Wednesday, January 28, 2009

ஆச்சாரத்தை "எக்காரணம்" கொண்டும் விடக் கூடாதா?

ஆச்சார்ய ஹ்ருதயத்தில் அடியேன் எப்பமே ஊறிக் கிடந்தாலும்,
சில பல "புரிதல்கள்" காரணமாக,
"ஆச்சார்ய ஹ்ருதயம் என்னும் வலைப்பூவில்" பதிவுகள் இடுவதை நிறுத்தி வைத்திருந்தேன்!

ஆனால் பெரியவர் திராச ஐயா, ஒரு கிருத்திகை தினத்தன்று, முருகனருள் வலைப்பூவில் திடீரென்று ஆக்ஞாபித்தார்! - "கேஆரெஸ், மீண்டும் ஆச்சார்ய ஹ்ருதயத்தில் எழுதத் துவங்குங்கள்"!

இதோ, அவர் மார்கழியில் இட்ட இந்தப் பதிவினையே எடுத்துக் கொண்டு மீண்டும் துவங்குகிறேன்!


ஆச்சாரம் என்றால் என்ன?
ஆச்சாரம், ஆசரிதி, ஆசரணை என்று எல்லாம் சொல்லப்படும்! அத்தனைக்கும் ஒரே பொருள் தான்! ஆச்சாரம் = ஒழுக்கம்!

சரிங்க, அப்போ, ஒழுக்கம்-ன்னா என்ன?
* "ஒழுங்கா" நான் சொல்லுறதைக் கேள்!
* "ஒழுங்கா" என் பேச்சுப்படி நட!
* "ஒழுங்காப்" பேசு!
* "ஒழுங்கா" எழுது!
- இதெல்லாமா ஒழுக்கம்?

"ஒழுகுதல்"-ன்னு வேற இதைச் சொல்றாங்க? வீட்டுக் கூரையில் இருந்து மழைத்தண்ணி ஒழுகுதலா? ஹா ஹா ஹா! :)

தமிழில் இருக்கும் அழகான காரணப் பெயர்களில், மிக மிக அழகானது, இந்த "ஒழுக்கம்"!
ஒழுகு = நட, கடைப்பிடி, குணம் (ஆற்றொழுக்கு-நீரோட்டம் போல போய்க்கொண்டே இருப்பது!)

* உயர்வான ஒன்றைக் குறித்துக் கொண்டு, அதில் ஒழுகுவதே ஒழுக்கம்!
* உயர்வான ஒன்றைப் பற்றி, "பேச மட்டும் செய்யாது, அதைக் கடைப்பிடிப்பதே" = ஒழுக்கம்! ஆச்சாரம்!


ஒழுக்கம்-ன்னா என்ன-ன்னு ஐயன் என்ன சொல்றாரு?
ஒழுக்கம் விழுப்பம் தரலான்! ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்!

* பெரியதை (விழுப்பம்) தருவது = ஒழுக்கம்!
* அதனால் ஒழுக்கம் உயிரை விட கடைப்பிடிக்கப்படும்! ஆச்சாரத்தை (ஒழுக்கத்தை) கடைப்பிடித்தே ஆகணும்-ன்னு வள்ளுவரே சொல்றாரு! :)


ஓ...பெரியதைத் தருவது தான் ஒழுக்கமா?
அப்போ எது பெரியது? = கடவுள் தான் பெரியது! இதில் என்ன சந்தேகம்?
எனவே கடவுள் பூசை எல்லாம் "ஒழுங்கா" கடைப்பிடிச்சே ஆகணும்! "எக்காரணம்" கொண்டும் ஒழுக்கம்=ஆச்சாரம் விட்டுறக் கூடாது! சரி தானே?

ஹிஹி! சரி தான்! ஆனால் பொறுமை! பொறுமை!
ஞானம் பற்றிப் பேசினா மட்டும் போதாது! அனுஷ்டானமும் ரொம்ப ரொம்ப முக்கியம்! ஆத்மார்த்தமான அனுஷ்டானம்!
ஞானம், அனுஷ்டானம் ரெண்டுமே வேண்டும்!

ஒழுக்கம் விழுப்பம் தரலான்! பெரியதைத் தருவது தானே ஒழுக்கம்? இப்போ எது பெரியது-க்கு வருவோம்! எது பெரியது?
என் அப்பனும் சுப்பனும் ஆன முருகப் பெருமான், இதே கேள்வியைத் தான் கேட்கிறான்! - "ஒளவையே, எது பெரியது?"

பெரியது கேட்கும் எரி தவழ் வேலோய்!-ன்னு வரிசையா லிஸ்ட் போடுகிறாள் தமிழ் மூதாட்டி!
பெரிது பெரிது புவனம் பெரிது!
புவனமோ நான்முகன் படைப்பு!
...
...
புவியோ அரவுக்கு ஒரு தலைப் பாரம்
அரவமோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
...
...
உமையோ இறையவர் பாகத்து ஒடுக்கம்!
இறைவரோ தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்!
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

இப்போ சொல்லுங்க! எது பெரிது? கடவுள் பெரிதா? ஆமாம்! இல்லை-ன்னு சொல்லலை! கடவுள் = "பெரிது"! ஆனால் தொண்டர் = "பெரிதே"!!!

* கடவுள் = பெரி"து"!
* ஆனால், அடியார்களை கடவுளுக்கு ஆட்படுத்துதல் = பெரி"தே"!

இப்போ எல்லாத்தையும் ஒவ்வொன்னாக் கோர்த்துப் படிங்க!
* பெரியதைத் தருவது தான் ஒழுக்கம் (ஆச்சாரம்)! ஒழுக்கம் விழுப்பம் தரலான்!
* அடியார்கள் தான் "பெரிதே"!
* ஆக, அடியார்கள் என்னும் பெரிதைத் தருவது எதுவோ, அதுவே ஒழுக்கம் (ஆச்சாரம்)!

நித்ய கர்மாக்கள் ஆச்சாரம் தான்! அதை விடக் கூடாது! ஞானம்,அனுஷ்டானம் இரண்டுமே வேண்டும்! ஆனால்...ஆனால்....
* நித்ய கர்மாக்கள் = ஆச்சாரம்!
* அடியார்கள் = ஆச்சார-ஆச்சாரம்! சதாச்சாரம்!
நேயம் "சத்ஜன" சங்கே சித்தம் என்றார் ஜகத்குரு ஆதிசங்கரர்! அவர் வழி வந்தவர் அல்லவா காஞ்சி மாமுனிகள்! அவர் எப்படி இருப்பார்? ஆச்சாரத்தை விடுவாரா?

ஹிஹி! காஞ்சி மாமுனிகளா? ஆச்சாரத்தை விடவே மாட்டார்!
*** அடியவர்கள்=ஆச்சாரம்! - இந்த அடியவர் என்னும் ஆச்சாரத்தை விடவே மாட்டார்!
இனி திராச ஐயா இதைப் பற்றிப் பேசுவார்! அவர் இட்ட பழைய பதிவு இதோ! படிப்போம்! ஒழுகுவோம்!


மஹா பெரியவா என்று எல்லோரலும் அழைக்கப்பட்ட காஞ்சிமாமுனி பூத உடலை நீத்து இன்றோடு 13 ஆண்டுகள் முடிந்து விட்டது. அவரோடு இருந்த நாட்கள் நடந்த நிகழ்ச்சிகள் எதையும் மறக்க முடியவில்லை.
வெறும் சாஸ்திர சம்பிரதயாத்தை மட்டும் அவர் போதிக்க வில்லை. அதற்கு மேலும் சென்று சிறந்த மனிதாபிமானியாகத் திகழ்ந்தார்.அதற்கு தானே வழிகாட்டியாகவும் வாழ்ந்துகாட்டினார்

ஒரு சமயம் திருவாடனை என்ற ஊரிலிருந்து பெரியவர்களின் பக்தர் கூட்டம் அவரை தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்டமௌனம். பேசமாட்டார்கள்.
வாரத்தில் ஒருநாள் இது மாதிரி இருப்பார் 30 வருடங்களாக கடைபிடித்துவரும் விரதம். பிரதமராக இந்திராகாந்தி அவரைக் காண வந்தபோதும் இதை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. துறவிக்கு வேந்தன் துரும்புதான்.

வந்திருந்தவர்களில் சங்கரனும் ஒருவர். அவர் தேச விடுதலைக்காக போராடி ஆங்கிலேயரால் தடியடி பட்டு இருகண்களையும் இழந்தவர். மடத்து சிப்பந்தி ஒவ்வொருவரையும் பெரியாவாளுக்கு அறிமுகப் படுத்தினார் அவர்களுக்கு மௌனமாக ஆசி வழங்கினார். சங்கரன் முறை வந்ததும் அவரையும் அறிமுகப் செய்தார்கள்.

ஸ்வாமிகளுக்கு சங்கரனை நன்றாகத் தெரியும்.ஸ்வாமிகள் உடனே கம்பீரமான உரத்த குரலில்""என்ன சங்கரா சௌக்கியமா மனைவியும் குழந்தைகளும் சௌக்கியமா. இன்னும்விடாமல் தேசத்தொண்டு செய்து கொண்டு இருக்கிறாயா"" என்று கேட்டார்.

சங்கரனுக்கு மிகவும் சந்தோஷம்.பெரியவா பேசிவிட்டாரே என்று.
மடத்திலிருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சர்யமும் வருத்தமும் ஆச்சாரியர் தன்னுடைய விரதத்தை சங்கரனுக்குகாக முறித்து விட்டாரே என்று.

அவர்கள் எல்லோரும் பிரசாதம் வாங்கிக் கொண்டு சென்ற பிறகு மடத்து சிப்பந்திகள் ஸ்வாமிகளிடம் கேட்டார்கள் எதற்காக மௌனத்திலிருந்து விடுபட்டு பேசவேண்டும். எல்லாரையும் போலவே மௌனமாக அனுக்கிரஹம் செய்து இருக்கலாமே. சங்கரன் என்ன அவ்வளவு பெரியவனா?

ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.
""எல்லோரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது.அவனுக்கு கண்தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்க வந்திருக்கிறான்.ஆனால் அவனால் என்னைப் பார்க்கமுடியாது .

நான் மௌனமாக ஆசீர்வாதம் செய்தால் அவனுக்குப் போய் சேராது.
அவனுக்கு வருத்தமாக இருக்கும் நான் அவனைப் பார்த்தேனா ஆசீர்வாதம் செய்தேனா என்று.

இந்த தேசத்துக்காக தன் கண்களையே தியாகம் செய்தவன் அவன்.
அவனுக்காக நான் என்னுடைய ஆச்சாரத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குறைந்துவிடாது. அவனுடைய தியாகத்துக்கு முன்னால் என்னுடையது ஒன்றும் பெரிதல்ல""

இதைகேட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஸ்வாமிகளின் மனிதாபிமானத்தை எண்ணி மகிழ்ந்தார்கள் - காஞ்சி மாமுனியின் கருணை!


காஞ்சி முனிகளை விடவா நாம் ஆச்சாரத்தில் விற்பன்னர்கள்?
அவர் ஹ்ருதயம் = ஆச்சார்ய ஹ்ருதயம்!
அவர் ஹ்ருதயம் = அடியவர் ஹ்ருதயம்!


நமக்குள் ஆயிரம் ஒழுக்க வேறுபாடுகள், அனுஷ்டான வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்! ஆனால் ஹ்ருதயத்தில் அடியவர் வெறுப்பு என்பது மட்டும் கூடவே கூடாது! அது "ஆச்சாரம்" ஆகாது!

ஒழுக்கம் = விழுப்பம் தரலான்! பெரியதைத் தருவது தான் ஒழுக்கம்!
அடியார்கள் என்னும் பெரியதைத் தருவது தான் ஒழுக்கம் = ஆச்சாரம்!
இந்த அடியவர் ஆச்சாரத்தை "எக்காரணம்" கொண்டும்....இனி நாம் விட்டுக் கொடுக்கவே கூடாது என்று சங்கல்பித்துக் கொள்வோம்!
சந்திரசேகரேந்திர சரஸ்வதிகள் திருவடிகளே சரணம்!
நாராயண! நாராயண!

80 comments:

Anonymous said...

yesterday I was thinking about him.Today morning I see a post abt HIM.

great great great!

Anonymous said...

சமீப காலங்களில் உள்ள எல்லா, மத, உட்பிரிவுகளையும் நோக்குமிடத்து, இவரைப் போல் ஒரு நடமாடும் தெய்வம் வரவில்லை. இனிமேலும் வருவார்களா என்பது சந்தேகமே. காஞ்சி மடத்திலே கூட, இனிமேல் இவரைப் போல ஒருவர் வருவாரா?என்பது சந்தேகமே.

தன்னை நாடி வருவோரின் மனத்திலுள்ள எண்ணங்களை நன்றாகப் புரிந்து கொண்டு, அவர்கள் எதிர்பார்த்ததைவிட நன்றான ஒரு நன்மையைச் செய்து முடிப்பார்.

ஒரு முறை அவரை தரிசிப்பதற்காக ஒரு தம்பதியினர்,அதிகாலையிலே வந்துவிட்டனர். நண்பகல் வரை அவர்களுக்கு நேர ஒதுக்கு (appointment) அளிக்கவில்லை. பின்னால் வந்த அனைவரும் தரிசனம் பெற்றனர். என்ன குறை செய்தோமோ என்று வருந்தி நின்றவர்களை, நண்பகல் தாண்டி சுமார் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்பு அவர்களைக் கூப்பிட்டு,”நீங்கள் உங்கள் பையனுக்கு மணமாகவில்லை என்ற வருத்தத்தினால் தானே வந்துள்ளீர்கள் என்று விசாரித்து, அங்கே அப்போது தான் வந்த ஒரு தம்பதியரைக் காட்டி, அவர்கள் பெண்ணை மணம் பேசுஙகள் என்று அனுப்பி வைத்தார். இரண்டு தம்பதியரும் என்ன சொல்வது என்றூ தெரியாமல் திகைத்து விட்டனர்.
தங்களை, பரமாச்சாரியாள் காக்க வைத்ததே, அந்த இரண்டாவது தம்பதியனர் வருகைக்காகத் தான் என்பதையும் அப்போது தான் உணர்ந்தனர்.இரண்டாவது தம்பதியற்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஆயிரககணக்கில் பக்தர்கள் காத்திருக்கையில் தங்களுக்கு உடனடி அழைப்பு.(எந்தக் கோரிக்கையும் வைக்கும் முன்னரே தானாகக் கிடைத்த பரிசு.வரிசையில் காத்திருந்த போது பரமாச்சாரியாள் அழைப்பதாக அவ்ர்களை உடனடியாக உள்ளே வரச் சொன்னார்கள்.)எதுவும் கேட்காமாலே வரம் அளிக்கும் கருணை வள்ளலாகவே அந்த இடத்தில் இருந்தார்.

எல்லையில்லாக் கருணையும், மற்றவர்களின் துயரைத் தீர்ப்பதிலும் அவருக்கு இருந்த விஷேச குணங்கள், அவருடைய ஒழுக்கத்தால் வந்ததா? இறையருள் பரிபூர்ணமாக இருந்ததாலா? அன்பர் சேவையே இறைச் சேவை என்பதை நடைமுறையில் நன்கு செயல் படுத்தியதாலா?

பரமாச்சாரியாளின் கருணைக்கு எல்லோரும் இலக்காக, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Venkatasubramanian said...

சமீபத்தில் நான் படித்த "எட்டு சவரன் இரட்டை வடச் சங்கிலி " சம்பவம் பெரியவர் எத்தனை கருணை உள்ளவர் என்று காட்டிற்று.

சமூக அவலம் மிதமிஞ்சிப் போன இந்த கால கட்டத்தில், பெரியவரைப் போன்றோர் அவதரிப்பது அரிது. சித்தர்களும் ஞானிகளும் தங்கள் சொந்த சங்கல்பத்தினாலேயே பிறக்கிறார்கள் என்பது உண்மை.

காவி அணிந்தவரெல்லாம் சந்நியாசி. கண்கட்டு வித்தைக்காரன் எல்லாம் கடவுள் என்றாகிவிட்டது. சனாதன சமூகம் பெரியவாளைப் போல ஞானிகளைப் பெற வேண்டுமானால் , இல்லம் தோறும் சத்சங்கமும், தவமும் நடைபெற வேண்டும். பகட்டு பூஜைகளும், உபயோகமற்ற மடியும் ஆசாரமும் தூக்கி எறியப்பட வேண்டும். கீதை மறுபடியும் நமது தேசிய புத்தகமாக வேண்டும். தர்மம் நமது அச்சாணி ஆக வேண்டும்.

இன்றைய நம் குழந்தைகள் படிக்கும் செக்யுலர் புத்தகங்களால் பயன் இல்லை. இதிகாசங்களும், புராணமும் வேண்டும்.

திவாண்ணா said...

//உபயோகமற்ற மடியும் ஆசாரமும் தூக்கி எறியப்பட வேண்டும்//
அது என்ன என்னன்னு சொல்ல முடியுமா? :-|

எனக்கு தெரிந்தவரை பெரியவா மடியையும் ஆசாரத்தையும் ரொம்பவே வலியுறுத்தியவர்.

திவாண்ணா said...

அடியவர் யார் கேஆரெஸ்? pl define. அது புரிஞ்சா அவரை தூக்கி வெச்சுகிட்டு கொண்டாடலாம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திவா said...
அடியவர் யார் கேஆரெஸ்?//

கொஸ்டின் மார்க்கை மாத்திப் போட்டுட்டீங்க திவா சார்! இப்போ சரியான்னு பாருங்க!

அடியவர் யார்? = கேஆரெஸ்!
//அவரை தூக்கி வெச்சுகிட்டு கொண்டாடலாம்//

:))))

ச்ச்ச்ச்ச்சும்மாஆஆஆஆஆ சொன்னேன்!

அடியவர் யார்?
சொல்லத் துவங்குங்கள்! எல்லாரும் கலந்து பேசி ஒரு புரிதலுக்கு வரலாம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அடியவர் யார்?

மாதாச பார்வதீ தேவி
பிதா தேவோ மஹேஸ்வரஹ
பாந்தவா = சிவ பக்தாய
ஸ்வதேசோ = புவனத்ரய!

அடியவர் யார்?
யாரெல்லாம் அவன் "அடி"யை பாவிக்கிறார்களோ, அவர்கள் "எல்லாரும்" அடியார்!

"பாவனை" அதனைக் கூடில்
அவனையும் கூட லாமே!

குமரன் (Kumaran) said...

படித்தவுடன் சட்டென்று தோன்றிய ஒன்று, கட்டாயம் திருத்த வேண்டும் என்றில்லை: "புரிதல்" காரணங்கள் காரணமாக - இதனை 'புரிதல்' காரணங்களால் என்று எழுதினாலே போதும். :-)

அதென்ன 'ஆசார்ய ஹ்ருதயத்தில்' எழுதுவதென்றாலே 'ஆக்ஞாபித்தார்' என்றெல்லாம் எழுத வந்துவிடுமா? பணித்தார், கட்டளையிட்டார் என்றெல்லாம் சொல்லலாமே? :-)

ஆசார்ய, ஆச்சார்ய - எது சரி?
ஆசாரம், ஆச்சாரம் - எது சரி?

இரண்டுவிதமாகவும் எழுதலாமா?

குமரன் (Kumaran) said...

ம். ஒழுக்கம் என்பது உயர்வைத் தருவதாலே உயிரினும் மேலாகக் கருதப்படும் - இப்படித் தான் எனக்கு சொல்லித் தந்தாங்க. உயர்வைத் தருவது எதுவோ அதுவே ஒழுக்கம் - இதுவும் நல்லா இருக்கு; தலைகீழ் பாடம் என்றாலும். :-)

ஒளவையார் பாடல்ல நடுவுல சில வரிகள் காணோமே. மறந்துட்டீங்களா? இல்லை தொடர்பில்லாததுன்னு வெட்டிட்டீங்களா? :-)

குமரன் (Kumaran) said...

//நமக்குள் ஆயிரம் ஒழுக்க வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்! ஆனால் ஹ்ருதயத்தில் அடியவர் வெறுப்பு மட்டும் கூடவே கூடாது!//

உண்மை. அடியேன் இந்த ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் காப்பதற்கு ஆசார்ய தேவர் அருள் புரிய வேண்டும்.

குமரன் (Kumaran) said...

// இந்த அடியவர் ஆச்சாரத்தை "எக்காரணம்" கொண்டும்....இனி நாம் விட்டுக் கொடுக்கவே கூடாது என்று சங்கல்பிப்போம்!
//

அடியவரையும்....

Venkatasubramanian said...

முதலில் மடி என்பது சுத்தம். ஆசாரம் என்பது மேன்மை உடைய பழக்கங்கள். இந்த உரைகல்லை வைத்து நோக்கினால் அபத்தங்களும் காலத்துக்கு ஒவ்வாதவைகளும் நீங்கிவிடும்.

விவேகானந்தர் கூறியது போல், நம் மதம் சமையல் அறை மதம் ஆகி விட்டது. மடி என்ற பெயரில் சமையல் அறையை வெள்ளை அடிக்காமல் இருக்கும் மகானுபாவர்களை நான் அறிவேன். இன்னும் உள் பாத்திரம் , வெளிப் பாத்திரம் பிரச்சினை பெரிதாகவே இருக்கிறது.

இன்னொன்று , பெண்களை ஒதுக்குதல். நம் மதத்தில் பெண்களுக்கு சில இடங்களில் ஒப்புயர்வற்ற இடல் இருந்த போதிலும், அவர்களை மாத விடாய் காலத்தில் படுத்தும் பாடு மோசம். இஸ்க்கான் கோவில்களில், மற்றும் மேல் மருவத்தூர் கோவில்களில், இவை தோஷம் இல்லை என்று கூறிவிட்டனர் மற்றும் 'அந்த' காலங்களில் பெண்கள் சகல வழிபாடுகளையும் செய்யலாம் என்று விதியே போட்டு விட்டனர்.

இன்னும் பல உள்ளன. இவை போதும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உயர்வைத் தருவது எதுவோ அதுவே ஒழுக்கம் - இதுவும் நல்லா இருக்கு; தலைகீழ் பாடம் என்றாலும். :-) //

என்ன குமரன் நீங்க...உங்களுக்குத் தெரியாதா அடியேன்இன் இந்த SD கைவண்ணம்! :))
திருப்பாவையில் துவங்கிய SD திருக்குறள்-ல வந்து நிக்குது! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதென்ன 'ஆசார்ய ஹ்ருதயத்தில்' எழுதுவதென்றாலே 'ஆக்ஞாபித்தார்' என்றெல்லாம் எழுத வந்துவிடுமா? பணித்தார், கட்டளையிட்டார் என்றெல்லாம் சொல்லலாமே? :-)//

எல்லாம் ஒரு safety-க்கு தான் குமரன்! :)

இங்க எழுதும் போது மட்டும் மெளலி அண்ணாவின் மெஸ்மரிசத்தில் கட்டுண்டுப் போயிடறேன்!
ஏதோ மோகனாஸ்திரம், பிரம்மாஸ்திரம் எல்லாம் வச்சிருக்காரு போல அண்ணன்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இன்னொன்று , பெண்களை ஒதுக்குதல். நம் மதத்தில் பெண்களுக்கு சில இடங்களில் ஒப்புயர்வற்ற இடல் இருந்த போதிலும், அவர்களை மாத விடாய் காலத்தில் படுத்தும் பாடு மோசம்//

நல்ல சில பல கருத்துக்களை எடுத்தாண்டு இருக்கீங்க வேங்கடசுப்ரமணியன் ஐயா!
திரெளபதி மாத விடாய் காலத்தில் இருந்த போது தானே பரந்தாம அனுக்ரஹம்! பகவான் அவளைத் தன் வஸ்திரத்தால் தொட்டு உஜ்ஜீவிக்க வில்லையா?

பழக்கத்தை மாற்றியே ஆக வேண்டும் என்ற வீம்புக்காக மாற்றச் சொல்லவில்லை!
பழக்கத்தைப் புரிந்து கொண்டு மாற்றலுக்குத் தயாராய் இருப்பது நல்லது அல்லவா?

ஆலய மூர்த்திகளுக்கு மட்டும் பிம்ப சுத்தி செய்கிறோம்!
பழக்க வழக்கங்களுக்கும், அனுஷ்டானங்களுக்கும் பிம்ப சுத்தி செய்து கொள்வது வரவேணும் தான்!

அதற்கும் ஆச்சார்யர்களே அருளட்டும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@சுந்தர் அண்ணா
//அவருக்கு இருந்த விஷேச குணங்கள், அவருடைய ஒழுக்கத்தால் வந்ததா? இறையருள் பரிபூர்ணமாக இருந்ததாலா? அன்பர் சேவையே இறைச் சேவை என்பதை நடைமுறையில் நன்கு செயல் படுத்தியதாலா?//

அன்பர் சேவை வந்தால் இறையருள் தானே வந்து விடும் அல்லவா!
* பரமாச்சார்யாள் உள்ளத்தில் அன்பர் சேவை இருந்ததால், பணிவு கோயில் கொண்டு விளங்கியது!
* பணிவு இருந்ததால் ஒழுக்கம் தானே அமைந்தது!
* ஒழுகியதால் இறையருள் சித்தித்தது!

அடியவர் சேவை, அறிந்தோ அறியாமலோ ஏற்படும் ஆச்சார மமதைகளையும் நீக்க வல்ல சக்தி படைத்தது!
அடியவர் சேவை, ஆச்சார மமதையை நீக்கும்! மமதை நீங்க பணிவு வரும்! பணிவு வர பகவான் வருவான்!

அடியேன் சொல்வது சரி தானே-ண்ணா?

திவாண்ணா said...

//நித்ய கர்மாக்கள் ஆச்சாரம் தான்! அதை விடக் கூடாது!//
அப்பாடா! நல்ல காலம். இந்த காலத்து சில பேச்சாளர்கள் மாதிரி பக்தி ஒண்ணே போதும் மீதி எல்லாத்தையும் விடு ன்னு சொல்லை!

// ஆசார்ய, ஆச்சார்ய - எது சரி?
ஆசாரம், ஆச்சாரம் - எது சரி? // ஆசார்ய, ஆசாரம், தான் சரி

//உயர்வைத் தருவது எதுவோ அதுவே ஒழுக்கம் - இதுவும் நல்லா இருக்கு; தலைகீழ் பாடம் என்றாலும். :-) //

இதான் illogical fallacy. என் பெண்டாட்டி சிவப்பு புடவை கட்டி இருக்கா. சிவப்பு புடவை கட்டினவ எல்லாம் என் பெண்டாட்டியா?
:-)))))))))))))

//ஆச்சாரத்தை "எக்காரணம்" கொண்டும் விடக் கூடாதா?//

அருமையான உதாரணம் சொன்னீங்க!
ஆபத் கால தர்மம் ன்னு ஒண்ணு இருக்கு. அதுபடி பெரியவா மௌனத்தை கலைத்தார். அது போல எல்லாத்துக்குமே விதிவிலக்கு உண்டு. மற்ற மதங்கள் மாதிரி இல்லாம இந்த நீக்கு போக்குதான் நம்ம தர்மத்தை இன்னும் வாழ வைத்துகொண்டு இருக்கு.
ஆனால் இது ஆபத் கால தர்மம்தான் என்று உணரணும். எக்செப்ஷனை ரூல் ஆக்கக்கூடாது.
எப்பவுமே ஆபத் கால தர்மம் கடைபிடித்தா ஆபத்து வந்துகிட்டே இருக்கும்ன்னு என் அண்ணா சொல்லுவார்.

ஆசாரத்தை விடவும் நேரம் இருக்கு. ஆனா அதை எப்பவுமே கடைபிடிக்க முயற்சி செய்யணும் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று.

சமீபத்தில் நம்பிக்கையில் வந்த மடல் ஒன்றில் ரமணர் சொன்னதாக:

//காணுகின்ற எதனையும் இறைவன் உருவாக எண்ணி, எண்ணுகின்ற, காணுகின்ற எதனையும் இறைவன் என்றே எண்ணி, அத்தனையையும் இறையாகவே வழிபாடு செய்வதே, ஈசன் வழிபாடு என்று உணர்க.//
பெரும்பாலும் மக்களுக்கு இங்கே தான் உதைக்கிறது. கோவிலை, வீட்டு பூசையை விட்டு கடவுளை மற்ற இடங்களில் காண்பதில்லை!
காண ஆரம்பித்தால் தானாய் அன்பும் பண்பும் பெருகும். அவரே அடியார் ஆவார்.
வேலைக்கு போகிற அவசரத்திலே 2 பூவை சாத்திட்டு ஓடறவங்க; இல்லை ராகு, கேது, சனி படுத்துமோ ன்னு சாந்தி செய்ய ஓடற பயபக்தி உள்ளவங்க - இவங்க எல்லாம் பக்தர் அவ்ளொதான்.
இது என் கருத்துதான். பலர் பலதும் சொல்லி இருக்கலாம்.

திவாண்ணா said...

வெங்கட் ஐயா,
சுத்தம் பத்தி யாருக்கும் கருத்து வெறுபாடி இல்லை.
3 நாள் சமாசரம்: இது உங்க சொந்த கருத்துதானே. இந்த பதிவு யாரைப்பத்தியதோ அவரோட கருத்து இதைப்பத்தி என்னன்னு தெரியும் ன்னு நினைக்கிறேன்.

மேலே சொல்ல ஒண்ணுமில்லை.

திவாண்ணா said...

{{//திவா said...
அடியவர் யார் கேஆரெஸ்?//

கொஸ்டின் மார்க்கை மாத்திப் போட்டுட்டீங்க திவா சார்! இப்போ சரியான்னு பாருங்க!

அடியவர் யார்? = கேஆரெஸ்!
//அவரை தூக்கி வெச்சுகிட்டு கொண்டாடலாம்//

:))))}}


கொண்டாடுவோம் கொண்டாடுவோம்! கேஆரெஸ்ஸை கொண்டாடுவோம். அவர் மட்டுமே அடியார்ன்னு கொண்டாடுவோம்!
:-)))))))))))))))))

{{ச்ச்ச்ச்ச்சும்மாஆஆஆஆஆ சொன்னேன்!
}}

நானும்தான்! :-)))))))))))))

திவாண்ணா said...

//திரெளபதி மாத விடாய் காலத்தில் இருந்த போது தானே பரந்தாம அனுக்ரஹம்! பகவான் அவளைத் தன் வஸ்திரத்தால் தொட்டு உஜ்ஜீவிக்க வில்லையா?//

krs பகவானை எந்த குற்றம் ஒட்டும்? எதுவுமில்லை. பிரச்சினை நமக்குத்தான்.
ஆமாம் துச்சாதனன் போய் சபைக்கு வரச்சொல்லி கூப்பிட்டப்ப அவள் என்ன சொன்னாள்?

குமரன் (Kumaran) said...

//இங்க எழுதும் போது மட்டும் மெளலி அண்ணாவின் மெஸ்மரிசத்தில் கட்டுண்டுப் போயிடறேன்!
ஏதோ மோகனாஸ்திரம், பிரம்மாஸ்திரம் எல்லாம் வச்சிருக்காரு போல அண்ணன்! :))//

செஞ்சது நீங்க. பழி அவருக்கா. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் 'கண்ணனுக்கே'ன்னுல்ல இருக்கணும். :-)

குமரன் (Kumaran) said...

////உயர்வைத் தருவது எதுவோ அதுவே ஒழுக்கம் - இதுவும் நல்லா இருக்கு; தலைகீழ் பாடம் என்றாலும். :-) //

இதான் illogical fallacy. என் பெண்டாட்டி சிவப்பு புடவை கட்டி இருக்கா. சிவப்பு புடவை கட்டினவ எல்லாம் என் பெண்டாட்டியா?
:-)))))))))))))//

இந்த உவமை பொருத்தமா தெரியலை ஐயா. இதை விட பொருத்தமா இன்னொரு உவமை இருக்கு - இறைவன் உயர்வைத் தருபவன்; உயர்வைத் தருபவனே இறைவன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அடியவர்கள் என்பது யார்? - இதைப் பற்றிய கருத்துரையாடல் ப்ளீஸ், திவா சார் & குமரன்!
நீங்க அள்ளித் தெளிக்குப் போகும் முத்துக்களில் ரொம்ப ஆர்வமா இருந்தேனே!

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆஹா என்னை வெச்சு கமெடியா கேஆர்ஸ் நடக்கட்டும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தி. ரா. ச.(T.R.C.) said...
ஆஹா என்னை வெச்சு கமெடியா கேஆர்ஸ் நடக்கட்டும்!//

காமெடி இல்லை ஐயா! உற்சவம்!
ஆ.ஹி. பிதாமஹர் நீங்க தானே திராச ஐயா! உங்களை முன்னிட்டே உற்சவாரம்பம்! :)

நம உமா பதயே! ஹர ஹர சந்திரசேகரா! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எப்பவுமே ஆபத் கால தர்மம் கடைபிடித்தா ஆபத்து வந்துகிட்டே இருக்கும்ன்னு என் அண்ணா சொல்லுவார்//

ஹா ஹா ஹா!
செம நச்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஓக்கே...நேரம் கிடைச்சி வந்தாச்சு!

// paravasthu said...
yesterday I was thinking about him.Today morning I see a post abt HIM.
great great great!//

ஸ்வப்பன பலிதமா சுந்தர் அண்ணா?
:)

எண்ணிய எண்ணி ஆங்கு எய்துப!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//paravasthu said...
காஞ்சி மடத்திலே கூட, இனிமேல் இவரைப் போல ஒருவர் வருவாரா?என்பது சந்தேகமே//

:)

காஞ்சி மாமுனிகளின் சில ஆரம்ப கால வாழ்க்கைக் குறிப்புகள் இராமானுசரை ஒத்து இருக்கும்!

இராமானுசருக்கும், அவர் திருவரங்கம் வந்து சேரும் முன்னரே, அவர் ஆச்சார்யரான ஆளவந்தார் பரமபதித்து விடுவார்!
காஞ்சிப் பெரியவர்க்கும் அப்படியே! அவர் திண்டிவனத்தில் இருந்து கலவைக்கு வரும் முன்னரே, அவர் குருவான (ஏழாம்) சந்திரசேகரேந்திர சுவாமிகள், முக்தி அடைந்து விட்டார்!

காஞ்சிப் பெரியவர் வரும் வரை ஏழே நாள் மடாதிபதியாக இருந்து, அவர் வந்தவுடன், மகாதேவேந்திர சுவாமிகளும் முக்தி அடைந்து விட்டார்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Venkatasubramanian said...
சித்தர்களும் ஞானிகளும் தங்கள் சொந்த சங்கல்பத்தினாலேயே பிறக்கிறார்கள் என்பது உண்மை//

அருமையாச் சொன்னீங்க வேங்கடசுப்ரமணியன் ஐயா!

//காவி அணிந்தவரெல்லாம் சந்நியாசி. கண்கட்டு வித்தைக்காரன் எல்லாம் கடவுள் என்றாகிவிட்டது//

ஹிஹி! எல்லாம் கொஞ்சம் நாள் தான்! இளைய தலைமுறை கிட்ட இவிங்க ஜால வித்தை எல்லாம் செல்லாது! :))


இளையவர்கள் கிட்ட நேர்மையா எடுத்துச் சொன்னாத் தான் செல்லும்!

புனிதப் பூச்சுகளை ஏற்றிக் கொண்டே இருக்காமல்,
நம் அரும் பெரும் பொக்கிஷமான தர்மத்தை,
அவர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பிக்க வேண்டும்!

வெறுமனே தத்துவ விளக்கங்கள் மட்டுமே பெரியவர்கள் பேசிக் கொண்டிராது, மனித குலதனம்=தர்மத்தை அடுத்த தகுந்த கைகளில் சேர்ப்பிக்க...சிறு சிறு முயற்சிகள் எடுத்தே ஆகணும் என்பதே அடியேன் விழைவது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திவா said...
எனக்கு தெரிந்தவரை பெரியவா மடியையும் ஆசாரத்தையும் ரொம்பவே வலியுறுத்தியவர்//

உண்மை தான் திவா சார்!
ஆனால்
யாருக்கு?
எங்கே?
எப்போது?
என்று மூன்றும் இருக்கே!

காஞ்சி மாமுனிகள் அனைவருக்கும் இதை விதிக்கவில்லையே! யார் அறங்காவலர் பொறுப்பில் உள்ளனரோ, அவர்க்கே விதித்தார்! மக்களுக்கான சட்ட திட்டங்கள், மக்களைக் காக்க மன்னனுக்கான சட்ட திட்டங்கள் போலத் தான்!

மேலும்...விதித்த அவரே, எங்கு மீறலாமோ, அங்கே மீறவும் செய்தார் என்பதைத் தானே திராச ஐயா சொன்ன கதை எடுத்துக் காட்டுகிறது!

கண்ணிழந்தவரிடம் மெளனத்தை மீறி உரையாடுவது என்பது ஆபத் கால தர்மம் இல்லை!
மனித நேய, அடியவர் நேய தர்மம்! அதையே இக்கதையில் மகாபெரியவர் காத்துக் கொடுத்தார்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@திவா சார்
//அது புரிஞ்சா அவரை தூக்கி வெச்சுகிட்டு கொண்டாடலாம்//

அடியார் புரிதல் என்பது யாரையும் தூக்கி வெச்சுகிட்டு கொண்டாடும் பொருட்டு அல்ல!

அடியார் புரிதல் என்பது "அவன்" புரிதலுக்கான உபாயம்!


எப்படி... நாம் என்ன தான் பாபம் செய்தாலும், பகவான் நம்மை வெறுத்து ஒதுக்காது, நம்மிடம் அவதார அவதாரமாய், ஊழி தோறும் உறவாடுகிறானோ...

அதே போல், நாமும், அடியார்கள் என்ன கருத்து மாறுபாடுகள், வணக்க வேறுபாடுகள் கொண்டாலும்...
அவரை வெறுத்து ஒதுக்காது, உறவாடும் பொருட்டே என்ற தெளிவினை அடியார் புரிதல் தரும்!

அது தான் பாகவதா தர்மம்! பகவத் தர்மத்துக்கான அடிப்படை!

நம்மை நேற்று திட்டியவர் வீட்டில் இன்று மஹா சண்டி ஹோமம்! ராஜ மாதங்கியாக வரிக்கிறார்கள்...என்று தெரிந்த மாத்திரத்தில்...
அங்கும் ஓடிச் சென்று அம்பாளைக் காண்பவன் எவனோ...அவன் அடியாரைப் புரிந்தவன் ஆகிறான்! பகவானைப் "பாவித்தவன்" ஆகிறான்!

பகவானைப் பாவிப்பவன் பாகவதன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
"புரிதல்" காரணங்கள் காரணமாக - இதனை 'புரிதல்' காரணங்களால் என்று எழுதினாலே போதும். :-)//

இரட்டுற மொழிதல்!
ஆனாலும் "அடியவர் குமரன்" சொன்னதற்கு இணங்கி பதிவில் மாற்றி விட்டேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆசார்ய, ஆச்சார்ய - எது சரி?
ஆசாரம், ஆச்சாரம் - எது சரி?
இரண்டுவிதமாகவும் எழுதலாமா?//

திவா சார் விடை சொல்லி விட்டார்!
மெளளி (மெளலி) அண்ணன் மற்றும் இன்னும் சில வடமொழி வித்தகர்கள், இன்னும் கொஞ்சம் விளக்கிச் சொன்னால் நல்லா இருக்கும்!

@திராச
மெளலி என்பது தானே சரி? நீங்க மெளளி என்று விளிப்பதில் ஏதாச்சும் காரணம் உண்டா! ஆனா மெளளியும் நல்லாத் தான் இருக்கு, போளி என்பது போல!

எனக்கு போளி ரொம்ப ரொம்ப பிடிக்கும்! மொத்தம் எத்தனை விதமான போளிகள் இருக்கு?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஒளவையார் பாடல்ல நடுவுல சில வரிகள் காணோமே. மறந்துட்டீங்களா?//

ஆகா! மறப்பதாவது! நானும் என் ஆம்ஸ் நண்பனும் இதைப் போட்டி போட்டுக் கொண்டு போனில் ஒப்பிப்போம்! :)

//இல்லை தொடர்பில்லாததுன்னு வெட்டிட்டீங்களா? :-)//

இதுவே சரி! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமரன் (Kumaran) said...
// இந்த அடியவர் ஆச்சாரத்தை "எக்காரணம்" கொண்டும்....இனி நாம் விட்டுக் கொடுக்கவே கூடாது என்று சங்கல்பிப்போம்!
//
அடியவரையும்....//

ஆமாம் குமரன்!
அடியேன் சொல்ல வந்ததும் அஃதே!
அடியவர்=ஆச்சாரத்தை "எக்காரணம்" கொண்டும்....இனி நாம் விட்டுக் கொடுக்கவே கூடாது என்றெ சொல்ல வந்தேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//viji said...
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்//

நன்றி விஜி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திவா said...
//நித்ய கர்மாக்கள் ஆச்சாரம் தான்! அதை விடக் கூடாது!//
அப்பாடா! நல்ல காலம். இந்த காலத்து சில பேச்சாளர்கள் மாதிரி பக்தி ஒண்ணே போதும் மீதி எல்லாத்தையும் விடு ன்னு சொல்லை!//

ஹா ஹா ஹா!
உங்களுக்கு இதுல இவ்வளவு மகிழ்ச்சியா திவா சார்? அப்பாடா-ன்னு சொல்றீங்களே! அதான் கேட்டேன்! :)

//இதான் illogical fallacy. என் பெண்டாட்டி சிவப்பு புடவை கட்டி இருக்கா. சிவப்பு புடவை கட்டினவ எல்லாம் என் பெண்டாட்டியா?
:-)))))))))))))//

அருமை! கேட்க நல்லாத் தான் இருக்கு!....ஆனா....
சரி இது சல்வார் கமீஸ்க்கும் பொருந்தும் தானே? :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கொண்டாடுவோம் கொண்டாடுவோம்! கேஆரெஸ்ஸை கொண்டாடுவோம். அவர் மட்டுமே அடியார்ன்னு கொண்டாடுவோம்!
:-)))))))))))))))))
//

சூப்பர்! திவா சார் இஸ் க்ரேட்! ஐ லைக் திவா சார்! :)
அம்பி, கீதாம்மா, மெளலி அண்ணா...கேட்டுக்கோங்க! :))

//krs பகவானை எந்த குற்றம் ஒட்டும்? எதுவுமில்லை. பிரச்சினை நமக்குத்தான்//

எக்ஜாக்ட்லி! கரெக்டாப் புடிச்சீங்க பாயிண்ட்டை!
நமக்குத் தான் பிரச்சனை என்று தெரிந்து கொண்ட பின், அந்தப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முயல வேணும்! பகவானை எப்படி தோஷம் அண்டாதோ, அதே போல், இதர அடியார்களின் கருத்து/ஆச்சார வேறுபாட்டால், நம்மையும் துவேஷம்/தாழ்ச்சி மனப்பான்மை அண்ட விடாது பாத்துக்கணும்!

//ஆமாம் துச்சாதனன் போய் சபைக்கு வரச்சொல்லி கூப்பிட்டப்ப அவள் என்ன சொன்னாள்?//

வரத் தயங்கியவள், வற்புறுத்தல் காரணமாக வந்தாள்!
ஆனால், வந்தவளை ஏன் வந்தாய் என்று யாரும் ஏசவில்லை!
அவள் வீம்புக்காக வரவில்லை! அதனால் உள்ளார்ந்த பக்தியால், தீட்டு பட்ட இடமே சன்னிதானம் ஆகியது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
செஞ்சது நீங்க. பழி அவருக்கா//

எல்லாம் அண்ணன் ஆக்ஞாபனை! :)

//போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் 'கண்ணனுக்கே'ன்னுல்ல இருக்கணும். :-)//

ஆகா...யார் இந்தக் கண்ணன்? கவி-க்கா வேற அப்படித் தான் கூப்புடுறாங்க! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பெரும்பாலும் மக்களுக்கு இங்கே தான் உதைக்கிறது. கோவிலை, வீட்டு பூசையை விட்டு கடவுளை மற்ற இடங்களில் காண்பதில்லை!
காண ஆரம்பித்தால் தானாய் அன்பும் பண்பும் பெருகும். அவரே அடியார் ஆவார்//

உண்மை தான் திவா சார்!
ஆனா இங்கே தான் ஒரு உண்மையை ஆச்சார சீலர்கள் எல்லாரும் உணர்ந்து கொள்ளணும்!

//கடவுளை மற்ற இடங்களில் காண்பதில்லை! காண ஆரம்பித்தால் அவரே அடியார் ஆவார்!// என்று கண்டிஷன் எல்லாம் போடக் கூடாது!

கோயில், வீட்டுப் பூசை, அவரவர் பூசை பண்றவங்களும் அடியார்கள் தான்!

அந்த Reachability-ஐக் கொடுக்கணும்! அது தானே ஆச்சாரத்தின் மாண்பு?

பள்ளிக்கூடத்தில் நல்லாப் படிக்கறவன் மட்டுமே மாணவன் இல்லை!
நல்லாப் படிக்காதவனும் மாணவன் தான்! சுமாராப் படிக்கறவனும் மாணவன் தான்! அவர்களையும் மாணவர்கள்-ன்னு தானே சொல்றோம்! அதே போல் தான் அடியவர்களும்!

நல்லாப் படிக்காத பையனை, எத்தனை முறை படி படி-ன்னாலும் படிக்க மாட்டான்! அதே போலத் தான், ஆச்சாரத்தை எத்தனை முறை எடுத்துக் காட்டினாலும், மக்கள் மக்கள் தான்!

ஆனா அந்த மக்களையும் அடியார்-ன்னு சொல்லி, அவர்கள் வழக்கங்களையும் அக்கறையாக கேட்டுப் பாருங்கள்! அப்போ கொஞ்சம் கொஞ்சமா உணர ஆரம்பிப்பார்கள்!

இவ்ளோ சொல்றோமே! அவங்கெல்லாம் கடவுளை மற்ற இடங்களில் காண்பதில்லை-ன்னு! ஆச்சார சீலர்கள் நாமே முதலில் காணத் துவங்கலாமே? சுமாரான சாதா பக்தன் கிட்டேயும் கடவுளைக் காணத் துவங்கலாமே!

கடவுளை மற்ற இடங்களில் காண்பதில்லை! காண ஆரம்பித்தால் அவரே அடியார்-ன்னு சொல்றீங்க! அப்படியெல்லாம் காண ஆரம்பித்தால் ஞானி ஆகி விடுவார்களே! :)

அடியார் வேறு! ஞானி வேறு!
அடியார் ஆகி, அப்புறம் ஞானி ஆவார்கள்!

நம்மாழ்வார் முதலில் அடியார்! அப்புறம் தான் ஞானி! ஆனால் அவரைக் கேட்டா தன்னை அடியேன் தான் மொதல்ல சொல்லிப்பார்! அப்புறம் தான் "சிறிய ஞானத்தன்" என்பார்! - குமரனைக் கேளுங்க! இந்த வரிகளின் காபிரைட் அவர் கிட்ட தான் இருக்கு! :)

சங்கரர் முதலில் அடியார்! அப்புறம் தான் ஞானி! அதனால் தான் ஷண்மத ஸ்தாபகத்தைப் பாத்து பாத்து பண்ணாரு! அடியார்களுக்காக! ஞானிக்கு ஏது ஷண்மதம்? அவன் தான் பிரம்மத்தில் திளைப்பவன் ஆயிற்றே!

//கடவுளை மற்ற இடங்களில் காண்பதில்லை! காண ஆரம்பித்தால் அவரே அடியார் ஆவார்!// என்று கண்டிஷன்களைத் தளர்த்துங்கள்!

இறைவனுக்காகத் தான் ஆச்சாரம்!
ஆச்சாரத்துக்காக இறைவன் அல்ல!

மேலும் மேலும் அடியவர்களை இனம் கண்டு இறைவனிடம் சேர்க்கும் வழி வகைகள், கர்மங்கள் = இதுவே சத் ஆச்சாரம்!

காஞ்சி மாமுனிகள் அந்தக் கண்ணில்லா ஆளை அன்று "அடியவர்" என்ற ஸ்தானத்தில் ஏற்றி விட்டார்! அதுக்கு அப்புறம் அந்த ஆள் எண்ணியெண்ணி எவ்வளவு நெகிழ்ந்திருப்பார்! காஞ்சிப் பெரியவர் சொன்ன கர்மங்களை அந்த நெகிழ்ச்சியினாலேயே விடாமல் பிடித்து இருப்பார் அல்லவா!

மெளலி அண்ணா உட்பட ஆ.ஹி. பிரமுகர்கள்...
அடியேன் இப்பதிவில் ஏதேனும் ஓவராகப் பேசி இருந்தால் மன்னிக்கவும்!
கர்மானுஷ்டானுங்களைக் கேலி செய்யும் நோக்கம் என்னிடம் இல்லை!

அப்படியே கேலி-ன்னாலும் உண்மையான கர்ம அனுஷ்டானி, கர்மத்தின் மேல் இருக்கும் அந்தப் பிடிப்பையும் கூடப் பலத் தியாகம் செய்தவனாகவே இருப்பான்!

Kavinaya said...

ஆசார அனுஷ்டானங்கள் தெரியலைன்னா என்ன ஆகும்? ரொம்ப நாளா யாரையாச்சும் கேட்கணும்னு இருந்தேன். ஏன்னா எனக்கு ஒண்ணுமே தெரியாது :(

//ஆகா...யார் இந்தக் கண்ணன்? கவி-க்கா வேற அப்படித் தான் கூப்புடுறாங்க! :))//

அதை வெச்சுதான் குமரன் சொல்லேறி விளையாடியிருக்காரு கண்ணா... :)

பதிவு அருமை. காஞ்சி மாமுனியின் திருவடிகள் சரணம் சரணம்.

திவாண்ணா said...

அடியேன்இன் இந்த SD கைவண்ணம்! :)
என்னது அது?

//ஆனால்
யாருக்கு?
எங்கே?
எப்போது?
என்று மூன்றும் இருக்கே!

காஞ்சி மாமுனிகள் அனைவருக்கும் இதை விதிக்கவில்லையே! யார் அறங்காவலர் பொறுப்பில் உள்ளனரோ, அவர்க்கே விதித்தார்! மக்களுக்கான சட்ட திட்டங்கள், மக்களைக் காக்க மன்னனுக்கான சட்ட திட்டங்கள் போலத் தான்! //

எக்ஸாட்லி! யூ காட் தி பாய்ண்ட்!
அதே போல ஒரு நிகழ்வு மட்டுமே எது ஆசாரம்ன்னு காட்ட முடியாது. பெரிய படத்தை பாக்கணும். அவரவருக்கு உள்ள ஆசாரம் எதுன்னு தெரிந்து கொண்டு கடைபிடிக்கணும்.
எக்ஸெப்ஷன் ஐ சொல்கிறதுல பிரச்சினை இருக்கு. அதுவே சரின்னு பாமர ஜனங்களுக்கு தோணிடும்.

/கண்ணிழந்தவரிடம் மெளனத்தை மீறி உரையாடுவது என்பது ஆபத் கால தர்மம் இல்லை! //
இங்கே ஆபத்துன்னா என்னன்னு சரியா புரிஞ்சுக்கணும். danger இல்லை. ரொம்பவே விரும்பத்தகாத நிகழ்வு. அந்த பக்தருக்கு அப்படி செய்யாமல் அருள் பாலிச்சது தெரியாது. குட்ட இருந்த மத்தவங்களும் ¨அடியார்கள்¨ தானே? அவர்களுக்காக மௌனம் கலைக்கலையே?

//உங்களுக்கு இதுல இவ்வளவு மகிழ்ச்சியா திவா சார்? அப்பாடா-ன்னு சொல்றீங்களே! அதான் கேட்டேன்! :)//

ரொம்பவே கேஏஎஆரெஸ்!
இதை கேட்டு கேட்டு புளிச்சு போச்சு!

//சூப்பர்! திவா சார் இஸ் க்ரேட்! ஐ லைக் திவா சார்! :)
அம்பி, கீதாம்மா, மெளலி அண்ணா...கேட்டுக்கோங்க! :))//

இதையும் ச்சும்மாதானே சொன்னீங்க? ;-))
அவங்க இதை கேக்கமட்டும் மாட்டாங்க. கன்வீனியன்டா வெட்டி விட்டது எதுன்னும் கண்டுபாங்க!
:-))))))))))))))))))

////ஆமாம் துச்சாதனன் போய் சபைக்கு வரச்சொல்லி கூப்பிட்டப்ப அவள் என்ன சொன்னாள்?//

வரத் தயங்கியவள், வற்புறுத்தல் காரணமாக வந்தாள்!
ஆனால், வந்தவளை ஏன் வந்தாய் என்று யாரும் ஏசவில்லை!//

என்ன சொன்னாள்ன்னு தானே கேட்டேன்?

// அவள் வீம்புக்காக வரவில்லை! அதனால் உள்ளார்ந்த பக்தியால், தீட்டு பட்ட இடமே சன்னிதானம் ஆகியது! //
அவன் சன்னிதானம் இல்லாத இடம் இருக்கா என்ன?

தி. ரா. ச.(T.R.C.) said...

மெளலி அண்ணா உட்பட ஆ.ஹி. பிரமுகர்கள்...
அடியேன் இப்பதிவில் ஏதேனும் ஓவராகப் பேசி இருந்தால் மன்னிக்கவும்!
கர்மானுஷ்டானுங்களைக் கேலி செய்யும் நோக்கம் என்னிடம் இல்லை

oh sollrathellam muzukka sollittu thapisikarathukku ipati oru vazi irukka.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவிநயா said...
ஆசார அனுஷ்டானங்கள் தெரியலைன்னா என்ன ஆகும்? ரொம்ப நாளா யாரையாச்சும் கேட்கணும்னு இருந்தேன். ஏன்னா எனக்கு ஒண்ணுமே தெரியாது :(//

நல்லதே ஆகும்-க்கா!
* கண்ணபனுக்கு நல்லதே ஆனது!
* கருவறையில் சிவலிங்கம் மேல் சிலந்த விழ, எச்சில் துப்பினாள் ஒருத்தி! அவளுக்கு நல்லதே ஆனது!
* மரப் பிரபோ என்று தப்பும் தவறுமாகப் பாராயணம் செய்தவனை அமரப் பிரபோ-ன்னு திருத்தினார் பட்டத்ரி! ஸ்வாமி ஏன் திருத்தினாய்?-ன்னு கோவிச்சிக்கிட்டார் :)

அன்பு செய்ய முடியலீன்னா, அப்போ ஆச்சாரம் ஏதோ கை கொடுக்கும்!
அன்பு செய்ய முடிஞ்சிச்சுன்னா, கவலையே வேண்டாம்!

//அதை வெச்சுதான் குமரன் சொல்லேறி விளையாடியிருக்காரு கண்ணா... :)//

:))

//பதிவு அருமை. காஞ்சி மாமுனியின் திருவடிகள் சரணம் சரணம்//

நன்றி-க்கா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ரொம்பவே கேஏஎஆரெஸ்!
இதை கேட்டு கேட்டு புளிச்சு போச்சு!//

:)
உங்க ஆதங்கம் எனக்குப் புரியுது திவா சார்!

//குட்ட இருந்த மத்தவங்களும் ¨அடியார்கள்¨ தானே? அவர்களுக்காக மௌனம் கலைக்கலையே?//

நல்ல கேள்வி திவா சார்!
கூட இருந்த மத்தவங்க, மெளன விரதம் பற்றி அறிந்து கொண்டிருக்கும் அடியார்கள்! சுவாமிகள் விரதத்துக்கு துணையாய் இருப்பவர்களும் கூட! அதனால் அவர்களுக்காக மெளனம் கலைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது! இல்லை என்றால் அவர்களுக்காகவும் கலைத்து இருப்பார்! :)

//அதே போல ஒரு நிகழ்வு மட்டுமே எது ஆசாரம்ன்னு காட்ட முடியாது//

உண்மை!
ஆனால் எப்போ எல்லாம் ஆச்சாரத்தை விட்டுக் கொடுக்கலாம்-ன்னு கோடிட்டுக் காட்டும் அல்லவா?

//என்ன சொன்னாள்ன்னு தானே கேட்டேன்?//

பெரிய படத்தையும் பாக்கணும் அல்லவா? :)

//பெரிய படத்தை பாக்கணும்//

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்! :)

//அவரவருக்கு உள்ள ஆசாரம் எதுன்னு தெரிந்து கொண்டு கடைபிடிக்கணும்//

உண்மை!
வேத ஒழுக்கம், முவ்வேளைச் சந்தி என்று அப்படி முறையாகக் கடைப்பிடிக்காத பட்சத்தில்,
கடைப்பிடிக்கணும், கடைப்பிடிக்கணும் என்று ஊருக்கு உபதேசமாய்ப் பேசிக் கொண்டிருத்தல் கூடாது!
கடைப்பிடிப்பவர் பேசினால் நலம்! ஏனையோர் அமைதி காத்தல் நலம்! அதை நினைத்துப் பார்த்தல் நலம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தி. ரா. ச.(T.R.C.) said...
oh sollrathellam muzukka sollittu//

அப்படி என்ன தான் சொன்னேன்-ன்னும் சொல்லுங்க திராச! இங்கே எதையும் தவறாகப் பேசிட வில்லையே!

இல்லை ரெண்டு மூனு தவறாகத் தான் பேசினாய்-ன்னு சொன்னா, அது என்ன-ன்னும் சொல்லணும்! வெறுமனே தவறாப் பேசிட்டே! தவறாப் பேசிட்டே-ன்னு மட்டும் சொல்லிகிட்டே இருந்தா எப்படி?

//thapisikarathukku ipati oru vazi irukka//

:)
தப்பு செய்தால் தப்பு-விக்கலாம்!
மடியில் கனமில்லை! வழியில் பயமில்லை! யாமிருக்க பயம் ஏன் என்பது சரவண வாசகம்!

திவாண்ணா said...

//அடியவர்=ஆச்சாரத்தை "எக்காரணம்" கொண்டும்//

//கூட இருந்த மத்தவங்க, மெளன விரதம் பற்றி அறிந்து கொண்டிருக்கும் அடியார்கள்! சுவாமிகள் விரதத்துக்கு துணையாய் இருப்பவர்களும் கூட! அதனால் அவர்களுக்காக மெளனம் கலைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது!//
அப்ப சங்கரனுக்கு தெரியாது? அவர் துணையா இருக்க மாட்டார்?
// இல்லை என்றால் அவர்களுக்காகவும் கலைத்து இருப்பார்! :)//
இது உங்க அசம்ஷன் இல்லையா?

// தப்பு செய்தால் தப்பு-விக்கலாம்!
மடியில் கனமில்லை! வழியில் பயமில்லை! யாமிருக்க பயம் ஏன் என்பது சரவண வாசகம்!//

ஆட அதானே? பின்னா ஏன் சொன்னீங்கன்னு புரியலையே? அர்த்தமில்லாம போயிடுச்சே?

//கடைப்பிடிக்கணும், கடைப்பிடிக்கணும் என்று ஊருக்கு உபதேசமாய்ப் பேசிக் கொண்டிருத்தல் கூடாது!
கடைப்பிடிப்பவர் பேசினால் நலம்! ஏனையோர் அமைதி காத்தல் நலம்! அதை நினைத்துப் பார்த்தல் நலம்!//

போச்சுடா! அப்படிப்பாத்தா நாம எல்லாருமே வாய மூடிகிட்டு இருக்க வேண்டியதுதான்.:-)))))))))

இல்லை வேற மாதிரியும் யோசிக்கலாம் இல்லையா? சொல்லுகிறவங்க கடைபிடிக்கப்பாக்கணும். அப்ப அடியார்கிட்ட ஆணவம் கன்மம் மாயை மமதை ன்னு பேசிகிட்டு இருக்க மாட்டோம்! அன்பு மட்டுமே காட்டுவோம்!

திவாண்ணா said...

//கோயில், வீட்டுப் பூசை, அவரவர் பூசை பண்றவங்களும் அடியார்கள் தான்!
அந்த Reachability-ஐக் கொடுக்கணும்! அது தானே ஆச்சாரத்தின் மாண்பு?//
அவங்க பக்தர்கள் மட்டுமே! அடியார் என்கிறது இன்னும் மேலே ன்னு நினைக்கிறேன்.

//பள்ளிக்கூடத்தில் நல்லாப் படிக்கறவன் மட்டுமே மாணவன் இல்லை!
நல்லாப் படிக்காதவனும் மாணவன் தான்! சுமாராப் படிக்கறவனும் மாணவன் தான்! அவர்களையும் மாணவர்கள்-ன்னு தானே சொல்றோம்! அதே போல் தான் அடியவர்களும்!//

ஆமாம். அப்பவும் அவர்கள் மாணவர்கள்தான். அவங்களை பேராசிரியர்கள்ன்னு சொல்வதில்லை. பேராசிரியர்கள் வாழ் நாள் முழுக்க மாணவர்களாக இருந்தாலும்.

//ஆனா அந்த மக்களையும் அடியார்-ன்னு சொல்லி, அவர்கள் வழக்கங்களையும் அக்கறையாக கேட்டுப் பாருங்கள்! அப்போ கொஞ்சம் கொஞ்சமா உணர ஆரம்பிப்பார்கள்!//
இது ஒரு யுக்தியா இருக்கலாம். இத எப்படி ரூல் ஆக்கமுடியும்?

//இவ்ளோ சொல்றோமே! அவங்கெல்லாம் கடவுளை மற்ற இடங்களில் காண்பதில்லை-ன்னு! ஆச்சார சீலர்கள் நாமே முதலில் காணத் துவங்கலாமே? சுமாரான சாதா பக்தன் கிட்டேயும் கடவுளைக் காணத் துவங்கலாமே!//

அஃப் கோர்ஸ்! ஆனா இது ஒரு படிதான். முயற்சி செய்ய ஆரம்பிக்கணும்தான். அது அனுபவத்துக்கு வர நாளாகும். ஸ்விட்ச் போட்ட மாதிரி வராது. பார்க்கிற/ பாக்கப்படுகிற மனிதர்களோட ஆசாபாசம் தடையா வரும். சாதாரண பக்தன் என்ன? கல்லு மண்ணிலேயும் கூட காண வேணும். அப்படி செய்ய ஆரம்பிச்சாதானே உயர்வு? கோவில் போற அத்தனை ஆள் காலிலேயும் விழறதுன்னா அப்படி விழுகிறவர் ஈகோவை வேணுமானா அது குறைக்கும். அதை எல்லாரும் செய்யணும்ன்னு எதிர் பார்க்கக்கூடாது. ஸ்ரீராமக்ருஷ்ணார் கழிவறையை தன் தலைமுடியால சுத்தம் பண்ணா அது அவர் ஈகோவை அடிச்சுபோட்டது. அதே போல எல்லாரும் செய்யணும்ன்னு அவரும் எதிர் பார்க்கலே யாரும் சொல்லவும் இல்லை.

//கடவுளை மற்ற இடங்களில் காண்பதில்லை! காண ஆரம்பித்தால் அவரே அடியார்-ன்னு சொல்றீங்க! அப்படியெல்லாம் காண ஆரம்பித்தால் ஞானி ஆகி விடுவார்களே! :)//

மாட்டாங்க! ஆது அந்த வழியிலே தூக்கிவிடும். சித்த சுத்தி கொடுக்கும். ஞானத்தை நேரடியா தராது. மேலே இன்னும் பல படிகள் இருக்கு.

//நம்மாழ்வார் முதலில் அடியார்! அப்புறம் தான் ஞானி! ஆனால் அவரைக் கேட்டா தன்னை அடியேன் தான் மொதல்ல சொல்லிப்பார்! அப்புறம் தான் "சிறிய ஞானத்தன்" என்பார்! - //

நான் மேலே சொன்னதை ஒட்டிதானே இதுவும் இருக்கு?:-))

//சங்கரர் முதலில் அடியார்! அப்புறம் தான் ஞானி! அதனால் தான் ஷண்மத ஸ்தாபகத்தைப் பாத்து பாத்து பண்ணாரு! அடியார்களுக்காக! ஞானிக்கு ஏது ஷண்மதம்? அவன் தான் பிரம்மத்தில் திளைப்பவன் ஆயிற்றே!//
ஞானிகள் சில க்ளாசிபிகேஷன் இருக்கு. அப்பப்ப பகிர்முகமா இருப்பவங்க சமூகத்தை ஒட்டி சிலது செய்வாங்க. சங்கரர் சில வேலைகளை செய்ய வந்தவர். அவதார காரியம் ஒட்டி இதெல்லாம் செய்தார். எப்பவுமே அவர் ஞானிதான். இருந்தாலும் சமூகத்துக்காக பகிர்முகமாவே இருந்து பலதும் செய்தார்.

//கடவுளை மற்ற இடங்களில் காண்பதில்லை! காண ஆரம்பித்தால் அவரே அடியார் ஆவார்!// என்று கண்டிஷன்களைத் தளர்த்துங்கள்!

நான் கண்டிஷன் போடலை. கருத்தை சொன்னேன்.
அதே போல எல்லா பக்தர்களுமே அடியார்ன்னு நீங்க கண்டிஷன் போடலாமா?

//இறைவனுக்காகத் தான் ஆச்சாரம்!
ஆச்சாரத்துக்காக இறைவன் அல்ல!//

நீங்க சொன்னதை ஒத்துக்கிறேன். இறைவனை காணதான் ஆசாரம். இது தனி மனிதன் தான் என்ன செய்யணும்ன்னு உணர்ந்து செய்ய வேண்டியது. மத்தவங்களுக்கு உபதேசம் செய்ய இல்லை.
மத்தவங்களை நீ இப்படி இல்லை, இருக்கணும்ன்னு சொல்கிறதை விட்டு நாம எப்படி இருக்கணும்ன்னு யோசனை பண்ண ஆரம்பிச்சா எங்கேயோ போயிடுவோம்.

goma said...

எனக்கு ஒரு சந்தேகம் .அதை விளக்குவதற்கான ...முதல் கேள்வி.புனிதவதியார் பிறந்த ஊர் எது?

திவாண்ணா said...

வாங்க கோமா அக்கா.
சாதாரணமா விடுமுறை தினங்கள்ல இங்கே யாரும் வரதில்லை. புனிதவதியார் என்கிற
கா. அம்மையார் பத்தி விக்கிபீடியாவும் மௌலியும் சொல்கிறதை பாருங்க. பிறந்த இடம் காரைக்கால்.

http://tinyurl.com/dbkbve

http://maduraiyampathi.blogspot.com/2008/03/blog-post_23.html

goma said...

அடுத்த கேள்வி.
அந்த ஊருக்கு ஏன் அந்த பெயர் வந்தது.?

திவாண்ணா said...

என்னக்கா இது கேள்வி மேலே கேள்வி போடறீங்க. சொல்ல வந்ததை நீங்களே சொல்லிடுங்களேன்! எனக்குத்தெரியாது. சகல கலாவல்லவரான கேஆரெஸ்ஸுக்கு தெரிஞ்சு இருக்கும். இந்த ஞாயித்து கிழமை அவர் வருவாரான்னு தெரியல.
:-)
ஆமா carஐ காத்ததால ன்னு ஜோக் அடிக்க மாட்டீங்களே?
:-))

goma said...

கேஆரெஸ் நான் கேட்ட கேள்விக்கு திவா ஜகா வாங்கி விட்டார்.நீங்கள் சொல்லுங்கள்.காரைக்காலுக்கு ஏன் அந்த பெயர் வந்தது?
நான் ஜோக் பண்ண வில்லை .விளக்கம் வேண்டி கேட்கிறேன் .என் கடைசி கேள்வியில் என் கேள்விக்கான அர்த்தம் புரியும்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அட, பக்கத்து ஊருக்கு, ஒரு குழந்தைகள் நல நிகழ்ச்சிக்கு போயிட்டு வந்தேன்! அதுக்குள்ளாற இவ்ளோ நடந்திருக்கா!

//சகல கலாவல்லவரான கேஆரெஸ்ஸுக்கு தெரிஞ்சு இருக்கும்//

திவா சார்! அடுக்குமா? எனக்கு ஒரு கலாவையும் தெரியாதே! இதுல சகல-கலா-ங்களுக்கு நான் எங்கே-ன்னு போவேன்? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// goma said...
கேஆரெஸ் நான் கேட்ட கேள்விக்கு திவா ஜகா வாங்கி விட்டார்.நீங்கள் சொல்லுங்கள்.காரைக்காலுக்கு ஏன் அந்த பெயர் வந்தது?//

வாங்க கோமாம்மா! என்ன இது இப்படி கேள்வி மழை?

//என் கடைசி கேள்வியில் என் கேள்விக்கான அர்த்தம் புரியும்//

உங்கள் கடைசிக் கேள்வியின் நம்பர் என்ன-ன்னு சொன்னீங்கன்னா வசதியா இருக்கும்! :)

Jokes apart...
காரை+கால்;
காரை-ன்னா ஒரு சுண்ணாம்பு வகை! வீடு கட்ட பயன்படும்! காரை பெயர்ந்துடுச்சி-ன்னி சொல்றோம்-ல?

கால்-ன்னா கால்வாய்!
காரையால் செய்யப்பட்ட கால்வாய்கள் உள்ள ஊர்-ன்னு கொள்ளலாம்! சுண்ணாம்பு கால்வாய்-ன்னும் பொருள் கொள்ளலாம்!

காரைக்கால் துறைமுக நகரம்! அதனால் கால்வாய்கள் நிறைய இருக்கும் போல! அவ்ளோ தான் எனக்குத் தெரியும்! மத்தபடி இது புராணப் பெயராகத் தெரியவில்லை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@திவா சார்
சங்கரனுக்கு அன்னிக்கி மவுன விரதம் என்று தெரிந்திருந்தால், மகா ஞானியான ஆசார்யருக்கும் "அவனுக்குத் தெரிந்திருக்கும்" என்று தெரிந்திருக்கும் அல்லவா?

அவனுக்குத் தெரியாது என்பதால் தானே மவுனம் கலைத்தார்?

//போச்சுடா! அப்படிப்பாத்தா நாம எல்லாருமே வாய மூடிகிட்டு இருக்க வேண்டியதுதான்.:-)))))))))//

ஹா ஹா ஹா!
சந்தி செய்வது எனக்கு விதிக்கப் படலையே-ன்னு ஒரு வருத்தம் தான்! இதை மெளலி அண்ணா கிட்ட ஒரு முறை நேர்ல சொல்லி இருக்கேன்! அந்தப் பேறு எங்களுக்கு கிட்டாமப் போயிரிச்சுண்ணா-ன்னு சொன்னேன்!

//சொல்லுகிறவங்க கடைபிடிக்கப்பாக்கணும். அப்ப அடியார்கிட்ட ஆணவம் கன்மம் மாயை மமதை ன்னு பேசிகிட்டு இருக்க மாட்டோம்! அன்பு மட்டுமே காட்டுவோம்!//

சூப்பர்! எக்ஜாக்ட்லி! அதே தான் அடியேனும் சொன்னேன்! நான் "கடைப்பிடிக்கணும்"-ன்னு சொன்னேன்! நீங்க "கடைப்பிடிக்கப் பாக்கணும்"-ன்னு சொல்றீங்க! அவ்ளோ தான் வித்யாசம்!

தெரிந்தே செய்யும் குற்றத்துக்குத் தான் தண்டனை அதிகம்!
சந்தி செய்வது உத்தமோத்தமம்! பரமோ தர்மம்-ன்னு அறிந்து வைத்துள்ளவர்கள், பதிவில் சொல்பவர்கள், அதைத் தவறாது கடைப்பிடிக்கணும் அல்லவா?

ஆபத் கால தர்மம், அப்போது தவற விட்டால் ஓக்கே!
ஆனால் சுத்தமாகக் கடைப்பிடிக்கவே பிடிக்காது, காலியான பெருங்காய டப்பாவை, வாசனை பிடித்துப் பார்ப்பது போல் பேசிக் கொண்டு மட்டும் இருக்கக் கூடாது!

நியமத்தில் இருப்போர்கள் நியமங்கள் பற்றிப் பேசட்டும்! ஏனையோர் நியமங்களைக் கடைப்பிடிக்க "முயலட்டும்"!
(சென்ற கூரேசர் பதிவில், இப்பேச்சு வந்ததால் சொல்கிறேன்)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திவா said...
அவங்க பக்தர்கள் மட்டுமே! அடியார் என்கிறது இன்னும் மேலே ன்னு நினைக்கிறேன்//

இல்லை திவா சார்!
அடியவர்களுக்கு பக்தர்களும் அடியவர்களே!

//அப்பவும் அவர்கள் மாணவர்கள்தான். அவங்களை பேராசிரியர்கள்ன்னு சொல்வதில்லை//

நான் பேராசிரியர்கள், பரம ஞானிகள், கர்ம யோகிகள்-ன்னு சொல்லச் சொல்லலையே!
மாணவர்கள் - அடியார்கள் என்று மட்டும் தானே சொல்லச் சொன்னேன்!

//இது ஒரு யுக்தியா இருக்கலாம். இத எப்படி ரூல் ஆக்கமுடியும்?//

இராமானுசர் செல்லும் வழியில் பசங்க சொப்பு வைத்து சாமி விளையாட்டு விளையாட, அந்தப் பக்கம் வந்த அவருக்கு, குட்டிப் பசங்க, சும்மானா காலி சொப்பில் இருந்து தீர்த்தம் கொடுத்தாங்க! அங்கே நெடுஞ்சாண் கிடையாகச் சேவித்தார் உடையவர்!

இன்றும் சிறுவர் ஆடுவார்கள் அந்த மண்டியில்! புறப்பாடு நின்று சாற்றுமுறை ஆகும்! :)
இப்படித் தான் ரூல் ஆகும்! :))

(சென்னை திருவல்லிக் கேணியிலும் "குட்டிப் பெருமாள்" என்று அண்மைக் காலங்களில் சிறுவர்கள் செய்கிறார்கள்!)

//அஃப் கோர்ஸ்! ஆனா இது ஒரு படிதான். முயற்சி செய்ய ஆரம்பிக்கணும்தான்.//

நன்றி திவா சார், புரிந்து கொண்டமைக்கு!

//கோவில் போற அத்தனை ஆள் காலிலேயும் விழறதுன்னா அப்படி விழுகிறவர் ஈகோவை வேணுமானா அது குறைக்கும்//

ஆகா...ஆலயத்துக்கு வரும் அத்தனை அடியார் காலிலும் விழச் சொல்லலை! அதான் சொன்னேனே முன்பே! "தூக்கி வைத்துக் கொண்டாடத்" தேவையே இல்லை!

மற்ற அடியவர்கள் பூசனையை, வழிபாடுகளை ப்ரமாணம் இல்லை என்று ஒதுக்குதல் கூடாது-ன்னு தான் சொன்னேன்! லோக்கல் பாஷையில் திருமுறைக்கு விளக்கம் சொன்னா, விளக்கத்தை விலக்கக் கூடாது-ன்னு தான் சொன்னேன்! சினிமாத்தனமா இருக்கு-ன்னு ஒதுக்கக் கூடாதுன்னு தான் சொன்னேன்!
ஈசன் "எங்கும்" எனாதவர்க்கு இல்லையே!

//எப்பவுமே அவர் ஞானிதான். இருந்தாலும் சமூகத்துக்காக பகிர்முகமாவே இருந்து பலதும் செய்தார்//

அது தான் சமூக அக்கறை!
தன் யோகம், தன் ஜபம் என்று மட்டுமே இல்லாது...தன்னால் ஆன முயற்சிகளைச் செய்து, பொக்கிஷத்தை அடுத்த தலைமுறைக்கும் கொடுத்துச் சென்றார்! அந்தப் "பகிர்முகம்" அக்கறையின் பாற்பட்டது!

//நான் கண்டிஷன் போடலை. கருத்தை சொன்னேன்//

நான் உங்களைச் சொல்லலை திவா சார்! பொதுவாகச் சொன்னேன்! கடவுளை "எங்கும்" கண்டால் மட்டுமே அவர்கள் அடியவர்கள்! இன்னின்ன நியமங்களில் இருந்தால் மட்டுமே ஆஸ்திகர்கள் என்ற கண்டிஷன்களை மட்டும் தான் சொன்னேன்!

//அதே போல எல்லா பக்தர்களுமே அடியார்ன்னு நீங்க கண்டிஷன் போடலாமா?//

அது கண்டிஷன் இல்லையே! உண்மை தானே! :)
நியமங்கள் புரிபவர்கள் "மட்டுமே" அடியார்கள்-ன்னா அது கண்டிஷன்!
நான் சொல்வது: நியமங்கள் புரிபவர்க"ளும்" அடியார்கள்-ன்னா அது கண்டிஷனே இல்லையே! :)

//மத்தவங்களை நீ இப்படி இல்லை, இருக்கணும்ன்னு சொல்கிறதை விட்டு நாம எப்படி இருக்கணும்ன்னு யோசனை பண்ண ஆரம்பிச்சா எங்கேயோ போயிடுவோம்//

எக்ஜாக்ட்லி!
மெளன விரதத்தைக் கலைச்சா, ஆச்சாரக் குறைவு!
பெண்கள் தொட்டா ஆச்சாரக் குறைவு!
லோக்கல் பாஷையில் இறைவன் பெருமை எழுதினா ஆச்சாரக் குறைவு!
-ன்னு சொல்வதை எல்லாம் விட்டு,நாம எப்படி இருக்கணும்ன்னு யோசனை பண்ண ஆரம்பிச்சா எங்கேயோ போயிடுவோம்!

அழகான விவாதங்களுக்கும் புரிதலுக்கும் நன்றி திவா சார்!

திவாண்ணா said...

// சந்தி செய்வது எனக்கு விதிக்கப் படலையே-ன்னு ஒரு வருத்தம் தான்!அந்தப் பேறு எங்களுக்கு கிட்டாமப் போயிரிச்சுண்ணா-ன்னு சொன்னேன்! //
எல்லாருக்குமே சூரிய உபாசனை உண்டே!
http://anmikam4dumbme.blogspot.com/2008/06/blog-post_1993.html.
இந்த பதிவை பாருங்க. பெண்களுக்குன்னு சொல்லி இருந்தாலும் ப்ரம்மோபதேசம் ஆகாத ஆண்களும் கடைபிடிக்கக்கூடியதுதான்.
இதை படிக்காமலே பரிட்சை எழுதிட்டீங்களா? சாய்ஸ் ல விட்டுடலாம்ன்னு நினைச்சீங்களோ?
:-)))))))))))))))
எல்லாருக்குமே கர்மா விதிச்சுதான் இருக்கு. அதை விட்டுவிட்டு ஏன் மத்தவங்க கர்மாவைப்பத்தி - அத செய்யறாங்களா இல்லையா ன்னு யோசிக்கணும்?

//தெரிந்தே செய்யும் குற்றத்துக்குத் தான் தண்டனை அதிகம்!
சந்தி செய்வது உத்தமோத்தமம்! பரமோ தர்மம்-ன்னு அறிந்து வைத்துள்ளவர்கள், பதிவில் சொல்பவர்கள், அதைத் தவறாது கடைப்பிடிக்கணும் அல்லவா? //
செய்யணும்ன்னு தெரிஞ்சுக்கிறது முதல் படி. செய்யணும்ன்னு தோணுகிறது இரண்டாவது. செய்வது மூணாவது படி. சிரத்தையோட செய்கிறது நாலாவது படி.
சிரத்தையோட செய்கிறவங்க அதைப்பத்தி பேசும்போது அதுக்கு கூடுதலான ஆன்ம பலம் இருக்கும். கேட்கிறவர் மனசிலே பதிஞ்சு செய்ய தூண்டும்.
அதுக்காக, செய்தாதான் அதைப்பத்தி பேச அருகதை உண்டுன்னு சொல்லாமா? இப்படி இப்படி செய்யணும்ன்னு சொல்கிறதே ஒரு தொண்டு இல்லையா? சொன்னா சொல்கிறவர் மனசிலே செய்யவும் செய்யனும்ன்னு ஒரு எண்ணம் வருமே!


//நியமத்தில் இருப்போர்கள் நியமங்கள் பற்றிப் பேசட்டும்! ஏனையோர் நியமங்களைக் கடைப்பிடிக்க "முயலட்டும்"!
(சென்ற கூரேசர் பதிவில், இப்பேச்சு வந்ததால் சொல்கிறேன்)//
யப்பாடா! இந்த உள்குத்துக்காகதான் இப்படி ஒரு பதிவா?
தர்மம் சூக்ஷுமமானது. அதனாலதான் சந்தேகமிருந்தா பெரியவங்களை கேட்டு செய்ய சொல்கிறார்கள். கோவிலிலே கைங்கர்யம் செய்கிறவர்கள் கொஞ்சம் முன்னாலேயே சந்தியா உபாசனையை செய்யலாம். மாலை சூரியன் இருக்கும் போதே அர்க்யம் என்பதுதான் முக்கியம். சூரிய அஸ்தமனத்துக்கு ஒரு மணி முன்னதாகவே செய்யலாம். தவறு கிடையாது. சரியான அஸ்தமன நேரத்திலே அவர்களுக்கு வேலை இருக்கும் என்பதால இப்படி ஏற்பாடு.

//ஆகா...ஆலயத்துக்கு வரும் அத்தனை அடியார் காலிலும் விழச் சொல்லலை! அதான் சொன்னேனே முன்பே! "தூக்கி வைத்துக் கொண்டாடத்" தேவையே இல்லை!//
அப்ப சரி.

// மற்ற அடியவர்கள் பூசனையை, வழிபாடுகளை ப்ரமாணம் இல்லை என்று ஒதுக்குதல் கூடாது-ன்னு தான் சொன்னேன்! லோக்கல் பாஷையில் திருமுறைக்கு விளக்கம் சொன்னா, விளக்கத்தை விலக்கக் கூடாது-ன்னு தான் சொன்னேன்! சினிமாத்தனமா இருக்கு-ன்னு ஒதுக்கக் கூடாதுன்னு தான் சொன்னேன்!//
அப்பாடா! இப்பதான் க்ரக்ஸ் ஆப் தி மேட்டருக்கு வரோம்! இதுக்குத்தானே இவ்வளோ சுத்தி வளைச்சீங்க?
அவரவர் ரசனை. ஆன்மீகத்தை நீர்த்து போகச் செய்பவர் ன்னு சிலருக்கு அபிப்பிராயம் இருக்குன்னு உங்களுக்கே தெரிஞ்சதுதானே? அதுக்காகதானே வோட்டு போடச்சொன்னீங்க? அது சரியா தப்பான்னு இங்கே விவாதிக்க வரலை. அப்படி ஒரு நினைப்பு வர வாய்ப்பு இருக்கு என்பது உங்களுக்கே தெரிஞ்சு இருக்கு என்பதே விஷயம். அப்படி நினைக்கிற சிலருக்கு உங்க பதிவுகள் உவப்பை தராது. அதில என்ன இருக்கு? அது அவங்களோட மனப்போக்கு! நீங்க ஏன் கவலை படணும்?

//நான் உங்களைச் சொல்லலை திவா சார்! பொதுவாகச் சொன்னேன்! கடவுளை "எங்கும்" கண்டால் மட்டுமே அவர்கள் அடியவர்கள்! இன்னின்ன நியமங்களில் இருந்தால் மட்டுமே ஆஸ்திகர்கள் என்ற கண்டிஷன்களை மட்டும் தான் சொன்னேன்!//
இறைவன் இருக்கிறான் - அஸ்தி- ன்னு ஒத்துகிறவங்க எல்லாரும் ஆஸ்திகர்கள்தான். இதிலே என்ன சந்தேகம்?

// மெளன விரதத்தைக் கலைச்சா, ஆச்சாரக் குறைவு!
பெண்கள் தொட்டா ஆச்சாரக் குறைவு!//
அது எல்லாமே ஒவ்வொத்தர் தனக்குத்தானே விதிச்சுகிறது - தர்ம சாஸ்திரம் விதிக்கிறது, நாம ஏத்துக்கிறோம் அல்லது என்னால கைப்பிடிக்க முடியாதுன்னு ஒதுங்கறோம். இதை ஆட்சேபிக்கிறது சரியில்லை.
//லோக்கல் பாஷையில் இறைவன் பெருமை எழுதினா ஆச்சாரக் குறைவு!//
ஆமா நீங்களும் ஏன் ஆச்சாரம்ன்னு எழுதறீங்க? சரி சரி மௌலியாஸ்திரம்ன்னு சொல்லிடுவீங்க! :-))))))
சிலரை உத்தேசிச்சு அவங்களுக்கு புரியறாப்போலே எழுத சில உத்திகளை கடைப்பிடிக்கிறோம். தப்பில்லை. அது சிலருக்கு பிடிக்காம போகும். அதுவும் தப்பில்லை. இரண்டு பக்கமும் புரிதல் வேணும். நானும் அப்படி எழுதுகிறவன்தான். உண்மையிலே உங்க எழுத்தில இருக்கிற நளினம், இலக்கண சுத்தம் கூட என் ஆன்மீக பதிவிலே பாக்க முடியாது. யாரும் ஆட்சேபிக்கலியே! ஸோ, விஷயம் என்ன எழுதுகிறோம் என்கிறாதுல இருக்கு. மொழில இல்லை.

எல்லாம் இருக்கட்டும். பாகவத தர்மம் பக்தி மார்கம். கர்மானுஷ்டானம் கர்ம மார்கம். வேற வேற வழி - ஓவர் லாப் இருக்கும்னாலும்.
கர்மம் இல்லாம பக்தியும் இல்லை. பக்தி இல்லாம கர்மமும் இல்லை. எதுக்கு ப்ராதான்யம் என்கிறதுலே வேறுபாடு. வழி முறைகள் வேற. எந்த வழியானாலும் அதிலே எவ்வளொ முன்னேறி இருக்காங்க என்பதை வைத்துதான் ஒத்தரை கொண்டாடுகிறோம். பக்தியிலே ரொம்பவே முன்னேறியவர் கர்மம் கொஞ்சம் செய்கிறவரைவிட உசத்திதான். சந்தேகமே இல்லை.
இரண்டையும் சேத்து பாத்தா இப்படித்தான் பிரச்சினை வரும். இவ்வளவு பேசினதும் கடைசிலே பக்தி பெரிசா இல்லை கர்மா பெரிசா என்கிற விவாதம்தானோ ன்னு சந்தேகம்.

// அழகான விவாதங்களுக்கும் புரிதலுக்கும் நன்றி திவா சார்!//
நன்றி உங்களுக்குத்தான் சொல்லணும்!
:-)

திவாண்ணா said...

//ஆசார அனுஷ்டானங்கள் தெரியலைன்னா என்ன ஆகும்? ரொம்ப நாளா யாரையாச்சும் கேட்கணும்னு இருந்தேன். ஏன்னா எனக்கு ஒண்ணுமே தெரியாது :(
//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
ஆன்மீகம்4 ல கேக்கக்கூடாதா?

தெரியாத தவறுகளுக்கு பாவம் அதிகமில்லை. தெரியாம இருக்கிறதுதான் பாவம். வீட்டு பெரியவங்களை கேட்டா நம்ம குலத்தோட ஆசார அனுஷ்டானங்களை சொல்லுவாங்க. அதை கடைபிடிச்சா போதும். முடிஞ்சா தாத்தா பாட்டி கிட்டே கேக்கணும். முந்தின தலை முறையில சிலது நீர்த்து போயிருக்க வாய்ப்பு இருக்கு.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இரண்டையும் சேத்து பாத்தா இப்படித்தான் பிரச்சினை வரும். இவ்வளவு பேசினதும் கடைசிலே பக்தி பெரிசா இல்லை கர்மா பெரிசா என்கிற விவாதம்தானோ ன்னு சந்தேகம்//

சந்தேகமே தேவை இல்லை திவா சார்! அது பெரிது, இது சிறிது என்ற பேச்சுக்கே இடமில்லை!

1. பக்தியில்லாத கர்மா = உணர்ச்சியில்லா ஜடம்!
2. கர்மா இல்லாத பக்தி = செயலே செய்யாத மனிதன்!
Both cannot exist!
பக்தியிலும், பல கர்மாக்கள் உண்டு!

கர்ம நிஷ்டர்கள், கர்மங்கள் இல்லாத பக்தியைப் புறம் தள்ளும் போது தான் இந்த விவாதம் எழுகிறது!

பக்தியாளர்கள், தாங்கள் வைதீக கர்மாக்கள் செய்யவில்லை என்றாலும் கூட, கர்ம நிஷ்டர்களை மதித்து, வீட்டுக்கு அழைத்து, கர்மாக்களைச் செய்வித்துக் கொள்கிறார்கள்! ஆக கர்மத்தின் மேல் மதிப்பு வைத்துத் தான் உள்ளார்கள்!

கர்ம நிஷ்டர்களும் அதே மதிப்பைப் பக்தியாளர்களுக்கும் தர வேண்டும் என்பதே சிந்தனை! பிறருக்குத் தெரியாத கர்மங்களைத் தான் செய்வதாலேயே ஒரு உயர்வு மனப்பான்மை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதுக்காக, செய்தாதான் அதைப்பத்தி பேச அருகதை உண்டுன்னு சொல்லாமா? இப்படி இப்படி செய்யணும்ன்னு சொல்கிறதே ஒரு தொண்டு இல்லையா?//

இல்லை! அது ஒரு வியாபாரமாகத் தான் முடியும்!
குறைந்த பட்சமாச்சும் கர்மாக்கள் செய்பவரே பேசுதல் வேண்டும்!

//யப்பாடா! இந்த உள்குத்துக்காகதான் இப்படி ஒரு பதிவா?//

ஹா ஹா ஹா!
எந்தக் குத்தும் இல்லை! அடியேன் சொல்வது பொதுவான கருத்துக்களே!

சென்ற பதிவில் ஒரு கேள்வி வந்தது! சந்தி செய்வதைப் பற்றி! பரவஸ்து அண்ணா அதைச் செய்யுங்கள்! செய்யுங்கள்! ஆசார்யர் மனம் குளிரும் என்று சொல்லி இருந்தார்! ஆனால் பின்னூட்டத்தில் தான் செய்வதில்லை என்றும் சொல்லி இருந்தார்! அப்படி என்றால் ஆச்சார்யர்கள் மனம் குளிரச் செய்வது தெரிந்தும் செய்யவில்லை/செய்ய இயலவில்லை! அதைத் தான் "பின்னூட்டங்களில்" பதிலாகப் பேசினேன்! ஆனால் இந்தப் "பதிவின் தளம்" வேறல்லவா!

//அப்பாடா! இப்பதான் க்ரக்ஸ் ஆப் தி மேட்டருக்கு வரோம்! இதுக்குத்தானே இவ்வளோ சுத்தி வளைச்சீங்க?
அதில என்ன இருக்கு? அது அவங்களோட மனப்போக்கு! நீங்க ஏன் கவலை படணும்?//

ஹிஹி! சுத்தி வளைக்கத் தேவையே இல்லை! Bcoz, my personal experiences are not the crux of this discussion.
லோக்கல் பாஷையில் எழுதுவதற்கு எதிர்ப்பு என்பதை ஒரு உதாரணத்துக்குத் தான் காட்டினேன்! அதை மட்டுமே சொல்லவில்லை!

நியமங்கள் என்ற ரூல்ஸ்-இல், அன்பையும் தொண்டையும் சிதைக்கக் கூடாது என்பதே நான் சொல்ல வந்தது!

"அவங்களோட மனப்போக்கு! அதுக்கு ஏன் கவலை படணும்"-ன்னு என்று ஒரு சத்சங்கத்தில் இருக்க முடியாது! ஏன்னா சத்சங்கத்தில் அவர்களும் சிறந்தவர்களே!
அப்படி இருக்க, வெறுமனே மனப்போக்கு-ன்னா பிரச்சனை இல்லை! ஆனால் நியமங்கள் சாராதது எல்லாம் ஆன்மீகமே இல்லை என்று சொல்லவோ, ஆன்மீகச் சிதைவு என்று வரையறுக்கவோ, நியம நிஷ்டர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை!

உண்மையாகச் சந்தி செய்து கர்மம் என்னும் யோகத்தில் திளைப்பவன், இப்படி பேதா பேதங்கள் பேச மாட்டான்! கர்மன்யேவா அதிகாரஸ்தே என்று தான் இருப்பான்! இது ஆன்மீகச் சிதைவு என்று அதிகாரம் செலுத்த மாட்டான்! அதைத் தான் எடுத்துக் காட்டினேன்!

மற்றபடி, அடியேன் தனிப்பட்ட நிலைப்பாடுகள் ஏதுமில்லை திவா சார்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆமா நீங்களும் ஏன் ஆச்சாரம்ன்னு எழுதறீங்க? சரி சரி மௌலியாஸ்திரம்ன்னு சொல்லிடுவீங்க! :-))))))//

வலைப்பூவின் தலைப்பைப் பாருங்க! "ஆச்சார்ய ஹிருதயம்"-ன்னு தான் இருக்கு! அண்ணன் காட்டும் வழியே, தம்பிகளுக்கு வழி! :)

//உண்மையிலே உங்க எழுத்தில இருக்கிற நளினம், இலக்கண சுத்தம் கூட என் ஆன்மீக பதிவிலே பாக்க முடியாது. யாரும் ஆட்சேபிக்கலியே! ஸோ, விஷயம் என்ன எழுதுகிறோம் என்கிறாதுல இருக்கு. மொழில இல்லை//

இது பற்றிப் பேசினால், என் தனிப்பட்ட விஷயமாகி விடும்! அதனால் ஒன்னே ஒன்னு மட்டும் இந்த விஷயத்தில் சொல்லி முடிக்கிறேன்!

மொழியில் இருந்தாலும் கண்டு கொள்ளாமல் போகக் காரணம்...பொருள் அவர்கள் அளவில் பிடித்தமாக இருப்பதால்!

இங்கு மட்டும் பொருள் பிடிக்காததன் காரணம்: நியமங்கள் இல்லாத ஆன்மீகம் கீழானது என்ற ஒரு வித அதிகாரப் போக்கால்! அந்த தவறான அதிகாரம் செல்லுபடி ஆகாது!

பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே!-என்பது அப்பர் பெருமான் வாக்கு!
அதிகாரம் செய்யும் நியம நிஷ்டர்களின் பூவையும், விடும் நீரையும் கண்டு மகாலிங்கப் பெருமான் நாணிச் சிரிக்கிறான் என்று பாடுகிறார்! :)

//பக்தியிலே ரொம்பவே முன்னேறியவர் கர்மம் கொஞ்சம் செய்கிறவரைவிட உசத்திதான். சந்தேகமே இல்லை//

இல்லை! இல்லை!
* கர்மம் கொஞ்சம் செய்கிறவர் கீழானவர்-ன்னு நான் சொல்ல மாட்டேன்!
* பக்தியில் முன்னேறியவர் உசத்தி என்றும் சொல்ல மாட்டேன்!
* அதே போல் கர்மங்கள் குறைந்த பக்தி கீழானது என்று சொல்லாதீர்கள் என்பதே அடியேன் வேண்டுகோள்! கீழானது போல் ஒரு பார்வையை வளர்த்துக் கொள்ளாதீர்கள் என்றும் தான் வேண்டுகிறேன்!

(நீங்கள்-ன்னு உங்களைச் சொல்லலை திவா சார்! பொதுவாக கர்ம சிரேஷ்டர்களைச் சொன்னேன்!)

goma said...

எனக்கு ஒரு ஐயம்
புனிதவதியார் காரைக்காலில் பிறந்தார் என்று புராணம் சொல்கிறது.புனிதவதியார் இறைவனை நோக்கிச் செல்லும் பொழுது அவன் இருக்குமிடத்தில் தன் பாதம் படக் கூடாது என்றுதான் தலையால் நடந்து சென்றதாக சொல்லப் படுகிறது.கார் என்றால் கருத்தமேகம் போன்ற கூந்தல், அந்தக் கூந்தலைக் காலாகக் கொண்டு நடந்ததால் காரைக்கால் அம்மையார் என்று ஆனார் என்று படித்திருக்கிறேன்...,இது உண்மையென்றால் அந்த ஊருக்கு எப்படி ஏற்கனவே அப்பெயர் வந்திருக்கும்.
விளக்கம் தேவை



இதுதான் என் கேள்வி?

திவாண்ணா said...

KRS தேவையான அளவு இங்கே எழுதியாச்சுன்னு நினைக்கிறேன்.

//பக்தியிலே ரொம்பவே முன்னேறியவர் கர்மம் கொஞ்சம் செய்கிறவரைவிட உசத்திதான். சந்தேகமே இல்லை//

நியமங்கள் ஆன்மீகத்திலே பெரும் பங்கு வகிச்சாலும் அதுவே எல்லாம் இல்லை. அப்படி யாரும் நினைக்க மாட்டாங்கன்னு நம்பறேன். அப்படி நினைக்கிறவங்க அதைப்பத்தி யோசிக்கட்டும்.

பக்தி பெரும் பங்கு வகிச்சாலும் அதுவே எல்லாம் இல்லை. வேறு வேறு வழிகள். அவரவர் போக்கிலே போக சுதந்திரம் இருக்கு. எந்த வழியிலே போனாலும் யார் இறைத்தன்மைக்கு கிட்டே போறாங்களோ அவர்களே உசத்தி ன்னு சொன்னேன். அவ்ளோதான். இந்த இழையிலே என் பங்கு முடிந்தது. ஐ ஆம் டன்!
கருத்து பரிமாற்றத்துக்கு நன்னி!

திவாண்ணா said...

// KRS, தேவையான அளவு இங்கே எழுதியாச்சுன்னு நினைக்கிறேன். //

இப்படிதான் எழுத நினைச்சேன்.
ஒரு கமா விட்டுபோய் அர்த்தமே மாறி போச்சு!
ஹிஹிஹி...
மன்னிக்க!

Geetha Sambasivam said...

@கோமா, திருக்கைலையில் இறைவனைக் காணச் சென்றபோதே காரைக்கால் அம்மையார், கைகளைத் தரையில் ஊன்றிக் கொண்டு தலையாலே நடந்து சென்றார். இறைவனின் பாதம் பட்ட புனிதமான இடத்தைத் தன் கால்களால் அசுத்தப்படுத்தக் கூடாது என்றோ என்னமோ?? ஆனால் அதற்கு முன்னரே அவர் பேயுருக் கொண்டு விட்டதால் தலைமுடியால் நடந்திருக்க முடியாது. வெறும் எலும்புக் கூடாகத் தான் அவர் தோற்றத்தைக் கோயில்களில் காணமுடியும். மேலும் காரைக்கால் என்ற பெயர் வந்ததுக்கு நீங்கள் சொல்லும் காரணம் இல்லை. கொஞ்சம் பொறுங்கள். சில நாட்கள் கூட ஆகும், நான் வந்து உங்களுக்குக் காரணம் சொல்லுகின்றேன். தற்சமயம் நேரமின்மையால் சொல்ல முடியவில்லை, மன்னிக்கவும். இந்தப் பதிவுக்கு வந்ததுக்கும், கலந்துரையாடலில் கலந்து கொண்டதுக்கும் நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இங்கு பின்னூட்டத்தில் பேசியதின் மொத்தக் கருத்துக்களின் சுருக்கத்தைச் சொல்லி நிறைகிறேன்:

கர்மங்களைக் காட்டி, இறைத் தொண்டில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்! தாழ்ச்சி உயர்ச்சி நோக்கலும் பாவம்!

அதை அவரவர் மனப்போக்கு-ன்னு சொல்லி விட்டுவிட முடியாது! சத்சங்கத்தில் இது போன்ற உயர்வு/தாழ்வு மனப்பான்மையை நீக்குதலும் பகவத்-பாகவத கைங்கர்யமே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//goma said...
கார் என்றால் கருத்தமேகம் போன்ற கூந்தல்//

கார்-ன்னா கருப்பு/மேகம் தான்! கூந்தல்-ன்னு நேரடிப் பொருளா வராதுங்க கோமாம்மா!
கார் கூந்தல்-ன்னு வேணும்னா சொல்வாங்க! ஆனா கார்-ன்னு சொல்ல மாட்டாங்க!

எனவே காரைக்கால்=கூந்தலையே(தலையையே) காலாகக் கொண்டு நடந்தாங்க என்ற விளக்கம் சரி வராது! அதனால் இந்த ஊருக்கு அப்படிப் பெயர் வரவில்லை!

கீதாம்மா சொல்லி உள்ளதையும் பாருங்கள்! பேயுரு பெற்ற பின் தான் இவ்வாறு நடந்தார்கள்! அப்போது அவர்களுக்கு கூந்தல் எல்லாம் எதுவும் கிடையாது!

எனவே, காரைக்கால் என்னும் ஊரின் பெயர்க்காரணம் இதுவன்று!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நியமங்கள் ஆன்மீகத்திலே பெரும் பங்கு வகிச்சாலும் அதுவே எல்லாம் இல்லை//

ஒரு வாசகம் ஆனாலும் திரு வாசகம் திவா சார்!
அடியேனும் இந்த விவாதங்களின் சுருக்கப் பொருள் சொல்லி நிறைவு செய்து விட்டேன்!
பயனுள்ள கருத்துரையாடலுக்கு உங்களுக்கும், அதை ஏற்படுத்திக் கொடுத்த பரமாச்சார்யர் காஞ்சி மாமுனிகளுக்கும் நன்றி!

திவாண்ணா said...

காரைக்கால் - யாரோ கொஞ்சம் வார்த்தைகள்ளே சாமர்த்தியம் காட்டி இருப்பாங்க. அதை நினைச்சு மண்டையை உடச்சுகாதீங்க கோமா அக்கா!
கீ அக்கா சென்னைதான். ஒரு போன் போட்டு பேசிடுங்க. அவங்க ஊருக்கு போய் திரும்பி வர 4 வாரம் ஆகும். அதுவரை மண்டை காயணுமா கீதா அக்கா?
:-))
ஆகா ஆர்காட் வந்துட்டார். டாட்டா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதுவரை மண்டை காயணுமா கீதா அக்கா? :-))//

ஹா ஹா ஹா!
இதுனால அவதிப் படப் போறது என்னமோ, பாவம், நல்லவரான நம்ம சாம்பு மாமா தான்! :)
அவருக்காகவாச்சும் உடனே ஃபோன் போடுங்க கோமாம்மா!

Geetha Sambasivam said...

//இதுனால அவதிப் படப் போறது என்னமோ, பாவம், நல்லவரான நம்ம சாம்பு மாமா தான்! :)//

அக்கிரமமா இல்லை?? :P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கீதா சாம்பசிவம் said...
//இதுனால அவதிப் படப் போறது என்னமோ, பாவம், நல்லவரான நம்ம சாம்பு மாமா தான்! :)//

அக்கிரமமா இல்லை?? :P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P//

ஹிஹி! இல்லவே இல்லை!
கோமாம்மா ஃபோன் போடாட்டி, இதைத் தான் கேட்டிருப்பாங்களோ, அதைத் தான் மீன் பண்ணி இருப்பாங்களோ, காரைக் காலுக்கு எத்தனை கால்-ன்னு பாவம், சாம்பு மாமாவைத் தானே கேள்வி கேட்டுத் துளைச்சி எடுப்பீங்க!

வீ வான்ட் டு ப்ரொடெக்ட் ஹிம்! அதான்! :))

goma said...

திவா
உமையாளையும் மானிடப் பெண்களையும் ,
ஒன்றாகக் கருதி,”பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு “என்று பாட்டெழுதி,
அதை திரு நாகேஷ் மன்னிக்கவும் தருமி கையில் கொடுத்து ,
தேவையில்லாமல் ,நக்கீரனை பஸ்பமாக்கி ...
அனைத்தும் அறிந்த சிவனே அப்படி செய்தால் ....நான் கொஞ்சூண்டு தெரிந்த நண்டு..கேள்வி கேட்கக் கூடாதா?

திவாண்ணா said...

//.நான் கொஞ்சூண்டு தெரிந்த நண்டு..கேள்வி கேட்கக் கூடாதா?//

உண்டு உண்டு! அவசியம் கேளுங்க அக்கா!

goma said...

கீதாம்மா சொல்லி உள்ளதையும் பாருங்கள்! பேயுரு பெற்ற பின் தான் இவ்வாறு நடந்தார்கள்! அப்போது அவர்களுக்கு கூந்தல் எல்லாம் எதுவும் கிடையாது!
krs சொல்லியிருக்கிறார் ஓகே .ஒப்புக் கொள்கிறேன்.அம்மையார் பேயுரு பெற்றபின்தான் இவ்வாறு நடந்தார்கள் அவர் ஏன் அப்படி நடந்தார் ...கைலாய மலையில், ,தன் கால் படக் கூடாது என்று எண்ணியவர் ,தலைகீழாகச் சென்று சிவனை அடைந்ததாகக் கூறுவார்கள்.
பேயுரு அடைந்தவருக்கு கூந்தல் இல்லையென்றால் ,ஏது கால்கள்?

என் சந்தேகம் தீரும் வரை ஓய மாட்டேனே.

goma said...

ஹா ஹா ஹா!
இதுனால அவதிப் படப் போறது என்னமோ, பாவம், நல்லவரான நம்ம சாம்பு மாமா தான்! :)
அவருக்காகவாச்சும் உடனே ஃபோன் போடுங்க கோமாம்மா!

சாம்பு மாமாதான் என் சந்தேகத்தை,அருமையாகத்
’துப்பறிந்து ’
தீர்த்து வைக்க முடியும்
என் கேசை அவரிடம் ஒப்படைத்து விட்டேன்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@கோமாம்மா
//பேயுரு அடைந்தவருக்கு கூந்தல் இல்லையென்றால் ,ஏது கால்கள்?

என் சந்தேகம் தீரும் வரை ஓய மாட்டேனே//

ஹிஹி!
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத "விக்ராமதித்தி" = கோமாம்மா? :)))

கால் = மனுஷனுக்கு இருக்கிறா மாதிரி ரெண்டு கால்-ன்னு எடுத்துக் கொள்ளக் கூடாது!
கால், அடி என்பது இறுதி, கீழ், அடிப்பாகம் என்ற பொருளும் தரும்! கீழ்ப் பாகத்தால் "கீழ்மையாக" நடக்க வேண்டாமே என்று அவர்களுக்குத் தோனியது போலும்! அதான் மேல் பாகத்தால் "மேன்மையாக" நடக்கத் தலைப்பட்டார்கள் போலும்!
சரி தானே கோமாம்மா?

பேயுரு பெற்றவர்களூக்கு கூந்தல் இருக்குமா, கால் இருக்குமா, தலை இருக்குமா என்று தேட நினைத்தால், இதோ:
http://madhavipanthal.blogspot.com/2008/11/icon-poetry.html

காரைக்கால் பெயர்க் காரணம் இதோ:
http://www.karaikal.com/history.htm

Erode Nagaraj... said...

Saturday, June 28, 2008
1. அம்மாவும் அப்பாவும் கல்யாண நாளை முன்னிட்டு (30-3-08) தேனம்பாக்கம் பாடசாலை, காஞ்சிபுரம் அதிஷ்டானம் மற்றும் ஒரிக்கை மணி மண்டபம் ஆகிய ஸ்தலங்களுக்குச் சென்று வந்தனர். ம்யூசிக் அகாடெமி annual exam இருந்ததால் என்னால் செல்ல முடியவில்லை.

வந்ததும், பிரசாதமாக ரோஜா இதழ்களும் துளசியும் வில்வ இலைகளும் சாப்பிட்டேன். பின்பு, பெரியவா படத்திற்கு ஹாரத்தி பண்ணும்போது... சற்று மேலே கை உயரும்போது பெரியவாளின் படம், நான் இதுவரை அறிந்திராத ஒன்றை ஸ்புரிக்கச் செய்தது...

சிவலிங்கம் அருகில் பெரியவா... அப்போதுதான் புரிந்தது....

தேனம்பாக்கத்தை சிவாஸ்தானம் என்று கூறுவர். அங்கு ஸ்வாமிக்கு வேதபுரீஸ்வரர் என்று பெயர். தக்ஷிணாமூர்த்தியும் உண்டு. பெரியவாள் 70 களில் தேனம்பாக்கத்தில் தவமியற்றி அருள்பாலித்ததை விவரிக்கையில், "பெரியவா சிவாஸ்தானத்தில் இருந்தபோது..." என்று தான் சொல்வார்கள்.

சிவ - என்றால் ஈசன். சிவா - என்றால் அம்பாள். ஈசன் ஆட்சி புரியும் தேனம்பாக்கத்தில், சிவா - அம்பாள் ஸ்தானத்தில் பெரியவா.

சென்ற முறை காயத்ரி வெங்கட்ராகவனுக்கு வாசிக்க காஞ்சிபுரம் சென்றிருந்தபோது, அன்னதான சத்திரத்தில் இருந்து முதலில் காமாக்ஷி கோயிலுக்கு அழைத்துச் சென்றார் ஸ்ரீ T.V.S. சாரி மாமா. வீல் சேர் கொண்டு போயிருந்ததால் நானும் சென்றேன். அனேகமாக எல்லோருமே, "நாகராஜன்.. இவ்ளோ தடவை மஹா பெரியவாளை தரிசனம் பண்ணீருக்கேள்... காமாஷியை வந்து தரிசனம் பண்ணினதில்லையா?" என்று ஆச்சிரியமாய்க் கேட்டார்கள்.

ஒரு நிலைக்கு மேல் வீல்ச்சேரில் செல்ல இயலவில்லை. அங்கிருந்து தவழ்ந்து உள்ளே சென்று அருகில் அம்பாளை தரிசித்துவிட்டு, பின்பு அதிஷ்டானத்தில் கச்சேரி வாசித்தேன்.
நிகழ்ச்சி முடிந்ததும், அதிஷ்டானத்தில் பிரசாதம் கொடுக்கும்போது, சந்திரமௌலி, பெரியவாளிடம் இருந்து எல்லோருக்கும் படம் கொடுத்தார்.
அது....

பெரியவாள் சிரித்தபடி அமர்ந்திருக்கும் படம்.
கையில் கரும்பு மற்றும் காமாக்ஷியின் ஆபரணங்களுடன்...

Erode Nagaraj... said...

2. "சக மனிதனாக இருந்த ஸ்வாமிநாதன்....."

இன்று காலை, பெரியவாள் பல்லக்கைத் திறந்ததும் மனதில் இந்த வரி தான் ஓடியது.

காரணங்கள் ஏதுமின்றி,
எண்ணக் குவியல்களை திடுமென எதுவோ கிளறி,
மேலெழுந்து ஆர்ப்பரிக்கும்....
தோன்றித் தோன்றி மறையும்....
வினாடிகளில் வாழ்ந்து மடியும் ஒற்றை வரிகள்.

யோசிக்கையில், பொருத்தங்களை மனது அமைத்துக்கொண்டது.

அத்வைதம் சொல்லுகின்ற, அடியார்க்கருளுபவன், பள்ளியிலே பயின்றதுவும் இரண்டிலா இன்பம் தான். ஒன்றாம் வகுப்பிலிருந்து மூன்றாவதிற்கு, "அஞ்சிலே ஒன்றைத் தாவியவன், இந்த "ஸ க ம நி த ஸ்(வாமிநாதன்)".

ஒன்றைத் தாவியதால், ஐந்தையும் கடந்தவன்- கடுந்தவன்.

(பஞ்ச பூதங்கள் ஐந்திலே, ஒன்று நீர். ஒட்டும் தன்மையுடையது. நெருப்பை அணைத்தாலும், ஒட்டுதலால் பற்றிக் கொள்ளும். அதனால் தான், தாமரையிலைத் தண்ணீர் போல எனக்கூறுகிறோம். பற்றற்ற தன்மையால், ஐம்புலன்களையும் வெல்லுதல்).

ஹிந்தோளத்தின் ஸ்வரம் இது. இரண்டாவது (த்வைதம்) ஸ்வரமான 'ரி' இல்லை. க்ரமமான ஐந்தில்(ஸ்வரங்களில்) ம த நி என்பதில், 'ம'வில் இருந்து ஒன்றைத் தாவி, 'ம நி த'னானவன் - நான்-அவன்" (தத்வமஸி) என்றானவன்.
இரு கால்கள் கொண்டதால், ஸ்வாமிநாதன். முக்காலும் உணர்ந்ததால் "ஸ்வாமி-நா-தான்."

"அஹம் பிரம்மாஸ்மி" என்றறிந்தவன் - ஆதலால், அருந்தவன்.
அருந்தவன் ஆனதால் பருகுதற்கினியவன்.
தருவதற்கினியென்ன
தஞ்சம் அடைந்த பின்...
தருணங்கள் தேவையில்லை,
தருமூலன் தயை வேண்ட.