யார் நல்ல குரு? இந்தக்கேள்விக்கு விடை அளிப்பது மிகவும் கடினம். ஒரு மாதிரியாக இந்தக் கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.கொஞ்சம் ஆன்மீகத்தில் இருந்து விலகிச் சென்று பார்ப்போமா?
ஒரு ஊரில் மிகச் சிறந்த ஒருவரைக் கண்டு பிடித்து அவருக்குச் சன்மானமும் வழங்க ஏற்பாடு செய்தனர்.ஒரு குழு அமைத்து அவர்கள் மூன்று பேரைத் தேர்வு செய்தனர். பிறகு நகரத்தந்தையைக் கூப்பிட்டு அவரை மூன்று பேரில் ஒருவரையோ அல்லது வேறு ஒரு தகுதியான நபருக்கு பரிசு வழங்க அனுமதியும் அளித்தனர். நகரத்தந்தையும் முதலில் மேடைக்கு வந்த நபரிடம் கேட்டார்.""ஐயா நீங்கள் செய்த நல்ல காரியம் என்ன?
அந்த மனிதர் சொன்னார். நான் அரசாங்கத்தில் தலைமைப் பொறியாளராக வேலப் பார்த்தேன்.ஒருபைசாகூட லஞ்சம் வாங்காமல், சிறந்த கட்டுமானப் பொருள்களின் கொணர்ந்து பல கல்லூரிகள்,சாலைகள்,பொதுப்பணிக் கட்டிடங்கள்,கட்டினேன் அவைகள் இன்றளவும் நிலையாக நிற்கின்றது என்றார்.நகரத்தந்தையும் ""சரி நல்லது செய்தீர்கள் ஐயா"" என்று வாழத்திவிட்டு இரண்டாவது மனிதரிடம் சென்றார்.
இரண்டாவது மனிதரிடமும் அதே கேள்வி. இரண்டாவது மனிதர் சொன்னார்""ஐயா நான் முதன்மை மருத்துவராக அரசாங்க பொது மருத்தவமனையில் பணியாற்றினேன்.நான் இருந்தபோது ஏழை எளிய மக்களுக்கு மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சையும் நல்ல மருந்துகளும் இலவசமாக கிடைக்கும்படி செய்தேன்.நகரத்தில் நோய்வாய்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து நோயில்லா ந்கரமாக்கினேன்"" என்றார். நல்லது செய்தீர்கள் ஐயா என்று கூறிவிட்டு மூன்றாவது மனிதரிடம் சென்றார் தலைவர்.
மூன்றாவது மனிதரும் தலைவரின் கேள்விக்கு ""ஐயா நான் இந்த ஊரில் மிகச் சிறந்த வழக்குரைங்கராக பணியாற்றினேன். நான் பணியாற்றிய பொழுது ஒரு பொய் வழக்கைக்கூட எடுத்துக்கொண்டதில்லை.எழைஎளியமக்களுக்காக வாதாடி அவர்களுக்கு நீதிகிடைகச் செய்தேன்.நீதிபதியாக பதவிஉயர்வு பெற்றதும் பாரபட்சமின்றி நீதியின்படி தீர்ப்பு வழங்கினேன்"" என்றார். தலைவரும் சிறந்த பணியாற்றினீர்கள்"" என்று கூறிவிட்டு யாருக்கு பரிசு அளிப்பது மனதில் முடிவெடுத்து அறிவிப்பை சொல்லுவதற்காக மேடையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்
அப்பொழுது கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது'.. என்னவென்று பார்த்தால் ஒரு எண்பது வயது மிகுந்த முதியவர் கூட்டதின் முன்வரிசையில் வந்து அமர்ந்தார். அவரைக்கண்டதும் மக்கள் அவருக்கு வணக்கம் செலுத்தினார்கள். மேடையில் இருந்த சிறப்பு செயல்களைச் செய்தமூவரும் அவருக்கு அருகே சென்று அவருக்கு வணக்கம் செலுத்தி அவரை இருக்கையில் அமரச்செய்தனர். அவர்களைப்பார்த்து தலைவர் கேட்டார் யார் அந்த பெரியவர் என்று, அவர்கள் மூவரும் கூறினார்கள் ""ஐயா இவர்தான் எங்களின் தொடக்கப்பள்ளி ஆசிரியர். அவர்தான் எங்களுக்கு சிறுவயதிலேயே ஒழுக்கத்தையும்,நன்நடத்தையையும்,வாழ்க்கையில் எப்படி சமூகத்திற்கும் ஏழை எளியவற்கும் உதவிபுரியவேண்டும் என்பதை கற்றுக்கொடுத்த ஆசான் என்றனர். நாங்கள் மூவரும் எங்கள் குரு சொன்னபடித்தான் நடந்தோம் வேறு எதுவும் நாங்களாகச் செய்யவில்லை என்றார்கள்.
தலைவர் உடனே அந்தப்பெரியவரை மேடைக்கு அழைத்து வரச்சொன்னார். அவர் வந்ததும் கூடத்தினரைப் பார்த்து சிறந்த மனிதருக்கான பரிசை இந்த ஆசானுக்குத்தான் அளிக்கப் போகிறேன்.ஏன் என்றால் இவ்வளவு சிறந்த சேவையை மக்களுக்கு அளித்த மூன்று ரத்தினங்களை அளித்த இந்த குருவைக்காட்டிலும் வேறு யார் சிறந்த மனிதராக இருக்கமுடியும்.
இதைகேட்ட அந்த மூன்றுபேர்களும் கண்களில் கண்ணீர்மல்க ஐயா நாங்களும் இதற்கு உடன்படுகிறோம் என்றார்கள். எங்களுக்கு பரிசு கிடைத்திருந்தால் ஏற்படும் மகிழ்ச்சியைவிட இப்போது எங்கள் குருவுக்கு கிடைக்கும்போது இரட்டிப்பாக இருக்கிறது என்றார்கள்.
மறுபடியும் முதலில் கேட்ட கேள்விக்கு வரலாம். யார் நல்ல குருவாக இருக்கமுடியும்? நல்ல செயல்களை செய்கின்ற மாணாகர்களை உருவாக்கும் மனிதரே நல்ல குருவாக இருக்கமுடியும் சரி நல்ல சிஷ்யனை எப்படி குரு தேர்ந்தெடுப்பார் என்ற இரண்டாம் கேள்விக்கு பதிலை அடுத்த பதிவில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் அளிக்கிறேன்
பகவான் ரமணரின் உபதேசங்களிலிருந்து படித்த கருத்தை கதை வடிவில் உருவாக்கினேன்.

20 comments:
திரச ஐயா,
நல்ல கருத்து. இதை பதிவதற்க்கா யோசிச்சசீங்க?
நம்மில் எத்தனை நபர்கள் நமது முதல் ஆசிரியரை நினைவில்/மனதில் வைத்து பூஜிக்கிறோம், அவர்களுக்கு மரியாதை செய்கிறோம் என்று நாமே, நம்மைக் கேள்விகேட்டுக் கொள்வோம்.
//நல்ல செயல்களை செய்கின்ற மாணாகர்களை உருவாக்கும் மனிதரே நல்ல குருவாக இருக்கமுடியும் சரி நல்ல சிஷ்யனை எப்படி குரு தேர்ந்தெடுப்பார் என்ற இரண்டாம் கேள்விக்கு பதிலை அடுத்த பதிவில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் அளிக்கிறேன் //
என்ன இப்படி ஒரு கேள்வி திரச ஐயா. அடுத்த பதிவினையும் இப்பதிவின் தொடராக நீங்களே போட வேண்டுகிறேன்.
நல்ல கருத்து. இதை பதிவதற்க்கா யோசிச்சசீங்கநல்ல கருத்து. இதை பதிவதற்க்கா யோசிச்சசீங்க
அதில்லை மௌளி சார். ஆன்மீகம் கலப்பில்லாமல் இருக்கிறதே படிப்பவர்கள் விரும்புவார்களோ என்ற எண்ணம்தான்.இதைப்பற்றி நெடுநாட்களாகவே நினைத்திருந்தேன் நேற்று நீங்கள் சொன்னவுடன் போட்டு விட்டேன்.ஆழ்வார் பேட்டை,அம்பத்தூர், C/ஓ மடிப்பாக்கம் இவர்களையும் கவனிக்க வேண்டாமா? புனே பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
இன்றும் கல்லூரி ஆசிரியர் வந்தால் பஸ்சில் எழுந்துஇடம் கொடுக்கிறோமோ இல்லையோ நம்முடைய ஸ்கூல் வாத்தியார் வந்தால் எழுந்து இடம் கொடுக்கும் பண்பு இருக்கிறது
அருமையான கதை திராச!
மெளலி அண்ணா, நோட் பண்ணீங்களா? இப்பல்லாம் அடியேனின் குரு, பதிவுகளைச் கதையாச் சொல்லித் தான் விளக்கறாரு! :-)
//கேள்விக்கு பதிலை அடுத்த பதிவில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் அளிக்கிறேன்//
ஆகா...
சிகராத்ரி கூறிட்ட வேலும்
செஞ்சேவலும் செந்தமிழால்
பகர் "ஆர்வம்" ஈ!
உடனே அளியுங்கள்!
நல்ல குரு இதுவரை எனக்கு அமையவில்லையே என நினைத்திருந்தேன். முதலில் நான் நல்ல சீடனாகனும்னு புரிஞ்சுகிட்டேன். ரவி அண்ணா, என்னது இது என்னை மாதிரி பச்சை புள்ளைங்க புரிஞ்சுக்க வேண்டாமா ! கொஞ்சம் சிம்பிளா சொல்லுங்க...
நல்ல கருத்து/கதை ஐயா. நன்றிகள்.
//கேள்விக்கு பதிலை அடுத்த பதிவில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் அளிக்கிறேன்//
ஆர்வத்துக்கு குறையே இல்லை; அதைப் பற்றிய சந்தேகமே வேண்டாம் :)
//நல்ல செயல்களை செய்கின்ற மாணாகர்களை உருவாக்கும் மனிதரே நல்ல குருவாக இருக்கமுடியும் //
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்..
பரிந்தோம்பிக்காக்க ஒழுக்கம்..
இவைகளை உணரச் செய்பவரே உண்மையான ஆசான். பிற்காலத்தில் அந்த மாணவன் எதை செய்தாலும் பிறர்க்கு நன்மையாகவே இருக்கும்.
அடுத்த பதிவை ஆவலுடன் காத்திருப்போம்
.// யார் நல்ல குருவாக இருக்கமுடியும்? நல்ல செயல்களை செய்கின்ற மாணாகர்களை உருவாக்கும் மனிதரே நல்ல குருவாக இருக்கமுடியும் சரி நல்ல சிஷ்யனை எப்படி குரு தேர்ந்தெடுப்பார் என்ற இரண்டாம் கேள்விக்கு பதிலை அடுத்த பதிவில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் அளிக்கிறேன்//
அருமை சார், அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கோம். எனக்கும் எனக்குப் பாடங்கள் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை மறக்க முடியாது. அவ்வளவு உழைத்திருக்கின்றதாலேயே இன்னிக்கு இந்த அளவுக்கு நினைவிலும் இருக்கின்றது. உண்மையில் நல்ல ஆசிரியர் என்பதை அனுபவித்தாலேயே உணர முடியும்.
மெளலி அண்ணா, நோட் பண்ணீங்களா? இப்பல்லாம் அடியேனின் குரு, பதிவுகளைச் கதையாச் சொல்லித் தான் விளக்கறாரு! :-)
அதெல்லாம் ஒன்னுமில்லை சொந்த சரக்கு இல்லை அதான் கதை ரூபத்தில். இன்னொன்று ரவியின் கட்டளையை மீறமுடியுமா?
ஆகா...
சிகராத்ரி கூறிட்ட வேலும்
செஞ்சேவலும் செந்தமிழால்
பகர் "ஆர்வம்" ஈ
விளக்கம் தேவை இடம் பொருள் கூறி
அண்ணா, என்னது இது என்னை மாதிரி பச்சை புள்ளைங்க புரிஞ்சுக்க வேண்டாமா ! கொஞ்சம் சிம்பிளா சொல்லுங்க...
ராகவன் இது எனக்கா ரவிக்கா? எதோ உள்குத்து போல தெரியுது.
நல்ல குரு இதுவரை எனக்கு அமையவில்லையே என நினைத்திருந்தேன்
ஆமாம் நீங்கதான்
ஏற்கனவே முருகனுக்கு சீடன் ஆனதா கேள்வி
ஆர்வத்துக்கு குறையே இல்லை; அதைப் பற்றிய சந்தேகமே வேண்டாம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவிநயா. உங்கள் ஆர்வத்தின்மீது எனக்கு சந்தேகம் இல்லை? அலுவல் வேலை மிகுதியாக ஆகிவிட்டது.
இவைகளை உணரச் செய்பவரே உண்மையான ஆசான். பிற்காலத்தில் அந்த மாணவன் எதை செய்தாலும் பிறர்க்கு நன்மையாகவே இருக்கும்வாங்க கபீரன்பன். நீங்கள் சொல்லுவது மிகவும் சரி.சூரிய பகவானிடத்தில்தான்
வாயுகுமரரான ஹனுமான் சீடராக இருந்து படித்தார். அவர் செய்த காரியங்கள் எல்லாமே சிறந்ததாக இருந்தது.
எனக்குப் பாடங்கள் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை மறக்க முடியாது. அவ்வளவு உழைத்திருக்கின்றதாலேயே இன்னிக்கு இந்த அளவுக்கு நினைவிலும் இருக்கின்றது
உண்மைதான் மேடம். எனக்குகூட Cஆ வில் படித்த பல விஷ்யங்கள் மறந்துவிட்டது. ஆனால் 5 வதில் படித்த மூதுரை, கொன்றைவேந்தன், நல்வழி போன்றவைகள் மறக்கவில்லை. ஆனால் அம்பியின் கல்யாணநாளை மறக்கும் வண்ணம் இன்னும் ஞாபகசக்தி போகவில்லை
//ஆனால் அம்பியின் கல்யாணநாளை மறக்கும் வண்ணம் இன்னும் ஞாபகசக்தி போகவில்லை//
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சேம் சைட் கோல்???? இருங்க சார், பார்த்துக்கிறேன், பாயிண்ட் நோட்டட்!!!! :P :P :P :
//தி. ரா. ச.(T.R.C.) said...
ராகவன் இது எனக்கா ரவிக்கா? எதோ உள்குத்து போல தெரியுது.
//
ஐயா.. என்ன இது.. நான் நேத்திக்கு பிறந்த பச்சை குழந்தை.. எனக்கு எப்புடி உள்குத்து தெரியும். அது ரவி அண்ணாவுக்கு தான்..
ஆர்வமாகக் காத்திருக்கிறேன் தி.ரா.ச. எப்போது அடுத்த இடுகை வருமென்று.
//தி. ரா. ச.(T.R.C.) said...
ஆமாம் நீங்கதான்
ஏற்கனவே முருகனுக்கு சீடன் ஆனதா கேள்வி
//
நான் எல்லார்க்கும் சீடனாகனும்னு நினைக்கிறேன். சீடனா ஏத்துப்பீங்களான்னு தான் எனக்கு தெரியவில்லை ?
முதல் முயற்சி.. என் அபிமான ஸ்தல விஜயம் முடிந்தவுடன் சொல்கிறேன்.
ஆர்வமாகக் காத்திருக்கிறேன்
அடுத்த பதிவினையும் இப்பதிவின் தொடராக நீங்களே போட வேண்டுகிறேன்
ஆர்வமாகக் காத்திருக்கிறேன்
அடுத்த பதிவினையும் இப்பதிவின் தொடராக நீங்களே போட வேண்டுகிறேன்
வாங்க மதுரை குடிமகனே. முதல் வருகைக்கு ம் கருத்துக்கும் நன்றி. அடுத்த பதிவு போடமுடியுமான்னு தெரியலை. என்னுடைய முறை வரவேண்டும்.இப்பதிவில் என்னவிட் அழகாகவும் கருத்துச்செறிவுடனும் எழுதும் வல்லமை படைத்த பதிவாளர்கள் உண்டு.அவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும். ஆனால் நிச்சியம் அளிப்பேன்
Post a Comment