Wednesday, August 6, 2008

ஜலஸ்தம்பம்! செய்ய முடியுமா உம்மால்???

இன்னிக்கி ஒரே ஒரு சின்னக் கதை மட்டுமே!

இராமகிருஷ்ண பரமஹம்சர் யோகத்தில் மூழ்கி இருந்தார்! இமயமலைத் துறவி ஒருவர் அவர் முன் வருகிறார்!"என்ன இராமகிருஷ்ணரே...உங்களைப் பற்றிப் பலதும் பெருசா சொல்றாங்க? அதைக் கேள்விப்பட்டு வந்தேன்! ஆனா முகத்தில் ஒரு தேஜஸே இல்லையே! போதாக்குறைக்கு மனைவியோடு வாழ்ந்துகிட்டு இருக்கீங்க!
காளி கோயில் பூஜாரி-ன்னாலே சகல ஞானங்களும் கைவந்து விடும் என்ற நினைப்பா? அதுக்கெல்லாம் ஞானம் கைகூடணும், யோகம் செய்யணும்! ஆத்ம விசாரம் செய்யணும்! இதெல்லாம் ஞானிகளால் மட்டுமே முடியும்! என்றைக்கு இருந்தாலும் பூஜாரி பூஜாரி தான்! ஞானி ஞானி தான்!"
(சிரிப்பு)

"என்ன சிரிக்கிறீர்? உம்ம பின்னாடி சின்னூண்டு சிஷ்யக் கூட்டம் தான் இருக்கு! அப்புறம், நீங்க என்ன ஒரு பெரிய ஆச்சார்யர்?"

(சிரிப்பு)
"நான் ஆச்சார்யன் அல்ல மகாஞானியே! வெறும் ஆச்சர்யன்!
இறைவன் உண்டாக்கிய பல ஆச்சர்யங்களில், அடியேனும் ஒரு ஆச்சர்யம்! அவ்வளவு தான்!"

"இப்படி வார்த்தை விளையாட்டு விளையாடினால், நான் மயங்கி விடுவேன் என்று நினைத்தீரா? வார்த்தை எவனும் விளையாடுவான்! சித்து விளையாடத் தெரியுமா உமக்கு?"

"தெரியாது ஐயா!"

"இவ்வளவு நாள் என்ன தான் பண்ணிக்கிட்டு இருந்தீர்? உம்மையும் ஏமாற்றிக் கொண்டு, உம்ம சீடர்களையும் ஏமாற்றிக் கொண்டு...என்ன தான் பெருசா சாதிச்சீர்?"

"எதுவும் சாதிக்கலை ஐயா! அம்பாளின் காளி பக்தியில் களித்திருந்தேன்! அவ்வளவு தான்!"

"இது ஒரு பூஜாரி வேலை! ஒரு ஆச்சார்யன் வேலை அல்ல!"

"ஓ....."
"எல்லாரும் சொல்வது போல், உம்மிடம் பல சித்திகள் இருக்கும் என்று நினைத்துத் தான் வந்தேன்! ஆனால் நீரே மாணவர்களிடம் இருந்து தான் தெரிந்து கொள்கிறீர் போலும்! நல்ல வேடிக்கை! நான் வருகிறேன்! இனியாவது திருந்துங்கள்! ஆத்ம ஞானத்தைத் தேடப் பாருங்கள்"

"ஞானியே! ஒரு நிமிடம்! என்னைப் பல கேள்விகள் கேட்டீர்கள்! இது தெரியுமா? அது தெரியுமா? என்றெல்லாம் கேட்டீர்கள்.....சரி, எனக்கு ஒரு உதவி செய்யுங்களேன்! நீங்கள் இத்தனை நாள் யோகத்தில் அடைந்த சாதனையை, அடியேனுக்குச் சொல்லிவிட்டுச் செல்லுங்களேன்! உங்களையே முன் மாதிரியாக வைத்து நானும் கடைத்தேறப் பார்க்கிறேன்!"

"ஹா ஹா ஹா...சரி கேளும்...
பல ஆண்டுகள் இமய மலைச் சாரலில் தவம் இருந்த தப்ஸ்வி நான்! பல சித்தர்களை, அவர்கள் உலாவும் குறிப்புகளை நேரடியாகப் பார்த்து இருக்கேன்! என் யோகத்தின் பயன் என்ன தெரியுமா? - ஜலஸ்தம்பம்!"


"அப்படின்னா என்ன ஞானியே?"

"ஆகா...இது கூடத் தெரியாதா?
பரமஹம்சர் என்று பட்டம் கொடுக்கப்பட்டிருக்கும் உமக்கு இது கூடத் தெரியாமல் போனது ஆச்சர்யம் தான்! நான் சொன்னது சித்த புருஷ லட்சணம்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சித்தி! அணிமா, கரிமா, மகிமா, லகிமா என்று பல சித்திகள்! அதில், ஜலஸ்தம்பம் என்பது ஜலத்தின் மேலே நடப்பது!நான் நீர் மேலேயே நடப்பேன் இராமகிருஷ்ணரே! தெரியுமா உமக்கு? அதுக்கெல்லாம் சித்தி அருளப் பெற்று இருக்கணும்! தவம் ஐயா தவம்!"

(இராமகிருஷ்ணர் விழுந்து விழுந்து சிரிக்கிறார்...குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறார்...ஞானிக்குக் கோபம் பொத்துக்கிட்டு வருகிறது...)

"உமக்கே கேவலமாக இல்லை? இப்படிச் சிரிக்கிறீர்களே? நான் சபித்தால் என்ன ஆவீர் தெரியுமா?"

"அச்சோ! மன்னியுங்கள் மகா ஞானியே! நான் உங்களை இழிவுபடுத்த நினைக்கவில்லை! என்னையும் மீறி, என் காளி சிரித்து விட்டாள்...
கொஞ்சம் பொறுங்கள்...அவள் என்னை ஏதோ சொல்லச் சொல்கிறாள்...உங்களுக்குச் சொல்லச் சொல்கிறாள்...சொல்கிறேன்!
...
...
ஏன்பா...ஓடக்காரா...ஹூக்ளி ஆற்றைத் தாண்டிப் போகனும்! எவ்ளோ-ப்பா?"

"பத்து பைசா சாமீ! நீங்க பாக்க சாமீ மாதிரி இருக்கீங்க ரெண்டு பேரும்! பரவாயில்ல, சும்மாவே படகுல குந்திக்குங்க! காசு வேணாம்!"

"பார்த்தீங்களா ஞானியே! ஒரு பத்து பைசா கொடுத்தா, இவனே "ஜலஸ்தம்பம்" பண்ணிடுவானே! ஹா ஹா ஹா!"
(ஞானி திடுக்கிடுகிறார்...)



"இதுக்கு நீங்க...இத்தனை வருஷம் பிரயாசைப்பட்டு, யோகப்பட்டு, தவப்பட்டு, அணிமா, மகிமா, கரிமா, லகிமா-ன்னு பல மாக்களை எல்லாம் சாதனை பண்ணி...கடைசீல உங்க யோகத்தின் மதிப்பு வெறும் பத்து பைசா தானா?"

(ஞானிக்குத் தூக்கி வாரிப் போடுகிறது.....)

"உங்க ஜலஸ்தம்பத்தால் யாருக்கென்ன லாபம், சொல்ல முடியுமா? இத்தனை மக்களும் ஆற்றைக் கடக்க உம்ம "ஜலஸ்தம்பம்" உதவுமா?"

(மெளனம்)

"ஜலஸ்தம்பம்-ன்னு எங்கே பிரமாணம் ஆச்சு உங்களுக்கு? சொல்லுங்களேன்"

"சித்த நூல்களில் எல்லாம் உள்ளது இராமகிருஷ்ணரே! யோக ரகஸ்யங்களில் அதுவும் ஒன்னு! யோகத்தைக் கேவலமாக மட்டம் தட்டி விட்டீரே, உம்ம வார்த்தை விளையாட்டால்! ச்சே!"

"சித்த நூல்கள், யோக ரகஸ்யம் இதெல்லாம் அற்புதமானது ஞானியே! அடியேன் அதை மட்டம் தட்டவில்லை! நான் வார்த்தை விளையாடவும் இல்லை!
என் வார்த்தையின் உண்மை, உங்கள் மனத்தில் விளையாடி விட்டது! அதான் வார்த்தை+விளையாட்டு!"

(மெளனம்)

"ஜலஸ்தம்பம்-ன்னா என்ன? சித்த புருஷர்கள் ஆற்றின் ஜலத்தையா ஸ்தம்பம் செய்யச் சொன்னார்கள்?ஹா ஹா ஹா!
சம்சார ஜலம் = பிறவிக் கடல் = அதை உம்மால் ஸ்தம்பம் செய்ய முடியுமா?

சம்சார ஜலஸ்தம்பம்! செய்வீரா? சாதனை பண்ணி இருக்கீரா?
சம்சார ஜலஸ்தம்பம்! பகவத் சரணார விந்தம்! அதைச் சாதனை பண்ணி இருக்கீரா?
சம்சார ஜலஸ்தம்பம்! திருவடி ஓடம்! அதில் பயணித்து இருக்கீரா?"

(ஸ்தம்பம் செய்த ஞானி இப்போ ஸ்தம்பித்து நிற்கிறார்)

"இவ்வளவு நாட்கள் ஆன்மீக வாழ்க்கையை வீணடித்து விட்டேன் என்று என்னைச் சொன்னீர்களே, மஹாப்ரபு! ஆனால் ஜலஸ்தம்பம் என்றால் என்ன என்றே தெரியாமல், ஏதோ பைசா பெறாத ஒன்றை ஜலஸ்தம்பம் செய்யத் தெரிந்து கொண்டதாக நினைத்து இப்படி ஏமாந்து விட்டீர்களே? மகாஞானியே!"

(ஞானி, இராமகிருஷ்ணரின் காலடிகளில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்கிறார்! நாமும் வீழ்வோம்!)



புத்தகச் சுரைக்காய்களைக் கரைத்துக் குடித்து விட்டு,
பலதும் படித்துப் படித்து,
எதைப் பிடிக்கப் படிக்கிறோம் என்றே தெரியாமல், மேலும் படித்துப் படித்து,
சொந்தக் கருத்துகளையும், தன் கட்சியையும் நிலைநாட்ட மட்டுமே
தேடித் தேடிப் படித்து...
கண்டதே காட்சி, கொண்டதே கோலம்! கண்டதே கருத்து, கொண்டதே பதிவு! என்று இருக்கும் நாமும்.....
பரமஹம்சர் காலடியில் வீழ்வோம்! பரம ஹம்சம் பெறுவோம்!

மனம் என்னும் தோணி பற்றி, "மதி" என்னும் கோலை ஊன்றி,
சினம் என்னும் சரக்கை ஏற்றி, செறி கடல் ஓடும் போது,
மனன் என்னும் பாறை தாக்கி, மரியும் போது அறிய ஒண்ணாது,
"உனை" எண்ணும் உணர்வை நல்காய்! ஒற்றியூர் உடைய கோவே!

திருச்சிற்றம்பலம்!

100 comments:

Kavinaya said...

அதேதான்! மாம்பழம் சாப்பிட வந்த இடத்துல மாவிலையையும் பூவையும் பிஞ்சையும் எண்ணிக்கிட்டிருக்காம மாம்பழத்தை சாப்பிடுவோம். (இது ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னதுல எனக்கு பிடிச்ச கதை).

வழக்கம்போல சொல்ல வந்த செய்தியை உங்க பாணில சுவாரஸ்யமா சொல்லியிருக்கீங்க கண்ணா. நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

வணக்கம் கே.ஆர்.எஸ்,

இணைய வாரியார், இணைய பரமஹம்ஸராகும் உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்.... :)

//புத்தகச் சுரைக்காய்களைக் கரைத்துக் குடித்து விட்டு,
பலதும் படித்துப் படித்து,
எதைப் பிடிக்கப் படிக்கிறோம் என்றே தெரியாமல்,
பலதும் படித்துப் படித்து,
சொந்தக் கருத்துகளையும், தன் கட்சியையும் நிலைநாட்ட மட்டுமே தேடித் தேடிப் படித்து...
கண்டதே காட்சி, கொண்டதே கோலம்! கண்டதே கருத்து, கொண்டதே பதிவு!
என்று இருக்கும் நாமும் பரமஹம்சர் காலடியில் வீழ்வோம்! பரம ஹம்சம் பெறுவோம்!//

அட நீங்க பரமஹம்ஸரான உங்கள் முன், உங்க கிட்ட பேசும் ஹிமாலய ஞானியாகவாச்சும் நான் ஆக ஆசை. அதுக்காக வரிவஸ்யா ரஹஸ்யம் படிக்க ஆரம்பிக்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

கோவை விஜய் அவர்களுக்கு ஒரு சிறு விண்ணப்பம். தவராக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன். :)

உங்களது முயற்சி நல்லதுதான். ஆனால் அது பதிவுக்கு தொடர்பில்லாதது.

இம்மாதிரி செய்திகளை திரட்டிகளில் இடுங்கள், எல்லோரையும் சென்றடையும். இங்கு இடுவது ஏதோ விளம்பரம் போன்று இருக்கிறது. தவிர்த்தீர்களானால் நன்று. :)

மேற்கண்ட வேண்டுகோளால் தங்கள் மனம் வருந்துமானால் அதற்கு எனது வருத்தங்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

யோகத்தின் பை-பிராடக்ட் தான் இந்த சித்துக்கள். ஆனால் அதை முதன்மையாகக் கொள்வது, சாதகனுக்கு அழகுமல்ல, அவனது குறிக்கோள் அதுவாக இருக்குமானால் அவனைச் சாதகன் என்று கூறவும் முடியாது. சாதகன் தனது சாதனை என்று எதையும் வெளிக்காட்ட (உபதேசித்த குருவிடம் பகிர்தலைத் தவிர) மாட்டான். இந்த வித்தைகள் எல்லாம் நீண்ட நாள் வேலைக்கு ஆகாதவை.


//"எதுவும் சாதிக்கலை ஐயா! அம்பாளின் காளி பக்தியில் களித்திருந்தேன்! அவ்வளவு தான்//

இம்மாதிரி களிக்கவும், காளியுடன் பேசவும் அவரால் முடிந்தது. அந்த அளவுக்கு அவர் பக்தியில் திளைத்திருந்தார். ராமகிருஷ்ணரே ஒரு சில நேரங்களில் தமக்கு கைவந்த சித்தியினை காண்பிக்கவும் செய்திருக்கிறார்.

கொஞ்சம் வெளிப்படையாக என்னை நானே சில கேள்விகள் கேட்டுக் கொள்கிறேன். இந்த பின்னூட்டத்தை படிப்பவர்கள் தங்களுக்கும் இவை பொருத்தமானதாக இருந்தால் ஆமோதிக்க, அவரவர் நிலையில் இருந்து விடையளிக்கலாம். :-)

நான் எல்லாம் இராமகிருஷ்ணர் காளியிடம் கொண்ட அளவு பக்தியா கொண்டிருக்கிறேன்?. சரி, பக்தியால் வருவது பணிவு, சிரத்தையால் வருவது ஞானம் என்பார்கள். இன்று எனது பக்தியால் பணிவு வந்த-மாதிரி தெரியல்லையே?..

சிரத்தையாக கர்மானுஷ்டானங்களை எல்லாம் பண்ணினால் பதிவில் வரும் ஞானி போல கர்வம் வருகிறது. மனதால் கர்வம் இல்லையென்றாலும் பிறருக்கு கர்வமுடையவனாக தோற்றம் ஏற்படுகிறது. இந்த கர்மானுஷ்டானங்களால் இன்றைய சமூகத்தில் ஒதுக்கப்படும் வாய்ப்பு அதிகம்..மக்களுடன் புழங்காத ஹிமாலய ஞானியே இவ்வளவு கர்வம் கொண்டால் என்னிலை என்னவாகும்?

இந்த பதிவில் வரும் ஹிமாலய ஞானி லெவலில் கேள்விகள், தரவுகள், பலகாலத்து தவறுகள், என் தெய்வம் தான் சிறந்தது, என் மொழிதான் உயர்ந்தது என்றெல்லாம் பேசிக் கொண்டே தானே இருக்கிறேன்?. நான் படிக்கும் பதிவுகளின் சாரத்தை விட்டுவது இயல்பாக நடக்கிறதே?. நான் எழுதும் பதிவுகளோ கேட்கவே வேண்டாம், எனது படிப்பறிவினை, எனது செயல் திறத்தைக் காட்டுபவையே!!. அதில் அனுபவம் என்பது மிகவும் சிறிய பங்கு, அல்லது முழுவது அனுபவமற்ற அலங்கார-மமகார சொற்களின் கோர்வை.

யோகம் என்பதெல்லாம் கடைசியில் இறைவனடி சேரும் ஒரு வழி என்பது சரி. எனக்கு யோகமும் கைவரல்ல, பக்தியும் ஆழமாக பண்ண தெரியல்ல. என்னதான் செய்ய?...

சும்மாயிரு!!!..எதிலும் தலை நுழைக்காது, வேடிக்கை பார். வியப்பானாலும் சரி, துவர்ப்பானாலும் சரி...கசப்பானாலும் சரி...வெளிக்காட்டாதிருக்க பழகு...

சரிதானே கே.ஆர்.எஸ்?, இரு வாரங்களுக்கும் சேர்த்து பின்னூட்டியாச்சு (ஜல்லியடிச்சாச்சு), திருப்தி தானே இப்போ? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மெளலி அண்ணாவின் முத்தான மூன்று பின்னூட்டங்களுக்கும், அவர் இனிமேல் இடப் போகும் பின்னூட்டங்களுக்கும், புதிய பதிவுகளுக்கும் நன்றி! :)

/சரிதானே கே.ஆர்.எஸ்?, இரு வாரங்களுக்கும் சேர்த்து பின்னூட்டியாச்சு (ஜல்லியடிச்சாச்சு), திருப்தி தானே இப்போ? :-)
//

பின்னூட்டமோ, ஜல்லியோ.....
அதில் பகவானின் பெயர் ஒரு முறை வந்து விட்டாலே, மொத்த ஜல்லிப் பின்னூட்டமும், ஜகதானந்த பின்னூட்டமாய் ஆகி விடுகிறது!

பகவத் தியான சோபனம் என்பதால் ஜல்லியும் ஒரு வகையில் கில்லியே! அதில் பகவானின் நாமம் இருக்கும் வரை! :)

Kavinaya said...

//யோகம் என்பதெல்லாம் கடைசியில் இறைவனடி சேரும் ஒரு வழி என்பது சரி. எனக்கு யோகமும் கைவரல்ல, பக்தியும் ஆழமாக பண்ண தெரியல்ல. என்னதான் செய்ய?...//

அடடா, நீங்களே இப்படிச் சொன்னா அடியேனெல்லாம் என்ன செய்வது மௌலி? அடிக்கடி எனக்கு மனத் தளர்ச்சி ஏற்படுத்தும் எண்ணம் இது. ஆனால் எனக்குத் தெரிந்த (சொற்ப) அளவில் ஸ்ரீராமகிருஷ்ணரே பதிலும் தந்திருக்கிறார். இறைவனை அறியவும், அவன் மீது அன்பு வைக்கவும், அவனிடமே அவனருளை மனமுருக யாசி என்பதே. ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியதைச் சொன்னேன். பெரியவர்கள் மன்னியுங்கள். அன்னையின் திருவடிகள் சரணம் சரணம்.

Raghav said...

//
எதைப் பிடிக்கப் படிக்கிறோம் என்றே தெரியாமல்//

இந்த வரிகள் என்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டது. மெளலி அண்ணாவின் கேள்விகளும் தான்.

பகவான் பாதங்களைப் பற்றுவதற்கு படிப்பெதற்கு? உள்ளார்ந்த பக்தியுடன், அவன் காலடியில் சரணாகதி அடைந்து விட்டால் நிச்சயம் அருள்வான் அப் பேரருளாளன்.

கோவை விஜய் said...

//தங்கள் மனம் வருந்துமானால் அதற்கு எனது வருத்தங்கள்.//

ஐயா
வனக்கம். உங்களின் பண்பு பாரட்டும் நற்குணத்திற்கு என் நன்றிகள்.

உங்களின் ஆலோசனைக்கு நன்றி.


இந்த செய்தி அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த வழியை கடைபிடித்தேன்.



இது பற்றிய விரிவான பதிவினை இன்று இரவு பதிவதற்கு முற்சிசெய்கிறேன்.


அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்.


கோவை விஜய்

http://pugaippezhai.blogspot.com/

மெளலி (மதுரையம்பதி) said...

புரிதலுக்கு நன்றி கோவை விஜய் அவர்களே!

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ராகவ்...

என்னைய்யா சொல்றீரு, ஒண்ணூம் புரியல்ல....

திருவடியை சிக்னெப் பிடித்தல் மட்டும் அவ்வளவு ஈசியா என்ன?. பெருமாள் கோவில்களில் ஒவ்வொருகால பூஜையின் முடிவிலும் பட்டர்கள் தங்கள் தலையை பெருமாள் காலடியில் வைத்து சரணாகதி பண்றாங்க...ஆனா அவர்களில் ஒருத்தர் கூட ராமகிருஷ்ணர் லெவலுக்கு வரல்லையே, ஏன்?

அப்போ அந்த சரணாகதி முழுமையாக இல்லை அப்படித்தானே?, இதே நிலைதான் நானும் சொல்கிறேன்...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பெருமாள் கோவில்களில் ஒவ்வொருகால பூஜையின் முடிவிலும் பட்டர்கள் தங்கள் தலையை பெருமாள் காலடியில் வைத்து சரணாகதி பண்றாங்க...//

சரி....
பண்ணிட்டுப் போகட்டும்! :)

//ஆனா அவர்களில் ஒருத்தர் கூட ராமகிருஷ்ணர் லெவலுக்கு வரல்லையே, ஏன்?//

இராமகிருஷ்ணர் லெவல்-னா என்ன?
இராமகிருஷ்ணா மிஷன்? உலகப் புகழ்?
அதிக சீடர்கள்? அதிக மக்கள்??
அதிக பதிவுகள்? அதிக பின்னூட்டங்கள்??

அவரவர் அவரவர் லெவலில் இருந்து கொள்வதும் யோகம் தானே மெளலி அண்ணா?

மாதவிப் பந்தலின் மேல் வாசகம்:
They also "serve" who only stand & wait!
நின் அருளே "புரிந்து" இருந்தேன்! இனி என்ன திருக்குறிப்பே? :)

//அப்போ அந்த சரணாகதி முழுமையாக இல்லை அப்படித்தானே? இதே நிலைதான் நானும் சொல்கிறேன்...//

சரணாகதி பரிபூர்ணமானதா என்பதைப் பரிபூர்ணன் பார்த்துக் கொள்ளட்டும்!
நாம் "செய்து" கொண்டே இருப்போம்!
:))

தேர்வு எழுதும் போது, பேப்பரை எப்படித் திருத்தப் போகிறார்களோ என்று யாரும் நினைப்பதில்லை!
அறிந்ததை எழுதுகிறார்கள், நியாயமான முறையில்! எழுதிக் கொண்டு இருப்போம்! புரிந்ததா? அஷ்டே! :))))

Raghav said...

ஆஹா ஆஹா, நான் என்ன நினைத்தேனோ அதையே ரவி அண்ணாவும் சொல்லி விட்டார். மெளலி அண்ணா, எனக்கு தெரிந்தது சரணாகதி ஒன்று தான். பிரபந்தமும் அறியேன், வேதங்களும் அறியேன். சதா சர்வ காலமும் வரதராஜனை தரிசித்தாலே போதும். மனதில் என்ன வருத்தம் இருந்தாலும், கண்ணீர் வடித்து, அவனை நினைத்து வேண்டி நின்ற மாத்திரத்தில் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். எங்கள் கோவில் இராஜகோபுரம் சம்ப்ரோக்ஷணத்தின் போது, 100க்கும் மேற்பட்ட ஆச்சார்யர்கள், பல திவ்யதேசங்களில் இருந்தும் நடத்திக் கொடுக்க வந்திருந்தனர். கும்பாபிஷேக நாளில் அனைவருக்குள்ளும் ஒரு எண்ணம், மூலவர் விமானத்திற்கு சம்ப்ரோக்ஷணம் பண்ணுவது யார் என்று? நான் 5 நாட்களும் பரிசாரகம் பண்ணிக் கொண்டு, ஆச்சார்யர்களுக்கு வேண்டியன எடுத்துத் தந்து கைங்கர்யம் செய்து கொண்டிருந்தேன்.

கடைசியில் சடம் புறப்படும் நேரத்தில் தலைமை ஆச்சார்யர் என்னைக் கூப்பிட்டு எனக்கு பரிவட்டம் கட்டி, மூலவர் விமான கும்பத்தை என்னிடம் கொடுத்து விட்டார்.
எந்த லெவலில் இருந்தாலும் சரி, அவன் மனதில் உள்ளபடி தான் நடக்கும்.

மெளலி (மதுரையம்பதி) said...

ஹலோ கே.ஆர்.எஸ், பதிவு போட்டது நீங்க, நினைவிருக்கட்டும் :-)

//இராமகிருஷ்ணர் லெவல்-னா என்ன?
இராமகிருஷ்ணா மிஷன்? உலகப் புகழ்?
அதிக சீடர்கள்? அதிக மக்கள்??
அதிக பதிவுகள்? அதிக பின்னூட்டங்கள்??//

ஒன்றும் தெரியாத குழந்தை போல கேள்வி கேட்கிறீர்...நான் குறிப்பிட்டது அவரது இறை அனுபவத்தை.

//அவரவர் அவரவர் லெவலில் இருந்து கொள்வதும் யோகம் தானே மெளலி அண்ணா?//

நீங்க சொல்வது கர்ம யோகத்தையா?

//மாதவிப் பந்தலின் மேல் வாசகம்:
They also "serve" who only stand & wait!
நின் அருளே "புரிந்து" இருந்தேன்! இனி என்ன திருக்குறிப்பே? :)//

ஆஹா, V.V இப்படி வேறயா?... :-)

வரும் திருக்குறிப்பை உணரும் சக்தி வேண்டுமே?. அதற்கு நாம் தயாராக வேண்டாமா?. ராமகிருஷ்ணருக்கும் இறையனுபூதி
சாதாரணமாக வரவில்லை, அவரது சரணாகதியால்தான் கிடைத்தது...

ஸ்டூலோ/ஏணியோ ஏதோ ஒன்றில் ஏறினால்தான் விட்டத்தை தொட முடியும், தரையிலிருந்தால் வெறிக்கத்தான் முடியும், என்
போன்றோருக்கு ஸ்டூல் வேணும். அப்பத்தான் திருக்குறிப்பு புரியும்.

//அப்போ அந்த சரணாகதி முழுமையாக இல்லை அப்படித்தானே? இதே நிலைதான் நானும் சொல்கிறேன்...//

சரணாகதி பரிபூர்ணமானதா என்பதைப் பரிபூர்ணன் பார்த்துக் கொள்ளட்டும்!
நாம் "செய்து" கொண்டே இருப்போம்!
:))//

முழுமனதுடன், ஆழ்ந்த சரணாகதி அவ்வளவு சாதாரணமில்லை, என்வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார் என்ற செயல்பாடு
சரிவராது என்பதே என் கருத்து.

மெளலி (மதுரையம்பதி) said...

ராகவ் தவராக எண்ணாதீர்கள்.நீங்க சொல்வது கொஞ்சம் காம்யார்த்தமான விஷயம். அது இந்த மாதிரி கடம் எடுப்பது, மடம் கட்டுவது போன்ற விஷயங்களை நான் இங்கு சொல்லவில்லை.

பக்தியை நான் சாதாரணமாக நினைக்கவில்லை, மறுக்கவும் இல்லை. ஆனால் எல்லோருக்கும், அது மட்டுமே போதாது. அவரவர் கர்மானுஷ்டானங்களை விட்டுவிட்டு சரணாகதி மட்டுமே செய்வதை ஏற்றதாக நான் அறியவில்லை.

Kavinaya said...

//முழுமனதுடன், ஆழ்ந்த சரணாகதி அவ்வளவு சாதாரணமில்லை//

மிகவும் உண்மை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
ஹலோ கே.ஆர்.எஸ், பதிவு போட்டது நீங்க, நினைவிருக்கட்டும் :-)//

மதுரையம்பதி பலப்பல குறிப்பால் எழுதிக் கொடுக்க, வாழைப்பந்தல் குலை தள்ளியது! :))

Raghav said...

//மதுரையம்பதி said...
ராகவ் தவராக எண்ணாதீர்கள்
//

வார்த்தைக்கு வார்த்தை மெளலி அண்ணான்னு கூப்புடுறேனே, உங்களை நான் தவறா நினைப்பேனா மெளலி அண்ணா?

//எல்லோருக்கும், அது மட்டுமே போதாது. அவரவர் கர்மானுஷ்டானங்களை விட்டுவிட்டு சரணாகதி மட்டுமே செய்வதை ஏற்றதாக நான் அறியவில்லை //

அடியேனுக்கும் அதே கேள்விதான் மனதில் உள்ளது. நித்ய கர்மானுஷ்டானங்களில் கவனம் செலுத்தி, பெருமாள் மீது பக்தியுடன் இருத்தலும் ஒரு விதத்தில் சரணாகதி என்றே நினைக்கிறேன். விளக்கினால் விளங்கிக் கொள்வேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வரும் திருக்குறிப்பை உணரும் சக்தி வேண்டுமே?. அதற்கு நாம் தயாராக வேண்டாமா?.//

வேண்டாம்!
இனி என்ன திருக்குறிப்பே?
நின் அருளே "புரிந்து" இருந்தேன்! :)

ஆர்டர் மாத்தியாச்சி! போதுமா? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஸ்டூலோ/ஏணியோ ஏதோ ஒன்றில் ஏறினால்தான் விட்டத்தை தொட முடியும்//

தரை சரியில்லை என்றால் எந்த ஸ்டூலும் ஏணியும் இருந்தாலும் உதவாது! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தரையிலிருந்தால் வெறிக்கத்தான் முடியும்//

விட்டத்தில் தான் தொடுவேன் என்பதே பிரச்சனைக்குக் காரணம்!

அதான் விட்டத்தில் இருப்பது தரையிலேயே இருக்கே!

ஆனால் குழந்தை தன் கூடையில் உள்ள மாங்கனியை விட்டு விடுகிறது!
மரத்தில் உள்ள (அதே) மாங்கனியைப் பறித்துத் தந்தால் தான் ஆயிற்று என்று அடம் பிடிக்கிறது!

மரம் ஏறுவோர் இங்கு யாரேனும் இருந்தால் தொரடு எடுத்துக் கொண்டு குழந்தையின் உதவிக்கு வரவும்! :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//முழுமனதுடன், ஆழ்ந்த சரணாகதி அவ்வளவு சாதாரணமில்லை//

//மிகவும் உண்மை//

அடியேனும் சொல்லிக் கொள்கிறேன்!
மிகவும் உண்மை!

***முழுமனதுடன்***,
***ஆழ்ந்த***
சரணாகதி செய்தவர்கள் இது வரை யாருமே இல்லை!
இராமானுசர், சங்கர பகவத்பாதர் உட்பட!

சரணாகதியின் மகத்துவம் என்னெவென்றால்:

சரணாகதம் செய்த பின்,
ஒப்பு கொடுத்த பின்,
தாம் செய்த சரணாகதம்,
"முழுமனதுடன்", "ஆழ்ந்து" செய்தோமா என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை!

"நான் சரணாகதம் செய்கிறேன்" - என்பதையும் சேர்த்தே சரணாகதி செய்வது தான் சரணாகதி!

ப்ரமுகாகில தைவத "மெளலி மனே"
"சரணாகத" வத்சல சார நிதே
பரிபாலயமாம் வ்ருஷ சைலபதே!


ஹா ஹா ஹா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தத்துவ விசாரம் செய்வது ஆழ்ந்த கலை!

அதைப் பொடிப் பையன்கள் செய்வது அவ்வளவாக நல்லா இருக்காது!

இங்குள்ள பெரியவர்கள் சிலரின் கோபத்துக்கும் ஆளாக நேரிடும்!

அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்ள நினைக்கிறேன்!

மெளலி (மதுரையம்பதி) said...

//சரணாகதம் செய்த பின்,
ஒப்பு கொடுத்த பின்,
தாம் செய்த சரணாகதம்,
"முழுமனதுடன்", "ஆழ்ந்து" செய்தோமா என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை!

"நான் சரணாகதம் செய்கிறேன்" - என்பதையும் சேர்த்தே சரணாகதி செய்வது தான் சரணாகதி!//

இப்படி ஒரு சரணாகதி பண்ணிட்டு மற்றதெல்லாம் விட்டுடலாங்களா கே.ஆர்.எஸ்?

மெளலி (மதுரையம்பதி) said...

சரணாகத" வத்சல - இதெல்லாம் சரிதான்...ஆனா இதைச் சொன்னவர் சரணாகதி மட்டும் போதுமுன்னு சொல்லலை.

இதைச் சொன்னவுடன் எதற்காக ஒரு வெற்றிச் சிரிப்பு, இதுவும் சரணாகதியின் ஒர் அங்கமோ?. :)

மெளலி (மதுரையம்பதி) said...

//வார்த்தைக்கு வார்த்தை மெளலி அண்ணான்னு கூப்புடுறேனே, உங்களை நான் தவறா நினைப்பேனா மெளலி அண்ணா?//

ஆஹா, இந்த டயலாக் என்னிடம் இன்றூ இரண்டாம் முறையாகச் சொல்லப்படுகிறது...:)

ஒரு க்ரூப்பாத்தான் கிளம்பிட்டாங்கய்யா !!

நன்றிங்கோ!

மெளலி (மதுரையம்பதி) said...

//அடியேனுக்கும் அதே கேள்விதான் மனதில் உள்ளது. நித்ய கர்மானுஷ்டானங்களில் கவனம் செலுத்தி, பெருமாள் மீது பக்தியுடன் இருத்தலும் ஒரு விதத்தில் சரணாகதி என்றே நினைக்கிறேன்.//

அதே!, அதே! கெட்டியா பிடுச்சுகப்பா ராகவ்!!![அண்ணா-அண்ணான்னு கூப்பிட்டதன் விளைவு, ஒருமைக்கு மற்றிடுச்சு:)]

வெறுமனே எப்போதும்/ சரணாகதி என்பது ராமானுஜரால்லும், ஆதிசங்கராலும் கூட முடியாது..எப்போதும் சரணாகதி, எல்லா நேரத்திலும் பராம்பிகை/நாராயண தியானம் என்ற நிலையினை அடையக்கூடிய வழிகள் தான் கர்மானுஷ்டாங்கள்.

இவற்றுக்கெல்லாம் மேலே அன்பு, என்பது மனதில் எப்போதும் இருக்க வேண்டும். ராகத்வேஷம் இருக்க கூடாது....இல்லேன்னா படிக்கறது ராமாயணம், இடிக்கறது பிள்ளயார் கோவிலுன்னு ஆகிடும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சரணாகத" வத்சல - இதெல்லாம் சரிதான்...//

மெளலி மனே-ன்னு உங்க பேரு!
"சரணாகத" வத்சல சார-ன்னு வேற வந்திச்சி!
அதான் மெளலியோடு கோர்த்து விட்டேன்!

அதான் சிரிப்பு!
வெற்றிச் சிரிப்பு இல்ல! கள்ளச் சிரிப்பு! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆனா இதைச் சொன்னவர் சரணாகதி மட்டும் போதுமுன்னு சொல்லலை//

//இப்படி ஒரு சரணாகதி பண்ணிட்டு மற்றதெல்லாம் விட்டுடலாங்களா கே.ஆர்.எஸ்?//

சரணாகதி-ன்னா என்ன-ன்னு தெரிஞ்சா இந்தக் கேள்விகள் எழாது!
சரணாகதிப் பதிவுகளை மீள் வாசியுங்களேன்!

//வெறுமனே எப்போதும்/ சரணாகதி என்பது ராமானுஜரால்லும், ஆதிசங்கராலும் கூட முடியாது..//

ஹிஹி! சரணாகதி ஒரு முறை தான்! அடிக்கடி பண்ணறதுக்கு பேரு சரணாகதி இல்ல!

//அடையக்கூடிய வழிகள் தான் கர்மானுஷ்டாங்கள்//

கர்மானுஷ்டாங்களை யாரும் விடச் சொல்லலையே!
கர்மானுஷ்டாங்கள் மேல் இருக்கும் பற்றுதலைத் தான் விடச் சொன்னது!

கப்பல்-ல ஏறக்கூடாது-ன்னு சொல்லலை! கப்பல்-ல ஏறித் தான் ஆகணும்!
ஆனா கப்பல்-தான் வீடு! அது தான் கடைசி வரைக்கும் என்ற எண்ணத்தைத் தான் விடச் சொன்னது!

//இல்லேன்னா படிக்கறது ராமாயணம், இடிக்கறது பிள்ளயார் கோவிலுன்னு ஆகிடும்//

இராமாயணத்தைப் படிச்சிட்டு பாவம் எதுக்கு பிள்ளையார் கோயிலை இடிக்கணும்? இராமர் கோயிலையே இடிக்கலாம்! :)))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இவற்றுக்கெல்லாம் மேலே அன்பு, என்பது மனதில் எப்போதும் இருக்க வேண்டும்//

எக்ஜாக்ட்லி!
அன்பு சதா சர்வ காலமும் மனதில் ஊற கர்மானுஷ்டானங்கள் உதவாது!
சரணாகதி உதவும்!

மற்றதெல்லாம் விட்டுடலாங்களா, மற்றதெல்லாம் விட்டுடலாங்களா, என்று கேட்கும் இடத்தில்...அந்த மற்றதில் பற்று ஒட்டிக்கிட்டு இருக்கு!

//ஏறினால் ***தான்*** தொட முடியும்,
**என்** போன்றோருக்கு ஸ்டூல் **வேணும்**//

இந்த "என்", "வேணும்" என்ற பிடிப்புகளை உதறி விட்டுக் கர்மானுஷ்டானங்கள் செய்தால்...சரணாகதம் தானே விளங்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

முன்பு ஏதோ ஒரு பதிவில், ஒருவர் சொன்ன பின்னூட்டக் கருத்தையும் "வெறும் பார்வைக்காக" இங்கே பதிக்கிறேன்!

ஜடாயு said...
வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு அற்புதமான பதிவு கண்ணபிரான். அருமை!

"ஓ சந்தியாவந்தனமே, உனக்கு வந்தனம், போய் வா" என்று தொடங்கும் சுலோகம் ஒன்று கிருஷ்ணகர்ணாமிருதம் என்ற பக்திநூலில் உண்டு, அது நினைவுக்கு வருகிறது! உண்மையான பக்திக்கு முன்னால் எல்லா சடங்குகளும் மதிப்பிழக்கின்றன.

இதைத் தான் "லோக வேத வ்யாபார ந்யாஸ:" என்று நாரத பக்தி சூத்திரம் கூறுகிறது. உலகியல் கடன்கள், வேதக் கடன்கள் இரண்டையும் துறப்பதே உண்மையான பக்தியின் இலக்கணம். நித்ய கர்மாவின் மேல் உள்ள அப்செஷனும் ஒரு விதமான தடைக்கல், இதைத் தான் "வேத லஜ்ஜா" என்று சைதன்ய மகாப்ரபு குறிப்பிடுகிறார்.

நீங்கள் சொன்ன அரங்கன் அடியார் சரிதம் இந்தக் கருத்துக்களை அழகாக விளக்குகிறது!

அன்பு கலந்த பக்தி என்பது தனக்குத் தானே சாட்சியே அன்றி (ஸ்வயம் ப்ரமாணாத்), அதற்கு வேறு எந்த வெளிச் சாட்சிகளும் தேவையில்லை.
- நாரத பக்தி சூத்திரம்

மெளலி (மதுரையம்பதி) said...

//கர்மானுஷ்டாங்களை யாரும் விடச் சொல்லலையே!
கர்மானுஷ்டாங்கள் மேல் இருக்கும் பற்றுதலைத் தான் விடச் சொன்னது!//

இது!, இது ஏற்கக்கூடியது...

//அன்பு சதா சர்வ காலமும் மனதில் ஊற கர்மானுஷ்டானங்கள் உதவாது!
சரணாகதி உதவும்! //

ஏற்க முடியாது. கர்மானுஷ்டானங்களையும் முறையா செய்தால் அன்பு மயமாகலாம்.

சரணாகதியால் அன்பு வருமா, பணிவு வருமா?.

அதிலும் ஒருமுறை சரணாகதி பண்ணினா போதும் என்றால். அந்த சரணாகதி எத்துணை ஸ்டிராங்காக இருக்கணும்...இதெல்லாம் என்னை போன்ற மண்ணவர்க்கு ஆகாது...அதனால்தான் கர்மானுஷ்டானங்கள், அவை நமக்கு சரணாகதியை நினைவுறுத்திக் கொண்டே இருப்பவை.

மெளலி (மதுரையம்பதி) said...

//அன்பு கலந்த பக்தி என்பது தனக்குத் தானே சாட்சியே அன்றி (ஸ்வயம் ப்ரமாணாத்), அதற்கு வேறு எந்த வெளிச் சாட்சிகளும் தேவையில்லை.//

அருமையான கருத்துக்களை தந்திருக்கிறர்ர் ஜடாயூ.

ஆனால் நாரத பக்தி சூத்திரம் நிறைய கர்மானுஷ்டானங்களை வேண்டாம் என்றோ தூக்கி எறி என்றோ சொன்னதாக தெரியவில்லை.

கிருஷ்ண கர்ணாமிருதம் சொல்லும் உண்மையான பக்திக்கு என்ன இலக்கணம்?, யார் எடுத்துக்காட்டு?...கொஞ்சம் அதிக தகவல் அறிய தாருங்களேன்?.

ambi said...

//மேலும் படித்துப் படித்து,
சொந்தக் கருத்துகளையும், தன் கட்சியையும் நிலைநாட்ட மட்டுமே
தேடித் தேடிப் படித்து...
கண்டதே காட்சி, கொண்டதே கோலம்!//

மனசுகுள்ள ஆயிரம் இருக்கு பெரியப்பா!னு மட்டும் சொல்லிகறேன். :)))

//பெருமாள் கோவில்களில் ஒவ்வொருகால பூஜையின் முடிவிலும் பட்டர்கள் தங்கள் தலையை பெருமாள் காலடியில் வைத்து சரணாகதி பண்றாங்க...//

நல்ல கேள்வி. :))

ambi said...

//மதுரையம்பதி பலப்பல குறிப்பால் எழுதிக் கொடுக்க, வாழைப்பந்தல் குலை தள்ளியது! //

@KRS, நான் நுரை தள்ளியது!னு வாசித்தேன். :))

ambi said...

//உலகியல் கடன்கள், வேதக் கடன்கள் இரண்டையும் துறப்பதே உண்மையான பக்தியின் இலக்கணம். //

@krs, முழுதும் ஏற்பதற்கில்லை. பக்திக்கு பல வழிகள். வேதோபசனை, நாதோபசனை என பலது இருக்கு. உனக்கு எது உகந்தததோ அதை சிக்கென பிடித்து கொள்! என்று தான் கீதையில்
"கர்தவ்யம் தெய்வ மாம்சிகம்!"
கண்ணன்(பிரான் இல்லை) சொல்லி இருக்கிறார்.

தன்னலமில்லா பக்தியால் கண்ணப்பர் > நாயனார் ஆனார். அதுக்காக சிவனுக்கு இனி பூஜையே செய்ய வேண்டாம்! என சொல்வது எவ்விதம் பொருந்தும்?

சரி, புரியற மாதிரியே சொல்றேன், பகவானுக்கு படைப்பதை நாம் முதலில் ருசிக்க/அழகு பாக்க கூடாது. ஆனா சூடி கொடுத்த சுடர் கொடி வந்தாள். அதுக்காக எல்லாரும் மாலையை போட்டு அழகு பாத்து பெருமாளுக்கு அணிவிக்க முடியுமோ? :p

யானைக்கு அர்ரம்ன்னா குதிரைக்கு குர்ரம்னு எடுத்துக்க முடியாதே! :))

மெளலி (மதுரையம்பதி) said...

//மனம் என்னும் தோணி பற்றி, "மதி" என்னும் கோலை ஊன்றி,
சினம் என்னும் சரக்கை ஏற்றி, செறி கடல் ஓடும் போது,
மனன் என்னும் பாறை தாக்கி, மரியும் போது அறிய ஒண்ணாது,//

மனதை தன்வயப்படுத்தலும், மதி நிறைந்த இறையும் நிலைக்கத்தான் கர்மானுஷ்டானங்கள். இவை கைவரப் பெற்றால் முழுதான சரணாகதியில்லை என்றாலும் மண்ணவர் விண்ணவராகலாம், பரப்பிரம்மத்தில் கலக்கலாம் என்பதே எனது எண்ணம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அன்பு சதா சர்வ காலமும் மனதில் ஊற கர்மானுஷ்டானங்கள் உதவாது!
சரணாகதி உதவும்! //

ஏற்க முடியாது. கர்மானுஷ்டானங்களையும் முறையா செய்தால் அன்பு மயமாகலாம்.//

நீங்கள் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை! :)

முறை/முறையின்மைக்கு அப்பாற்பட்டது அன்பு!
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

முறையாச் செய்தால் அன்பு மயம் ஆகலாம்?
சரி, அப்போ முறையில்லாமல் செய்தால்?

கர்மானுஷ்டானங்களால் ஒழுங்கு விளையுமே அன்றி அன்பு விளையாது!
கர்மங்களை அனுஷ்டிக்கும் போது, அதோடவே கர்மத்தில் தானே பற்றுதல் ஏற்படும்! அதை விழிப்பாக இருந்து நீக்க வேண்டும்!
அதான் நிஷ்காம்ய-கர்மம் என்றும் சர்வ தர்மான் பரித்யஜ்ய என்றும் சொன்னார்கள்!

கர்மானுஷ்டானம் தவறாதவர் தான் லோகசாரங்கர். ஆனால் திருப்பாணரைக் கல்லால் அடிக்க வில்லையா? கர்மானுஷ்டானம் என்ன அன்பைக் கொடுத்தது?

கர்மானுஷ்டானம் தவறாதவர்கள் பல ரிஷிகள்! கர்மானுஷ்டானம் தவறாதவர் துர்வாசர்! ஆனால்???

நஹி நஹி ரக்ஷதி டுக்ருன்-கரணே!:)
ஒழுங்கு படுத்த வந்த ஒன்றினால் ஒழுங்கு விளையும்! அன்பு விளையாது!

கர்மமே சிவம் அல்ல!
அன்பே சிவம்!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ambi said...
மனசுகுள்ள ஆயிரம் இருக்கு பெரியப்பா!னு மட்டும் சொல்லிகறேன். :)))//

ஹா ஹா ஹா!
மனசுகுள்ள ஐநூறு இருக்கு சித்தப்பா!னு மட்டும் நானும் சொல்லிக்கறேன் :)

//பெருமாள் கோவில்களில் ஒவ்வொருகால பூஜையின் முடிவிலும் பட்டர்கள் தங்கள் தலையை பெருமாள் காலடியில் வைத்து சரணாகதி பண்றாங்க...//

நல்ல கேள்வி. :))//

அது கேள்வியே அல்ல! அது சரணாகதியே அல்ல! :)
காலில் விழுந்தா அதுக்குப் பேரு சரணாகதியா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ambi said...
//மதுரையம்பதி பலப்பல குறிப்பால் எழுதிக் கொடுக்க, வாழைப்பந்தல் குலை தள்ளியது! //

@KRS, நான் நுரை தள்ளியது!னு வாசித்தேன். :))//

ஹிஹி!
அது வாசிப்பின் குற்றம்! :)
தமிழ்க் கடவுளைத் தப்பு தப்பா வாசிப்பது போல்! :))
நல்லா ஸ்ட்ராங் காபி கூட நுரை துள்ளும் அம்பி துரையே!

மேற்கண்ட வரிகளின் பொருள்:
மெளலி அண்ணாவின் பதிவிடா விரதம்,ஆதனால் அவர் குறிப்பால் உணர்த்த, குலை தள்ளியது!

அதாச்சும் அவர் பதிவிடா விரதத்தால், சூரியன் மெளலியிடம் ஒளி வாங்கி, சந்திரன் அடியேன் ஒளி தர வேண்டிய கட்டாயம்! :)

மெளலி (மதுரையம்பதி) said...

//முறையாச் செய்தால் அன்பு மயம் ஆகலாம்?
சரி, அப்போ முறையில்லாமல் செய்தால்?//

இதைத்தான் பார்க்கிறோமே வலையுலகில்!!!

//கர்மானுஷ்டானங்களால் ஒழுங்கு விளையுமே அன்றி அன்பு விளையாது!
கர்மங்களை அனுஷ்டிக்கும் போது, அதோடவே கர்மத்தில் தானே பற்றுதல் ஏற்படும்! அதை விழிப்பாக இருந்து நீக்க வேண்டும்!
அதான் நிஷ்காம்ய-கர்மம் என்றும் சர்வ தர்மான் பரித்யஜ்ய என்றும் சொன்னார்கள்!//

இது சரி. ஆக, கர்மத்தை விட்டுவிடு அப்படின்னு சொல்லவில்லை. அக்கர்மத்தில் இருக்கும் பற்றை மட்டுமே நீக்கச் சொல்லியிருக்கிறது.

//கர்மானுஷ்டானம் தவறாதவர் தான் லோகசாரங்கர். ஆனால் திருப்பாணரைக் கல்லால் அடிக்க வில்லையா? கர்மானுஷ்டானம் என்ன அன்பைக் கொடுத்தது?//

எனக்கு இவரை எல்லாம் தெரியாது. :(

//கர்மானுஷ்டானம் தவறாதவர்கள் பல ரிஷிகள்! கர்மானுஷ்டானம் தவறாதவர் துர்வாசர்! ஆனால்???//

ஏன் துர்வாசருக்கு என்ன ஆயிற்று?, அவரது கோபம்?...புரியல்ல...

//ஒழுங்கு படுத்த வந்த ஒன்றினால் ஒழுங்கு விளையும்! அன்பு விளையாது!//

கர்மாவை முழு மனதுடன், சிரத்தையாகச் செய்தால், அக்கர்மாவே அன்பை, பிரம்மத்தை அடைய வழிவகுக்கும்.

//தமிழ்க் கடவுளைத் தப்பு தப்பா வாசிப்பது போல்! :))//

இதுக்கு நான் ஒரு சிரிப்பானை மட்டும் போட்டுட்டு எஸ்கேப். :-)

//அதாச்சும் அவர் பதிவிடா விரதத்தால், சூரியன் மெளலியிடம் ஒளி வாங்கி, சந்திரன் அடியேன் ஒளி தர வேண்டிய கட்டாயம்! :)//


ஹலோ, பதிவிடா விரதமா?, அப்படின்னா? :-)

பின்னூட்டமிடா விரதம் இருக்கலாமுன்னா கூட நீங்கதான் விடல்லையே? :-)

(செளந்தர்ய லஹரி 2 பதிவு வந்தாச்சு, நீங்க தான் பார்க்கல்லை :-))

என்ன சொல்லவறீங்க?, நீங்க குளிர்நிலவுன்னா? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ambi said...
//உலகியல் கடன்கள், வேதக் கடன்கள் இரண்டையும் துறப்பதே உண்மையான பக்தியின் இலக்கணம். //

@krs, முழுதும் ஏற்பதற்கில்லை
//

அதைச் சொன்னது ஜடாயு சார்!
அவரிடம் போய் சொல்லிக் கொள்ளுங்கள்!

//கர்தவ்யம் தெய்வ மாம்சிகம்!"
கண்ணன்(பிரான் இல்லை) சொல்லி இருக்கிறார்//

இது என்ன கீதைப்பா? :)

//தன்னலமில்லா பக்தியால் கண்ணப்பர் > நாயனார் ஆனார். அதுக்காக சிவனுக்கு இனி பூஜையே செய்ய வேண்டாம்! என சொல்வது எவ்விதம் பொருந்தும்?//

யாரும் அப்படிச் சொல்லவில்லையே! அப்படிச் சொல்வது போல் ஒரு சீனை அல்லவா உருவாக்குகிறீர்கள்? :)

சரணாகதி செய்த பின் கர்மானுஷ்டானங்களை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு, சிக்கன் சாப்பிடுப்பா ராசா-ன்னு எங்கே சொல்லி இருக்கேன்-னு காட்டுங்களேன் பார்ப்போம்! :)

As a matter of fact, கர்மானுஷ்டானம் பற்றிப் பதிவில் பேசவே இல்லை!

அங்கு இராமகிருஷ்ணர் சொன்னது, அம்பாளின் காளி பக்தியில் களித்திருந்தேன்! அவ்வளவு தான்!

ஆனால் அதைக் கர்மானுஷ்டத்துக்கு எதிரான ஒன்று போல் உங்கள் மனம் எடுத்துக் கொண்டது! ஹிஹி! அதான் கர்மானுஷ்டான பந்தம்! :))

கர்மானுஷ்டானங்களை விடவே கூடாது என்று கர்ம அனுஷ்டான பந்தத்தில் தொடங்கினால் அதைச் சுற்றிச் சுற்றித் தான் வர முடியும்!
அதைப் பாதுகாக்க வேண்டுமே என்ற ஒரே குறிக்கோளில் இப்படி ஆயிரம் பேசிக் கொண்டே இருக்கலாம்!

**என்** போன்றோருக்கு கர்மா **வேணும்**,
அது இல்லை என்றால் "என்னால்" முடியாது!
=இப்படி "என்", "வேணும்" என்ற பிடிப்புகளை உதறி விட்டுக் கர்மானுஷ்டானங்கள் செய்தால்...
இந்தப் பிரச்சனையே எழாது!

ஆனால் நாம் தான் கர்மாக்களைப் பிடித்துக் கொண்டு கர்மாக்களின் தாத்பர்யத்தை மறந்து விடுவோமே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதி நிறைந்த இறையும் நிலைக்கத்தான் கர்மானுஷ்டானங்கள்//

எக்ஜாக்ட்லி! மதி தேவைப்படுகிறது!
இறை தத்துவத்தை மதி பூர்வமாகச் சொன்னால் தான் மனம் ஏற்றுக் கொள்ள நினைக்கிறது! தத்துவ மாயையில் ஜோடனை செய்தால் தான் மனசுக்குப் பிடிச்சிருக்கு! :))

நாமே முயன்று நம் அறிவினால் தேடி அறிந்தோம் = இந்த அகங்காரத்துக்கும், ஞானச் செருக்குக்கும், தீனி போட வேண்டுமானால் பல தத்துவங்கள் உதவலாம்! ஆனால் அவற்றால் காலத்துக்கும் பசியை ஆற்ற முடியாது! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இவை கைவரப் பெற்றால் முழுதான சரணாகதியில்லை என்றாலும்//

சரணாகதியில் முழுதான சரணாகதி, முழுமை இல்லாத சரணாகதி-ன்னு எல்லாம் ஒன்னும் இல்லை!

கஷ்டமோ நஷ்டமோ எது வந்தாலும் இறைவனின் திருவடிகளை ஒப்புக்காவது ஒரு நிமிடம் நினைத்துக் கொள்கிறேன்! சதா பற்றிக் கொள்ளத் தேவையில்லை!

அவன் எனக்கு அனுகூலம் செய்கிறானோ இல்லையோ...
அதெல்லாம் யோசிக்காமல், அவன் திரு உள்ள உகப்பிற்கு மட்டும் இருந்து விட்டு, போய்க் கொண்டே இருப்பேன் = இந்தப் பர்த்தா-பத்தினி போக்யம் என்பது தான் எளிமையான சரணாகதி!

சொல்லப் போனால் சரணாகதியே ஒரு திருமண பந்தம் தான்! :)

கர்மானுஷ்டானங்கள் திருமணத்துக்கு அழகு சேர்க்கலாம்!
ஆனால் கர்மானுஷ்டானங்களே திருமணம் அல்ல! :)

மெளலி (மதுரையம்பதி) said...

//**என்** போன்றோருக்கு கர்மா **வேணும்**,
அது இல்லை என்றால் "என்னால்" முடியாது!
=இப்படி "என்", "வேணும்" என்ற பிடிப்புகளை உதறி விட்டுக் கர்மானுஷ்டானங்கள் செய்தால்...
இந்தப் பிரச்சனையே எழாது!//

பிடிப்பினை உதறுதல் என்பது எளிதாக இருப்பின் இதெல்லாம் சரி, அப்படி இருந்தவர்கள் தான் ராமகிருஷ்ணராக, ரமணமகரிஷியாக ஆனார்கள். சாதாரணர்கள் பிரச்சனைதான்... :)

//கர்மானுஷ்டானங்களை விடவே கூடாது என்று கர்ம அனுஷ்டான பந்தத்தில் தொடங்கினால் அதைச் சுற்றிச் சுற்றித் தான் வர முடியும்!
அதைப் பாதுகாக்க வேண்டுமே என்ற ஒரே குறிக்கோளில் இப்படி ஆயிரம் பேசிக் கொண்டே இருக்கலாம்!//

யாரும் எதையும் பாதுகாக்கவும் வேண்டாம் அந்த பாதுகாக்கும் நினைப்பும் வேண்டாம். அவரவர்க்கு எது எளிதில் அடையக்கூடியதோ அதையே பின்பற்றிக் கொள்ளலாம்.

மற்றபடி, நான் எனது மூன்றாம் பின்னூட்டத்தில் சொல்லிபடி (சும்மாயிரு!!!..எதிலும் தலை நுழைக்காது, வேடிக்கை பார். வியப்பானாலும் சரி, துவர்ப்பானாலும் சரி...கசப்பானாலும் சரி...வெளிக்காட்டாதிருக்க பழகு...),

சும்மாயிருத்தலே ஸ்வர்க்கத்துக்கு வழி :-)

யப்பா! மூச்சு வாங்குது... :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//எக்ஜாக்ட்லி! மதி தேவைப்படுகிறது!
இறை தத்துவத்தை மதி பூர்வமாகச் சொன்னால் தான் மனம் ஏற்றுக் கொள்ள நினைக்கிறது! தத்துவ மாயையில் ஜோடனை செய்தால் தான் மனசுக்குப் பிடிச்சிருக்கு! :))//

தத்துவமெல்லாம் மாயை என்கிறீரோ?. :-)

//நாமே முயன்று நம் அறிவினால் தேடி அறிந்தோம் = இந்த அகங்காரத்துக்கும், ஞானச் செருக்குக்கும், தீனி போட வேண்டுமானால் பல தத்துவங்கள் உதவலாம்! ஆனால் அவற்றால் காலத்துக்கும் பசியை ஆற்ற முடியாது!//

நாமே முயன்று அறிதலில் எங்கிருந்து வருகிறது அகங்காரமும், ஞானச் செருக்கும்?. நாமே முயன்று அறிதல் நடக்குமானால் மனம், வாக்கு, பசி எல்லாம் அடங்கி சுத்த-சத்வம் அல்லவா வெளிப்படும்.

நமக்கிருப்பதெல்லாம், நமக்கு எது தெரியும்/தெரியாது என்பதையும் அறியாது, அடுத்தவர்கள் கூறியதையும் ஏற்காது, அறிய முயற்சியும் செய்யாது..மனம் போன போக்கிலே போவது தானே?.

மெளலி (மதுரையம்பதி) said...

//கஷ்டமோ நஷ்டமோ எது வந்தாலும் இறைவனின் திருவடிகளை ஒப்புக்காவது ஒரு நிமிடம் நினைத்துக் கொள்கிறேன்! சதா பற்றிக் கொள்ளத் தேவையில்லை!//

இந்த ஒப்புக்கு நினைப்பது என்னால் ஏற்க முடியாதது....உலகில் ஒப்புக்கு சில செயல்களை செய்வது போல இறைவனிடமும் இருத்தல் என்பது இறையனுபவத்தை நோக்கி நம்மை இட்டுச் செல்லாது என்பதே என் தீர்மானம்.

செய்வதெல்லாம் தவறாக செய்துவிட்டு ஒரு நிமிடம் ஒப்புக்கு சரணாகதி பண்ணிட்டா போதும் போல. :-)

கர்மானுஷ்டானங்கள் அலங்காரமல்ல, அது வாழ்க்கை முறை, அது வழிகாட்டி. காட்டும் வழியில் தடங்கல்கள் வரலாம், அதை தவிர்த்துச் செல்ல வேண்டுமே தவிர, வழிகாட்டவே வேண்டாம் என்றால் 'சுத்தி-சுத்தி வந்தீக' தான் :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாமே முயன்று அறிதல் நடக்குமானால் மனம், வாக்கு, பசி எல்லாம் அடங்கி சுத்த-சத்வம் அல்லவா வெளிப்படும்//

அறிதல் நடந்தால் சுத்த-சத்வம் வெளிப்படும்!
"எனக்கு" வேணும்! "நான்" அறிந்தேன்-ன்னு நடந்தால் என்ன வெளிப்படும்? :))

ambi said...

//முன்பு ஏதோ ஒரு பதிவில், ஒருவர் சொன்ன பின்னூட்டக் கருத்தையும் "வெறும் பார்வைக்காக" இங்கே பதிக்கிறேன்!

ஜடாயு said...
//

அவரின் கருத்தை(?) இங்கு காப்பி பேஸ்ட் பண்ணிய கண்மணியிடம் தானே இதை கேக்க முடியும்..? :p

//தேர்வு எழுதும் போது, பேப்பரை எப்படித் திருத்தப் போகிறார்களோ என்று யாரும் நினைப்பதில்லை!
அறிந்ததை எழுதுகிறார்கள், நியாயமான முறையில்! எழுதிக் கொண்டு இருப்போம்! //

அதே தான். தேர்வை ஆங்கிலத்திலும் எழுதலாம், தமிழிலும் எழுதலாம், ஹிந்தியிலும் எழுதலாம். ஆங்கிலத்துல எழுதினா தான் மார்க் கிடைக்கும்னு சொல்ல முடியாது. (உடனே ___ தேர்வை, ஆங்கிலத்துல தானே எழுதனும்!னு நொண்டி நொங்கெடுக்க வேணாம்) இது ஒரு வகை புனைவு. :))

கர்மா ஒழுங்கை தரும்,
ஒழுக்கம் நல்ல நெறியை தரும். (நல்ல நெறி என்பது பக்தியையும் சேர்த்து தான்.)

கொத்தாயித்தா? :p


//கர்மானுஷ்டானங்களை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு, சிக்கன் சாப்பிடுப்பா ராசா-ன்னு எங்கே சொல்லி இருக்கேன்-னு //

Kannabiran, Ravi Shankar (KRS) said...

50

அப்பாடா!
பஜே மெளலீசம்!
பஜே மெளலீசம்!

விரதம் இருந்த பதிவரும் பேசி விட்டார்!
விளக்கங்கள் பலவும் தந்து விட்டார்!

அடியேனுக்கு பல அனுஷ்டான ரகசியங்களைச் சொல்வதற்காகவே நம் மெளலி அண்ணா, மனம் இரங்கி விட்டார்!

குணானுபவம்!
குணானுபவம்!!

பஜே மெளலீசம்!
பஜே மெளலீசம்!

:))))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அறிந்தும் அறியாமலும் உதவிய அம்பியே வாழ்க வாழ்க! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கர்மா ஒழுங்கை தரும்,
ஒழுக்கம் நல்ல நெறியை தரும். (நல்ல நெறி என்பது பக்தியையும் சேர்த்து தான்.)//

ஒரு வகை புனைவா?
சரி! சரி!
நல்ல புனைவு அம்பி! :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//(செளந்தர்ய லஹரி 2 பதிவு வந்தாச்சு, நீங்க தான் பார்க்கல்லை :-))//

கர்மானுஷ்டம் பண்ணிக்கிட்டு இருந்தேன்!
கர்மானுஷ்டம் முடிச்சிட்டு வாரேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நமக்கிருப்பதெல்லாம், நமக்கு எது தெரியும்/தெரியாது என்பதையும் அறியாது, அடுத்தவர்கள் கூறியதையும் ஏற்காது, அறிய முயற்சியும் செய்யாது..மனம் போன போக்கிலே போவது தானே?//

நமக்கிருப்பதெல்லாம், நமக்கு எது தெரியும்/தெரியாது என்பதையும் அறியாது, அடுத்தவர்கள் கூறியதையும் ஏற்காது, அறிய முயற்சியும் செய்யாது, "வெறுமனே கர்மானுஷ்டம், கர்மானுஷ்டம்"ன்னு மனம் போன போக்கிலே போவது தானே?
:))))

மெளலி (மதுரையம்பதி) said...

//எனக்கு" வேணும்! "நான்" அறிந்தேன்-ன்னு நடந்தால் என்ன வெளிப்படும்? //

அதான் சொன்னேனே இங்கே நம்முள் (உங்களையும் சேர்த்துக் கொண்டேன்:))நடப்பது அதன் வெளிப்பாடுதான்.. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கர்மாவை முழு மனதுடன், சிரத்தையாகச் செய்தால், அக்கர்மாவே அன்பை, பிரம்மத்தை அடைய வழிவகுக்கும்//

கர்மாவைச் செய்வதே முழு மனது, மற்றும் சிரத்தை அடைவதற்குத் தான் என்று சொல்கிறீர்கள்!

அப்புறம் எப்படி கர்மாவை முழு மனதுடன், சிரத்தையாகச் செய்ய முடியும்?
அதை அடையத் தானே கர்மா செய்கிறீர்கள்?

ambi said...

//புத்தகச் சுரைக்காய்களைக் கரைத்துக் குடித்து விட்டு,
பலதும் படித்துப் படித்து,
எதைப் பிடிக்கப் படிக்கிறோம் என்றே தெரியாமல்,
மேலும் படித்துப் படித்து,
சொந்தக் கருத்துகளையும், தன் கட்சியையும் நிலைநாட்ட மட்டுமே
தேடித் தேடிப் படித்து...
கண்டதே காட்சி, கொண்டதே கோலம்! கண்டதே கருத்து, கொண்டதே பதிவு!
என்று இருக்கும் நாமும் //

பின்னூட்டங்களை படித்து விட்டு இந்த பாராவை மீள்வாசிப்பு செய்தேன். என்னால சிரிப்பை அடக்க முடியலை. :))


ஆமா, கடைசில போட்ருக்கற அந்த திருச்சிற்றம்பலம், என்ன தொட்டுக்க ஊறுகாயா? ;p

ambi said...
This comment has been removed by a blog administrator.
மெளலி (மதுரையம்பதி) said...

//அடியேனுக்கு பல அனுஷ்டான ரகசியங்களைச் சொல்வதற்காகவே நம் மெளலி அண்ணா, மனம் இரங்கி விட்டார்!

குணானுபவம்!//

நக்கல்?... :-)...இந்த நக்கலும் குணானுபவம் தானாண்ணா?... :)

இங்கே நான் ஏதும் அவ்வளவா சொல்லவில்லை..முன்பே நான் சொல்லியபடி சிறிது நாட்கள் கழித்து (தபஸ் போஸ்ட் வந்த பிறகு :-)) கர்மானுஷ்டானங்கள் ஒரு பார்வை அப்படின்னு 1-2 பதிவு போடறேன்...

மெளலி (மதுரையம்பதி) said...

////கர்மா ஒழுங்கை தரும்,
ஒழுக்கம் நல்ல நெறியை தரும். (நல்ல நெறி என்பது பக்தியையும் சேர்த்து தான்.)//

ஒரு வகை புனைவா?
சரி! சரி!
நல்ல புனைவு அம்பி! :)))//

புனைவுமில்லை பூனையுமில்லை. :-)

அம்பி சொன்னது சரிதான். அனுஷ்டானத்தால் கண்டதே காட்சி - கொண்டதே கோலம் என்பது மாறும் என்று சொல்லவருகிறார். :)) சரிதானே அம்பி? :-) (அம்பி, ஏதாச்சும் சேம் சைட் கோல் போட்டா வீட்டுக்கு ஆட்டோ இல்லை, கார் வரும் சொல்லிட்டேன்)

திவாண்ணா said...

//சும்மாயிரு!!!..எதிலும் தலை நுழைக்காது, வேடிக்கை பார். வியப்பானாலும் சரி, துவர்ப்பானாலும் சரி...கசப்பானாலும் சரி...வெளிக்காட்டாதிருக்க பழகு... //

அவ்ளோதான் மௌலி!
வேண்டிய விஷயத்தை சொல்லிட்டீங்க!
நம்மால் முடிந்த வரை கர்மா பக்தி இரண்டுமே செய்து கொண்டு போக வேண்டியதுதான். பயிர் எவ்வளொ வளர்ந்து இருக்குன்னு பாக்க வேண்டாம். இந்த முனைப்பு மட்டுமே போதும்.

எல்லாம் அவனால்/அவளால் நடை பெறுகிறது என்பதை உணர்ந்து வாழ்க்கையில் ஒவ்வொரு அடியிலும் அதை ஞாபகம் வைத்துக்கொண்டாலே போதும். அதுவே சரணாகதி. அதுக்காக நாம் நடைமுறையிலே செய்ய வேண்டிய காரியங்களை செய்ய வேண்டாம்னோ இல்லை ஸ்வதர்மத்தில விதிச்ச கர்மாக்களை செய்யக்கூடாதோன்னோ ஒண்ணுமே இல்லை.
செய்கிற கர்மாக்களை நாராயண / ப்ரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்ன்னுதானே ஆரம்பிக்கிறோம்? முடிவிலே நாராயணாயேதி சமர்ப்பயாமின்னுதானே முடிக்கிறோம்? இந்த ப்ரீதியே அன்பை கொடுத்திடும்.

பக்தி இல்லாத கர்ம "ட்ரை"யா போகும்.

கர்மாவிட்ட பக்தி முழு பயன்தராது. நாரத பக்தி சூத்திரத்துல அப்படிதான் சொல்லி இருக்கு. சரியான வரியை அப்புறம் தரேன்.

நடை முறைலே இரண்டுமே பின்னி பிணைந்துதான் போகுது.

ஏதோ என்னோட 2 காசு!

மெளலி (மதுரையம்பதி) said...

வாராது வந்த மாமணியே திவாண்ணா..
வந்தெங்கள் ஐயம் தீர்த்த ஆரமுதே!!!

:-)

//பக்தி இல்லாத கர்ம "ட்ரை"யா போகும்.

கர்மாவிட்ட பக்தி முழு பயன்தராது. நாரத பக்தி சூத்திரத்துல அப்படிதான் சொல்லி இருக்கு. சரியான வரியை அப்புறம் தரேன்.//

மேலே நீங்க சொன்னதைத்தான் நான் சொல்ல முயன்றேன்...ஆனா பாருங்க நீங்க ஒரு வரியில சொல்லிட்டீங்க..

வரியெல்லாம்/வட்டி/தரவெல்லாம் எனக்கு வேணுங்கறது இல்லை. சொன்னா கேட்டுக்கறேன்..:-)

//ஏதோ என்னோட 2 காசு!//

ஆஹா உங்க ரெண்டு காசே இப்படின்னா, 2, 20, 200, 2000... எல்லாம் எப்படியிருக்கும்?. :-)

அப்பப்போ வந்து இப்படி ஐயம் தீர்த்துச் செல்லுங்கள் ஐயான்னு வேண்டிக்கறேன் :-)

மெளலி (மதுரையம்பதி) said...

அம்பி,

உங்களது கடைசி பின்னூட்டம் டெலிட் பண்ணிட்டேன்....உங்க அனுமதி கேட்காமலே டெலிட் பண்ணினதுக்கு கோவிக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன் :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// (அம்பி, ஏதாச்சும் சேம் சைட் கோல் போட்டா வீட்டுக்கு ஆட்டோ இல்லை, கார் வரும் சொல்லிட்டேன்)//

அடடா!
இது நல்ல அனுஷ்டானமே இருக்கே! இப்ப புரியுது அனுஷ்டான பந்தம்-ன்னா என்னான்னு! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ambi said...
பின்னூட்டங்களை படித்து விட்டு இந்த பாராவை மீள்வாசிப்பு செய்தேன். என்னால சிரிப்பை அடக்க முடியலை. :))//

ஹிஹி
எல்லாம் கர்மானுஷ்டனம் அனுஷ்டான பலன் போல! :))

//ஆமா, கடைசில போட்ருக்கற அந்த திருச்சிற்றம்பலம், என்ன தொட்டுக்க ஊறுகாயா? ;p//

எதுக்குத் தொட்டுக்க கேக்கறீங்க அம்பி?
:)

Jokes apart
அது அப்பர் சுவாமிகள் தேவாரம்.
அதான் முடிக்கும் போது திருச்சிற்றம்பலம்!!!

அதை ஊறுகாய் ஆக்கிக் கொள்வது உங்கள் கர்மானுஷ்டானத்தைப் பொறுத்தது! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Before dwelling on Thiva sir's points...a vital clarification...

முன்பே சொன்னது போல்
As a matter of fact, கர்மானுஷ்டானம் பற்றிப் பதிவில் பேசவே இல்லை!

அங்கு இராமகிருஷ்ணர் சொன்னது, அம்பாளின் காளி பக்தியில் களித்திருந்தேன்! அவ்வளவு தான்!

ஆனால் அதைக் கர்மானுஷ்டத்துக்கு எதிரான ஒன்று போல் உங்கள் கர்மானுஷ்டான மனம் எடுத்துக் கொண்டது! ஹிஹி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Going back to what was in mouli anna's mind for the past 1 or 2 weeks...

//சரி, பக்தியால் வருவது பணிவு, சிரத்தையால் வருவது ஞானம் என்பார்கள். இன்று எனது பக்தியால் பணிவு வந்த-மாதிரி தெரியல்லையே?..//

ஏன்?
சரி பக்தியால் பணிவு தான் வரவில்லை!
சிரத்தையால் ஞானம் வந்ததா?
அந்த ஞானத்தைக் கொண்டு, பணிவை வரவழைத்துக் கொள்ளலாமே?

//பதிவில் வரும் ஞானி போல கர்வம் வருகிறது. மனதால் கர்வம் இல்லையென்றாலும் பிறருக்கு கர்வமுடையவனாக தோற்றம் ஏற்படுகிறது//

அது குறித்து கவலை ஏன்?
அதான் "சும்மா" இருந்து விட்டால், அது நம்மை அசைத்துப் பார்க்காதே! அப்புறம் ஏன் வீணாக அசைய வேண்டும்?

//இந்த கர்மானுஷ்டானங்களால் இன்றைய சமூகத்தில் ஒதுக்கப்படும் வாய்ப்பு அதிகம்..//

சுய பச்சாதபமோ, கழிவிரக்கமோ தேவை இல்லையே!

அவரவர்க்கு விதிக்கப்பட்ட கர்மானுஷ்டானங்களை அவரவர் செய்கிறோமா? நெஞ்சில் கை வைத்துச் சொல்ல முடியுமா?

அப்புறம் எதற்கு இவ்வளவு தேவை இல்லாத ஆதங்கம்? இதுவே என் கேள்வி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கேள்விகள், தரவுகள், பலகாலத்து தவறுகள், என் தெய்வம் தான் சிறந்தது, என் மொழிதான் உயர்ந்தது என்றெல்லாம் பேசிக் கொண்டே தானே இருக்கிறேன்?//

பதிவுலகில் நடப்பதை, அதுவும் ஆன்மீகப் பதிவுலகில் நடப்பதை சுட்டிக் காட்டி மனம் குமுறுகிறீர்கள்!

இந்தக் குமுறல் தேவை இல்லை என்பதே அடியேன் தாழ்மையான வேண்டுகோள்!

கடல் என்றால் அலைகள் இருக்கத் தான் செய்யும்!
சமுத்திர ஸ்நானம் என்பது ஒரு அனுஷ்டானம் தானே!

இவ்வளவு அனுஷ்டானம் பேசும் நீங்கள், அலைகள் பிடிக்கவில்லை! ஒரே ஆரவாரம் என்று சொல்லலாமா? சமுத்திர ஸ்நானம் என்ற அனுஷ்டானத்தைச் செய்து தானே ஆக வேண்டும்?

அதை மட்டுமே யோசிக்க வேண்டுகிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நான் எழுதும் பதிவுகளோ கேட்கவே வேண்டாம், எனது படிப்பறிவினை, எனது செயல் திறத்தைக் காட்டுபவையே!!. அதில் அனுபவம் என்பது மிகவும் சிறிய பங்கு, அல்லது முழுவது அனுபவமற்ற அலங்கார-மமகார சொற்களின் கோர்வை.//

லெளகீக வாழ்வில் நான்-எனது ஓக்கே!

ஆனால் இப்படி பக்தியிலும் அனுஷ்டானத்திலும் கூட "நான்" எழுதும் பதிவு, "எனது" அனுஷ்டானம், "என்னால்" பக்தி பண்ண முடியுமா...
என்று மறுபடியும் மறுபடியும் மமகாரத்தில் வளைய வருவது தான் மனம் ஒடிந்து போவதற்கும் மூல காரணம்!

இதில் இருந்து மீள அனுஷ்டானமோ, பக்தியோ, ஞானமோ, பிரப்பத்தியோ, ஏதோ ஒன்று உதவட்டும்! உதவினால் சரி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திவா said...
//சும்மாயிரு!!!..எதிலும் தலை நுழைக்காது, வேடிக்கை பார். வியப்பானாலும் சரி, துவர்ப்பானாலும் சரி...கசப்பானாலும் சரி...வெளிக்காட்டாதிருக்க பழகு... //

அவ்ளோதான் மௌலி!
வேண்டிய விஷயத்தை சொல்லிட்டீங்க!//

திவா சார்
உங்கள் அனுஷ்டானத்தின் மீது பெரிது மதிப்புள்ளவன் அடியேன்.
அப்பைய தீட்சிதர் பற்றி போட்ட பதிவில் அக்னி ஹோத்ரம் பற்றிச் சொல்லிச் சென்றிருப்பேன்! அப்போது உங்களைத் தான் குறிப்பிட்டுச் சொன்னேன் மெளலி அண்ணாவிடம்!

அந்த அபிமானத்தில் கேட்கிறேன்!
மெளலி அண்ணா தன்னால் பக்தியும் பண்ண முடியலை! அனுஷ்டான பலமும் இல்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

அதனால் "சும்மா" இருக்கப் போவதாகச் சொன்னார்.

அடியேன் கேள்வி என்னவென்றால்:
பக்தி, அனுஷ்டான பலம் இரண்டும் இல்லாமல், "சும்மா" மட்டும் எப்படி இருக்க முடியும்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

again at thiva sir
//நம்மால் முடிந்த வரை கர்மா பக்தி இரண்டுமே செய்து கொண்டு போக வேண்டியதுதான். பயிர் எவ்வளொ வளர்ந்து இருக்குன்னு பாக்க வேண்டாம். இந்த முனைப்பு மட்டுமே போதும்//

இதையே தான் அடியேனும் சொன்னேன்!

தேர்வு எழுதும் போது, பேப்பரை எப்படித் திருத்தப் போகிறார்களோ என்று யாரும் நினைப்பதில்லை!
அறிந்ததை எழுதுகிறார்கள், நியாயமான முறையில்! எழுதிக் கொண்டு இருப்போம்!

சரணாகதி பரிபூர்ணமானதா என்பதைப் பரிபூர்ணன் பார்த்துக் கொள்ளட்டும்!
நாம் "செய்து" கொண்டே இருப்போம்!
:))


ஆனால் அதெல்லாம் அவர் கண்களுக்குத் தெரியவில்லை! அதையே நீங்கள் வந்து சொல்லும் போது புளகாங்கிதப்படுகிறார்.

உம்...
என்ன செய்ய ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று மெளலி அண்ணாவும் வைக்கிறார்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

again at thiva sir
//எல்லாம் அவனால்/அவளால் நடை பெறுகிறது என்பதை உணர்ந்து வாழ்க்கையில் ஒவ்வொரு அடியிலும் அதை ஞாபகம் வைத்துக்கொண்டாலே போதும். அதுவே சரணாகதி//

அருமை!
ஒப்புக்கொடுப்பது என்று அடியேனும் இதைத் தான் சொன்னேன்!

//அதுக்காக நாம் நடைமுறையிலே செய்ய வேண்டிய காரியங்களை செய்ய வேண்டாம்னோ இல்லை ஸ்வதர்மத்தில விதிச்ச கர்மாக்களை செய்யக்கூடாதோன்னோ ஒண்ணுமே இல்லை//

எக்ஜாக்ட்லி!
அனுஷ்டானங்கள் செய்து கொண்டே, அதே சமயத்தில் அந்த அனுஷ்டானங்களும் எம்பெருமானுக்கே அர்ப்பணம் என்று சரணாகத நிலை தான் இன்பம்!

//செய்கிற கர்மாக்களை நாராயண / ப்ரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்ன்னுதானே ஆரம்பிக்கிறோம்? முடிவிலே நாராயணாயேதி சமர்ப்பயாமின்னுதானே முடிக்கிறோம்? இந்த ப்ரீதியே அன்பை கொடுத்திடும்//

அதையும் ப்ரீதியோடு செய்தால் தான் அன்பைக் கொடுக்கும்!
உணர்ந்து செய்யாது, மமகாரத்துக்காகவும்,,வெறுமனே அனுஷ்டான தர்மத்துக்காகவும் செய்தால் அன்பு வராது! அனுஷ்டானப் பற்றுதலே மிஞ்சும்!
இதையும் குறிப்பிட்டு இருந்தேன்!

ஆனால் அவரவர்கள் எதைப் படிக்க நினைத்தார்களோ, அதை மட்டுமே படித்துக் கொண்டார்கள்! :)

//ஏதோ என்னோட 2 காசு!//

உங்கள் 2 காசுகளையும் எம்பெருமானின் ஸ்ரீ வாரி உண்டியலிலேயே சமர்ப்பிக்கிறேன் :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கர்மாவைச் செய்வதே முழு மனது, மற்றும் சிரத்தை அடைவதற்குத் தான் என்று சொல்கிறீர்கள்!

அப்புறம் எப்படி கர்மாவை முழு மனதுடன், சிரத்தையாகச் செய்ய முடியும்?
அதை அடையத் தானே கர்மா செய்கிறீர்கள்?//

இதற்கு இன்னும் பதில் சொல்லவில்லையே! யாராவது பதில் தாருங்களேன்!
அம்பி தந்தாலும் ஓக்கே தான்! :)

அம்பியின் பின்னூட்டத்தை அழிக்க வேண்டிய அவசியம் என்ன அண்ணா? அவர் கருத்தைத் தாராளமாக உரைக்கலாமே!

உங்களுக்கோ, அம்பிக்கோ ஆட்சேபம் இல்லை என்றால், அடியேனுக்கு அவர் கருத்தை மீண்டும் தெரிவியுங்கள்! இங்கு வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால், தனி மடலிலும் ஓக்கே தான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சரணாகதி பற்றிய பதிவில் இருந்து ஒரு பின்னூட்டத்தை மீள் பதிக்கிறேன்!

கர்மானுஷ்டானம் தேவையே இல்லை என்று சொன்னேனா என்பதும் தெரிந்து விடும்! :)


மற்றவர்கள் பதிவுலகில் வீண் ஜல்லி அடிக்கிறார்கள் என்ற வருத்தம் போய், தாங்கள் அடிக்கும் சொந்த ஜல்லியும் நின்று விடும்! புரிதல் மேம்படும்! :)
***************************

@பாலாஜி

அதற்காக ஞான, கர்ம யோகங்கள் எல்லாம் வீண் என்று பொருள் அல்ல!
ஞான யோகம், பக்தி யோகம் எல்லாம் சத்து மிக்க பானங்கள்! அவை நுரை தள்ளும்!

அவற்றோடு சரணாகதி என்ற பரிசுத்தமான தீர்த்தம் (நீர்) சேரும் போது தான், ஆன்று அவிந்து அடங்கி, பிம்பம் தெளிவாகின்றது!

ஞான யோகத்தில் = தான் உண்டு!
கர்ம யோகத்தில் = தான் உண்டு!
பக்தி யோகத்திலும் = தான் உண்டு!

சரணாகதியில் மட்டுமே
தானும் இல்லை!
தன் ஞானமும் இல்லை!
தன் கர்மமும் இல்லை!
தன் பக்தியும் இல்லை!

அவன் திருவுள்ள உகப்புக்கே இருப்போம் என்ற பணிவு ஒன்றே மற்ற யோகங்களையும் ஒருங்கே கொடுத்து விடும்!

ஞானம் = பிறவித் தத்துவம் அறிவிக்கும்!
கர்மம் = கர்ம வினைகளைக் காட்டிக் கொடுக்கும்!
பக்தி = இறைவனின் முகம் காட்டும்!
சரணாகதி மட்டுமே இறைவனின் "அடி" காட்டும்!

நான் மறையைக் கற்றவனா ஞானி?
"நான்" மறையக் கற்றவனே ஞானி!
*****************************

திவாண்ணா said...

krs
//இதையே தான் அடியேனும் சொன்னேன்!//
சரிதான்.
மௌலி எழுதுவதை ஒரு உரத்த சிந்தனையாக எடுத்துகிட்டு பாருங்க. புரிஞ்சு போகும்.

/மௌலி எழுதியது: //கொஞ்சம் வெளிப்படையாக என்னை நானே சில கேள்விகள் கேட்டுக் கொள்கிறேன்//

பதிவுல இல்லாத எத்தனையோ சமாசாரம் பின்னூட்டத்துல வருது. அது இயல்புதானே

//அடியேன் கேள்வி என்னவென்றால்:
பக்தி, அனுஷ்டான பலம் இரண்டும் இல்லாமல், "சும்மா" மட்டும் எப்படி இருக்க முடியும்?//

சும்மாயிருப்பது சுலபம் இல்லையே!
சும்மாயிருப்பது பிஸிகல் இல்லை. மனதளவில் சும்மா இருக்க பழகிவிட்டால் அவன் ஞானி ஆகிவிடுவான். இது ஞான யோகம். அதுக்கு விசாரணைதான் முக்கியம்.

பக்தி, கர்மா ஞானம் என்ரெல்லாம் நாம் பிரித்து கொள்வது நம் புரிதலுக்காகவே. நடைமுறையில் எல்லாமே பின்னி பிணைந்ததுதான். பூஜை பக்தியா கர்மாவா? காயத்ரீ ஜபம் கர்மாவா பூஜையா? ஞான விசாரம் செய்து ஈசனை கொஞ்சம் புரிந்தபின் செலுத்துவது பக்தியா வேறு ஏதோவா? அதை அடைய தியான சமாதி பழகல் கர்மாவா இல்லையா?
எல்லாமே கலவைதான். நமக்கு தோதான ஒன்றை கெட்டியாக பிடித்துகொண்டால் போதும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நக்கல்?... :-)...இந்த நக்கலும் குணானுபவம் தானாண்ணா?... :)//

நக்கலோ, விக்கலோ
பகவத் நாமம் இருக்கும் எதுவும் குணானுபவம் தான்!

பதிவுலகம் அப்படி இருக்கு, இப்படி இருக்கு-ன்னு தேவையின்றி வருத்தப்பட்டுக் கொண்டிருந்த அண்ணாவுக்கு, அடியேன் சொல்ல வந்தது இது மட்டுமே!

பிள்ளையாரைப் பசுஞ்சாணத்திலும் பிடிக்கலாம்! மஞ்சளிலும் பிடிக்கலாம்! களி மண்ணிலும் பிடிக்கலாம்! உங்கள் கர்மானுஷ்டானத்திலேயே சொல்லி இருக்குமே! :)

நக்கலோ, விக்கலோ
பகவத் நாமம் இருக்கும் எதுவும் குணானுபவம் தான்!
அந்தக் குணானுபவத்தை நிறுத்தாமல் தொடருங்கள் என்பதே அடியேன் வேண்டிக் கொள்வது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மெளலி அண்ணாவின் பதிவுலக வருத்தம் தீர்க்கவே இம்புட்டு விளையாடினேன்!

எங்க மெளலி அண்ணாவானதால் தான் இம்புட்டு நேரமும், விளக்கங்களும்!

முத்தாய்ப்பாக சொல்லிக் கொள்வது என்னவென்றால்....
எனது மொழி, எனது மொழிக் கடவுள், என் தெய்வம் தான் சிறந்தது, பலகாலத்து தவறுகள்....

இது போன்ற சமுத்திர அலைகளின் ஆரவாரத்தைப் பார்த்து விட்டு, சமுத்திர ஸ்நானம் என்னும் கர்மானுஷ்டானத்தை நிறுத்தாதீர்கள் என்பதே!

திவாண்ணா said...

//இது போன்ற சமுத்திர அலைகளின் ஆரவாரத்தைப் பார்த்து விட்டு, சமுத்திர ஸ்நானம் என்னும் கர்மானுஷ்டானத்தை நிறுத்தாதீர்கள் என்பதே!//

இதில எனக்கு புரியாத விஷயம் ஏதோ இருக்கு.
சரி விட்டுடலாம்.

மெளலி (மதுரையம்பதி) said...

//இதில எனக்கு புரியாத விஷயம் ஏதோ இருக்கு.
சரி விட்டுடலாம்.//

ஹிஹி...திவாண்ணா முடின முத்து லோகம் பெரும் அப்படின்னு சொல்லுவாங்க...அது மிகச் சரி...புரிஞ்சுக்க அதுல ஒண்ணுமில்லை...விட்டுடுங்க.. :-)

மெளலி (மதுரையம்பதி) said...

கே.ஆர்.எஸ்,

அம்பியின் நீக்கப்பட்ட பின்னூட்டம், கோவை விஜய் பின்னூட்டத்துக்கு பதில். இங்கே கோவையார் மனம் வருந்த வேண்டாமே என்று நீக்கிவிட்டேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

//ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று மெளலி அண்ணாவும் வைக்கிறார்!//

சபாஷ்... நல்ல புரிதல்... :))

மெளலி (மதுரையம்பதி) said...

//மெளலி அண்ணா தன்னால் பக்தியும் பண்ண முடியலை! அனுஷ்டான பலமும் இல்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

அதனால் "சும்மா" இருக்கப் போவதாகச் சொன்னார்.//

கே.ஆர்.எஸ், நீங்க எப்போதும் சொல்வீர்களே, கேள்விகள் நமக்காக அல்ல, அது பிறர் அறிவதற்காக அப்படின்ன்னு...அந்த த்வனியில் வந்த கேள்விகள் தான் அவை. அந்த கேள்விகளை எழுப்புகையில் எந்த வருத்ததாலும் அவற்றை நான் எழுதவில்லை. ஒரு சாதாரண மனிதனது கேள்விகள் எப்படி இருக்கலாம் என்ற வகையில் எழுதியது.

பதிவுலகம் பற்றிச் சொன்னது கூட நீங்க பதிவில் முடித்ததை சுட்டும் விதமாக மட்டுமே.

சும்மா இரு என்பதற்கு என் கர்மானுஷ்டானத்தை நான் விட்டுவிட இருக்கிறேன் என்பது அர்த்தம் அல்ல.
நான் சும்மா இரு என்றது, நீங்கள் சொல்லும் கடல் அலைக்களுக்கு பதில் சொல்லாது இருத்தல் மட்டுமே. இரைச்சல் வரும் திக்கில் கவனம் செலுத்தாது இருத்தலே...

மெளலி (மதுரையம்பதி) said...

//முன்பே சொன்னது போல்
As a matter of fact, கர்மானுஷ்டானம் பற்றிப் பதிவில் பேசவே இல்லை! //

ஹிமாலய ஞானி கர்மானுஷ்டானத்தால் அடைந்ததே ஜலஸ்தம்பம் என்பது எனது புரிதல்...அதற்காகவே நான் இவ்வளவு பின்னூட்டங்கள் எழுதினேன். அந்த புரிதல் தவறோ என்னமோ?....தெரியவில்லை.

மெளலி (மதுரையம்பதி) said...

//முன்பே சொன்னது போல்
As a matter of fact, கர்மானுஷ்டானம் பற்றிப் பதிவில் பேசவே இல்லை! //

ஹிமாலய ஞானி கர்மானுஷ்டானத்தால் அடைந்ததே ஜலஸ்தம்பம் என்பது எனது புரிதல்...அதற்காகவே நான் இவ்வளவு பின்னூட்டங்கள் எழுதினேன். அந்த புரிதல் தவறோ என்னமோ?....தெரியவில்லை.

ஒருதரம் சரணாகதி பண்ணினா போறும் என்பதுபோல கொஞ்ச நாட்கள் ஹிமாலயத்தில் இருந்தாலே இந்த வித்தை வந்துடுமோ என்னமோ?, யாமறியேன் பராபரமே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நீங்கள் சொல்லும் கடல் அலைக்களுக்கு பதில் சொல்லாது இருத்தல் மட்டுமே. இரைச்சல் வரும் திக்கில் கவனம் செலுத்தாது இருத்தலே...//

மிக நன்று!
அலைகள் ஓய்வதில்லை!
அதற்காகக் குளிப்பதும், குளிப்பாட்டுவதும், குளிர்விப்பதும் நிற்கப் போவதில்லை என்றால் மகிழ்ச்சியே! :)

//கர்மானுஷ்டானங்கள் ஒரு பார்வை அப்படின்னு 1-2 பதிவு போடறேன்...//

Atlast!
Hurrah!!!!
:)))

மெளலி (மதுரையம்பதி) said...

////இந்த கர்மானுஷ்டானங்களால் இன்றைய சமூகத்தில் ஒதுக்கப்படும் வாய்ப்பு அதிகம்..//

சுய பச்சாதபமோ, கழிவிரக்கமோ தேவை இல்லையே!//

மேலே சொன்னது பச்சாதாபம்/கழிவிரக்கம் எல்லாம் இல்லை. அது நிதர்சனம்....அதான் கண்கூடாக பார்க்கிறோமே....

மெளலி (மதுரையம்பதி) said...

//ஆனால் அதைக் கர்மானுஷ்டத்துக்கு எதிரான ஒன்று போல் உங்கள் கர்மானுஷ்டான மனம் எடுத்துக் கொண்டது!//

ஆமாம், அப்படி நான் நினைத்ததை/நினைப்பதை மறைவுக்க அவசியம் இல்லை...

ராமகிருஷ்ணர் ஒரு கர்மானுஷ்டானத்தை எதிர்த்தார்/மதிக்கவில்லை என்ற ப்ரயோகம் வந்தால் அதை எதிர்க்கத்தான் செய்வேன்...அவர் ஞானியின் குறையினை சுட்டிக்காட்ட மட்டுமே கர்மானுஷ்டானத்தை எதிர்த்தாருக்கலாமே தவிர..அதை மொத்தமாக மறுத்ததாக எனக்கு தெரியவில்லை. :-)

ஆனால் இந்த கதையினை இங்கு சுட்டிக்காட்ட, அதிலும் அந்த கடைசி வரிகள் யாருக்காக எழுதப்பட்டது, ஏன் எழுதப்பட்டது என்பதை விவரிக்க இயலுமா?....இதெல்லாமும் ஒரு நொடி சரணாகதியில் கழுவப்பட்டுவிடுமோ? :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//சரணாகதியில் மட்டுமே
தானும் இல்லை!
தன் ஞானமும் இல்லை!
தன் கர்மமும் இல்லை!
தன் பக்தியும் இல்லை!//

அதான் சரணாகதியே ஒரு நிமிடம்/நொடி பண்ணினால் போதுமே?...மற்ற நேரங்களில் 'தான்
இருந்தால் என்ன?, ஞானம்/பக்தி/கர்மம் போன்றவை இருந்தால் என்ன இல்லாவிடில் என்ன?
:-)
எனக்கு எம்.டி.ஆர் ரெடிமேட் சமையல்தான் நினைவுக்கு வருது...:)

மெளலி (மதுரையம்பதி) said...

//பக்தி, கர்மா ஞானம் என்ரெல்லாம் நாம் பிரித்து கொள்வது நம் புரிதலுக்காகவே//

உண்மைதான் திவாண்ணா....நான் பக்தியை குறைத்து மதிப்பிடவில்லை..ஆனால் ஒருதரம் சரணாகதி/ஒருநிமிட சரணாகதி என்னால் ஏற்க முடியாது....மனித மனம் அவ்வளவு பக்குவமாக இருக்குமானால் எல்லோரும் ராமகிருஷ்ணராக-ரமணராகத்தான் இருப்போம்...அது நடக்காதவரை இந்த சரணாகதி கேள்விக்கு உரியதே

ஆனால் கர்மா அப்படியல்ல...நல்ல கர்மாக்காளை தொடர்ந்து செய்கையில் ஞானம்/சிரத்தை அதிகமாக்கும் என்பதே என் புரிதல்...அது நமது வாழ்க்கை முறையாகிவிடும்...இந்த ஜென்மாவில் இல்லாவிடினும் அடுத்த ஜென்மாவில் அது அடுத்த லெவலுக்கு அந்த ஆத்மாவை இட்டுச் செல்லும்..

மெளலி (மதுரையம்பதி) said...

//அதற்காகக் குளிப்பதும், குளிப்பாட்டுவதும், குளிர்விப்பதும் நிற்கப் போவதில்லை என்றால் மகிழ்ச்சியே! :)//

குளிப்பது கண்டிப்பாக நடக்கும், குளிப்பாட்டுவதும், குளிர்விப்பதும் அப்போதைய சிந்தனையைப் பொருத்தது...தெரியவில்லை...:)

மெளலி (மதுரையம்பதி) said...

// Atlast!
Hurrah!!!!
:)))//

எதற்கு இந்த மகிழ்ச்சி...இன்னும் இவனது காமெடி படிக்க கிடைக்கும் அப்படிங்கறதாலயா? :)

மெளலி (மதுரையம்பதி) said...

அட்வான்சஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கே.ஆர்.எஸ்... :-)

கடவுள் உங்களுக்கு எல்லாவித நலன்களையும் அருளப் பிரார்த்திக்கிறேன்.

Geetha Sambasivam said...

//அட்வான்சஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கே.ஆர்.எஸ்... :-)//

அட, கே ஆர் எஸ்., பிறந்த நாள்??? மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

உங்கள் பதிவில் எழுதி இருக்கும் விஷயம் ஏற்கெனவே ரா.கணபதி எழுதிப் படிச்சுட்டேன்னு நினைக்கிறேன், சும்மா வந்ததுக்கு ஒரு அட்டெண்டன்ஸ் அவ்வளவு தான், மத்தபடி இந்தப் பெரிய விஷயம் எல்லாம் நமக்குப் பேசத் தெரியாது! :P :P

துளசி கோபால் said...

ரொம்பப் பிடிச்சிருக்கு.

ஏற்கெனவே வாசிச்சதுன்னாலும் உங்க நடையில் வாசிக்கும்போது இன்னும் ஜோர்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கீதாம்மா, மெளலி அண்ணா
இங்கும் பிறந்த நாள் வாழ்த்தா!
dankees, dankees :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாங்க டீச்சர்...
இம்புட்டு நேரம் இது மெளலி அண்ணா பதிவு-ன்னு நெனச்சிக்கிட்டு வந்தவங்க யாரையும் கூட கவனிக்கலை!
இப்ப தான் தெரியுது இது அடியேன் போட்ட பதிவு! :))

டீச்சர் வந்ததுனால மீ தி கீப்பிங் கீப் கொய்ட்! ஸ்கூல் பையன் வாயில் விரல் வைத்து கொய்ட்டா உக்காந்து இருக்கும் கேஆரெஸ்ஸைக் கற்பனை பண்ணிக்கோங்க! )))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இன்னிக்கி கொஞ்சம் பழைய ஆச்சார்ய ஹிருதயப் பதிவுகள் பக்கம் ஒதுங்கிய போது, இது கண்ணில் பட்டது! :)

திருவாளர் மெளலி அண்ணா அவர்களே...

//ராமகிருஷ்ணர் ஒரு கர்மானுஷ்டானத்தை எதிர்த்தார்/மதிக்கவில்லை என்ற ப்ரயோகம் வந்தால் அதை எதிர்க்கத்தான் செய்வேன்...//

//அவர் ஞானியின் குறையினை சுட்டிக்காட்ட மட்டுமே கர்மானுஷ்டானத்தை எதிர்த்தாருக்கலாமே தவிர..அதை மொத்தமாக மறுத்ததாக எனக்கு தெரியவில்லை. :-)//

கர்மானுஷ்டானத்தை எதிர்த்தார்/மதிக்கவில்லை என்ற ப்ரயோகம் பதிவில் எங்கு வந்திருக்கு? பாத்துச் சொல்லுங்க பார்ப்போம்! :)

மொத்தமாக மறுத்தார் என்ற ப்ரயோகம் பதிவில் எங்கு வந்திருக்கு? பாத்துச் சொல்லுங்க பார்ப்போம்! :)

நானும் இன்னிக்கி நல்லாவே வாசிச்சிப் பாத்துட்டேன்!
என் ஊனக் கண்ணுக்கு எதுவும் தென்படலை! உங்க ஞானக் கண்ணுக்கு எங்கே தென்பட்டது-ன்னு சொல்லிட்டு, அப்புறமா "எதிர்க்கத் தான் செய்வேன்"-ன்னு சங்கநாதம் முழங்குங்க! அப்போ அடி பணிஞ்சி கேட்டுக்கறேன்! :)

இதுல ஆல்-இன்-ஆல் அழகு ராஜா அம்பி வேற கூட்டணி! ஹா ஹா ஹா! சிரிப்பா வருது! :))

துளசி கோபால் said...

நிலஸ்தம்பமே இங்கெ தகராறு. இதுலே ஜலஸ்தம்பம்.............

நோ வே(-:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துளசி கோபால் said...
நிலஸ்தம்பமே இங்கெ தகராறு. இதுலே ஜலஸ்தம்பம்.............
நோ வே(-://

ஹா ஹா ஹா! கலக்கல் டீச்சர்! ஒரு வாசகம்-ன்னாலும் திரு-வாசகமாச் சொன்னீங்க! :)

நிலஸ்தம்பமா? யாரு நிலத்தை ஆக்ரமிச்சா-ன்னு சொல்லுங்க! ஆட்டோ அனுப்பிறலாம்! கால்-டாக்சி கூட அனுப்பலாம்! :))

சரி, எப்பவோ போட்ட பதிவுக்குள்ளாற நீங்க எப்படி எட்டிப் பாத்திங்க்ஸ்? நான் தான் வருசப் பிறப்புக்கு ஒட்டடை அடிச்சிட்டு இருந்தேன்! :)

துளசி கோபால் said...

தபால்பெட்டியில் விவரம் வந்துச்சேப்பா....
நானும் தபால்பெட்டிக்கு ஒட்டடை அடிச்சுக்கிட்டு இருந்தேன்:-)

இனிய வருசப்பிறப்புக்கான மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்து(க்)கள்.

இந்த வருசம் 'விரோதி'களே இருக்கக்கூடாதாம்:-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

டீச்சர் வந்து புத்தாண்டு வரவுக் கணக்கா 100-ன்னு சொல்லணும் போல இருக்கு! :)

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் டீச்சர்!
ஆமாம், விரோதி ஆண்டில் நோ விரோதம்! ஒன்லி we-row-them! :)
எல்லாரையும் உட்கார வச்சி, ஒன்னா படகு வலிக்கணும்! we-row-them!

மெளலி அண்ணா உட்பட அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!