Thursday, September 11, 2008

குரு பரம்பரை சுலோகங்கள்!

குரு பரம்பரை-ன்னா என்னா? எல்லாருக்கும் தெரிந்திருக்கும்!
ஆதி குரு முதல், இன்று வரை,
வாழையடி வாழையாக,
பரம்பரை பரம்பரையாக, வந்துள்ள ஆசார்ய பெருமக்கள்!

எந்தை தந்தை, தந்தை தம் மூத்தப்பன் என்று ஏழ்ப்படி கால் தொடங்கி...வந்து வழி வழி ஆட்கொண்டு அருளும் குரு பரம்பரை!
அந்த குரு பரம்பரை சுலோகங்களை இன்று தியானிப்போம்!


சதாசிவ சமாரம்பாம்
சங்கராசார்ய மத்யமாம்
அஸ்மத் "ஆசார்ய" பர்யந்தாம்
வந்தே "குரு பரம்பராம்"


சதா சிவ பெருமான் முதற்கொண்டு
ஆதி - சங்கராச்சார்யர் இடைக்கொண்டு
வழிவழி வந்த குருக்கள் இன்றளவும்
அத்தனை ஆசார்யர்களுக்கும் வணக்கங்கள்!


லக்ஷ்மிநாத சமாரம்பாம்
நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் "ஆசார்ய" பர்யந்தாம்
வந்தே "குரு பரம்பராம்"


திருமகள், திருமால் முதற்கொண்டு
நாதமுனிகள், ஆளவந்தார் இடைக்கொண்டு
வழிவழி வந்த குருக்கள் இன்றளவும்
அத்தனை ஆசார்யர்களுக்கும் வணக்கங்கள்!

குருப்யோ நமஹ!
நீங்களும் இரண்டு சுலோகங்களையும் உரக்கச் சொல்லுங்கள்!
இந்த சுலோகங்கள் திருமடங்களில் சொல்லப்படுகிறதா என்ற மேலதிக தகவல்களைப் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்!

பிகு:
ஒவ்வொரு வியாழனும் பதிவைத் தவற விட வேண்டாம் என்று மெளலி அண்ணா ஒரு முறை பேசும் போது சொன்ன ஞாபகம்!
கீதாம்மா வாதிராஜர் தொடரைப் போடுகிறார்கள்; ஹயக்ரீவ ஜெயந்தியான நாளைக்கு அவர்கள் பதிவை நிறுத்தி வைத்துள்ளார்கள்! அதான் இந்த Filler Post!

13 comments:

கீதா சாம்பசிவம் said...

ரொம்ப நன்றி கேஆரெஸ், நானே கேட்கணும்னு நினைச்சேன், மத்தவங்க இரண்டு பேரும் ரொம்ப பிசி போல் இருக்கு. நாளைக்கு ஹயக்ரீவ ஜெயந்தி ஓணம் இரண்டையும் சேர்த்துப் பதிவு வரும்.

குமரன் (Kumaran) said...

சில எழுத்துப்பிழைகளை மட்டும் சரி செய்கிறேன் இரவி. பொருள் சரியாக இருக்கிறது.

சதாசிவ சமாரம்பாம்
சங்கராசார்ய மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம்
வந்தே குரு பரம்பராம்

லக்ஷ்மிநாத சமாரம்பாம்
நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம்
வந்தே குரு பரம்பராம்

குமரன் (Kumaran) said...

சதாசிவ சமாரம்பாம் என்று தொடங்கும் சுலோகம் அத்வைத மரபினரால் சொல்லப்படுகின்றது. அவர்களால் சொல்லப்படும் இன்னொரு சுலோகம்:

நாராயணம் பத்மபுவம் வசிஷ்டம் சக்திம் ச தத்புத்ர பராசரம் ச
வ்யாஸம் சுகம் கௌடபாதம் மஹாந்தம் கோவிந்த யோகீந்ரம் அதாஸ்ய சிஷ்யம்
ச்ரி சங்கராசார்யம் அதாஸ்ய பத்மபாதம் ச ஹஸ்தாமலகம் ச சிஷ்யம்
தம் தோடகம் வார்த்திககாரமன்யான் அஸ்மத் குரூன் சந்ததமானதோஸ்மி

இதற்குப் பொருளை ஆசார்ய ஹ்ருதய அன்பர்கள் இனிவரும் இடுகைகளில் சொல்வீர்கள் தானே. :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@குமரன்
எழுத்துப் பிழைகளைக் களைந்தமைக்கு நன்றி குமரன்! பதிவில் மாற்றி விட்டேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@கீதாம்மா
சூப்பர் ஓணம்+நம்ம ஹயவதனர் பர்த்டே-வா? கலக்குங்க! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நாராயணம் பத்மபுவம் வசிஷ்டம் சக்திம் ச தத்புத்ர பராசரம்//

இனி வரும் இடுகைகளில் மெளலி அண்ணா இதெல்லாம் வெளக்குவாரு! அவர் புண்ணியத்துல அடியேனும் வெளங்கிக்குவேன்! :)

கவிநயா said...

சுலோகங்களுக்கு நன்றி கண்ணா.

மதுரையம்பதி said...

ரொம்ப நன்றி கே.ஆர்.எஸ். வேலை அதிகமாக இருக்கிறது, நேற்று என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. என்றோ, எப்போதோ நான் சொன்னதௌ நினைவிலிருத்தி இதனைச் செய்தமைக்கு நன்றி.

மதுரையம்பதி said...

//இதற்குப் பொருளை ஆசார்ய ஹ்ருதய அன்பர்கள் இனிவரும் இடுகைகளில் சொல்வீர்கள் தானே. :-)//

குமரன், இன்வைட் வரும் நீங்களே இதை விளக்க ஆரம்பித்து, இன்னும் பல இடுகைகளும் இட வேண்டுகிறேன். :)

இதை வைத்தாவது உங்களை இக்குழுவுக்குள் இழுக்க முடியுமான்னு ஒரு நப்பாசைதான். :)

மதுரையம்பதி said...

அத்வைத மதங்களில் இது இன்றும் சொல்லப்படுகிறது. இதில் சொல்லப்பட்ட ஆச்சார்யார்களை தவிர இன்று உள்ளவர்கள் வரை இது தொடர்ந்து சொல்வதும் உண்டு.

அத்வைத மடங்களில் வியாச பூஜைகளில் இந்த வரிசையில் ஆரம்பித்து இன்று இருப்பவருக்கு முந்தியவர் வரையுள்ள ஆச்சார்யார்களை பிரதிஷ்ட்டை செய்து வணங்குவர்.

சாக்தத்திலும் இவ் ஆச்சார்யார்களில் / வேறு சிலரில் ஆரம்பித்து தமது குரு-வரையில் சொல்லி வணங்கும் குரு-பரம்பரா ஸ்லோகங்கள் உண்டு.

கீதா சாம்பசிவம் said...

நாராயணம் பத்மபுவம் வஸிஷ்டம்
சக்திம் ச தத்புத்ர பராசரம் ச:
வ்யாஸம் சுகம் கெளடபதம் மஹாந்தம்
கோவிந்த யோகீந்தரம் அதாஸ்ய சிஷ்யம்
ஸ்ரீ சங்கரா சார்யம் அதாஸ்ய பத்மபாதம்
ச ஹஸ்தாமலகம் ச சிஷ்யம்
தம் தோடகம் வார்த்திககாரம் அன்யான்
அஸ்மத் குரூன் ஸந்ததம் ஆனதோஸ்மி!"

இது அத்வைதக் காரங்களுடைய குரு பரம்பரை ஸ்லோகம்னு நம்பறேன்.

கீதா சாம்பசிவம் said...

Me verified it. OK, it is for Advaithi Guru paramparai slokam. OK

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

குமரன் சொன்ன அத்வைத குரு பரம்பரை சுலோகத்தைச் சரி பார்த்துச் சொன்னமைக்கு நன்றி கீதாம்மா!