ஸ்ரீ ராமனுஜருக்கு அமைந்த சீடர்களில் வடுக நம்பி என்பவர் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவர்தான் அவருக்கு தளிகை செய்யும் பாக்கியம் பெற்றவர்.ஸ்ரீ ராமானுஜர் சில வேளைகளில் உணவு அருந்த மறந்தாலும் அவருக்கு நினைவூட்டி அவரை உணவு அருந்தச் செய்வது அவருடைய வேலை.குருவின் மீது அளவில்லாத பக்தி கொண்டவர் .தினமும் ஸ்ரீ ரங்கத்தில் ஸ்ரீ ராமனுஜர் இருக்கும்போது அவருடைய வீட்டின் வழியே ஸ்ரீ ரங்கநாதர் பவனி வருவார். உடையவர் எல்லா சிஷ்யர்களையும் போய் வண்ங்கச் சொல்லுவார். ஆனால் வடுக நம்பி போகமாட்டார். அவருக்கு எல்லாமே ஸ்ரீராமனுஜர்தான் பகவானை விட குருவையே கொண்டாடினார்.குரு பக்திக்கு உதாரணமாக்த் திகழ்ந்தவர்.
ஒரு முறை ஸ்ரீராமனுஜர் மைசூரிலிருந்து வேறு ஊருக்கு பயணம் புறப்பட்டார்.பயணத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் வடுக நம்பிதான் கவனித்தார். எல்லா பொருட்களையும் மூட்டைகட்டிக் கொண்டு வண்டியில் ஏற்றியாகி விட்டது.ஸ்ரீ ராமனுஜர் வடுக நம்பியை கூப்பிட்டு பெருமாள் இருக்கும் பெட்டியை பத்திரமாக வைத்தாகி விட்டதா என்று கேட்டார். அப்படியே வைத்தாகி விட்டது என்று கூறினார்.கிளம்புபோது உடையவர் தன்னுடையா பாதரக்ஷைகள் எங்கே என்று கேட்டார்.
உடனே வடுக நம்பி ஆச்சாரியரே நான் அப்போதே அதை எடுத்து பத்திரமாக வைத்துவிட்டேன் என்றார். எங்கே வைத்திருக்கிறீர்கள் என்றால் அதை பெருமாள் வைக்கும் பெட்டியோடு வைத்து விட்டேன் என்றார்.உடையவர் அபசாரம் செய்து விட்டீர்களே என்னுடைய பாத ரக்ஷைகளைப்போய் பகவானுடன் சேர்த்து வைக்கலாமா?அபசாரம் அபசாரம் என்றார். அதற்கு வடுக நம்பியின் பதில்தான் அவருடை குருபக்தியை காண்பித்தது.ஆச்சார்யரே பெருமாளுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டாமா உங்கள் பாதரக்ஷையுடன் சம்பந்தம் வருவதற்கு என்றார்.அப்பேற்பட்ட சஞ்சலமில்லாத குருபக்தி.குருவை விட, பகவானை விட அவரது பதுகைகளே சிறந்தது என்ற பக்தி.ஸ்ரீ மான் நிகாமாந்த மஹா தேசிகன் பாதுகா ஸ்ஹஸ்ரம் என்ற நூலில் பதுகைகளின் பெருமையை பேசுகிறார். இன்று ஸ்வாமி ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் அவதரித்த புராட்டாசி திரு நக்ஷ்த்ரமான திருவோணம். ஆச்சார்ய ஹிருதயம் அன்னாரின் ஆசிகளைக் கோருகிறது. பாதுகைகள் அயோத்தி ராஜ்யத்தையே 14 ஆண்டுகள் ஆண்டன.
குரு பாதுகா ஸ்தோத்ரம் குரு பாதுகையின் பெருமையை விளக்கும். கேட்டுப் பாருங்கள்
-
4 comments:
பதிவு அருமை. ஸ்தோத்திரம் இனிமை. மிக்க நன்றி.
திராச. முதல் கதையின் வரும் சீடன் முதலியாண்டான் என்று நினைக்கிறேன். அவர் தான் உடையவருக்கு மடப்பள்ளித் தொண்டு செய்தவர். அதே போல் 'என் பெருமாள் இங்கிருக்க வாசலில் இருக்கும் பெருமாளைப் போய் நான் பார்க்க வேண்டுமா?' என்று கேட்டவர்.
இராமானுஜ பாதுகைகளைப் பெருமாளுடன் வைத்தவர் வடுக நம்பியாக இருக்கலாம். சரியாகத் தெரியவில்லை.
ஸ்வாமி தேசிகனின் திருநட்சத்திரமா இன்று. அறிந்து அவரை வணங்கிக் கொண்டேன்.
விஜய தசமியன்று குருவிடத்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்பர். இன்று குரு, பரம சீடர் ஆகிய இருவரின் கருணாகடாக்ஷத்தை அளித்தீர் திராச. மிக்க நன்றி.
எத்தனையோ மஹான்கள் இந்த ஞான பூமியில், அத்துணை பேருக்கும் நமஸ்காரங்கள்.
வடுக நம்பியின் ஆசார்ய அபிமானத்தைச் சொல்லும் கதையைப் பதிந்தமைக்கு நன்றி திராச!
வடுக நம்பியின் இயற்பெயர் ஆந்திரபூர்ணர்.
குமரன்:
ஆசார்யனுக்குப் பாலைக் காய்ச்சிக் கொண்டிருக்கும் போது வாசலுக்கு வீதியுலா வந்த நம்பெருமாளைக் காண வராததும் இவரே தான்!
இராமானுசர் பரமபதித்த போது, தலையை எம்பாரின் மடியிலும் திருவடியை வடுகநம்பியின் மடியிலும் தாழ்த்தித் தான் கண் வளர்ந்து அருளினார்.
Post a Comment