டை நீக்குவது போல், குருவின் பார்வை நம் அகங்கார அந்தகாரத்தை அடியோடு அழித்து விடும்!

குருவிடம் சேர எனக்கு என்ன லட்சணம் தேவை?
சிஷ்ய லட்சணம் என்று ஒன்னுமே கிடையாது! குருவுக்குத் தான் லட்சணம் சொல்லி இருக்காங்க!
பாங்கு அல்லன் ஆகிலும் பயன் அல்லன் ஆகிலும் அந்தச் சிஷ்யனைத் திருத்திப் பணி கொள்பவனே குரு!
பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்று ஆர்ப் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன்றன் மொய் கழற்கு அன்பையே


நல்ல குருவை நான் எப்படி அடையாளம் கண்டு கொண்டு, அவரிடம் சீடனாய்ப் போய்ச் சேர முடியும்?
நல்ல குருவை அடையாளம் காணும் அளவுக்கு உனக்கு ஞானம் இருக்கா? இருந்தால், நீ ஏன் குருவைத் தேடுகிறாய்? அதான் ஞானம் பெற்று விட்டாயே!
ஞானம் இல்லாததால் ஞானம் தேடுவோன், ஞானியை மட்டும் எந்த ஞானத்தால் அறிந்து கொள்வான்?

ஞானம் வேண்டித் தாகமாய் இரு! குரு தானே வருவார்! When the Student is Ready, the Teacher Arrives!
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

போலி குருமார்கள்....அதான் கொஞ்சம் பயமாய் இருக்கு? என்ன செய்ய?
அவர்களை உருவாக்குவதே நீங்கள் தானே!
ஞானம் வேண்டித் தாகமாய் இருந்தால், எதற்கு போலி வேண்டுகோள்களை வைத்துக் கொண்டு, போலி குருமார்களைத் தேடி ஓடுகிறீர்கள்?
அதான் சொன்னேன்! ஞானம் வேண்டித் தாகமாய் இரு! குரு தானே வருவார்!

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழு மாறே

போலிகளை எப்படி அடையாளம் காண்பது?
சான்றோர்களை அடையாளம் காண்பது தான் அரிது! போலிகளை வெகு எளிதில் கண்டு கொள்ளாலாமே!
தங்களைக் குரு என்று கூறிக் கொள்ளும் போலி குருமார்கள், முக்கியமாக அடக்கமின்றி இருப்பார்கள்!

மந்திரங்களிலும், தந்திரங்களிலும் ஆற்றல் படைத்தவர்களாக அவர்கள் இருக்கலாம்!
ஆனால் இறை உணர்வு இல்லாதவர்களாக இருப்பார்கள்! மெய்ப்பொருளை ஆய்ந்து இருக்க மாட்டார்கள்!
வேதங்களின் உண்மைகளை உணர்ந்து சிக்கலின்றி பிறருக்கு உணர்த்தும் வல்லமை அவர்களுக்கு அருளப் பெற்றிருக்காது!!

இறைவன் திருநாமத்துக்கு உருகாத உள்ளத்தை எளிதில் கண்டு விடலாம்! காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க அவர்களால் முடியாது! அது ஒன்றே அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும்!

உன்னால் அவர்கள் நாடகத்தைக் காண முடியவில்லை என்றால், உன் தேடல் குருவை நோக்கி அல்ல! வேறு ஏதோ தன்னலமான ஒன்றை நோக்கி! அவ்வளவு தான்!


பணியுமாம் என்றும் பெருமை! சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து!


சொல்லிலும் செயலிலும் ஏன்.... ஒவ்வொரு அசைவிலும் பணிவை மட்டுமே கண்ட மகாகுருவைக் கலியுகத்தில் காண்பது கடினமா என்ன?
அவரைத் தரிசித்த மாத்திரத்தில், அந்தப் பணிவு நமக்கு வந்து ஒட்டிக் கொள்ளாதா என்ன, ஒரு சிறு விநாடியாவது! கீழே தரிசியுங்கள்! குரு தரிசனம், பாப விமோசனம்!குரு புங்கவ புங்கவ கேதனதே
சமதா மயதம் நஹி கோ பி சுதி
சரணாகத வத்சல தத்வ நிதே
பவ சங்கர தேசிக மே சரணம்!

13 comments:

jeevagv said...

முத்துக்களால் கட்டிய சரம்போல்
- நல்

வாக்கியங்களால் கட்டிப் போட்டது இடுகை!

Kavinaya said...

அருமை, கண்ணா!

//ஞானம் வேண்டித் தாகமாய் இரு! குரு தானே வருவார்!//

//காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க அவர்களால் முடியாது!//

எப்போதும் சிந்தையில் நிறுத்திக் கொள்ள வேண்டிய உண்மைகள்.

குருதரிசனத்திற்கும் மிக்க நன்றி!

ambi said...

வியாழனன்று குரு தரிசனம் கிடைக்க பெற்றேன்.

மனதுக்கு மிகவும் சமாதானமாக உள்ளது.

மெளலி (மதுரையம்பதி) said...

வழக்கம் போல அருமையான சிந்தனைகளை,மிக அழகாக, எளிதாக தந்தமைக்கு மிக்க நன்றி கே.ஆர்.எஸ்... :)

எல்லா குரு/ஆச்சார்யர்களையும் இந்த வலைப்பூவுக்கு கொண்டுவர எண்ணம். இந்த எண்ணத்தில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது என்று தெரியும். இந்த எண்ணத்தை செயலில் கொண்டு வர சற்றே உதவுங்கள்.... :))

மூன்று வாரங்கள் மிக வேகமாய் நகர்ந்துவிடும்...சித்தர்கள் பற்றி நாம் முன்பு பேசியதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் :)).

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எல்லா குரு/ஆச்சார்யர்களையும் இந்த வலைப்பூவுக்கு கொண்டுவர எண்ணம். இந்த எண்ணத்தில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது என்று தெரியும்//

மாற்றுக் கருத்தே இல்லை!

//இந்த எண்ணத்தை செயலில் கொண்டு வர சற்றே உதவுங்கள்.... :))//

புதசெவி!
ஆச்சார்யர்கள் வரிசையை ஆவணப்படுத்தி ஒவ்வொன்றாய் இட வேண்டுமா? என்ன சொல்ல வரீங்க?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எல்லா குரு/ஆச்சார்யர்களையும் இந்த வலைப்பூவுக்கு கொண்டுவர எண்ணம். இந்த எண்ணத்தில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது என்று தெரியும்//

ஓ...நீங்க சங்கராச்சாரியரைப் பற்றியே பதிவுகள் வருவதைச் சொன்னீங்களா?

நான் கூட எங்கே 21NEE தான் சொல்றீங்களோன்னு பார்த்தேன்! இத்தனைக்கும் அவரைப் பற்றி நான் எழுதவே இல்லியே! "வழக்கம் போல" அபாண்டமாச் சொல்றீங்களோ-ன்னு நெனச்சேன்! :-)))

மடலில் விளக்கியதற்கு நன்றி!
சங்கரரைச் சொல்லாமல் சமயத்தைச் சொல்லவே முடியாது! இன்னும் சில பதிவுகளில் அனைவரையும் தொட்டுச் செல்லலாம்! நத்திங் டு வொர்ரி! ஆஸ்க் டாம் & ஜெர்ரி! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ஜீவா
என்-வாசகத்தால் கட்டிப் போடுவது நீங்க தானே? :-)
அடியேன் தட்டி மட்டுமே போட்டேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@கவி அக்கா
//ஞானம் வேண்டித் தாகமாய் இரு! குரு தானே வருவார்!//
//காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க அவர்களால் முடியாது!//

இந்த வாசகங்கள் பரனூர் அண்ணா அவர்கள் சொல்வது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@அம்பி
வாங்க அபி அப்பா
சாரி அம்பி அப்பா

//மனதுக்கு மிகவும் சமாதானமாக உள்ளது//

சொன்ன முகூர்த்தம் இப்போ மனதுக்கு பெரு மகிழ்ச்சியா உள்ளது!
வாழ்த்துக்கள் உங்க குட்டிப் பாப்பாவுக்கும் அம்மாவுக்கும்!

என்னாது வாழ்த்தா? உங்களுக்கா? ஓடிப் போயி அந்த டயாபர் எடுத்துக்கிட்டு வாய்யா! :-))

குமரன் (Kumaran) said...

பாடல்களின் பொருளை விளக்காமல் சொல்லிக் கொண்டே போனாலும் பொருத்தமான பாடல்களாக இட்டிருப்பது நன்கு தெரிகிறது இரவிசங்கர்.

கோவை விஜய் said...

குரு பார்க்க கோடி புண்னியம் அல்லவா.
குருவை பற்றிய சிறப்புகள் இவ் அவனியெங்கும் பரப்பும் தங்களின் வேள்வி சிறக்கட்டும்
-விஜய்

கலியுக சித்தன் said...

" என்ன பாவம் செய்தேன் இந்த பாதகனை கண்ணுறா' பெருமாளே.

கலியுக சித்தன் said...

" என்ன பாவம் செய்தேன் இந்த பாதகனை கண்ணுறா' பெருமாளே.