Sunday, May 18, 2008
மனக்குதிரையை அடக்க முடியுமா? பரமாசாரியாளின் வழி!
ஆதி சங்கரர் ஸ்தாபித்த மடங்கள் இந்தியாவின் நான்கு திசைகளிலும் உள்ளன. வடக்கே பத்ரியில் ஜ்யோதிர்மடத்திலும், மேற்கே துவாரகையிலும், கிழக்கே பூரியிலும்,தென்பகுதியில் சிருங்கேரியிலும் ஸ்தாபித்ததாய்ச் சொல்லுவார்கள். கைலை சென்றிருந்த சங்கரருக்கு அங்கே ஈசன் ஐந்து லிங்கங்களைத் தந்து அருளியதாகவும் ஒரு கூற்று உண்டு. அவை யோகலிங்கம், மோக்ஷலிங்கம், முக்தி லிங்கம், வரலிங்கம், போக லிங்கம் ஆகியவை. இவற்றை முறையே மற்ற நான்கு பீடங்களில் பிரதிஷ்டை செய்ததாயும், சொல்லுவார்கள். இன்னும் சிலர் சிதம்பரத்திலும், நேபாளத்திலும், பிரதிஷ்டை செய்ததாயும் சொல்கின்றனர். ஆனால் இந்த யோகலிங்கம் பற்றி மட்டும் மாறுபட்ட கருத்துக்கள் எவருக்கும் இல்லை. அத்தகைய யோகலிங்கம் ஸ்தாபித்த இடம் தான் காஞ்சி. சங்கரர் தன் யாத்திரையின் இறுதியில் காஞ்சியை அடைந்து, காமாட்சி அம்மன் கோயிலில் ஸ்ரீகாமகோடி சக்ரப் பிரதிஷ்டை செய்தார். காமாட்சி அம்மனின் உக்ர கலைகளை அடக்கி, காமாட்சியை ஸ்ரீ காமகோடி யந்திரத்தில் ஆவிர்பாவம் அடையவும் செய்தார். பின்னர் மன்னாதி மன்னர்கள் அனைவரும் காண காஞ்சியில் காமாட்சி அம்மன் அனுமதியுடன், சரஸ்வதியின் முன்னிலையில் அவர் சர்வக்ஞ பீடத்திலும் ஏறினார். அத்தகைய காஞ்சி பீடத்தின் சிறப்பைப் பற்றிச் சொல்லி முடியாது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் கூட சங்கராச்சார்யர்கள் யாத்திரைகளுக்குச் செல்லும் வழியில் தடங்கல் செய்யாமல், சுங்கவரி வசூலிக்காமல் சுதந்திரமாகவும், பத்திரமாகவும் செல்வதற்கு, அவரவர் சரகங்களின் ஜாகிர்தார்களும், நவாப்களும், பாளையக் காரர்களும் உத்தரவிடப் பட்டிருந்ததாயும் தெரிய வருகின்றது. கர்னல் மெக்கன்சி என்னும் சரித்திர ஆய்வாளர் சங்கராச்சார்யா என்னும் முக்கிய இந்துமத ஆச்சார்யரைத் தாம் கும்பகோணத்தில் சந்தித்ததாயும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பீடத்தின் 68-வது பீடாதிபதி ஆன ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், "பரமாச்சாரியாள்" என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார். சந்நியாசியாக இருந்தாலும் நாட்டுப்பற்றுக்கு விதிவிலக்கல்ல என்பதைத் தெரிவிக்கும் நோக்குடன் கடைசி வரையில் கதர் ஆடைகளையே அணிந்தார். பாலக்ககடில் நல்லிச்சேரியில் தங்கி இருந்தபோது, பின்புறம் அமைந்திருந்த மாட்டுக் கொட்டிலில், மகாத்மா காந்தியைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேல் உரையாடினார். தேதி 15-10-1927.
வைகாசி அனுஷத்தில் உதித்த மஹாஸ்வாமிகளின் 115-வது ஆராதனை விழா நாளைக்கு. மகாபுருஷர் ஆன அவரின் பாதம் பணிந்து வணங்குவோம். நம் மனதையும், இந்திரியங்களையும் பற்றி மகாஸ்வாமிகளின் அருள்வாக்கில் இருந்து:
"ஜீவன் என்பவன் தேரில் உட்கார்ந்துள்ள யஜமான் மாதிரி. சரீரம் தான் தேர். தேருக்கு சாரதி யாரென்றால் புத்தி. அது பல குதிரைகள் பூட்டிய தேர். குதிரைகள் எவை என்றால் அவைதான் நம் இந்திரியங்கள். குதிரைகளை சாரதி ஏவி, வழி நடத்துவது லகானைப் பிடித்துத் தானே. கடிவாளம் என்பது தானே? அந்த லகான் அல்லது கடிவாளம் தான் நம் மனது. (மனது குதிரையை விட வேகமாய் ஓடப் பார்க்கிறது இல்லையா) நம் புத்தியாகின்ற சாரதி தான் அந்தக் கடிவாளத்தை இழுத்துப் பிடிக்கவேண்டும். அதற்குத் தேவை சாதனங்களால், விவேக வைராக்கியங்களால் உறுதிப்பட்ட நல்லறிவு என்ற தேர்ப்பாகன்.( இந்தத் தேர்ப்பாகன் நம் அனைவரிடமும் இருக்கின்றான். ஆனால் நாமதான் அலட்சியம் செய்துவிட்டு வேறேவழியில் போகச் சொல்லியோ, அல்லது, நாமே குதிரையை விரட்டியோ விட்டுடறோம்.) மனதாகிய கடிவாளத்தைக் கவனமாய் இழுத்துப் பிடித்து விடுகின்ற அளவுக்கே விட்டோமானால், இந்திரியக் குதிரைகள் உத்தமமான விஷயங்களிலேயே அல்லது வழியிலேயே போய் போக வேண்டிய இடத்துக்குச் சரியாய்க் கொண்டு சேர்க்கும். சேர்ந்தபின்னால் ஜீவன் ஆன யஜமான் ஆன்மாவைத் தன் பாட்டில் அனுபவிக்கலாம்."
அடைப்புக்குறிகளுக்குள் இருப்பவை என் சொந்தக்கருத்துக்கள்.
பரமாசாரியார் அவர்களின் பாதம் பணிந்து வணங்குவோம்.
"ஜெய ஜெய சங்கர,
ஹர ஹர சங்கர"
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர
இன்றும், என்றும் எனக்கு வழிகாட்டும் தெய்வம்....நமஸ்கரிக்கிறேன்...
ஆறு வருடங்களுக்கு முன்னால் பரமாச்சாரியார் ஜெயந்தி, ஆராதனை எல்லாம் நேரில் காணும் பாக்யம் கிடைத்தது.
சரியான நேரத்தில் சரியான பதிவுக்கு மிக்க நன்னி. :))
நாளைக்கு தி ரா ச சூப்பரா ஒரு பதிவு போடறேன்னு சொல்லி இருக்கார்.
இது ஏதோ கெளரவ - பாண்டவர் முன்னாடியே அமாவசை கொண்டாடி களபலி குடுக்கற மாதிரி இல்ல இருக்கு? :p
//இது ஏதோ கெளரவ - பாண்டவர் முன்னாடியே அமாவசை கொண்டாடி களபலி குடுக்கற மாதிரி இல்ல இருக்கு? :p//
ஹா, ஹா, டாம், என்னை "கிருஷ்ண பரமாத்மா"வோட ஒப்பிட்டதுக்கு நன்றி.
இன்னும் தகுதியை வளர்த்துக்கிறேன்.
ரொம்ப முக்கியமான விஷயத்தை பதிவு போட்டு இருக்கீங்க. நன்ஸ்!
@அம்பி நான் இந்தப்போட்டிகெல்லாம் வரமாட்டேன். ஸ்வாமிகளைப் பற்றிய பதிவு எத்தனை படித்தாலும் அலுக்கவா செய்யும். அழகான கருத்துக்கள்.அருமையான பதிவு.
மகா பெரியவரின் சொற்பொழிவில் மிகவும் பிடிச்சது...எப்பேர்பட்ட கருத்தையும் மிகவும் எளிமையாக்கி, உதாரணத்தோட சொல்லுறது தான்!
கேட்கிற பாமர ஜனங்களுக்கும் புரியும்!
மனக்குதிரை அடக்கும் மார்க்கம் அருமை!
கீதாம்மா...பெரியவரின் கனகாபிஷேக வீடியோ இணையத்தில் கிடைக்குமா?
Why he met gandhi in the place where cattles are reared? Did gandhi refused to come inside his room or .....
பரமாச்சார்யர் திருநட்சத்திரத்து முன்னோட்டப் பதிவா? நல்ல தகவல் தொகுப்பு கீதாம்மா. ஏனோ முதலில் இந்த இடுகை மௌலி எழுதியது என்றே நினைத்துக் கொண்டேன். அப்படியே படித்துக் கொண்டு வரும் போது நடை மாறுகிறதே என்று நினைத்துக் கொண்டு வந்தேன். 'என்னைக் கண்ணன் என்று சொன்னாயே அம்பி' என்ற போது தான் இது நீங்கள் எழுதியது என்று உறைத்தது. அப்புறம் மீண்டும் படித்தால் அப்படியே உங்கள் நடை; உங்களின் வழக்கமான தகவல் தொகுப்புகள். :-)
அடுத்து தி.ரா.ச. எழுதுவதைப் படிக்க வேன்டும்.
@மெளலி,
@திவா, நன்றி.
@திராச, சார், இதுக்குத் தான் ரொம்ப ஓ.சா. போடக் கூடாதுங்கறது, அம்பி, பாருங்க, சிண்டு முடியறவேலையை ஆரம்பிச்சுட்டார், ஞாயித்துக்கிழமையிலே இருந்தே! :P
@கே ஆர் எஸ், காஞ்சிமடம் வெப்சைட்டிலே இருக்குனு நினைவு, அன்னிக்குப் போனப்போப் பார்த்தேன்னு நினைக்கிறேன். மீண்டும் போய்த் தான் பார்க்கணும்! :)))))
@கலியுக சித்தரே,
அவர் தங்கி இருந்ததே அந்த மாட்டுக் கொட்டிலில் தான், அங்கே தான் வந்து காந்தி அவரைச் சந்தித்தார்.
@குமரன், மிக்க நன்றி. ஆனால் என்னோட எழுத்தைப் பின்னூட்டத்தில் இருந்து தான் கண்டு பிடிக்க முடிஞ்சதுனு சொல்லிட்டீங்க, எனக்கு ஒரு பாடம் இது, இனிமேல் கவனிக்கணும், நன்றி, குமரன்.
அடடா. கீதாம்மா. மாத்திப் புரிஞ்சிக்கிட்டீங்க. இந்த இடுகை உங்க நடையில தான் அப்படியே இருக்கு. ஏதோ வேற ஒரு காரணத்தால இது மௌலி எழுதுனதுன்னு நினைச்சுட்டேன். அதனால தான் நடை மௌலி நடை மாதிரி இல்லையேன்னு நினைச்சேன். அப்புறம் உங்க இடுகைன்னு தெரிஞ்ச பிறகு பார்த்தா அப்படியே உங்க நடை தெள்ளத் தெளிவா இருக்கு.
கூட்டுப் பதிவில் இப்படி ஒருவர் எழுதியதை மற்றவர் எழுதியதாக எண்ணிக் கொள்வது வெகுவாக நடப்பது. நிறைய முறை மற்றவர் எழுதிய இடுகைகளுக்கான பாராட்டுகள் எனக்குக் கிடைத்திருக்கிறது. நான் எழுதியதற்கான பாராட்டுகள் மற்றவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
// ஏதோ வேற ஒரு காரணத்தால இது மௌலி எழுதுனதுன்னு நினைச்சுட்டேன். அதனால தான் நடை மௌலி நடை மாதிரி இல்லையேன்னு நினைச்சேன். அப்புறம் உங்க இடுகைன்னு தெரிஞ்ச பிறகு பார்த்தா அப்படியே உங்க நடை தெள்ளத் தெளிவா இருக்கு//
அட எனக்குன்னு ஒரு நடை இருக்கா? :-)...
முதல் முறையா நீங்க சொல்லியிருக்கீங்க குமரன்.. என் நடை எப்படியிருக்கு?, என்ன மாற்றம் தேவை, கொஞ்சம் சொல்லுங்களேன்?
:-)
@mathuraiyampathi,இப்போத் தான் முருகன் பத்தின பதிவிலே எழுதவே ஆரம்பிச்சிருக்கீங்க, இன்னும் ரொம்ப தூரம் போகணும், அதுக்குள்ளே என்ன அவசரம்?????
//இப்போத் தான் முருகன் பத்தின பதிவிலே எழுதவே ஆரம்பிச்சிருக்கீங்க//
நான் முருகன் பதிவுலயா?, என்ன சொல்றீங்க....
புதசெவி...
//அட எனக்குன்னு ஒரு நடை இருக்கா? :-)...//
அட, மதுரையம்பதி அண்ணா, உங்க நடை எப்படினு கொஞ்சம் நடந்து காமிங்க பாத்துட்டு சொல்றேன். :))
அது கந்தன் கருணைல வீரபாகு நடையா? இல்ல திருவருட்செல்வர்ல வர சிவாஜி நடையா? இல்ல நம்ம பாசுர புயல்... சரி வேணாம்... எதுக்கு வம்பு? :p
//நான் முருகன் பதிவுலயா?, என்ன சொல்றீங்க....
புதசெவி...
//
என்னது புரியலையா? உங்க முருகன் பத்தின பதிவின் தலைப்பை தான் மேடம் சொல்றாங்க. இதுக்கு கூடவா புதசெவி, குருசெவி? :))
Post a Comment