கொஞ்ச நாள் முன்னால் நெரூர் போக நேர்ந்தது. அதைப்பத்தி பதிவு போடப்போய் மௌலி ஆச்சார்ய ஹ்ருதயத்திலேயும் இதை வெளியிடணும்ன்னு கொக்கி போட்டார். ரொம்பவே லைட்டா பேச்சு மொழியில எழுதறவன் இதிலே போடலாமான்னு யோசிச்சேன். உம்ம்ம்ம், விதி யாரை விட்டது?
கொஞ்சம் அதிக தகவல்களுடன் சில படங்களுடன் இதோ போட்டாச்சு.
சிறிய, கொஞ்சம் பெரிய கிராமங்களை தாண்டி நெரூர் போய் சேர்ந்தோம். நேரடியாக பிரம்மேந்திராள் அதிஷ்டானத்துக்கு போனோம். நல்ல கடுமையான வெயில். புகளூர் போன நண்பர் அப்போதே வெயிலைப்பத்தி புகார் சொல்லிக்கொண்டு இருந்தார். அப்போது அதிகமாக சொல்கிறாரோ என்று நினைத்தேன். இல்லை என்று தெரிந்தது.
சமீபத்தில் கட்டிய கட்டிடங்கள். நுழைவாயில் அருகில் பூந்தோட்டம். சற்று உள்ளே சென்று கோவிலின் வாசல். சற்றே முன் குருக்கள் வெளியே போய்விட்டார் என்றார்கள். நல்ல வேளையாக நடை சாத்தவில்லை. ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவர் அங்கே தொண்டு செய்து வருகிறார். அவர் எங்களை அழைத்துப்போய் சுற்றிக்காட்டினார். நேரடியாக உள்ளே நுழைய இருப்பது காசி விஸ்வநாதர் சன்னதி. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.
வலது பக்கம் அம்பாள் சன்னதி. 90 டிகிரி கோணத்தில். இவர்களை வணங்கி சுற்றிக்கொண்டு பின் பக்கம் போனால் அங்கே பிரம்மேந்திராள் சித்தி ஆன இடத்தை பார்க்கலாம்.
நாங்கள் முதல் முறை பார்த்தபோது துயரமே மேலிட்டது.
பிரம்மேந்திராள் சித்தி ஆகும் முன் இந்த இடத்தில் ஒரு குகை அமையுங்கள் என்று சொல்லி அங்கு அமர்ந்துவிட்டார். "அங்கே ஒரு வில்வ மரம் ஒன்பதாம் நாள் முளைக்கும்: சித்தி ஆன 9 ஆம் நாள் காசியில் இருந்து ஒரு பிரம்மசாரி ஒரு சிவலிங்கத்துடன் வருவான். அந்த சிவலிங்கத்தை இந்த உடல் அமரும் இடத்திலிருந்து 12 அடி தூரத்தில் கிழக்கே பிரதிஷ்டை செய்யுங்கள்" என்று தெரிவித்ததாக சொல்கிறார்கள். அதே போல நடந்தது. புதுக்கோட்டை மகாராஜா சுற்று சுவர் எழுப்பினாராம்.
இந்த இடத்தை நிர்வகிப்பதில் கொஞ்சம் பிரச்சினை இருக்கிறது. சாதாரணமாக இப்படி சிவலிங்க பிரதிஷ்டை செய்தால் அதற்குத்தான் அபிஷேக ஆராதனைகள். ஆனால் இங்கோ சமாதியான இடத்தில் சிவலிங்கத்தை வைக்கவில்லை. ஆகவே அது ஒரு கோவிலாக மாறி அரசின் கைக்கு போய்விட்டது. காசு இல்லாத இடத்தில் அரசு என்ன அக்கறை காட்டப்போகிறது?
குழம்பிய பக்தர்கள் வில்வ மரத்துக்கே பூஜை செய்ய ஆரம்பித்தனர் போலும். பக்கத்தில் சதாசிவானந்த சுவாமிகள் என்று ஒரு துறவி கைலாஸ ஆஸ்ரமம் என்று அமைத்து இந்த கோவிலையும் சுற்றி சுவர் எழுப்பி கணபதி, முருகன், பைரவர் என்று பிரதிஷ்டை செய்து கொஞ்சம் பெருக்கினார். பிறகு பக்தர்கள் உற்சாகத்தில் வில்வ மரத்தை சுற்றி தியானம் செய்ய வசதியாக மண்டபம் அமைத்து மரத்தை சுற்றி ஒரு அதீத உற்சாகத்தில் கல் தளமும் அமைக்கவும்; நாளாக ஆக வில்வ மரத்துக்கு 50 லிட்டர் 100 லிட்டர் ஆவின் பால் என்று அபிஷேகம் செய்யவும் மரம் பட்டுப்போய்விட்டது. இயற்கையாக எதையும் இருக்கவிட மனிதன் ஏன் சம்மதிப்பதில்லை என்பது எனக்கு புரியாத புதிர்.
போதாக்குறைக்கு ஒரு கீத்துக்கொட்டாய் வேறு மரத்தின் அருகில் போட்டு வைத்து அங்கே விளக்கையும் ஏற்றி வைத்துவிட்டதால் ஒரு நாள் இரவு கொட்டகை தீப்பிடித்து அதுவும் எரிந்து கொட்டகையும் எரிந்து காவலுக்கு இருந்த ஒரு சிறுவன் முயன்ற வரை அதை அணைக்கப்பார்த்து... நாங்கள் போனபோது பட்டுப்போய் கருகிய மரமே காட்சி அளித்தது. ரொம்ப முன்னேறி பாலன்ஸ் ஆகிவிட்டவன் என்று நினைத்துக்கொண்டு இருந்த எனக்கு அப்படி ஒன்றும் இல்லை என்று நன்றாக புரிந்து போய்விட்டது. அவ்வளவு அப்செட் ஆகிவிட்டேன். ஏதும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி வந்த காரியத்தை பார்க்க போய்விட்டோம்.
நெரூர் அக்கிரஹாரம் கொஞ்சம் வித்தியாசமான அமைப்பு உள்ளது. இரண்டு சாரி வீடுகள். நடுவில் வாய்க்கால் ஒன்று ஓடுகிறது. ஓரிரண்டு கிளைத்தெருக்களும் உண்டு. வீடு-வீதி- வாய்க்கால் -வீதி- வீடுகள் இப்படி இருக்கிறது. ஒரு பக்கம் கொஞ்சம் பேர் இன்னும் வசிக்கிறார்கள். எதிர் சாரியில் ஒரு போஸ்ட் ஆபீஸ். சமீபத்தில் வந்த ஒரு ஜ்யோதி நிலையம் -வள்ளலார் பக்தர் ஒருவர் ஒரு விசாலமான ஹால்; பின்னால் ஒரு ஓடு வேய்ந்த பிரமிட்; பக்கதில் அவர் வசிக்க வீடு இப்படி கட்டி இருக்கிறார்.தினசரி காலை கஞ்சி ஊற்றுகிறார்கள். ஒவ்வொரு பௌர்ணமியும் அன்னதானம். அங்கே இருக்கக்கூடிய சுமார் 20 வீடுகளில் 7-8 தவிர எல்லாம் பராமரிப்பு இல்லாமல் இடிந்து போய்விட்டன. பிரம்மேந்திராளுக்கு பூஜை செய்யும் கன்னடத்து பட்டர், மடத்து பூஜை செய்யும் ஒருவர் தவிர யாரும் அங்கே குறிப்பிட்டு சொல்கிறபடியாக இல்லை.
நாங்கள் பார்க்கப்போன வக்கீல் அங்கே இருக்கும் ஸ்ரீமடத்து ஔஷதாலயத்துக்கு நிர்வாகியாக இருக்கிறார். சியவனப்பிராஷ் போல சில மருந்துகள் தயாரிக்கிறார்கள்.
வில்வ மரம் பற்றி விசாரித்தோம். சுமார் 5 வருஷங்களாக அது பட்டுபோய்க்கொண்டு இருப்பதாயும் அப்போதிலிருந்து அந்த அக்ரஹாரத்தவர்களுக்கு துர்பிக்ஷம்தான் என்றும் சொன்னார். சமீபகாலம் வரை துளிர் கொஞ்சம் இருந்தது. இப்போது தான் முழுக்க எரிந்துபோய்விட்டது என்று அவர் சொன்னபின் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கொஞ்சம் கனத்த மனசுடன் கிளம்பினோம்.
அடுத்த பதிவிலிருந்து பிரம்மேந்திராள் சரிதம்.
Thursday, November 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
நன்ஸ் திவாண்ணா..
தொடர்ச்சியான அடுத்த பதிவினை /பதிவுகளை ஷெட்யூல் பண்ணி வச்சுடுங்க அடுத்த வியாழனுக்கு :-).
இது திவா சாரின் முதல் பதிவு அல்லவா ஆசாரிய ஹ்ருதயத்தில்! வாழ்த்துக்கள், வணக்கங்கள் திவா சார். இங்கும் கான மழை பொழியுங்கள்! :)
ada, vanthacha??? Acharya hrudayam does not exist appadinu message vanthathu. :(((((( kashta pattu illai ulle vara vendi irukku??? enna ithu?? :P:P:P:P
//Page not found
Sorry, the page you were looking for in the blog ஆச்சார்ய ஹ்ருதயம் does not exist. //
again and again the same message! :((((((( Brammedrar-5 varalai!
//நாளாக ஆக வில்வ மரத்துக்கு 50 லிட்டர் 100 லிட்டர் ஆவின் பால் என்று அபிஷேகம் செய்யவும் மரம் பட்டுப்போய்விட்டது//
:((
மக்களிடம் எடுத்துச் சொன்னால், அபிஷேகம் பண்ண விடாமல் குழப்பம் ஏற்படுத்துகிறாயா என்று எகிறிக் கொண்டு வருவார்கள்!
//இயற்கையாக எதையும் இருக்கவிட மனிதன் ஏன் சம்மதிப்பதில்லை என்பது எனக்கு புரியாத புதிர்//
செயற்கைப் பூச்சு, ஓவர் புனிதத் தன்மை ஏற்றுவதும் நின்றால் ஒழியக் கடினம். மக்களைச் சொல்லி ஒன்றுமில்லை! மடம்/நிர்வாகிகள் தான் இதற்கெல்லாம் ஒரு விடிவு தேட வேண்டும். அந்தக் கடமையும் அவர்களுக்கு இருக்கு!
//அதுவும் எரிந்து கொட்டகையும் எரிந்து காவலுக்கு இருந்த ஒரு சிறுவன் முயன்ற வரை அதை அணைக்கப்பார்த்து... நாங்கள் போனபோது பட்டுப்போய் கருகிய மரமே காட்சி அளித்தது//
ஈஸ்வரா....
கற்பனை பண்ணிப் பாக்கவே கஷ்டமா இருக்கு! நீங்க நேரே வேற பாத்துட்டு வந்திருக்கீங்க!
திவா சார், horticulture dept-ல, கொஞ்சம் முளையிலேயே சொன்னா, முயற்சி எடுத்து, குணப்படுத்தித் தருவாங்களே!
திருவரங்கத்தில் தாயார் சன்னிதிக்கு அருகே வில்வ மரம் இப்படித் தான் மீண்டும் துளிர்த்தது-ன்னு படிச்சிருக்கேன்!
பொறுப்பில் உள்ளவர்கள் யாரிடமாச்சும் சொல்லி அனுமதி கேட்டு முயற்சி செய்யலாமா? என்ன நினைக்கறீங்க?
திவா அவர்களுக்கு வணக்கமும் வரவேற்பும். இங்க படங்களோடயா... நல்லது. கடைசியா துளிர்த்திருக்க வில்வ மரத்தோட படமும் போடுவீங்கதானே :)
(reader-ல ரெண்டு போஸ்ட் காண்பிச்சதே... வந்து பாத்தா ஒண்ணுதான்)
சிந்தா நாஸ்தி கில தேஷாம் சிந்த நாஸ்திகில இப்படியாகும் என்று தெரிந்துதான் சதாசிவ பிரும்மேந்திரார் பாடி விட்டு சென்றாரோ? சரிதத்தை திவா அண்ணாவின் மூலமாக தெரிந்து கொள்ள ஆசை. இரண்டு இடங்களுக்கு போகவேண்டும் என்ற ஆசை.ஒன்று நெரூர் மற்றொன்று பண்டரிபுரம். அவன் கருணையால் போகவேண்டும். மனதில் சஞ்சலம் வரும்போது சதாசிவபிரும்மேந்திராளின் கீர்த்தனப் பாடுவேன். மனநிம்மதி கிட்டும்.
.
//ada, vanthacha??? Acharya hrudayam does not exist appadinu message vanthathu. :(((((( kashta pattu illai ulle vara vendi irukku??? enna ithu?? :P:P:P:P//
யானை உள்ளே வரது கொஞ்சம் கஷ்டம்தான்!
:-))
//இங்கும் கான மழை பொழியுங்கள்!//
இங்கே மழையே காணோம். கான மழையா? அதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்பா!
:-))
//நன்ஸ் திவாண்ணா..
தொடர்ச்சியான அடுத்த பதிவினை /பதிவுகளை ஷெட்யூல் பண்ணி வச்சுடுங்க அடுத்த வியாழனுக்கு :-).
//
நன்றி மௌலி. எல்லாமே ஷெட்யூல் பண்ணி இருக்கு.
//:((
மக்களிடம் எடுத்துச் சொன்னால், அபிஷேகம் பண்ண விடாமல் குழப்பம் ஏற்படுத்துகிறாயா என்று எகிறிக் கொண்டு வருவார்கள்!//
உண்மைதான் ரவி. கொஞ்சம் கஷ்டமான விஷயம்.
//மடம்/நிர்வாகிகள் தான் இதற்கெல்லாம் ஒரு விடிவு தேட வேண்டும். அந்தக் கடமையும் அவர்களுக்கு இருக்கு!//
அவங்களுக்குதானே புரியலை!
/ஈஸ்வரா....
கற்பனை பண்ணிப் பாக்கவே கஷ்டமா இருக்கு! நீங்க நேரே வேற பாத்துட்டு வந்திருக்கீங்க! //
ஆமாம். அந்த துர்பாக்கியசாலிதான் நான்.
//திவா சார், horticulture dept-ல, கொஞ்சம் .....அனுமதி கேட்டு முயற்சி செய்யலாமா? என்ன நினைக்கறீங்க?//
அந்த வேலை நடக்குது ரவி. கூட வந்தவரே திசு வளர்ப்பு (டிஸ்யூ கல்சர்) நிபுணர்தான். :-)
// கடைசியா துளிர்த்திருக்க வில்வ மரத்தோட படமும் போடுவீங்கதானே :)//
நிச்சயமா!
(reader-ல ரெண்டு போஸ்ட் காண்பிச்சதே... வந்து பாத்தா ஒண்ணுதான்)
ஷெட்யூல் பண்ணறத்துக்கு பதில் ஒரு பதிவுக்கு பப்ளிஷ் ஆர்டர் கொடுத்துட்டேன். அப்புறமா அதை அழிக்க வேண்டியதா போச்சு!
//இப்படியாகும் என்று தெரிந்துதான் சதாசிவ பிரும்மேந்திரார் பாடி விட்டு சென்றாரோ? //
பிரம்மமாச்சே! தெரியாமலா இருந்து இருக்கும்!
//சரிதத்தை திவா அண்ணாவின் மூலமாக தெரிந்து கொள்ள ஆசை.//
ஓரளவு சுருக்கமாக எழுதுகிறேன். விரிவாக தெரிய புத்தகம் தேவையானால் அனுப்புகிறேன்.
// இரண்டு இடங்களுக்கு போகவேண்டும் என்ற ஆசை.ஒன்று நெரூர் //
வெல்கம். பையன் இப்போது அங்கேதான் இருக்கிறான். :-)
// மனதில் சஞ்சலம் வரும்போது சதாசிவபிரும்மேந்திராளின் கீர்த்தனப் பாடுவேன். மனநிம்மதி கிட்டும்.//
சாதாரணமா பாட்டே அப்படி பண்ணிடும் இல்லையா? அதுவும் பிரம்மேந்த்ராள் கீர்த்தனை. அப்புறம் என்ன?
//திவா அண்ணாவின் மூலமாக//
திவா தம்பி மூலமாக ன்னு இருக்கணும்னு நினைக்கிறேன். 54 :-))
இந்த பதிவிலே பின்னூட்டம் வந்தா எனக்கு மெயில் வரும்ன்னு நினைச்சேன். அப்படி செட்டிங்க் இல்லை போல இருக்கு. அதனால இதெல்லாம் என் கவனத்துக்கு வரலை! இன்னிக்குதான் எல்லாத்தையும் பார்த்தேன். மன்னிக்க!
திவா சார்,
ரொம்ப நாளா சதாசிவ பிரம்மேந்திரர் பத்தி தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். நீங்க எழுதினதுக்கு நன்றி!
நெரூர் அங்காளம்மன் எங்கள் குலதெய்வம். வருஷாவருஷம் அங்கே போகும் போது சதாசிவ பிரம்மேந்திரர் சமாதிக்கும் போவோம்.
எனக்கு உங்க ஈமெயில் தரமுடியுமா?
என்னோட ஈமெயில் என் பதிவு ப்ரோபைல்-லே இருக்கு.
வாங்க பாலா! நெருர்ல குல தெய்வமா! ரொம்ப நல்லதா போச்சு. இப்பவும் வருஷா வருஷம் போறீங்களா? வெளி நாட்டிலேந்து வந்து? சிரத்தையை பாராட்டணும்! அடுத்த முறை போகும் போது சொல்லுங்க.
Post a Comment