Wednesday, December 10, 2008

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்-6

ப்ரம்மேந்திராள் இயற்றிய சாஸ்திரங்களும் கீர்த்தனங்களும் பல. கீர்த்தனங்களில் சர்வம் ப்ரம்ம மயம் என்று பாடுவார். ப்ரம்மேந்திரரின் சரித்திரத்தை கேட்டாலும் கீர்த்தனங்களை கேட்டு அதன் பொருள்படி நடந்தாலும் கட்டாயம் மெய்ப்பொருளை அடைந்துவிடலாம் என்று நம்புகின்றனர்.

ப்ரம்ஹ சூத்ர வ்ருத்தி, ஆத்ம வித்ய விலாஸம், அத்வைத ரஸ மஞ்சரி, ப்ரம்ஹ தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா போன்ற கிரந்தங்களும் பஜே ரகுவீரம், பஜரே கோபாலம், மானஸ சஞ்சரரே, பிபரே ராம ரஸம் ஆகிய கீர்த்தனங்களும் குறிப்பாக அவர் படைப்புகளில் சொல்லப்படுகின்றன.

Posted by Picasa


இந்த பதிவுகளில் கண்ட பல விஷயங்கள் நெரூர் கைலாஸ ஆஸ்ரமம் தவத்திரு சதாசிவானந்த ஸ்வாமிகளின் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டன.
மேலும்
http://living.oneindia.in/yoga-spirituality/faith-mysticism/sadasiva-brahmendra-partii
http://www.geocities.com/profvk/gohitvip/sadasiva.html

எழுத்தாளர் பாலகுமாரன் “நண்பன்” என்று ஒரு கதையை சுவையாக எழுதி இருக்கிறார். அது பிரம்மேந்திராள் கதைதான்.
நண்பர் ஜீவா பிரம்மேந்திராளின் சாகித்தியங்களின் பட்டியலுக்கு ஒரு சுட்டி கொடுத்து இருக்கிறார்.

சரி தற்காலத்துக்கு வரலாமா?

நெரூர் பற்றி கேள்விப்பட்ட இன்னொரு விஷயம் மகா பெரியவாள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அங்கு விஜயம் செய்தார். அதற்கு ஏற்பாடு செய்தது - ஒரு வக்கீலைப்பத்தி சொன்னேன் அல்லவா? அவருடைய தகப்பனார்தான். அவர்கள் சிருங்கேரி மடத்தை ஆஸ்ரயித்தவர்களாக இருந்தாலும் மகாபெரியவர் மேல் ஒரு அபிமானம், மரியாதை இருந்ததால் தங்கள் ஊருக்கு வர வேண்டும் என வேண்டி அப்படியே ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் வருந்தும்படி என்ன நடந்தது என்றால் மற்ற ஊர் ஜனங்கள் சிருங்கேரி மடத்து அபிமானிகளாக இருந்து, இந்த வரவேற்பில் கலந்து கொள்ள தயங்கி வீட்டுக்குள் போய் கதவை அடைத்துக் கொண்டார்களாம். கேள்விப்பட்ட பெரியவர் நேரடியாக அதிஷ்டானத்துக்கே போய் அங்கேயே 4 நாட்கள் முகாம் செய்து விட்டார். மகா கருணை படைத்தவர் என்று பலரும் போற்றும் அந்த மகான் தவறாக எதையும் நினைப்பரா? இருந்தாலும் ஒரு உத்தம சன்னியாசிக்கு இப்படி அவமரியாதை செய்வது தானே அதன் பலனை கொடுக்கும், இல்லையா? அன்றிலிருந்து ஆரம்பித்தது ஊர் ஜனங்களுக்கு கெட்ட காலம். கொஞ்சம் கொஞ்சமாக க்ஷீணமாகி இப்போது மரம் பட்டு போனதும் முற்றிவிட்டது. அதுதான் அக்கிரஹாரம் இப்படி போனதுக்கு காரணம் என்று தெரிந்து கொண்டோம்.

வில்வ மர சமாசரத்தை என் குருவை பார்த்தபோது பேசிக்கொண்டு இருந்தேன். அவர் சிரித்துக்கொண்டே உனக்கும் இதற்கும் என்ன உறவு என்று தெரியாது. இப்படி கேள்விப்பட்டு பார்த்தாகிவிட்டதல்லவா? இதை சும்மா விடக்கூடாது. என்ன செய்து அதை சரி செய்ய வேண்டுமோ அப்படி செய் என்று சொல்லிவிட்டார்.

சரி என்று புகளூர் நண்பருக்கு போன் செய்தேன். அவரும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அங்கிருந்த சில நண்பர்களுடன் பேசி இருந்தார். நெருரில் ஒரு மீட்டிங் கூப்பிட்டு "பிரச்சினை கல்தளம் அமைத்ததும் பால் அபிஷேகம் செய்ததும்தான். இதை சரி செய்ய வேண்டும்" என்று பேச எல்லாரும் " அப்படியா, தெரியவே தெரியாதே" என்று சொல்லி ஒப்புக்கொண்டனர். கல்தளம் அமைத்த நபரை கரூரில் பார்த்து பேச அவரும் மனம் வருந்தி உடனே சரி செய்துவிடுங்க என்று அனுமதி கொடுத்துவிட்டார். அரசு தரப்பிலும் ஆட்களை பார்த்து பேசி ஒண்ணும் பிரச்சினை வராமல் ஏற்பாடு ஆகிவிட்டது.

எல்லாமே நல்லா நடக்குமா? இப்போது ஏதோ ஒரு தடை. நண்பரும் பிஸி ஆகிவிட்டார். சமாசாரம் ஆறின கஞ்சி ஆகிவிட்டது. திருப்பி கிளப்ப வேண்டும்.

இந்த முறை போய் பார்த்த போது வில்வ மரம் துளிர் விட்டு இருக்கிறது! அடி மரத்தில் நான்கைந்து இடங்களிலேயே! சுப சகுனம் என்று நினைத்துக்கொண்டேன்.

From nerur

5 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

மிக அருமையாக கொண்டு சென்று தற்ப்போதைய நிலைவரை எழுதியமைக்கு நன்றி திவாண்ணா.

அதிஷ்ட்டானத்திற்கு நான் சென்ற சமயங்களில் எல்லாம் சிலிர்ப்பான சில அனுபவங்களை பெற்று இருக்கிறேன். பரபிரம்மத்தின் அதிர்வுகளை இன்றும் உணரமுடிகிறது.

ஜபம்-தியானம் போன்றவற்றிற்கு நல்ல இடம். பிரம்மேந்திரர் எல்லோருக்கும் ஞானத்தை அருளட்டும்.

குமரன் (Kumaran) said...

நீங்கள் சொன்ன கீர்த்தனைகளில் சிலவற்றைக் கேட்டிருக்கிறேன். அமிருதமாகத் தான் இருக்கின்றன.

கபீரன்பன் said...

// இந்த முறை போய் பார்த்த போது வில்வ மரம் துளிர் விட்டு இருக்கிறது! அடி மரத்தில் நான்கைந்து இடங்களிலேயே! //

உண்மையிலே ஆறுதலான விஷயம். சென்ற பிப்ரவரியில் அங்கு சென்றபோது பட்ட மரத்தைப் பார்த்து மனம் மிகவும் வருத்தம் அடைந்தது. தங்கள் பதிவால் சந்தோஷம் அடைந்தேன். நன்றி

திவாண்ணா said...

நன்றி மௌலி, குமரன், கபீரன்பன். எப்போ வாய்ப்பு கிடைக்கிறதோ கட்டாயமாக போய் வாங்க. அருமையான அமைதி தரும் இடம்.

Anonymous said...

Hi sir,
eppadi tamizhill type seivathu enna theriyavillai... Recently i read balakumaran's 'Thozhan' novel, after that i tend to search about sadasiva bhramendrar in net & came to know about ur blog, ur writing is nice. Can evey one feel the vibration at his samadhi still now?
Can i have ur route guidence to visit sadasiva bhramendrar's samadhi, i need the route from chennai & is there any place to stay there? if we start at early morning can we return by eve...? could u please mail the details plese.My mail i.d vembhu@gmail.com