Wednesday, September 24, 2008

யார் புத்திசாலி குருவா? சிஷ்யனா?

அசுரர்கள் குருவான சுக்ராசாரியாருக்கு சஞ்சிவினி மந்திரம் தெரிந்ததால் போரில் மாண்டுபோன அசுரர்களை உயிர்பெறச்செய்து தேவர்களுக்கு கஷ்ட்த்தை கொடுத்துவந்தார்.தேவர்கள் இந்திலிருந்து எப்படி மீள்வது என்று யோஜித்து தங்கள் குருவான பிருஹஸ்பதியை அணுகினார்கள்.அவரும் தன்க்கு அந்த மந்திரம் தெரியாது,ஆனால் தன் மகன் கசனை கேட்டுப் பார்க்கலாம் என்றார்.தேவர்களும் அதன்படியே கசனை அணுகி சுக்க்ராசாரியாரிடம் சென்று சஞ்ஜீவினி மந்திரத்தை கற்றுவரும்படி கேட்டுக்கொண்டார்கள்.கசன் அழகுள்ளவன் அதனால் சுக்ராசாரியாரின் மகளான தேவயானியால் விரும்பப்படுவான் சுக்ராசாரியாருக்கு மகள் பேரில் பாசம் அதிகம் அதனால் எப்படியாவது கசன் சஞ்ஜிவினி மந்திரத்தை கற்றுக் கொண்டுவிடுவான் என்பது தேவர்களின் எண்ணம்.
கசனும் தேவர்களின் வேண்டுகோளை ஏற்று சுக்ராசாரியாரிடம் சென்று "நான் பிரஹஸ்பதியின் குமாரன் பிரும்மச்சரிய விரதம் இருந்து உங்களிடம் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன் என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள்"" என்றான். அவரும் அவனை உடனே சீடனாக ஏற்றூக்கொண்டார். அந்தகாலத்தில் ஒர் வழக்கம்,யாராவது ஒருவர் குருவை அணுகி தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளச் சொன்னால் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுவார்கள்.

கசனும் மிகவும் கவனத்துடன் குருவுக்கு பணிவிடைகள் செய்து குருவின் மகளான தேவயானியையும் நன்றாக சந்தோஷப்படுத்திவந்தாலும் விரதத்தை விடவில்லை.கொஞசகாலம் இப்படியே சென்றது. அரக்கர்களுக்கு ஏனோ ஒரு சந்தேகம் குசன் சஞ்ஜீவினி மந்திரத்தை எப்படியாவது குருவிடமிருந்து கற்றுக் கொண்டு போய் தேவர்களுக்கு கொடுத்து விடுவான் என்று. ஆகவே அவர்கள் வேலையை காட்ட ஆரம்பித்தார்கள்.குசன் காட்டுக்குள் சென்று குருவிற்கு பசுக்களை மேய்க்கச் சென்றபோது அவனைக் கொன்று அவன் உடலை நாய்களுக்கு உணவாக போட்டு விட்டார்கள்.மாடுகள் திரும்பிவந்தும் கசன் வராததால் தேவயானி கலக்கமடைந்து தந்தையிடம் கூறினாள்.குரு ஞானதிருஷ்டியால் நடந்தவற்றை அறிந்து சஞ்ஜிவினி மந்திரத்தை பிரயோகித்து குசனை உயிர்பெறச்செய்து விட்டார்.மறுபடியும் ஒருநாள் குசன் காட்டுக்குச் சென்றபோது அசுரர்கள் அவனைக் கொன்று சாம்பலைக் கடலில் கரைத்து விட்டார்கள். தேவயானியின் முயற்சியால் மறுபடியும் குரு அவனை சஞ்ஜீவினி மந்திரத்தின் உதவியால் உயிர்பெறச்செய்தார்.அசுரர்கள் கசனை விட்டபாடில்லை. மூன்றாவது தடவையாக அவனைக் கொன்று அவன் சாம்பலை மதுவில் கரைத்து சுக்ராச்சாரியாருக்கே கொடுக்க அதைக் அவரும் குடித்து விட்டார். கசன் அவர் வயிற்றில் ஐக்கியமானான். குசனின்மீது ஒருதலைக்காதல் கொண்ட தேவயானி தன் தந்தையிடம் மறுபடியும் முறையிட்டு குசனை உயிர்பித்துத்தர வேண்டினாள்
மீதியை அடுத்தபதிவில் பார்க்கலாமா ?

7 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திராசவுக்குப் பிடிச்ச காதல் கதை! :)
இதான் பதிவோட தலைப்பு! :))

அடுத்த பதிவு எப்போ திராச? சீக்கிரம் ப்ளீஸ்! :)

Kavinaya said...

அப்பாடி! எனக்கு தெரிஞ்ச கதை :) நன்றி ஐயா.

மெளலி (மதுரையம்பதி) said...

நல்லது..அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்...

Geetha Sambasivam said...

//யார் புத்திசாலி குருவா? சிஷ்யனா?//

நிச்சயமா நான் இல்லை,

ரொம்ப நாட்கள் கழிச்சு வந்து நல்ல கதையைப் போடுவதற்கு நன்றி சார்.

Geetha Sambasivam said...

நான் போட்டு வச்ச பதினெட்டு முழப் புடவையையே இன்னும் எடுக்கலை, :P :P வேறே வேறே தலைப்பிலே உட்கார்ந்து இருக்கு எல்லாம். :)))))

சரி, போகட்டும், அடுத்த வாரத்துக்கும் சேர்த்துத் தானே துண்டு போட்டிருக்கீங்க??? கொஞ்ச நாட்கள் ரெஸ்ட் எடுக்கலாம். :))))))

ambi said...

கில்லாடி சிஷ்யன். சுக்ராச்சாரியாருக்கு ஒரு பொண்ணு தான் இல்லையா? இல்ல சும்மா தான் கேட்டேன். :p

குமரன் (Kumaran) said...

தி.ரா.ச. தலைப்பைப் பார்த்தவுடன் ஒரு வேளை இரவிசங்கர் எழுதிய பதிவோ என்று நினைத்தேன். :-) சுப்பையா வாத்தியாரும் இப்படிப்பட்ட தலைப்புகள் வைக்கிறார். ஆனால் அவர் ஆசார்ய ஹிருதயத்தில் எழுதுவதில்லை என்று தெரியும். :-)

முழுக்கதையையும் சொல்லியிருக்கலாம் தி.ரா.ச. இப்படி காக்க வச்சிட்டீங்க. :-)

தவம் செய்பவர்களைப் பெண்களை அனுப்பி மயக்குவார்கள் தேவர்கள் என்று புராணங்கள் சொல்லும் போது ஒரு அழகனை அனுப்பி அசுரப்பெண்ணை மயக்கினார்கள் என்கிறது இந்தக் கதை.